» »கடல் மட்டத்திலிருந்து 10,000 அடியில் கிறுகிறுக்க வைக்கும் தவாங் பற்றி தெரியுமா?

கடல் மட்டத்திலிருந்து 10,000 அடியில் கிறுகிறுக்க வைக்கும் தவாங் பற்றி தெரியுமா?

Written By: Udhaya

வடக்கில் திபெத்தையும், தென்மேற்கில் பூடானையும், மேற்கில் சேலா மலைத்தொடர்களையும், கிழக்கில் மேற்கு கேமேங் மலைகளையும் இது எல்லைகளாக கொண்டுள்ளது இந்த தவாங்.

இது அருணாசலப்பிரதேச மாநிலத்தின் மேற்கு எல்லையில் உள்ளது.

கடல் மட்டத்திலிருந்து 10,000 அடியில் கிறுகிறுக்க வைக்கும் உயரத்தில் இந்த தெய்வீக மலை எழிற்பிரதேசம் அமைந்திருக்கிறது. இது குறித்து மேலும் காணலாம் வாருங்கள்

தேர்ந்தெடுத்த குதிரை

தேர்ந்தெடுத்த குதிரை


தவாங் நகரத்தை ஒட்டி அமைந்திருக்கும் ஒரு மலைப்பகுதியின் விளிம்பில் இந்த தவாங் மடாலயம் ஒரு அற்புத தெய்வீக தோற்றத்துடன் காட்சியளிக்கின்றது. ‘த' என்பது குதிரையையும் ‘வாங்' என்பது ‘தேர்ந்தெடுத்த' என்பதையும் குறிக்கிறது.

Doniv79

 சுற்றுலா தளங்கள்

சுற்றுலா தளங்கள்

தவாங் மலைநகரத்தில் சுற்றுலாப்பயணிகள் விரும்பி வருகைதரும் அம்சங்களாக மடாலயங்கள், சிகரங்கள் மற்றும் நீர்வீழ்ச்சிகள் போன்றவை அமைந்திருக்கின்றன.
தவாங் மடாலயம், சேலா பாஸ் ஆகியவை இவற்றில் குறிப்பிடத்தக்கவை. இங்குள்ள நீர்வீழ்ச்சிப்பகுதிகள் பாலிவுட் படப்பிடிப்புகளுக்கும் பயன்படுத்தப்பட்டிருக்கின்றன.

Soumyanath

 சொர்க்கலோகம்

சொர்க்கலோகம்


நிசப்தம் தவழும் ஏரிப்பரப்பு, ஆறுகள் மற்றும் எண்ணற்ற நீர்வீழ்ச்சிகள் நீல நிற ஆகாயத்தை பிரதிபலித்தபடி காட்சியளிப்பது பார்வையாளர்களை மெய்மறக்க செய்யும் அற்புத தோற்றங்களாகும்.


ஒரு விசேஷமான இடத்துக்கு செல்ல விரும்பும் தீவிர இயற்கை ரசிகர்கள் யோசிக்காமல் தங்களது அடுத்த பயணத்திற்கு இந்த தவாங் மலை வாசஸ்தலத்தை தேர்ந்தெடுக்கலாம். ஒரு சொர்க்கலோகம் போன்று இந்த தவாங் மலைநகரம் மலையுச்சியில் வீற்றிருக்கிறது.

Dhrubazaanphotography

 கைவினைப்பொருட்கள்

கைவினைப்பொருட்கள்


மொன்பா என்றழைக்கப்படும் இந்த தவாங் மலைநகர மக்கள் அற்புதமான கைவினைத்திறன் வாய்க்கப்பெற்றவர்களாக உள்ளனர். பலவகையான கைவினைப்பொருட்கள், அழகுபொருட்கள், அலங்காரபொருட்கள் போன்றவை இங்குள்ள உள்ளூர் சந்தைகளில் விற்கப்படுகின்றன.

Vishnu1991nair

 உகந்த பருவம்

உகந்த பருவம்

வருடத்தின் பெரும்பான்மையான மாதங்களில் இங்கு மிதமான பருவநிலையே நிலவுகிறது. பொதுவாக மார்ச் மற்றும் அக்டோபர் மாதங்களுக்கு இடைப்பட்ட காலத்தில் இங்கு சுற்றுலாவுக்கேற்ற இனிமையான சூழல் காணப்படும்.

Kunal Dalui

 நுராரங்க் நீர்வீழ்ச்சி

நுராரங்க் நீர்வீழ்ச்சி

அருணாசலப்பிரதேச மாநிலத்தின் தவாங் மாவட்டத்தில் இந்த அற்புதமான நீர்வீழ்ச்சி அமைந்துள்ளது. தவாங் மற்றும் பொம்டிலா நகரங்களுக்கு இடையே உள்ள ஜாங் நகரத்திலிருந்து 2 கி.மீ தூரத்தில் இந்த நீர்வீழ்ச்சி காணப்படுகிறது.

சேலா பாஸ் பாதையின் வடபுறசரிவிலிருந்து ஓடி வரும் நுராரங்க் ஆற்றில் இந்த நீர்வீழ்ச்சி உருவாகிறது. ஒரு பிரபல இந்தி படத்தின் பாடல் காட்சி இப்பகுதியில் படமாக்கப்பட்ட பிறகு இது பிரபல்யமடைய ஆரம்பித்தது.


Easyvivek

 கொர்சம் சோர்ட்டென்

கொர்சம் சோர்ட்டென்

கொர்சம் சோர்ட்டென் எனப்படும் இந்த பௌத்த ஸ்தூப அமைப்பு தவாங் மலைநகரத்திலிருந்து 90 கி.மீ தூரத்தில் அமைந்துள்ளது. 12ம் நூற்றாண்டில் மொன்பா இனத்தைச்சேர்ந்த லாமா பிரதார் எனும் மத குருவால் இது கட்டப்பட்டதாக சொல்லப்படுகிறது.

 ஷோங்கா-ட்செர் ஏரி

ஷோங்கா-ட்செர் ஏரி

தவாங் மலைநகரத்திலிருந்து 42 கி.மீ தூரத்தில் இந்த ஷோங்கா-ட்செர் ஏரி அமைந்துள்ளது. 1950ம் ஆண்டில் ஏற்பட்ட ஒரு நிலநடுக்கத்தின்போது இந்த ஏரி உருவாகியிருக்கிறது.

Read more about: travel, hills