» »குஜராத்தில் புஜ்ஜினு ஒரு இடம் இருக்கு தெரியுமா?

குஜராத்தில் புஜ்ஜினு ஒரு இடம் இருக்கு தெரியுமா?

Written By: Udhaya

வரலாற்றுக்கு முந்தைய காலகட்டம் தொடங்கி, இந்திய வரலாற்றுடன் மிக நெருங்கிய தொடர்பு கொண்டுள்ளது புஜ் நகரம். இண்டஸ் பள்ளத்தாக்கு நாகரீகம் மற்றும் மாவீரர் அலெக்ஸாண்டரின் ஆட்சிக்காலத்தில் ஆரம்பித்து, ஜடேஜா ரஜபுத், குஜராத் சுல்தனேட் மற்றும் ஆங்கிலேயர் ஆட்சி வரை வரலாற்றின் அனைத்து காலகட்டங்களின் மௌன சாட்சியாக புஜ் நகரம் இருந்து வந்துள்ளது. 18 ஆம் நூற்றாண்டில், முகாலயப் பேரரசின் வீழ்ச்சியினால் உருவான அப்போதைய அரசியல் சூழலில் இருந்து கட்ச் பகுதியை பாதுகாக்கும் பொருட்டு, ராவ் கோட்ஜி, புஜ் கோட்டையைக் கட்டியிருக்கிறார். இந்த கோட்டை, நகரைச் சுற்றிலும் சுமார் 11 அடி சுவர்களையும், 51 துப்பாக்கிகளையும் கொண்டுள்ளது. புஜ்ஜில் நாம் காணவேண்டிய இடங்களைப் பற்றி இப்போது காண்போம்.

செயற்கை ஏரி

செயற்கை ஏரி

மனிதர்களால் செயற்கையாக உருவாக்கப்பட்டு, ஜடேஜாவின் ஆட்சியாளரான ராவ் ஹமீர் அவர்களின் பெயரில் வழங்கப்பட்டு வரும் இந்த ஏரி, புஜ் நகரின் மத்தியப் பகுதியில் அமைந்துள்ளது. புஜ் நகரின் பெரும்பாலான முக்கிய சுற்றுலா ஸ்தலங்களை தன் கிழக்குப்புறத்தே கொண்டுள்ள, இந்த 450 வருடப் பழமை வாய்ந்த ஏரியின் கரையோரத்தில் நடைப்பயணம் மேற்கொள்வது ஒரு இனிய அனுபவமாகும். இந்த நீர்நிலையின் மத்தியில் அமைந்துள்ள ஒரு வண்ணமயமான தோட்டம், இதனை மேலும் அழகுறச் செய்கிறது.

आर्यावर्त

கட்ச் பாலைவன விலங்குகள் சரணாலயம்

கட்ச் பாலைவன விலங்குகள் சரணாலயம்

இந்த பாலைவன சரணாலயம் மொத்தமுமே காண்போரை செயலிழக்கச் செய்யும் அழகோடு காணப்படுன்றது. 1986 ஆம் வருடத்தில் சரணாலயமாக அறிவிக்கப்பட்ட இந்த வசீகரமான கட்ச் பாலைவன விலங்குகள் சரணாலயம் ஏராளமான பாலூட்டி வகை விலங்குகளுக்கும், பல அரிய வகை பறவையினங்களுக்கும் ஆதரவளித்து வருகிறது. கட்ச் பகுதியின் கிரேட் ரானில் அமைந்துள்ள இது, சுமார் 0.5 மற்றும் 1.5 அடி நீரின் ஆழத்தோடு கூடிய, உப்புக்கரிக்கும் மிகப்பெரிய பருவகால ஈரநிலங்களுள் ஒன்றாகும். அக்டோபர் மற்றும் நவம்பர் மாதங்களின் போது, இங்குள்ள மழை நீர் சுத்தமாக வறண்டு, இந்த சரணாலயத்தின் மொத்தப் பகுதியையும் உப்பார்ந்த பாலைவனமாக மாற்றி விடுகிறது.

