» »40 ஆண்டுகளுக்கு ஒருமுறை மட்டுமே காண முடியும் வரதராஜப் பெருமாள்! எங்கே தெரியுமா?

40 ஆண்டுகளுக்கு ஒருமுறை மட்டுமே காண முடியும் வரதராஜப் பெருமாள்! எங்கே தெரியுமா?

Posted By: Udhaya

வரதராஜப் பெருமாள் கோயில் வைணவர்களின் நம்பிக்கைப்படி, திருவரங்கம் மற்றும் திருவேங்கடத்துக்கு அடுத்து முக்கியத்துவம் வாய்ந்த தலம் ஆகும். இது சென்னையை அடுத்த கோயில் நகரமான காஞ்சிபுரத்தில் அமைந்துள்ளது. இது வைணவ திவ்ய தேசங்களுள் முப்பதோராவது திவ்ய தேசமாகும்.

இக்கோயிலை முதலில் நிறுவியது யார் என்பது பற்றிய தகவல்கள் தெரியவில்லை. எனினும் கி பி 1053 இல் சோழர்களால் வேழமலையில் குகைவரைக் கோயில் கிழக்கு மேற்காக விரிவாக்கப்பெற்றது என்று கல்வெட்டுகளின் மூலம் அறிந்துகொள்ள முடிகிறது. முதலாம் குலோத்துங்க சோழனும், விக்கிரம சோழனும் கோயிலை விரிவுபடுத்தினர் என்பதும், பதினான்காம் நூற்றாண்டில் தாயார் சன்னதியும், அபிஷேக மண்டபமும் அமைக்கப்பெற்றன என்பதும் கல்வெட்டுக்கள் தரும் செய்திகள்.

தமிழர்களின் வரலாற்று சிறப்பு மிக்க இக்கோயிலைப் பற்றி மேலும் தெரிந்துகொள்ளலாம் வாருங்கள்.

சோழர்களின் வீழ்ச்சி

சோழர்களின் வீழ்ச்சி

சோழர்களின் வீழ்ச்சிக்குபின், விஜயநகர அரசர்கள் கிழக்கு கோபுரம், ஊஞ்சல் மண்டபம் மற்றும் கல்யாண மண்டபங்களை நிறுவினர்.

Ssriram mt

ஒரே கல்லில் செதுக்கப்பட்ட 100 தூண்கள்

ஒரே கல்லில் செதுக்கப்பட்ட 100 தூண்கள்


நூற்றுக்கால் மண்டபத்தில் தொங்கும் கல் சங்கிலி, கல்யாண மண்டபம் எட்டு வரிசைகளில், வரிசைக்கு பன்னிரண்டு தூண்களாக 96 சிற்பகலை மிக்க ஒரே கல்லாளான தூண்கள் நிறைந்த மண்டபம் ஆகும்.


Ssriram mt

யாளியும் வீரர்களும்

யாளியும் வீரர்களும்


தூண்களில் யாளி, போர்குதிரை, குதிரை மீது வீரர்கள் மற்றும் பல்வகை சிற்பங்கள் செதுக்கப்பட்டுள்ளன. இதற்குள் உள்ள சிறிய நான்கு தூண் கொண்ட மண்டபத்தையும் சேர்த்து நூறு கால் மண்டபம் என அழைக்கப்படுகிறது.

இதன் நான்கு மூலைகளில் தொங்கும் கற்சங்கிலிகள் சிற்பக்கலையின் விந்தையாகும். கிழக்கு கோபுரம் ஒன்பது நிலைகளுடன் 180 அடி உயரமுடையது. தற்போது இக்கோபுரம் சிதிலமடைந்துள்ளது.

Ssriram mt

கோயிலின் அமைப்பு

கோயிலின் அமைப்பு


தேவராஜப் பெருமாள், வேழ மலை மீது நின்ற திருக்கோலத்தில் மேற்கே திருமுகமண்டலமுடன் நாற்கரத்துடன் பக்தர்களுக்கு அருள் புரிகிறார். மூலவர் மலை மீது அமைந்துள்ளார் என்பதற்கு ஆதாரமாக கர்ப்பகிரகத்தின் நேர் கீழே குன்று குடைவரை கோயிலில் யோக நரசிங்க பெருமாள் வீற்றுக்கிறார்.

