» »மார்பகத்தை வெட்டியெறிந்த வீரமங்கை - ஒரு இடம் சுற்றுலாத்தலமான கதை

மார்பகத்தை வெட்டியெறிந்த வீரமங்கை - ஒரு இடம் சுற்றுலாத்தலமான கதை

Written By: Udhaya

அந்த காலத்தில் பெண்களுக்கு எதிராக பல்வேறு கொடுமையான சட்டங்கள் இருந்தது. அவற்றில் குழந்தை திருமணம், உடன்கட்டை ஏறுதல், பெண்சிசுக் கொலை போன்றவை அடக்கம் என்பது அனைவருக்கும் தெரிந்தது.

இவற்றில் பல பாடபுத்தங்களிலும் எழுதப்பட்டுள்ளன. ஆனால் பாடப் புத்தகங்களிலும் மறைக்கப்பட்ட சில கொடுமையான வரி விதிப்பு முறைகளும் இருந்தன. அதைப் பற்றிதான் நாம் இப்போது பார்க்கப்போகிறோம்.

சாதிக் கொடுமை

சாதிக் கொடுமை

சுமார் 200 ஆண்டுகளுக்கு முன் இந்தியாவில் சாதிக் கொடுமை தலைவிரித்தாடியது.

மார்பக வரிச்சட்டம்

மார்பக வரிச்சட்டம்

அந்த காலக்கட்டத்தில் மார்பக வரிச்சட்டம் என்ற பெயரில் ஒரு சட்டம் அமலில் இருந்தது.

வரி கட்டாயம்

வரி கட்டாயம்

ஒரு சில உயர் பிரிவில் குறிப்பிடப்பட்டிருந்த பெண்களைத் தவிர மற்ற பிரிவைச் சார்ந்த பெண்கள் அனைவரும் வரி கட்டாயம் செலுத்தவேண்டும்.

மார்பை மறைக்காவிட்டால் வரிவிலக்கு

மார்பை மறைக்காவிட்டால் வரிவிலக்கு

ஒவ்வொருவரும் தங்கள் மார்பின் அளவுக்கு ஏற்ப வரி செலுத்த வேண்டும். மார்பை மறைக்காவிட்டால் வரிவிலக்கு உண்டு.

கன்னியாகுமரி

கன்னியாகுமரி

மீசை வளர்க்கவும், அணிகலன்கள் அணியவும் தனியாக வரி செலுத்த சட்டம் இருந்தது. குறிப்பாக கேரளத்தின் பெரும்பான்மையான பகுதி. கன்னியாகுமரி உள்ளிட்ட இடங்களில் இந்த சட்டம் கடுமையாக அமலில் இருந்தது.

நாஞ்சலி

நாஞ்சலி

அப்போது திருவாங்கூர் அரசின் இந்த கடுமையான சட்டங்களை எதிர்த்து நாஞ்சலி என்ற பெண் போராடினாள்.

 இரட்டை வரி

இரட்டை வரி

இதனால் திருவாங்கூர் அரசு அந்த பெண்ணுக்கு மார்பை மறைக்கக்கூடாது எனவும், அல்லது இரட்டை வரி செலுத்தும்படியும் உத்தரவிட்டது.

இரண்டு மடங்கு

இரண்டு மடங்கு

அதாவது மற்றவர்கள் மாராப்புக்காக செலுத்தும் பணத்தின் இரண்டு மடங்கு செலுத்தவேண்டும்.

இல்லம் தேடி

இல்லம் தேடி

அடுத்த மாதம் வந்தது. வரி வசூலிப்பவர் நாஞ்சலியின் இல்லம் தேடி வந்து, வரியை கேட்டார்.

வீரவாள்

வீரவாள்

இதனால் ஆத்திரத்தில் கோபத்தின் உச்சிக்கே சென்ற நாஞ்சலி உள்ளேயிருந்து வீரவாள் ஒன்றை எடுத்த வந்தாள். அடுத்து அங்கு நடந்ததுதான் யாருமே எதிர்பார்த்திராதது.

வாழை இலை

வாழை இலை

வாழை இலையைதரையில் விரித்து தான் கொண்டு வந்த கத்தியால் தன் மார்பகங்களை அறுத்து இலையில் போட்டாளாம் நாஞ்சலி.

குலைநடுங்க

குலைநடுங்க

சுற்றியிருந்தவர்கள் குலைநடுங்க, வரி வசூலிப்பவர்களோ ஒரு நிமிடம் ஆடிப் போய்விட்டனர்.

இதற்குதானே வரி.

இதற்குதானே வரி.

இதற்குதானே வரி.. இதையே உங்கள் மன்னரிடம் கொடுங்கள். என்று கூறிவிட்ட அந்த இடத்திலேயே இறந்துவிட்டாளாம் நாஞ்சலி.

