» »அந்த மான் பற்றி தெரியும்! அப்போ அந்த கிரேட் நிக்கோபார்?

அந்த மான் பற்றி தெரியும்! அப்போ அந்த கிரேட் நிக்கோபார்?

Written By: Udhaya

கிரேட் நிக்கோபார் என்று அழைக்கப்படும் இந்த பெருந்தீவு நிகோபார் தீவுக்கூட்டங்களில் உள்ள மிகப்பெரிய தீவாகும். எல்லா தீவுகளுக்கும் தெற்கே வீற்றுள்ள இந்த தீவில்தான் இந்திரா பாயிண்ட் அமைந்துள்ளது. அந்தமான் பற்றிய தகவல்கள் நமக்கு எளிதில் கிடைக்கின்றன ஆனால் இந்த கிரேட் நிகோபார் பற்றி அதிகம் தெரிவதில்லை. அப்படி தெரியாமல் இருப்பவர்களுக்காகத்தான் இந்த பதிவு, வாருங்கள் தி கிரேட் நிக்கோபாருக்கு போகலாம்.

எப்படி செல்லலாம்?

எப்படி செல்லலாம்?


இந்தியாவிலிருந்து கடல் மூலமாகவும், ஆகாய மார்க்கமாகவும் இரு வழிகளில் இந்த தீவை அடையலாம்.

அந்தமான் நிக்கோபார் தீவுகளை சாலை மூலமாக அடைவது முடியாத காரியம். ஆனால் அந்தமான் நிக்கோபார் தீவுகளுக்கு நீங்கள் சென்றடைந்த பின்பு முக்கிய சுற்றுலாப் பகுதிகளான போர்ட் பிளேர் உள்ளிட்ட இடங்களை அடைவதற்கு அந்தமான் டிரங்க் ரோடு உங்களுக்கு வசதியாக இருக்கும்.

Amit saini -

விமானம் மூலமாக செல்ல

விமானம் மூலமாக செல்ல

அந்தமான் நிக்கோபார் தீவுகளின் தலைநகரான போர்ட் பிளேரின் வீர் சாவர்கர் விமான நிலையத்திலிருந்து சென்னை, கொல்கத்தா போன்ற இந்தியாவின் முக்கிய நகரங்களுக்கு தினமும் எண்ணற்ற விமானங்கள் இயக்கப்படுகின்றன. மேலும் மும்பை நகருக்கும், போர்ட் பிளேருக்கும் இடையே நேரடி விமான சேவைகளை தொடங்குவது தொடர்பாக இந்திய அரசு பரிசீலித்து வருகிறது.

மேலும் இங்கிருந்து இயக்கப்படும் கப்பல்கள் மூலமாகவும் செல்லமுடியும்.

unknown

 செல்ல சிறந்த காலங்கள்

செல்ல சிறந்த காலங்கள்

ஜனவரி முதல் மே மாதம் வரையில் அனைத்து மாதங்களிலும் இங்கு செல்ல ஏற்ற கால நிலை அமைகிறது. மேலும் அக்டோபர், நவம்பர் மாதங்களிலும் செல்லலாம். எனினும் இந்த காலம் மழைக்காலம் என்பதால் கவனமுடன் இருக்கவேண்டும்.

Daderot

 காணவேண்டியவை

காணவேண்டியவை

பலவகை உயிரினங்கள், பறவைகள், தாவரங்கள், கடல் உயிரினங்கள் மற்றும் மலர்கள் போன்றவை இந்த பெருந்தீவில் காணப்படுகின்றன. சுற்றுலாப்பயணிகள் மற்றும் தேனிலவுப்பயணிகளை இந்தத்தீவின் சொர்க்கம் போன்ற சூழல் பெருமளவில் ஈர்த்து வருகிறது.

