Search
  • Follow NativePlanet
Share
» »உங்களுக்குத் தெரியுமா மலைக்கோட்டையின் 1080 வருட ரகசியம் என்னவென்று?

உங்களுக்குத் தெரியுமா மலைக்கோட்டையின் 1080 வருட ரகசியம் என்னவென்று?

மலைக்கோட்டையின் ரகசியத்தைத் தேடி ஒரு பயணம்...

திருச்சி என்றவுடன் கண் முன்னே நிற்பது மலைக்கோட்டையின் கம்பீரமும், உச்சி பிள்ளையார் கோவிலின் அழகும்தான்.

சுமார் 1080 வருடங்களுக்கு முன்பே, கட்டத்தொடங்கிய இந்த கோவில் மதுரை நாயக்கர்களால் கட்டி முடிக்கப்பட்டது.

. மலையின் உச்சியில் இந்த கோவில் அமைந்திருக்கின்றது. இந்த கோவிலுக்கு செல்லும் படிகள் செங்குத்தாக இருக்கிறது. இங்கிருந்து, பார்த்தால், திருச்சி நகர் முழுவதும் அழகாய் காணலாம்.
மேலும், ஸ்ரீரங்கம் கோவிலும் காவேரி நதியும் கொள்ளிடமும் நன்கு தெரிகிறது.

அப்பர், ஞானசம்பந்தர், மாணிக்க வாசகர், தாயுமான அடிகள் ஆகியோரால் பாடல்கள் மூலம் வெளிப்படுத்தப்பட்ட புனித தலம் இது ஆகும்.

இந்த கோவிலில் இரண்டு குகைகள் உள்ளன. இவை இந்த கோவிலுக்கு மேலும் சிறப்பு ஆகும். ஒன்று மலை மீது உள்ளது. அதில் கிரந்தத்திலும், கீழே உள்ள குகையில் 104 செய்யுள்கள், அந்தாதி யாக இருக்கின்றது. இந்த கோவிலின் அடிவாரத்தில் உள்ள தாயுமானவர் கோவில் தேவாரப்பாடல் பெற்ற சிவத்தலங்களில் ஒன்றாகும்.

திருச்சி மலைக்கோட்டை

திருச்சி மலைக்கோட்டை

மலைக் கோட்டையுள் அமைந்துள்ள கோயில்கள் உச்சிப் பிள்ளையார் கோயில், சிவன் கோயில் என்பன. இக்கோட்டை பல வரலாற்று நிகழ்வுகளின் களமாக இருந்துள்ளது. இதற்குள் பல்லவர் காலக் குடைவரைக் கோயில் ஒன்றும், நாயக்கர் காலக் கோட்டை ஒன்றும் உள்ளன. இக்கோட்டை, நாயக்கர்களுக்கும் பீசப்பூர், கர்நாடகம், மராட்டா ஆகிய அரசுகளுக்கும் இடையே இடம்பெற்ற பல போர்களைக் கண்டுள்ளது. இந்தியாவில் பிரித்தானியப் பேரரசு காலூன்றுவதற்கு அடிப்படையாக அமைந்த கர்நாடகப் போர்களில் இக்கோட்டை முக்கிய பங்கு வகித்துள்ளது

PC: The British library

உச்சிப்பிள்ளையார் கோவிலின் படிகள்

உச்சிப்பிள்ளையார் கோவிலின் படிகள்

மலைக்கோட்டையின் உச்சியில் 273 அடி உயரத்தில் உள்ளது. பிள்ளையார் சன்னதியை அடைய தரையில் இருந்து 437 படிகளை ஏற வேண்டும்.
மலைக்கோட்டை திருச்சி


PC: Arunankapilan

நூற்றுக்கால் மண்டபம்

நூற்றுக்கால் மண்டபம்

பல்லவர்களால் சிறு குகைக் கோயிலாக எழுப்பப்பட்ட மலைக்கோட்டைக் கோயிலைப், பின்னர், இதன் இயற்கையாகவே அமைந்த அரண்களைச் சாதகமாக்கிக் கொண்ட நாயக்க மன்னர்கள் பெருமளவில் மேம்படுத்தினர். இக்கோயில் தற்சமயம் கொண்டிருக்கும் அமைப்பிற்கு விஜய நகர அரசர்களும் மற்றும் மதுரை நாயக்கர்களும் அளித்த பங்கு குறிப்பிடத்தக்கது.

PC: Arunankapilan

உச்சிப்பிள்ளையார்

உச்சிப்பிள்ளையார்

உச்சிப்பிள்ளையார் கோவிலின் மற்றொரு தோற்றம்

PC: vasuVR

மலையில் அமைந்துள்ள கோவிலின் வடிவம்

மலையில் அமைந்துள்ள கோவிலின் வடிவம்

இம்மலையில் மூன்று நிலைகளில் கோவில்கள் அமைந்துள்ளன. கீழே மாணிக்க விநாயகர் கோயில், மேலே உச்சிப்பிள்ளையார் கோயில், மற்றும் இடையே தாயுமானவர் கோவில் ஆகியவை உள்ளன. இதைத் தவிர பல்லவர் கால குடைவரை கோவிலும், பாண்டியர் கால குடைவரை கோவிலும் இம்மலையில் உள்ளன.

PC: Arunankapilan

கோட்டையுடன் கம்பீரமாக காட்சிதரும் கோவில்

கோட்டையுடன் கம்பீரமாக காட்சிதரும் கோவில்

பொதுவாக சமதரை அமைப்பிலேயே உள்ள திருச்சி மாநகரின் மத்தியில் சுமார் 83 மீட்டர் உயரமான இம்மலை அமைந்திருப்பது இயற்கையின் சிறப்பாகும். மிகப் பழமையான மலைகளுள் ஒன்றான இது, ஏறத்தாழ 3400 மில்லியன் வருடங்கள் பழமையானதாகக் கணக்கிடப்படுகிறது.


PC: Pravinyeapuri

Read more about: பயணம் travel
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X