» »விடுதலை புலிகள் தலைவர் பிரபாகரன் திருமணம் எந்த கோயிலில் நடைபெற்றது என்று உங்களுக்கு தெரியுமா?

விடுதலை புலிகள் தலைவர் பிரபாகரன் திருமணம் எந்த கோயிலில் நடைபெற்றது என்று உங்களுக்கு தெரியுமா?

Posted By: Staff

தாய் மண்ணை பிரிந்து உலகெங்கும் வாழும் ஈழத்து சகோதரர்களுக்கு நவம்பர் 27 மிகமுக்கியமான நாள். விடுதலை புலிகள் தலைவர் பிரபாகரன் அவர்கள் திரையில் தோன்றி இயக்கத்தின் நிலை பற்றியும், தமது எதிர்கால திட்டம் பற்றியும் உரையாற்றுவார். துரோகமும், சர்வதேச சதியும் கைகோர்ததன் விளைவாக நிகழ்ந்த முள்ளிவாய்க்கால் படுகொலைக்கு பிறகு மாவீரர் தினம் என்பது தமிழினத்தின் விடுதலைக்காக உயிர்நீத்த போராளிகளை நினைவுகூரும் நாளாக உலகத்தமிழர்களால் கொண்டாடப்படுகிறது.  

இந்த சமயத்தில் தலைவர் பிரபாகரனது வாழ்கையில் திருப்புமுனையாக அமைந்த அவரது திருமணத்தைப் பற்றியும், அது எங்கே நடைபெற்றது என்பது குறித்தும் அறிந்துகொள்வோம் வாருங்கள். 

வேலுப்பிள்ளை பிரபாகரன்

வேலுப்பிள்ளை பிரபாகரன்

ஈராயிரம் ஆண்டுகளாக ஈழத்தில் வாழ்ந்து வந்த தமிழ் இன மக்கள் 19ஆம் நூற்றாண்டின் பிற்ப்பாடு ஏற்ப்பட்ட சிங்கள தேசியவாத எழுச்சியின் விளைவாக ஒடுக்கப்பட்டு, உயிரும் உடமைகளும் பறிக்கப்பட்டு சொல்லமுடியாத துயருக்கு ஆளாகியிருந்த போது தமிழினத்தின் அடையாளத்தையே முழுமையாக மாறிய பெயர் வேலுப்பிள்ளை பிரபாகரன்.

வேலுப்பிள்ளை பிரபாகரன்

வேலுப்பிள்ளை பிரபாகரன்

தன் அக்காள் கல்யாணத்திற்கு போடப்பட்ட மோதிரத்தை விற்று துப்பாக்கி வாங்கிய பிரபாகரன் தான் பின்னாளில் முப்படைகளையும் கொண்ட உலகின் மிக சக்திவாய்ந்த இயக்கத்தின் தலைவராக உருவெடுத்தார்.

தங்கதுரை, குட்டிமணி ஆகியோருடன் இணைந்து இயக்கத்தை ஆரம்பித்த காலத்தில் இருந்து புகை, மது, மாது போன்றவை கூடாது, போராளிகள் திருமணம் செய்துகொள்ளக்கூடாது என்பது போன்ற கொள்கைகளை கடுமையாக பின்பற்றி வந்த பிரபாகரனது வாழ்கையில் மிகப்பெரிய திருப்புமுனையாக அமைந்தது அவரது திருமணம்.

வேலுப்பிள்ளை பிரபாகரன்

வேலுப்பிள்ளை பிரபாகரன்

1983 ஈழத் தமிழர் வரலாற்றில் ஒரு கருப்பு ஆண்டு. இலங்கை அதிபர் ஜெயவர்த்தனேவின் முழு ஆதரவுடன் தமிழர்களுக்கு கலவரங்கள் முடுக்கி விடப்பட்டன. கண்ணில் கண்ட தமிழர்களை எல்லாம் அடித்து, உயிரோடு எரித்து வெறியாட்டம் ஆடினார் சிங்களர்.