நீக்கியது.

நீக்கியது.

இந்த சம்பவத்தால் அதிர்ந்து போன திருவாங்கூர் அரசு இந்த சட்டத்தை மறுபேச்சு இல்லாமல் நீக்கியது.

முலைச்சிபரம்பு

முலைச்சிபரம்பு

இந்த சம்பவம் நடந்த இடம் கேரளாவின் ஆலப்புழா மாவட்டத்திலுள்ள முலைச்சிபரம்பு எனும் இடம். இப்போது இந்த இடம் மனோரமா காவலா என்று பெயர்மாற்றம் செய்யப்பட்டு அழைக்கப்படுகிறது.

நினைவுச் சின்னம் கூட இல்லை.

நினைவுச் சின்னம் கூட இல்லை.

அந்த ஊர் மக்கள் இன்னும் அந்த நாஞ்சலியை நினைவில் வைத்துள்ளனர். ஆனாலும் கேரளாவில் அந்த பெண்ணுக்கு ஒரு நினைவுச் சின்னம் கூட இல்லை.

பெண்கள் முன்னேற்றத்துக்காக

பெண்கள் முன்னேற்றத்துக்காக

பெண்கள் முன்னேற்றத்துக்காக எத்தனையோபேர் போராடியுள்ளனர். ஆனால் அவர்களுக்கெல்லாம் முன்னரே.. பெண் விடுதலைக்காக தன் இன்னுயிரை மாய்த்த நாஞ்சலியின் புகழ் பரவிடச் செய்வோமாக..

‘ஆலெப்பி’ பீச்,

‘ஆலெப்பி’ பீச்,

வேறு எந்த கடற்கரை நகரத்திலும் பார்க்க முடியாத ரம்மியமான கடற்கரை இந்த ‘ஆலெப்பி' பீச் எனப்படும் கடற்கரையாகும். நகர மையத்திலேயே உள்ள இந்த கடற்கரை ரயில் நிலையத்திலிருந்து 1கி.மீ தூரத்திலேயே அமைந்துள்ளது. ஒரு புறம் பரந்து விரிந்த அரபிக்கடலும், மறுபுறம் வரிசையாக காட்சியளிக்கும் பனை மரங்களுமாக கண்கொள்ளா அழகுடன் இந்த கடற்கரை நீண்டு கிடக்கிறது.

அம்பலப்புழா ஸ்ரீ கிருஷ்ணா கோயில்

அம்பலப்புழா ஸ்ரீ கிருஷ்ணா கோயில்


இக்கோயிலின் மூலவரான பார்த்தசாரதி பஹவான் ஒரு கையில் சாட்டையுடனும் மறு கையில் சங்குடனும் ருத்ர கோலத்தில் காட்சியளிக்கின்றார். மற்ற கோயில்களில் உள்ள எல்லா விஷ்ணு அவதாரங்களும் சங்கு ஏந்திய கோலத்தில் காணப்பட்டாலும், சாட்டையுடன் காட்சியளிக்கும் விஷ்ணு அவதாரத்தை அம்பலப்புழா ஸ்ரீ கிருஷ்ணா கோயிலில் மட்டுமே தரிசிக்க முடியும்.

 சம்பக்குளம் சர்ச்

சம்பக்குளம் சர்ச்

கேரளாவிலுள்ள ‘கத்தோலிக் சிரியன்' தேவாலயங்களின் தாய் ஆலயமாக இந்த சம்பக்குளம் சர்ச் புகழ் பெற்றுள்ளது. கி.பி 427ம் ஆண்டில் கட்டப்பட்டுள்ள இந்த தேவாலயம் காலப்போக்கில் பல மாற்றங்களையும் புனரமைப்புகளையும் சந்தித்துள்ளது.

கருமடி குட்டன்

கருமடி குட்டன்


ஆலெப்பி நகரத்தில் உள்ள ஒரு புராதனமான புத்தர் சிலையானது கருமடி குட்டன் (கருமடி என்னும் ஊரிலிருந்து வந்த சிறுவன் என்பது இதன் பொருள்) என்ற பெயரில் அழைக்கப்படுகிறது. இந்தியாவில் பிறந்த புத்த மத மரபானது அக்காலத்தில் எல்லா ராஜ்ஜியங்கள் மற்றும் நாகரிகங்கள் மத்தியில் பரவ ஆரம்பித்தபோது அதன் தடயங்களையும், சின்னங்களையும் பல பிரதேசங்களில் காலப்போக்கில் விட்டுச்சென்றுள்ளது.

Read more about: travel, tour
Please Wait while comments are loading...