» »சர்ச்சை சரவெடி எச்.ராஜா பிறந்த ஊர் எங்கயிருக்கு தெரியுமா?

சர்ச்சை சரவெடி எச்.ராஜா பிறந்த ஊர் எங்கயிருக்கு தெரியுமா?

Written By: Udhaya

இவங்களுக்கு இதே பொழப்பா போய்டிச்சி.. என்னடா ஆவுன்னா டிரெண்டிங்க், போராட்டம், வாய்ப்பேச்சுனு அரசியல் சுழன்று சுழன்று அடித்துக்கிட்டுருந்தாலும், தமிழர்களிடமிருந்து வரிசையா தனது பதிவுகளால் வாங்கிக்கட்டிக்கொண்டிருக்கும் தமிழக பாஜக பிரமுகர் எச்.ராஜா பிறந்த ஊர் எது என்பது தற்போது சமூகவலைத்தளங்களில் நிறைய பேரின் கேள்வியாக இருக்கிறது. சிலர் அவரைத் தமிழர் இல்லை வடநாட்டவர் என்றும், அவர் தமிழின விரோதி என்றும் பேசி வருகின்றனர். உண்மையில் அவர் எந்த ஊரில் பிறந்தார் என்பது தெரியுமா?

மெலட்டூர்

மெலட்டூர்

தமிழ்நாட்டின் தஞ்சாவூர் மாவட்டத்தில் உள்ள பகுதிதான் மெலட்டூர். இங்கு பிறந்தவர்தான் எச் ராஜா. இந்த ஊர் மிகவும் பெருமை வாய்ந்தது என்றால் உங்களால் நம்ப முடிகிறதா. தஞ்சாவூர் சுற்றுப்பகுதிகளிலேயே சில இடங்களைப் பற்றி நிறைய பேருக்குத் தெரியாது. அப்படி இருக்கையில் இந்த ஊர் சிறிய இடமாக இருந்தாலும் பலரை கவர ஒரு காரணம் இருக்கிறது. அதுதான் கலை.....

மாங்குடி துரைராஜா

மாங்குடி துரைராஜா


மாங்குடி துரைராஜை பற்றி கேள்விப் பட்டிருக்கிறீர்களா. மேலட்டூர் பரதநாட்டியம் என்ற கலையை பற்றி ஏதேனும் அறிந்துள்ளீர்களா. ஆம். இந்த இடம்தான் அந்த வகை பரதநாட்டியத்தின் பிறப்பிடமாக கருதப்படுகிறது.

பாகவதமேளா என்று அழைக்கப்படும் இந்த வகை கலை இந்த மேலட்டூரிலிருந்து பிறந்ததாகத்தான் நம்பப்படுகிறது.

மேலட்டூரின் மக்கள்

மேலட்டூரின் மக்கள்

இந்த ஊரில் மக்கள் பத்தாயிரம்பேர் இருப்பார்கள். இங்கு 66சதவிகிதம் மக்கள் படித்தவர்கள். இந்த ஊரில் இன்னுமொரு அதிசயம் இருக்கிறது. இங்குள்ள பல வீட்டில் இரண்டு குழந்தைகள் 18 வயதுக்கும் கீழானவர்கள். அதாவது ஊரின் 12 சதவீத மக்கள் தொகை இவர்கள்தான். இது இந்த ஊரின் இளைஞர் பலத்தைக் காட்டுகிறது.

 வரலாறு

வரலாறு


இங்கு நிறைய கல்வெட்டுக்கள் கண்டெடுக்கப்பட்டுள்ளன. தஞ்சாவூர் எனும்போதே இது சோழர்களின் சொந்த பூமி என்பது விளங்கியிருக்கும். 12ம் நூற்றாண்டில் விக்ரமச் சோழன் ஆண்ட சமயங்களில் எழுதப்பட்ட கல்வெட்டுக்கள் இவை ஆகும்.

இது ரித வினோத வளநாடு என்று அந்த காலத்தில் அழைக்கப்பட்டிருக்கிறது. மேலும் இது உன்னதபுரி என்றும் அழைக்கப்படுகிறது.
bhagavatamela

பாகவதமேளா

பாகவதமேளா


இந்த இடத்தின் முக்கிய சுற்றுலா அம்சம் என்றால் அது பாகவதமேளா என்பதுதான். நரசிம்மரின் பிறந்தநாளைக் கொண்டாடும் விதமாக இந்த விழா நடைபெறும். இது நாடகங்கள், நடனங்கள் என நிறைய நடைபெறும் ஒரு தொகுப்பு நிகழ்ச்சியாகும். இவை பெரும்பாலும் தெலுங்கு மொழியில் நடத்தப்படும்.
bhagavatamela

