» »உலகிலேயே தனித்துவமான புத்த ஸ்தூபி இருக்கும் சுற்றுலாத் தளம் எது தெரியுமா?

உலகிலேயே தனித்துவமான புத்த ஸ்தூபி இருக்கும் சுற்றுலாத் தளம் எது தெரியுமா?

Written By: Udhaya

ஆந்திர மாநிலம் குண்டூர் அருகே ஆர்பரித்து ஓடுகிறது கிருஷ்ணா நதி. இதன் அருகிலே அமரேஸ்வரர் கோயில் அமைந்துள்ளது. இது இந்த நகரத்துக்கு அமராவதி எனும் பெயரை தந்துள்ளது.

இந்த சிறிய நகரத்தில் மௌரிய காலத்திற்கும் முற்பட்ட புத்த ஸ்தூபி ஒன்று உள்ளது. இது போன்று மிகப்பெரிய ஸ்தூபி இதுவரை எங்கேயும் கட்டப்படவில்லை என்பது மிகுந்த ஆர்வத்தை சுற்றுலாப் பயணிகளிடையே தருகிறது.

இதுமட்டுமின்றி , இந்நகரத்தில் சுற்றுலாவுக்கான ஏராளமான வசதிகள் உள்ளன. தெலங்கானா பிரிந்த பிறகு ஆந்திர அரசு இந்த நகரத்தை துரித பாணியில் செப்பணிட்டு வருகிறது.

சரி இந்த நகரத்துக்கு ஒரு சுற்றுலா செல்வோமா?

 காலச்சக்ரா

காலச்சக்ரா

அமராவதி நகரில்தான் புத்தர் தன்னுடைய காலச்சக்ரா எனப்படும் போதனைகளை உபதேசம் செய்தார் என்று சொல்லப்படுகிறது.

 பழமையான நகரம்

பழமையான நகரம்

இதற்கான அத்தனை ஆதாரங்களும் வஜ்ராயனா எனும் எழுத்து வடிவில் இங்கு காணப்படுவதோடு, அவை அமராவதி நகரம் கி.மு 500-ஆம் ஆண்டுகளுக்கு முன்பே தோன்றியதாகவும் கூறுகிறது.

IM3847

 முக்கிய சுற்றுலா அம்சங்கள்

முக்கிய சுற்றுலா அம்சங்கள்

அமராவதியின் முக்கிய சுற்றுலா அம்சங்களாக அமராவதி ஸ்தூபம் மற்றும் தொல்பொருள் அருங்காட்சியகம் ஆகிய இரண்டும் கருதப்படுகின்றன. இவை தவிர கிருஷ்ணா நதிக்கரை ஏராளமான உள்ளூர் மற்றும் வெளியூர் சுற்றுலாப் பயணிகளை ஈர்த்து வருகிறது.

Poreleeds

எங்குள்ளது

எங்குள்ளது


சென்னையிலிருந்து 457 கிமீ தொலைவில் அமைந்துள்ளது இந்த அமராவதி.

 கொண்டாட்டங்கள்

கொண்டாட்டங்கள்

அமராவதியில் தீபாவளி பண்டிகை மிகச் சிறப்பாக கொண்டாடப்படுகிறது.

மேலும், கிருஷ்ண ஜெயந்தி, ராமநவமி, சிவராத்திரி, உகாதி, விஜயதசமி, கார்த்திக பூர்ணிமா, கிறிஸ்துமஸ் மற்றும் பக்ரீத் முதலிய கொண்டாட்டங்கள் சிறப்பானதாகும்.

 தங்கும் விடுதிகள்

தங்கும் விடுதிகள்

வாடகை வீடுகளும், தங்கும் தனியார் விடுதிகளும் இந்த பகுதியில் மிக அதிகமாகும்.

அல்லது ஒரு சிறப்பான விடுதி வேண்டுமென்றால் இங்கிருந்து சரியாக 40 கிமீ தொலைவில் விஜயவாடாவில் அழகான அற்புதமான விடுதிகள் கிடைக்கும்

 அமரேஸ்வரர் கோயில்

அமரேஸ்வரர் கோயில்

இங்குள்ள அமரேஸ்வரர் கோயில் மிகச் சிறப்பானதாகும். மத வேறுபாடுகளின்றி பல்வேறு மதத்தினரும் இந்த கோயிலுக்கு வருகை தருகின்றனர்.

 புத்த ஸ்தூபி

புத்த ஸ்தூபி

அமராவதி நகரின் முக்கிய சுற்றுலாப் பகுதியாக கருதப்படும் அமராவதி ஸ்தூபம் அசோகர் காலத்தில் கட்டப்பட்டதாகும். மனசைத்யா என்று பிரபலமாக அழைக்கப்படும் இந்த ஸ்தூபம் கி.மு. 200-ஆம் நூற்றாண்டில் முழுமையாக கட்டி முடிக்கப்பட்டது.

இந்த ஸ்தூபியில் காணப்படும் சிற்ப வேலைப்பாடுகள் புத்தரின் வாழ்க்கையையும், அவருடைய போதனைகளையும் எடுத்துரைப்பதாக உள்ளன

 போக்குவரத்து

போக்குவரத்து

அமராவதியின் அருகாமை விமான நிலையமாக விஜயவாடா விமான நிலையம் அறியப்படுகிறது. அதோடு ஆந்திராவின் அனைத்து பகுதிகளிலிருந்தும் எண்ணற்ற அரசுப் பேருந்துகள் அமராவதி நகருக்கு இயக்கப்படுகின்றன.

Read more about: travel, temple