» » சீதா தேவியின் மீது கடும்கோபம் கொண்டு ஆஞ்சநேயர் கும்பிட்ட தலம் எது தெரியுமா?

சீதா தேவியின் மீது கடும்கோபம் கொண்டு ஆஞ்சநேயர் கும்பிட்ட தலம் எது தெரியுமா?

Posted By: Udhaya

காஞ்சிபுரம் மாவட்டத்தில் அமைந்துள்ள ஒரு கோவில் ஆஞ்சநேயர் நேரில் வந்து பூஜை செய்ததாக நம்பப்படுகிறது.

அது காஞ்சிபுரம் மாவட்டம் திருப்பெரும்புதூரில் கூவத்தூர் எனுமிடத்தில் அமைந்துள்ளது. அதன் தல சிறப்புக்களைப் பற்றி பார்க்கலாம்.

கங்கை, யமுனை, சரஸ்வதி, சரயூ, கோதாவரி, நர்மதை, துங்கபத்திரை,காவிரி ஆகிய எட்டு நதிகளும் தங்கள் பாவங்களைப் போக்கிக் கொள்ள இவ்விடத்தில் தவமியற்றியதாகவும், ஆதிகேசவ பெருமாள் அவர்களுக்கு காட்சியளித்ததாகவும் நம்பிக்கை.

பாவங்கள் நீங்கப்பெற்ற எட்டு நதிகளும் பெருமானை தினமும் தரிசிக்க விரும்பி இங்குள்ள கிணறுகளில் அடைபட்டு கிடப்பதாக நம்பிக்கை உள்ளது.

நடை திறக்கும் நேரம்

நடை திறக்கும் நேரம்

காலை 6 மணி முதல் 10 மணி வரையிலும், மாலை 5 மணி முதல் இரவு 8 மணி வரையிலும் நடை திறந்திருக்கும்

PC: Destination8infinity

சிவபிள்ளை ராமனுஜன்

சிவபிள்ளை ராமனுஜன்

ஆதிகேசவ பெருமான் இங்கு கம்பீரமாக தோன்றியருளுகிறார்.

PC: Debanjon

சித்திரைக் குளம்

சித்திரைக் குளம்

பக்தர்கள் தோஷங்கள் போக்க இங்குள்ள கிணறுகளில் நீராடி பெருமானை வழிபட்டு செல்கின்றனர்.


PC: Destination8infinity

 திருமஞ்சனம்

திருமஞ்சனம்

தங்கள் வேண்டுதல்கள் நிறைவேற பக்தர்கள் பெருமாளுக்கும் தாயாருக்கும் திருமஞ்சனம் செலுத்துதாக வேண்டுகின்றனர். மேலும் நிறைவேற்றிய வேண்டுதல்களுக்காக நேர்த்திகடன்களை செலுத்தி வழிபட்டுச் செல்கின்றனர்.


PC: Destination8infinity

வரலாறு

வரலாறு

ராம, ராவண யுத்தம் முடிந்ததும் சிவபெருமானின் லிங்கத்தை உருவாக்கி வழிபட எண்ணினார் சீதா தேவி. அதை ராம பக்தனாகிய அனுமனிடம் கூற, அனுமனும் காடு மலை திரிந்து அழகிய லிங்கத்தைக் கொண்டுவந்ததாக வரலாறு. ஆனால் அதை ஏற்க மறுத்து அனுமனை உதாசீன படுத்தியதால் சீதாவின் மீது கோபம் கொண்டார் அனுமன்.

PC: Destination8infinity

அனுமனின் கோபம் தணித்த சீதை

அனுமனின் கோபம் தணித்த சீதை

பின்னர் அனுமனின் கோபம் போகுமாறு சீதா உபதேசம் செய்தார். இதை கேட்டு மனம் நெகிழ்ந்த அனுமன் தாயே மன்னித்துவிடுங்கள் என்று கூறினார்.

எப்படி செல்லலாம்?

எப்படி செல்லலாம்?

காஞ்சிபுரத்திலிருந்து ஏராளமான பேருந்து வசதிகள் உள்ளன.

திருப்பெரும்புதூர் நகரிலிருந்து அருகில் கோவில் அமைந்துள்ளது.

தொடர்ந்து இணைந்திருங்கள்

தொடர்ந்து இணைந்திருங்கள்


இது போன்று ஆன்மீகத் தலங்கள் பலவற்றைப் பற்றி அறிய தொடர்ந்து இணைந்திருங்கள் நேட்டிவ் பிளாணட் தமிழ்

Read more about: travel temple

இப்போதே பெறுங்கள் சிறந்த சலுகைகளைப் பயணங்களிலும், பயண டிப்ஸ்களும், பயணக் கதைகளும் உடனுக்குடன்