பழமை

பழமை

இந்த விழாவானது மிகவும் பழமையானதாகும். 1888ம் ஆண்டிலிருந்தே இது நடத்தப்பட்டுவருகிறது. இந்த விழா இதனருகில் இருக்கும் சூளமங்கலம், சாலியமங்கலம், நல்லூர், ஊத்துக்காடு, தேப்பெருமநல்லூர் ஆகிய ஊர்களில் மட்டுமே நடத்தப்பட்டுவந்தது. ஆனால் 1938ம் ஆண்டுக்குப் பின் இந்த ஊரிலும் நடத்தப்படுகிறது.

bhagavatamela

 சுற்றுலா அம்சங்கள்

சுற்றுலா அம்சங்கள்


இதன் அருகினில் இருக்கும் அக்ரஹாரம் எனும் பகுதி கணபதி, திரௌபதி, சிவ கோயில்களையும் இந்த ஊர் சுற்றுலாத் தளமாகக் கொண்டுள்ளது. இங்கு அய்யனார் கோயிலும் அமைந்துள்ளது குறிப்பிடத்தக்கது. இதன் அருகிலேயே அமைந்துள்ளது ஒரு சரித்திர முக்கியத்துவம் வாய்ந்த கோயில்.

 மெலட்டூர் உன்னதபுரீஸ்வரர் கோயில்

மெலட்டூர் உன்னதபுரீஸ்வரர் கோயில்

வேண்டிய வரம் தரும் சிவபெருமான் வீற்றிருக்கும் இக்கோயில் பத்தாம் நூற்றாண்டைச் சேர்ந்தது. இந்த கோயிலில் உன்னத புரீஸ்வரர் சன்னதியும், பிள்ளையார், முருகர், துர்க்கை, சண்டீகேஸ்வரர், நவகிரகம், நடராசர் உள்ளிட்டவர்களின் சன்னதியும் காணப்படுகிறது. இது தமிழக அரசின் இந்து அறநிலையத்துறை கட்டுப்பாட்டில் அமைந்துள்ளது.
bhagavatamela

காமிகாகம முறை பூசை.

காமிகாகம முறை பூசை.

இந்த கோயிலில் காமிகாமக முறைப் படி ஒரு நேரம் மட்டும் பூசை நடைபெறுகிறது அதில் கலந்துகொண்டு வேண்டுபவர்களுக்கு மிகவும் பாக்கியம் கிடைக்கும் என்கிறார்கள் பக்தர்கள். மேலும் இந்த கோயிலில் நடைபெறும் திருவிழாக்கள் மிகவும் சிறப்பானதாகும். வைகாசி மாதம் விசாகம் நட்சத்திரத்தில் நடைபெறுகிறது அந்த திருவிழா.

bhagavatamela

நீண்ட நெடிய வரலாறு

நீண்ட நெடிய வரலாறு


தெலுங்கு பிராமணர்களுக்காக அச்சுதப்ப மன்னரால் கொடுக்கப்பட்ட ஒரு இடம் இதுவாகும். இது தஞ்சையிலிருந்து 20கிமீ தூரத்தில் அமைந்துள்ளது. இங்கு கிடைத்துள்ள கல்வெட்டுக்களின் படி முதலில் இந்த ஊர் பெருமெலட்டூர் என்றே அழைக்கப்பட்டு வந்ததாகவும், பின் அது மருவி வெறும் மெலட்டூர் என்றே நிலை கொண்டதாகவும் கருத்து நிலவுகிறது.
bhagavatamela

 காவிரியில் கண்டெடுத்த கடவுள்

காவிரியில் கண்டெடுத்த கடவுள்

காட்டாற்று வெள்ளத்தில் கரைபுரண்டு வந்த நீரில் அடித்து வரப்பட்ட லிங்கம் தான் இந்த கோயிலின் மூலவரான உன்னதபுரிஸ்வரர். இவர் கோபம் கொண்டால் உலகம் அழிந்துவிடும் என்றும் நம்பப்படுகிறது.
nativeplanet

பிரளயம்

பிரளயம்


அப்படி எடுக்கப்பட்ட சிவபெருமான் சில சமயங்களில் உலகம் இருக்கும் நிலைமையைப் பார்த்து, ருத்ரதாண்டவம் எடுத்து ஆடுவாராம். அப்போது பிரளயம் உண்டாகுமாம். அந்த நேரத்தில் சிவபெருமான் மேலட்டூரிலிருந்து சில கிமீ தூரத்தில் அமைந்துள்ள, தென்குடி திட்டை எனும் மலைக்குன்றில் ஏறிக்கொள்வாராம். இதனால் உலகம் அழியும் என்றும், பின் அவர் சாந்தியடைந்த பிறகு மீண்டும் இந்த உலகம் இயங்கும் என்று தொன்நம்பிக்கை கதைகள் கூறுகின்றன. புராணங்களை நம்பி படித்துக்கொண்டிருக்கும் சிலர் இதையும் உண்மை என்றே நம்புகின்றனர். எனினும் உலகம் அடுத்த ஆண்டு பிப்ரவரி 1ம் தேதி அழியப்போகிறது என்று ஒரு கருத்து சுற்றி வருகிறது பாருங்களேன்.

