» »மேற்குமலையில் ஆதியோகி எங்கே எப்படி எதற்காக?

மேற்குமலையில் ஆதியோகி எங்கே எப்படி எதற்காக?

Written By: Udhaya

கோவை மாவட்டம், வெள்ளியங்கிரி மலையடிவாரத்தில் ஜக்கி வாசுதேவின் ஈஷா யோகா மையம் செயல்பட்டு வருகிறது. இந்த இடத்தில் 112 அடி உயரத்தில் ஆதியோகி சிவன் சிலை அமைக்கப்பட்டுள்ளது.

இன்று மகா சிவராத்திரியையொட்டி கோவை ஈஷா மையத்தில் 112 அடி உயர சிவன் சிலை நிறுவப்பட்டது. இதைத் திறப்பதற்காக டெல்லியில் இருந்து தனி விமானம் மூலம் பிரதமர் மோடி கோவை விமான நிலையத்துக்கு வந்தார். அங்கிருந்து ஹெலிகாப்டர் மூலம் விழா நடைபெறும் இடத்தை அடைந்தார். பின்னர் ஈஷா மையத்தில் நடைபெற்ற விழாவில் கலந்து கொண்டு ஆதியோகி சிலையை திறந்து வைத்தார்.

சரி.. நீங்களும் ஆதியோகியை கண்டு களிக்கவேண்டுமா அப்போ இத முழுசா படிங்க!

ஏன் ஆதியோகி?

ஏன் ஆதியோகி?

அனைத்து மதங்களுக்கும் முன்தோன்றிய ஆதியோகியாம் சிவன், எந்நாட்டவருக்கும் பொருந்தும் விதமாய் வழங்கிய யோகமுறைகளை கொண்டாடிட, 112 அடி உயரத்தில் கம்பீரமான ஆதியோகி முகம்! என்று ஈஷா மையத்தினர் தெரிவிக்கின்றனர்.

ஆதி யோகி என்ன மதம்?

ஆதி யோகி என்ன மதம்?

எல்லா மதங்களுக்கும் முன்னர் தோன்றிய ஆதியானவர் என்பதுதான் ஆதியோகியாம். பல்வேறு யோக முறைகளை கற்றுக்கொடுத்தவர் என்பதே ஆதியோகி என்பதாகும் என்று ஈஷா யோகா மையத்தினர் தெரிவிக்கின்றனர்.

ஆதி யோகி என்றால் என்ன?

ஆதி யோகி என்றால் என்ன?

சிவா என்றால் எது இல்லையோ அதுதான் என்று பொருளாம். இன்றைய விஞ்ஞானம் கூட ஒன்றுமில்லா வெட்டவெளியில் தோன்றியது. இது முடியும் போதும் ஒன்றும் இல்லாமல் வெட்டவெளியாக முடியக்கூடும் என்கின்றனர்.

ஆதியோகி யார்?

ஆதியோகி யார்?


15,000 ஆண்டுகளுக்கு முன், மதங்கள் இந்த மண்ணில் உருவாவதற்கும் முன்பாக, முதல் யோகியான ஆதியோகி தன்னுடைய ஏழு சீடர்களான சப்தரிஷிகளுக்கு யோகக் கலையினை அருளினார்.

எப்படி செல்வது

எப்படி செல்வது

கோயம்புத்தூரிலிருந்து ஒன்றரை மணி நேர பயண தூரத்தில் அமைந்துள்ளது இந்த ஆதியோகி மலை.

அதாவது இதன் பெயர் வெள்ளயங்கிரி மலை என்பதாகும்.

ஈஷா

ஈஷா

இந்த மையத்தின் மீது பல்வேறு புகார்கள் கூறப்பட்டு வருகின்றன.

தன் மையத்தை காடுகளை அழித்து கட்டியிருப்பது குறித்து மக்கள் மத்தியில் மிகுந்த எதிர்ப்பு உள்ளது.

யானைகளின் இடமாகிய இருந்த அத்தனை காட்டுப்பகுதிகளும் அழிக்கப்பட்டு கட்டடங்கள் கட்டப்பட்டதாகவும் மக்கள் இந்நிறுவனத்தின் மீது புகார்கள் தெரிவிக்கின்றனர்.

திறப்புவிழா

திறப்புவிழா

ஆதியோகி சிவன் சிலை பிப்ரவரி 24, 2017 ம் ஆண்டு வெள்ளயங்கிரி மலையில் பிரதமர் மோடியால் திறந்துவைக்கப்பட்டது.

புகார்களைத் தாண்டி பார்க்கும்போது, இதனை சுற்றியுள்ள பல பகுதிகள் நல்ல சுற்றுலாத்தளமாகும்.

சுற்றுலா

சுற்றுலா

ஆனால் இப்படி கட்டடங்கள் கட்டி காட்டை அழித்துவிட்டால் சுற்றுலாவாது மழையாது விவசாயமாது என்று கருத்து தெரிவிக்கின்றனர் இயற்கை ஆர்வலர்கள்.

உண்மைகளை கண்டறிந்து அரசுதான் நடவடிக்கை எடுக்கவேண்டும். நாம் வேறொரு பயணக் கட்டுரையில் சந்திக்கலாம்... விடுமுறை தின வாழ்த்துக்கள்... நன்றி

Read more about: travel, temple
Please Wait while comments are loading...