இந்த சமயத்தில் பிரபாகரனும் சிங்கள அரசுக்கு எதிராக தாக்குதல்களை திட்டமிட்டு நடத்திகொண்டிருந்த வேளையில் யாழ்ப்பான பல்கலைக்கழகத்தில் தமிழ் மாணவர்களுக்கு நிகழ்த்தப்படும் அநீதிகளுக்கு எதிராக உண்ணாவிரதம் இருந்தனர் அங்கு பயிலும் நான்கு மாணவிகள்.

சிங்கள அரசாங்கத்திடம் உண்ணாவிரதத்தின் மூலம் தீர்வு ஏதும் கிடைக்காது என்பதை நன்கு உணர்ந்திருந்த பிரபாகரன் நான்கு பெண்களையும் உண்ணாவிரதத்தை கைவிட்டு பிற வழிகளில் போராடுங்கள் என்றார். இந்த நான்கு பெண்களில் ஒருவர் தான் மதிவதனி.

வேலுப்பிள்ளை பிரபாகரன்

வேலுப்பிள்ளை பிரபாகரன்

தகித்துக்கொண்டிருக்கும் யாழ்ப்பாணத்தில் பெண்களுக்கு பாதுகாப்பில்லை என்பதை உணர்ந்த பிரபாகரன் பெண்கள் நால்வரையும் ஆண்டன் பாலசிங்கத்தின் மனைவியான அடேல் பாலசிங்கத்தின் பாதுகாப்பில் சென்னைக்கு அனுப்பிவைத்தார்.

பின்னாளில் பிரபாகரனும் பல விடுதலைப்புலிகளும் சென்னைக்கு பயிற்சிக்காக வந்தனர். ஒருநாள் யதேர்சையாக அடேல் பாலசிங்கத்திடம் சொன்னார் நான் மதிவதனியை விரும்புகிறேன் என்று.

திருமணம்!!

திருமணம்!!

பிரபாகரன் திருமணம் செய்துகொள்வதில் இயத்தில் பலருக்கு முரண்பாடான கருத்துக்கள் இருந்தன. அவர்கள் எல்லோரையும் சமாதனம் செய்து இயக்கத்தில் இருப்பவர்கள் தாகத உறவு வைத்துக்கொள்ளக்கூடாதே தவிர திருமணம் செய்துகொள்ளலாம் என்று இயக்கத்தின் விதிகள் மாற்றப்பட்டு ஒருவழியாக திருமணம் நிச்சயம் ஆனது.

சென்னையிலேயே திருமணம் செய்துகொள்வது என்று முடிவானது. சரி, எந்த கோயிலில் பிரபாகரனது திருமணம் நடந்தது என்று உங்களுக்கு தெரியுமா?.

திருமணம்!!

திருமணம்!!

திருப்போரூரில் இருக்கும் முருகன் கோயிலில் மிக எளிமையான முறையில் பிரபாகரன்-மதிவதனி ஆகியோரது திருமணம் நடைபெற்றது. இந்த சமயத்தில் பிரபாகரனது பெற்றோர் தமிழகத்தில் தான் இருந்தார்கள் என்றாலும் திருமணத்திற்கு வர மறுத்துவிட்டனராம்.

பிரபாகரனுக்கு மாப்பிள்ளை துணையாக இருந்தவர் சிங்கள அரசின் பிடியில் இருக்கும் செல்வராசா பத்மநாபன் ஆவர்.

வாருங்கள், பிராபாகரனின் திருமணம் நடைபெற்ற திருப்போரூர் முருகன் கோயிலைப் பற்றியும் கொஞ்சம் தெரிந்துகொள்வோம்.

திருபோரூர் முருகன் கோயில் !!

திருபோரூர் முருகன் கோயில் !!

