» »ஒரே பாறையில் செதுக்கப்பட்ட இந்தியாவின் ஒரே பிரம்மாண்டம்.... பாதியில் நிறுத்தப்பட்டதன் மர்மம்?

ஒரே பாறையில் செதுக்கப்பட்ட இந்தியாவின் ஒரே பிரம்மாண்டம்.... பாதியில் நிறுத்தப்பட்டதன் மர்மம்?

Posted By: Udhaya

இந்தியா ஒரு ஆன்மீக பல்லறிவு கொண்ட நாடு என்பது நம்மில் அனைவருக்கும் சந்தேகமே இருக்காது. இந்தியாவில் பல மதங்கள் தோன்றியுள்ளது. இங்குள்ள மக்களால் பிற நாடுகளிலிருந்தும் ஏற்றுக்கொள்ளப்பட்ட பல மதங்கள் இங்கே பின்பற்றப்பட்டுவருகிறது.

ஒவ்வொரு பெண்ணும் தன் பாய் பிரண்டுடன் நிச்சயம் போக விரும்பும் இடங்கள்

மதங்களின் பன்முகத்தன்மை இந்தியாவின் ஒருமைப்பாட்டை சீர்குலைக்காமல், நாம் அனைவருமே அண்ணன் தம்பியாக வாழ்கிறோம்.

அப்படிபட்டதமிழ்நாட்டை ஆண்டு வந்த சாம்ராஜ்யம்தான் பாண்டிய சாம்ராஜ்யம்.

இஸ்லாமியர்களுக்காக கோவிலை இடித்த இந்துக்கள் - எங்கே தெரியுமா?

சரி அவர்களுக்கும் இந்த ஒரே பாறையில் செதுக்கப்பட்ட கோயிலுக்கும் என்ன சம்பந்தம்? முழுவதும் படிங்க....

 எங்கே உள்ளது?

எங்கே உள்ளது?

தூத்துக்குடி மாவட்டம் கோயில்பட்டி அருகே அமைந்துள்ளது கழுகு மலை. இந்த மலையில் தான் அந்த கோயில் காணப்படுகிறது.

PC: Balajijagadesh

வெட்டுவான் மலைக்கோயில்

வெட்டுவான் மலைக்கோயில்

அரைமலை என்னும் பழம் பெயரைக்கொண்ட கழுகுமலையின் கிழக்கு பக்கம் வெட்டுவான் கோயிலும் அதன் அருகில் தென்புற மலையில் சமணதீர்த்தங்கரர் உருவங்களும் உள்ளன.

PC:பா.ஜம்புலிங்கம்

சிறப்பு

சிறப்பு

இந்த வெட்டுவான்கோயில் எல்லோராவிலுள்ள கைலாசநாதர் கோயிலைப் போல சிறப்பு மிக்கது. இது ஒரே கல்லில் செதுக்கப்பட்டுள்ளது.


PC: பா.ஜம்புலிங்கம்

4

உருவாக்கம்

உருவாக்கம்

பெரிய மலைப்பாறையில் ஏறக்குறைய 7.5 மீட்டர் ஆழத்திற்கு சதுரமாக வெட்டிஎடுத்து அதன் நடுப்புறத்தை கோயிலாக செதுக்கியுள்ளனர். இது பாண்டிய மன்னனால் தோற்றுவிக்கபட்ட ஒற்றை கோயிலாகும்.


PC: பா.ஜம்புலிங்கம்

பணி முடியாததன் காரணம்

பணி முடியாததன் காரணம்

கோயிற்பணி முற்று பெறவில்லை. சிகரம் மட்டும் முற்றுப் பெற்றுள்ளது. இதில் கருவறையும் அர்த்த மண்டபமும் உள்ளன.