 ஸ்வார்ட்ஸ் தேவாலயம்

ஸ்வார்ட்ஸ் தேவாலயம்


1779ம் ஆண்டில் சரபோஜி மன்னரால் இந்த ஷ்வார்ட்ஸ் கிறித்துவ தேவாலயம் கட்டப்பட்டிருக்கிறது. தஞ்சை அரண்மனை நந்தவனப்பகுதியில் இந்த தேவாலயம் உள்ளது. ரெவரெண்ட் ஃப்ரெட்ரிக் கிறிஸ்டியன் ஸ்வார்ட்ஸ் என்ற டேனிஷ் மதகுருவின் மீதான அபிமானத்தின் காரணமாக இந்த தேவாலயத்தை சரபோஜி மஹாராஜா எழுப்பியுள்ளார். ஐரோப்பிய கலாச்சாரத்தில் மன்னருக்கு இருந்த இணக்கம் இதன் மூலம் தெளிவாகிறது. இந்த தேவாலயத்தில் ஸ்வார்ட்ஸ் மதகுரு இறக்குந்தருவாயில் சரபோஜி மன்னரின் கரங்களை பிடித்து ஆசி வழங்குவது போன்ற கல்வெட்டு சித்தரிப்பு காணப்படுகிறது. தஞ்சை மராட்டா வம்சத்தார் தொடர்பான காலனிய வரலாற்றின் அடையாளமாக இந்த தேவாலயம் வீற்றுள்ளது.
Nandhinikandhasamy

முருகன் கோயில்

முருகன் கோயில்

ஸ்வாமிநாதஸ்வாமி கோயில் என்று அறியப்படும் இந்த முருகன் கோயில் முருகப்பெருமானின் அறுபடை வீடுகளில் ஒன்றாகும். திருவேரகம் என்ற பெயரிலும் அழைக்கப்படும் இந்த கோயில் ஒரு செயற்கைக்குன்று போன்ற அமைப்பின் மீது கட்டப்பட்டிருக்கிறது. 60 படிக்கட்டுகளில் ஏறி இந்த கோயிலை சென்றடையலாம். மனித வாழ்வின் சராசரி ஆயுளான 60 வருடங்களை குறிக்கும் விதமாக இந்த படிக்கட்டுகள் அமைக்கப்பட்டிருப்பதாக சொல்லப்படுகிறது. 60 தமிழ் வருடங்களின் பெயர்களை குறிப்பதாகவும் மற்றொரு விளக்கம் சொல்லப்படுகிறது. மூன்று தளங்களை கொண்டுள்ள இந்த கோயிலின் மூன்றாவது தளத்துக்கு செங்குத்தான படிகளை ஏறி செல்லவேண்டியுள்ளது. இந்த மேல்தளத்தில்தான் கருவறை அமைந்துள்ளது. நடுத்தளத்தில் பிரகாரப்பகுதி காணப்படுகிறது.

Ranjithsiji

 புன்னைநல்லூர் மாரியம்மன் கோவில்

புன்னைநல்லூர் மாரியம்மன் கோவில்

புன்னைநல்லூர் மாரியம்மன் கோவிலானது தமிழ்நாட்டிலுள்ள தஞ்சாவூரில் அமைந்துள்ள புகழ்பெற்ற இந்து ஆலயமாகும். அப்போதைய தஞ்சாவூர் மகாராஜாவான சத்ரபதி வெங்கோஜியின் கனவில் மாரியம்மன் வந்து தான் தஞ்சாவூருக்கு அருகில் 3 கிலோமீட்டர் தூரத்தில் உள்ள புன்னை மரக் காட்டின் நடுவே சிலை வடிவில் இருப்பதாகவும், தனக்கு அங்கே ஒரு கோவில் கட்டுமாறும் கூறினாராம். மகாராஜா அங்கு சென்று பார்த்தபொழுது மாரியம்மனின் சிலையைக் கண்டாராம். உடனே அதே இடத்தில் ஒரு கோவிலைக்கட்டி அச்சிலையை அங்கே பிரதிஷ்டை செய்தாராம். புன்னைநல்லூர் மாரியம்மன் கோவில் என்ற பெயர்க் காரணம் வந்த கதை இதுவாகும். புன்னைநல்லூர் மாரியம்மன் மக்களின் உடலில் ஏற்படும் பலவிதமான நோய்களை எவ்வாறு குணப்படுத்தி அருள்புரிகிறார் என்பது குறித்து மற்றொரு கதை உலவுகிறது. 18 ஆம் நூற்றாண்டில், தஞ்சையை ஆண்ட துளஜா மகாராஜாவின் மகள் ஏதோ ஒரு நோயின் காரணமாக பார்வையை இழந்துவிட்டாராம். இக்கோவிலுக்கு வந்து நேர்த்திக்கடன் செய்வதாக வேண்டிக்கொண்டபின் அவர் இழந்த தனது பார்வையை மீண்டும் பெற்றதாக நம்பப்படுகிறது.