சென்னையை அடுத்த காஞ்சிபுரம் மாவட்டத்தில் இருக்கிறது திருபோரூர் முருகன் கோயில். இக்கோயிலில் வழிபட்டால் அறுபடை வீடுகளுக்கு சென்று வழிபட்டதன் பயனை பெறலாம் என்று கூறப்படுகிறது.

முன்னொரு காலத்தில் தாரகம் என்று அழைக்கப்பட்ட இந்த திருப்போரூருக்கு வந்து தவத்தில் ஈடுபட்ட சிதம்பர கவிராயர் என்ற முனிவருக்கு முருகன் காட்சி தந்தகாகவும் அவரின் முயற்சியால் தான் இக்கோயில் உருவானது என்றும் தலபுராணம் சொல்கிறது.

திருபோரூர் முருகன் கோயில் !!

திருபோரூர் முருகன் கோயில் !!

வள்ளி, தேவசேனாவுடன் அருள்பாலிக்கும் ஸ்ரீ கந்தசுவாமி பெருமான் ஸ்வயம்புவாக இங்கே தோன்றியிருப்பதால் அவருக்கு அபிஷேகங்கள் செய்யப்படுவதில்லை. மாறாக வில்வ மாலை அணிவிக்கப்பட்டு சாம்பிராணி, தைலம், புனுகு போன்ற வாசனை பொருட்கள் சார்த்தப்படுகின்றன.

திருபோரூர் முருகன் கோயில் !!

திருபோரூர் முருகன் கோயில் !!

வேறெங்கும் காண முடியாத ஒன்றாக இக்கோயிலில் கொடிமரமானது வட்ட மண்டபத்தில் ராஜகோபுரத்திற்கு முன்பாக அமைந்துள்ளது.

இக்கோயிலின் தல விருட்சமான வன்னி மரத்தில் கயிறு கட்டி வழிபட்டால் திருமணம், குழந்தை பேறு, பில்லி சூனியம் போன்றவற்றால் ஏற்ப்படும் தடைகள் நீங்கும் என்ற நம்பிக்கை பக்தர்களிடையே இருக்கிறது.

திருபோரூர் முருகன் கோயில் !!

திருபோரூர் முருகன் கோயில் !!

திருநள்ளாரில் இருப்பது போன்றே சனீஸ்வர பகவான் தென்மேற்கு திசையில் வீற்றிருந்து பக்தர்களுக்கு காட்சி தருவதும் இக்கோயிலின் சிறப்புகளில் ஒன்றாகும்.

ஓம்கார அமைப்பில் அமைந்த இக்கோயிலில் நவகிரக சந்நிதி கிடையாது.

திருப்போரூர் முருகன் கோயில் !!

திருப்போரூர் முருகன் கோயில் !!

திருப்போரூர் முருகன் கோயிலானது காலை 6 மணி முதல் 12.30 மணி வரை, மாலை 3.30 மணி முதல் இரவு 9 மணி வரையிலும் பக்தர்களுக்காக திறப்பட்டிருக்கிறது.

சென்னை மாநகரிலிருந்து 76 கிமீ தொலைவிலும், மாமல்லபுரத்திலிருந்து 15 கிமீ தொலைவிலும், செங்கல்பட்டிலிருந்து 27 கிமீ தொலைவிலும் அமைந்திருக்கிறது.

திருப்போரூர் முருகன் கோயில் !!

திருப்போரூர் முருகன் கோயில் !!

பிரபாகரனது திருமணம் நடைபெற்ற இக்கோயிலுக்கு விசேஷ நாட்களிலோ அல்லது வாய்ப்புக்கிடைக்கும் போதோ தவறாமல் சென்று வாருங்கள்.

இப்போதே பெறுங்கள் சிறந்த சலுகைகளைப் பயணங்களிலும், பயண டிப்ஸ்களும், பயணக் கதைகளும் உடனுக்குடன்