PC: பா.ஜம்புலிங்கம்

கலை, சிற்பங்கள்

கலை, சிற்பங்கள்


சிற்ப வேலைபாடுகள் நிறைந்த இக்கோயிலிலுள்ள உமாமகேசுவரர், தட்சிணாமூர்த்தி, திருமால், பிரம்மா ஆகியோரின் சிற்ப வடிவங்கள் எழில் வாய்ந்தவை. விமானத்தின் மேற்பகுதியில் நரசிம்மரும் வடக்கில் பிரம்மனும் காட்சி தருகின்றனர். விமானத்தின் நான்கு மூலைகளிலும் நந்தி சிலைகளும் இவற்றுக்கு கீழ் யாளிவரியும் கபோதகமும் அமைந்துள்ளன

PC: Balajijagadesh

பாண்டிய மன்னன் பராந்தக நெடுஞ்சடையன்

பாண்டிய மன்னன் பராந்தக நெடுஞ்சடையன்

சமணர்கள் தங்கள் குரு, தாய், தந்தை, மகள் ஆகியோரின் நினைவாக இங்கு தீர்த்தங்கரர் சிற்பங்களை உருவாக்கியுள்ளனர். இச்சிற்பங்களின் கீழே அவற்றை உருவாக்கியவரின் பெயர் வட்டெழுத்தில் பொரிக்கப்பட்டுள்ளது. இங்கு சமணசித்தாந்தம் போதிக்கப்பட்டது. இச்சிற்பங்கள் பாண்டிய மன்னன் பராந்தக நெடுஞ்சடையன் காலத்தில் தோற்றுவிக்கபட்டவை.

PC:Booradleyp

கண்ணுக்கு தெரியாது?

கண்ணுக்கு தெரியாது?


கழுகு மலையில் ஏறி நடந்து செல்லும்போது இக்கோயில் கண்ணுக்குத் தெரியாது. சற்றே தாழ்ந்த தளத்தில் சுமார் 10 அடி இறக்கத்தில் இறங்கியே இக்கோயிலுக்குச் செல்ல முடியும்.

PC: பா.ஜம்புலிங்கம்

மிகச்சிறியது

மிகச்சிறியது

ஒரு சிறிய கோயிலில் கருவறையுடன் கூடிய விமானம் எவ்வாறு அமையுமோ அந்த அளவு இக்கோயில் காணப்படுகிறது. அப்போ எப்படி பிரம்மாண்டம்?

PC: Balajijagadesh

மர்மம் இதுதான்?

மர்மம் இதுதான்?

கிபி 8ம் நூற்றாண்டில் பாண்டியர்கள் தமிழகத்தில் சிறப்பாக ஆட்சிசெய்துகொண்டிருந்தனர்.

சோழ ராஜ்யம் முடிவுற்றப்பின்னரும் பாண்டியர்கள் அரசாட்சி செய்துகொண்டிருந்ததாக தகவல்கள் உள்ளன.

செழித்து வளர்ந்த பாண்டிய மன்னர்கள் ஏன் இந்த கோயிலை முடிக்காமல் விட்டுவிட்டனர் என்பது இன்னும் மர்மமாக உள்ளது.

யாரோ ஒருவருடைய சாபம்தான் இந்த கோயில் முடிக்கமுடியாமல் பாண்டிய வம்சத்தினரை அல்லோலப்படுத்தியது என்று செவிவழி செய்திகள் தெரிவிக்கின்றன.

PC: Kasiarunachalam

பிரம்மாண்டத்தின் உச்சம்

பிரம்மாண்டத்தின் உச்சம்

இங்குள்ள குகைகள், கோயில்கள், மலைகளை பார்க்கும்போது பாண்டிய மன்னர்கள் உலகின் மிகப்பிரம்மாண்டமாக ஏதோ ஒன்றை நிகழ்த்த விரும்பித்தான் இதனை கையாண்டுள்ளனர் என்பது புரியும். ஃப்ரீயா இருந்தா வாங்களேன்.... கழுகுமலைக்கு ஒரு டூர் போய்ட்டு வரலாம்...

PC: Kasiarunachalam

மேலும் படிக்க

மேலும் படிக்க

நாசாவே வியக்கும் இந்த சிவன் கோவில் மர்மங்கள் உங்களுக்கு தெரியுமா? இத கிளிக் பண்ணுங்க

இஸ்லாமியர்களுக்காக கோவிலை இடித்த இந்துக்கள் - எங்கே தெரியுமா?

உலகையே ஆண்ட சோழ ராஜ்ஜியம் வீழ்ந்த இடம் எது தெரியுமா?

Read more about: travel, temple, பயணம்