Shaunak Chitgopkar

 ராயல் சதார்திஸ்

ராயல் சதார்திஸ்

ராயல் சதார்திஸ், நகரத்தினுள்ளே அமைந்திருந்தாலும், புஜ் நகரின் அமைதியான மையங்களுள் ஒன்றாக விளங்குகிறது. பரபரப்பான சாலைகளிலிருந்து தொலைவாகவும், சுற்றுப்புறத்தில் கட்டிடங்கள் ஏதும் இல்லாமலும் காணப்படும் இதில், ஒன்றைக் காட்டிலும் மற்றொன்று வெகு அழகாக இருப்பது போல் தோற்றமளிக்கும் அரச குடும்பத்தினரின் நினைவுச்சின்னங்கள் உள்ளன. இவற்றுள் சில 2001 ஆம் வருடத்தில் புஜ் நகரைத் தாக்கிய நிலநடுக்கத்தினால் சிதைக்கப்பட்டிருந்தாலும் இரண்டாம் ராய்தன்ஜி, லக்பத்ஜி மற்றும் தேசர்ஜி ஆகியோரின் நினைவகங்கள் இப்போதும் நல்ல நிலையிலேயே காணப்படுகின்றன. இந்த இடம் கட்டாயம் வருகை தர வேண்டிய ஒரு இடமாகும்.

Rahul Zota

கைவினைப் பொருட்கள் மற்றும் துணிமணிகள்

கைவினைப் பொருட்கள் மற்றும் துணிமணிகள்

புஜ் நகரம், கைவினைப் பொருட்கள் மற்றும் துணிமணிகளுக்கு பிரபலமாக விளங்கும் சுவாரஸ்யமான நகரங்களின் உறைவிடமாக தன்னை அடையாளப்படுத்திக் கொள்கிறது. தமத்காவும் அந்நகரங்களுள் ஒன்றாகும். புஜ் நகரின் கிழக்குப் பகுதியில் சுமார் 57 கி.மீ. தொலைவில் அமைந்துள்ள நகரமான இது, அற்புதமான அஜ்ரக் அச்சுரு தொழில்நுட்பத்தில் வல்லுநர்களாக விளங்கும் கைவினைக் கலைஞர்களின் கூடாரமாக விளங்குகிறது.
gujarattourism.com

 அயினா மஹால்

அயினா மஹால்

புஜ் நகரின் ஹமீர்ஸர் ஏரியின் வடகிழக்கு மூலையில் அமைந்துள்ளதான அயினா மஹால் அல்லது "கண்ணாடிகளின் கூடம்", ஒரு அற்புதமான மாளிகையாகும்.

18 ஆம் நூற்றாண்டில் கட்டப்பட்ட இது, தேர்ந்த கலைநுட்ப வல்லுநரான ராம் சிங் மாலம் என்பவரால், இந்திய-ஐரோப்பிய பாணிகளைத் தழுவி அற்புதமாக வடிவமைக்கப்பட்டுள்ளது.

இந்த மஹால், மிக அழகான சில கலைப்பொருட்கள் மற்றும் ஓவியங்களைக் கொண்டுள்ளது. இந்த மாளிகை, 2001 ஆம் வருடம் நிகழ்ந்த நிலநடுக்கத்தின் போது பெரும்பாலும் சிதைக்கப்பட்டு விட்டது; என்றாலும் பாதிப்புக்குள்ளாகாமல் தப்பித்த சில பகுதிகளைக் கொண்டு ஒரு அருங்காட்சியகம் உருவாக்கப்பட்டுள்ளது

calliopejen

Read more about: travel temple gujarat

இப்போதே பெறுங்கள் சிறந்த சலுகைகளைப் பயணங்களிலும், பயண டிப்ஸ்களும், பயணக் கதைகளும் உடனுக்குடன்