Srithern

 சங்கீத மஹால்

சங்கீத மஹால்


சங்கீத மஹால் என்றழைக்கப்படும் இந்த இசைக்கூடம் தஞ்சாவூரில் அவசியம் பார்க்க வேண்டிய அம்சமாகும். இது தஞ்சை அரண்மனையின் முதல் தளத்தில் அமைந்துள்ளது. 17ம் நூற்றாண்டில் செவப்ப நாயக்கர் எனும் நாயக்க வம்ச மன்னரால் இது கட்டப்பட்டிருக்கிறது. தென்னிந்தியாவில் ஒலியியல் நுட்பங்களுடன் அமைக்கப்பட்டிருக்கும் இசைக்கூடமாக இது கருதப்படுகிறது. மன்னர்கள் இக்கூடத்தில் இசை மற்றும் நடன நிகழ்ச்சிகளை அரங்கேற்றி மகிழ்ந்துள்ளனர். இசைக்கலைஞர்களுக்கான போட்டிகளும் இங்கு நடத்தப்பட்டிருக்கின்றன. அற்புதமான கட்டிடக்கலை அம்சங்களையும் இந்த கூடத்தில் காணலாம். தற்போது இந்த சங்கீத கூடத்தில் உள்ளூர் கைவினைப்பொருட்கள் காட்சிக்கு வைக்கப்பட்டிருக்கின்றன

 சரஸ்வதி மஹால்

சரஸ்வதி மஹால்

ஆசியாவிலேயே மிகப்பழமையான நூலகம் என்ற புகழை பெற்றுள்ள சரஸ்வதி மஹால் நூலகம் தஞ்சாவூர் நகரத்தில் அமைந்திருக்கிறது. இங்கு மிகப்பழமையான ஓலைச்சுவடிகள் பாதுகாக்கப்பட்டு வருகின்றன. அதுமட்டுமல்லாமல் தமிழ், மராத்தி, தெலுங்கு, ஆங்கிலம் போன்ற மொழிகளில் ஏராளமான நூல்களும் சேகரிக்கப்பட்டு வைக்கப்பட்டுள்ளன. நாயக்க மன்னர்கள் காலத்தில் அரண்மனை நூலகமாக உருவாக்கப்பட்ட இந்த நூலகம் அவர்களுக்கு பின் மராட்டா வம்சத்தை சேர்ந்த இரண்டாம் சரபோஜி மன்னரால் மேலும் வளர்க்கப்பட்டிருக்கிறது. 1918ம் ஆண்டிலிருந்து இந்த நூலகம் தமிழ்நாட்டு அரசாங்கத்தின் நிர்வாகத்தில் இருந்துவருகிறது.

Wiki-uk

விஜயநகர கோட்டை

விஜயநகர கோட்டை

தஞ்சை பெரிய கோயிலிலிருந்து 2 கி.மீ தூரத்தில் வடக்கே இந்த விஜயநகர கோட்டை அமைந்துள்ளது. 16ம் நூற்றாண்டின் மத்தியில் நாயக்க மற்றும் மராட்டா மன்னர்களின் பங்களிப்பில் இக்கோட்டையின் வெவ்வேறு அங்கங்கள் உருவாக்கப்பட்டிருக்கின்றன. தஞ்சை அரண்மனை, சங்கீத மஹால், தஞ்சாவூர் கலைக்கூடம், சிவகங்கைபூங்கா மற்றும் சரஸ்வதி மஹால் நூலகம் ஆகியவை இந்த கோட்டை வளாகத்தினுள் இடம் பெற்றுள்ளன. அரண்மனையை பாதுகாக்கும் நோக்குடன் இந்த கோட்டை உருவாக்கப்பட்டிருக்கிறது. சேதமடைந்து காணப்படும் இதன் ஒரு பகுதி பொதுமக்கள் பார்வைக்காக திறந்துவிடப்பட்டுள்ளது. சோழர்கள் கால கோட்டைகள் எதுவுமே காலத்தின் ஊடே மிஞ்சி இராத நிலையில் பின்னாளில் உருவாகி மிச்சமிருக்கும் இந்த வரலாற்றுச்சின்னங்கள் அவசியம் காண வேண்டியவை என்பதில் ஐயமில்லை.

Edmund David Lyon

Read more about: travel, temple