 வானூர்தி வசதிகள்

வானூர்தி வசதிகள்

போர்ட் பிளேர் நகரத்திலிருந்து பவன் ஹான்ஸ் ஹெலிபாக்டர் சேவைகள் மற்றும் சொகுசுப்படகு (ஃபெர்ரி) மூலமாக பயணிகள் இந்த கிரேட் நிக்கோபார் பெருந்தீவிற்கு வருகை தரலாம். படகு மூலம் பயணிக்கும்போது வழியில் லிட்டில் நிகோபார், நான்கௌரி மற்றும் கார் நிக்கோபார் என்று அழைக்கப்படும் வடக்கு நிகோபார் தீவுக்கூட்டங்கள் ஆகியவற்றை ரசித்தபடியே வரலாம்.

Arne Müsele

காம்ப்பெல் பே

காம்ப்பெல் பே

கிரேட் நிக்கோபார் தீவில் இந்திரா பாயிண்டிற்கு அடுத்தபடியாக ‘காம்ப்பெல் பே' தேசியப்பூங்கா பயணிகள் அதிகம் விஜயம் செய்யும் சுற்றுலாத்தலமாக பிரசித்தி பெற்றுள்ளது. நிகோபார் ஸ்க்ரப் பவுல் மற்றும் மெகாபாட் என்ற இரண்டு அரிய காட்டு கோழியினங்கள் இந்த தீவுப்பகுதியில் பயணிகள் மற்றும் இயற்கை ஆர்வலர்களால் பெரிதும் ரசிக்கப்படுகின்றன.

T.Harshavardan

 புகைப்பட ரசிகர்களே

புகைப்பட ரசிகர்களே

புகைப்பட ரசிகர்கள் விரும்பக்கூடிய ஏராளமான இயற்கைக்காட்சிகளையும் இந்த தேசியப்பூங்கா கொண்டுள்ளது. WWF எனப்படும் ‘இயற்கைச்செல்வத்துக்கான நிதியுதவி அமைப்பு' இந்த தீவிற்கு சிறந்த அங்கீகாரம் அளித்திருப்பதும் குறிப்பிடத்தக்கது.

T.Harshavardan

தில்லன்சாங்

தில்லன்சாங்

அளவில் மிகச்சிறியதாகவும் குறைந்த மக்கள் தொகையுடனும் காணப்படும் இந்த தீவில் ‘நார்கொண்டாம் இருவாட்சி மற்றும் ‘நிக்கோபார் மெகாபாட்' (வான்கோழி போன்ற பறவையினம்) என்ற இரண்டு அரிய வகை பறவையினங்கள் வசிக்கின்றன. அரிதான இயற்கை வளத்துடன் ஜொலிக்கும் இந்த தீவில் பார்த்து ரசிக்க ஏராளமான அம்சங்கள் நிறைந்துள்ளன. மற்ற அந்தமான் தீவுகளைப்போல் அல்லாமல் இந்த தில்லன்சாங் தீவு மூன்று நிக்கோபாரிய தனியார் குடும்பங்களுக்கு சொந்தமானதாக உள்ளது.

Shreeram M V

 இந்திரா பாயிண்ட்

இந்திரா பாயிண்ட்

இந்திரா பாயிண்ட் என்பது நிகோபார் தீவின் தென்கோடி முனையாகும். அதுமட்டுமல்லாமல் இந்தியாவின் தென்கோடி முனை என்பதால் இந்த இடம் இந்திய சுற்றுலா பயணிகளால் சுவாரசியமான இடமாகவும் கருதப்படுகிறது. மறைந்த இந்தியப்பிரதமர் திருமதி இந்திரா காந்தியின் நினைவாக இந்த இடத்திற்கு பெயரிடப்பட்டிருக்கிறது. 1972ம் ஆண்டிலிருந்து இந்தியாவிலுள்ள மிகப்பெரிய கலங்கரை விளக்கங்களில் ஒன்றாக இங்கு அமைந்திருக்கும் ஒரு கலங்கரை விளக்கத்தை பார்த்து ரசிக்கவும் அதிக அளவில் சுற்றுலா பயணிகள் வருகை தருகின்றனர்.

NordNordWest

Read more about: travel, beach