Ssriram mt

பல்லி

பல்லி


பெருமாளை காண்பதற்கு இருப்பதிநான்கு படிகளை ஏறிச்செல்லும் போது காணப்படும் தங்க பல்லி மற்றும் வெள்ளி பல்லி, இக்கோவிலில் பிரசிதம்.

Ssriram mt

தேவி

தேவி


மூலவரை நோக்கிய படி தென்மேற்கே பெருந்தேவி தாயாருக்கு தனி சன்னதியும், திருக்குளத்தின் எதிரே சக்கரதாழ்வர் சன்னிதி உள்ளது.

Ssriram mt

மற்ற தெய்வங்கள்

மற்ற தெய்வங்கள்

கோயில் வெளி பிரகாரத்தில் கண்ணன், ராமர், வராஹா பெருமாள் சன்னதிகளும், ஆண்டாள், ஆழ்வார்கள், களியமானிக்க பெருமாள், ஆச்சார்யர்கள் சன்னதிகளும் மற்றும் நம்மாழ்வார் சன்னதியும் உள்ளன.

pavan

ராஜகோபுரம்

ராஜகோபுரம்

இராஜகோபுரம் 96 அடி உயரமுள்ளது.

Rathishkrishnan

உற்சவம்

உற்சவம்

அத்தி வரதர் எனப்படும் மரத்தால் செய்யப்பட்ட பெருமாள், திருக்குளத்தில் பள்ளி கொண்டிருக்கிறார். முழுதும் அத்திமரத்தால் ஆன பள்ளிகொண்ட பெருமாள் நீண்ட நெடிய உருவம். 40 ஆண்டுகளுக்கு ஒருமுறை, குளத்து நீரை முழுவதும் வெளியேற்றி ஸ்ரீ அத்திவரதரின் திருவுருவச் சிலையை வெளியெடுத்து, கோயிலில் பள்ளிகொள்ள வைத்து ஒருமாத காலத்திற்கு உற்சவங்கள் பிரமாதமாக நடக்கும்.

அத்திவரதரை தம் வாழ்நாளில் தரிசிப்பது மிகப் பெரும் பேறு ஆகையால், எங்கிருந்தெல்லாமோ வந்து மக்கள் பெருமாளைத் தரிசிப்பர்.

Ssriram mt

 திருக்குளத்தின் கிழக்குத்திசையில்

திருக்குளத்தின் கிழக்குத்திசையில்


திருக்குளத்தின் கிழக்குத்திசையில் சக்கரத்தாழ்வார் என பேசப்படுகின்ற சுதர்சன ஆழ்வார் சந்நிதி அமைந்துள்ளது.தமிழகத்தில் எங்கும் காணமுடியாத மிகப்பெரிய அளவில் சுதர்சன ஆழ்வார் திருமேனி காட்சி தருகின்றது. இவர் 16 கைகளுடன் சங்கு சக்கரங்கள் தாங்கி காட்சியளிக்கின்றார்.

Ssriram mt

 திருவிழாக்கள்

திருவிழாக்கள்


வைகாசி மாதத்தில் உற்சவத் திருவிழா ஒவ்வொரு வருடமும் சிறப்பாக நடைபெறும். இவ் உற்சவத் திருவிழாவில் கருடசேவையும், தேரும் மிகப்பிரபலம்.

Ssriram mt

எப்படி செல்லலாம்?

எப்படி செல்லலாம்?

காஞ்சிபுரம் பேருந்து நிலையத்திலிருந்து 5 கி.மீ. தொலைவில் காஞ்சிபுரம் - செங்கல்பட்டு சாலையில் அமைந்துள்ள இத்திருத்தலத்திற்கு நகர பேருந்துகளும் ஆட்டோக்களும் இயக்கப்படுகின்றன. காஞ்சிபுரத்திற்கு சென்னையிலிருந்து எண்ணற்ற பேருந்துகளும் ரயில்களும் உள்ளன.

Ravindraboopathi

Read more about: travel, temple