Search
  • Follow NativePlanet
Share
» »பனிப்புயலைக் காண ஆசையாக உள்ளதா – இந்தியாவின் இந்த பகுதிகளுக்கு செல்லுங்கள்!

பனிப்புயலைக் காண ஆசையாக உள்ளதா – இந்தியாவின் இந்த பகுதிகளுக்கு செல்லுங்கள்!

பனிப்புயல் என்ற வார்த்தையை நாம் செய்திகளில் கேட்டு இருப்போம், அமெரிக்கா, கனடா, அலாஸ்கா, ரஷ்யா மற்றும் ஆர்டிக் நாடுகளில் அவை மிகவும் சாதரணம் தான்! ஆனால் இந்தியாவில் பனிப்புயல் அடித்துக் கொண்டிருக்கிறது தெரியுமா? குளிர் அலைகளின் வேகம் அதிகமாகும் பொழுது அது புயல் போன்று காற்றை கொண்டு வருவதோடு அதிக பனிப்பொழிவையும் தருகிறது. பல வட மாநில இடங்கள் இதனால் தூய வெள்ளைப் போர்வை போற்றியது போல அழகாக காட்சி தருகிறது. இதனைக் காண இந்தியாவின் பல்வேறு பகுதிகளிலிருந்தும், குறிப்பாக தமிழகம், ஆந்திரா, கேரளாவிலிருந்து மக்கள் பெருமளவு பனிப்பொழிவு இடங்களுக்கு செல்ல ஆர்வம் காட்டுகின்றனர்! நீங்கள் எப்பொழுது உங்களது பயணத்தை திட்டமிடலாம் என்பது குறித்து இங்கே காண்போம்!

பனிப்பொழிவைக் காண ஆர்வம் காட்டும் மக்கள்

பனிப்பொழிவைக் காண ஆர்வம் காட்டும் மக்கள்

டிசம்பர் மற்றும் ஜனவரி மாதங்கள் பொதுவாக ஆண்டு முழுவதும் மிகவும் குளிரான மாதங்கள் என நாம் அனைவருமே அறிவோம். பெரும்பாலான இந்திய பிராந்தியங்கள் பொதுவாக ஆண்டின் இந்த நேரத்தில் மிகக் குறைந்த வெப்பநிலையை பெறுகின்றன. இதனால் இந்தியாவின் பல பகுதிகளிலிருந்தும் பனிப்பொழிவு இடங்களைக் காண மக்கள் செல்வது வழக்கம். அதுவும் குறிப்பாக கிறிஸ்துமஸ் மற்றும் புத்தாண்டை பனியில் கொண்டாட யாருக்கு தான் பிடிக்காது என்று கூறுங்களேன்.

அதிகக் குளிரைக் கண்ட வடமாநிலங்கள்

அதிகக் குளிரைக் கண்ட வடமாநிலங்கள்

ஜம்மு காஷ்மீரின் குல்மார்க் மற்றும் பஹல்காம் பகுதிகளின் ரிசார்ட்டுகள் புத்தாண்டை முன்னிட்டு அந்தந்த பகுதிகளில் குறைந்த வெப்பநிலையை பதிவு செய்ததாக தெரிவித்துள்ளன. வெப்பநிலை -9.4 டிகிரி செல்சியஸ் மற்றும் -8.2 டிகிரி செல்சியஸ் ஆக குறைந்தது. இந்த இடங்கள் மட்டுமின்றி இமாச்சல், ஹரியானா, உத்தரப்பிரதேசம், சிக்கிம் மற்றும் அருணாச்சலின் பல பகுதிகள் அதிக பனிப்பொழிவை சந்தித்தன. இதன் பொருள், 2022 ஆம் ஆண்டின் கடைசி நாட்களில் இப்பகுதிகள் குளிர்ந்த குளிர்காலத்தைக் கண்டன என்பதாகும்.

கொண்டாட குவிந்த மக்கள்

கொண்டாட குவிந்த மக்கள்

கிறிஸ்துமஸ் மற்றும் புத்தாண்டு நேரங்களின் பல பனிப்பொழிவு இடங்கள் திரளான சுற்றுலாப் பயணிகளைக் கண்டது. வானவேடிக்கைகள், பாடல்கள், நடனங்கள், பானங்கள் மற்றும் கொண்டாட்டங்கள் என அனைவரும் இங்கு புத்தாண்டை வரவேற்று மகிழ்ந்தனர். இந்த ஆண்டு, காஷ்மீர் பள்ளத்தாக்கு இந்த ஆண்டு அதிக சுற்றுலா பயணிகளை பதிவு செய்தது. இது இப்பகுதியில் பதிவான மிகக் குளிரான குளிர்காலம் என்ற போதிலும் பார்வையாளர்களிடமிருந்து தங்களுக்கு கிடைத்த பதில் நம்பமுடியாததாக இருந்தது என காஷ்மீர் சுற்றுலாத்துறை கூறியுள்ளது.

மைனஸில் சென்ற வெப்பநிலை

மைனஸில் சென்ற வெப்பநிலை

கடந்த சில நாட்களாக வட இந்தியாவின் பல பகுதிகள் குளிர் அலையின் கீழ் தத்தளித்து வருகின்றன, லடாக்கின் படும் நகரில் திங்களன்று -25 டிகிரி செல்சியஸ் வரை வெப்பநிலை சென்று விட்டதாம். டெல்லி, ராஜஸ்தான், பஞ்சாப், ஹரியானா மற்றும் சண்டிகர் ஆகிய மாநிலங்களில் குளிர் அலையின் காரணமாக வெப்பநிலை குறையும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

படையெடுக்கும் சுற்றுலாப் பயணிகள்

படையெடுக்கும் சுற்றுலாப் பயணிகள்

கடந்த சில நாட்களாக அதிக பனிப்பொழிவு காரணமாகவும், லாஹவுல் மற்றும் ஸ்பிதி காரணமாகவும் ஹிமாச்சலில் 92 சாலைகள் மூடப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. கூடுதலாக, பனிக்கட்டி காற்று அப்பகுதி முழுவதும் வீசியது, இதனால் மக்கள் வீட்டிற்குள்ளேயே இருக்க வேண்டிய கட்டாயம் ஏற்பட்டது. இருந்தாலும் வெள்ளி போர்வை போற்றிய இடங்களை காண மக்கள் கூட்டம் அலைமோதுகிறது.

பனிப்பொழிவைக் காண நீங்கள் செல்ல வேண்டிய இடங்கள்

பனிப்பொழிவைக் காண நீங்கள் செல்ல வேண்டிய இடங்கள்

o லடாக், ஜம்மு & காஷ்மீர்

o ஆலி, உத்தரகாண்ட்

o மணாலி, இமாச்சலப் பிரதேசம்

o டல்ஹவுஸி, இமாச்சலப் பிரதேசம்

o குல்மார்க், ஜம்மு & காஷ்மீர்

o கஜ்ஜியார், இமாச்சலப் பிரதேசம்

o நது லா பாஸ், சிக்கிம்

o நைனிடால், உத்தரகாண்ட்

o முசொரி, உத்தரகாண்ட்

o சிம்லா, இமாச்சலப் பிரதேசம்

o சோப்டா, உத்தரப்பிரதேசம்

o தவாங், அருணாச்சலப் பிரதேசம்

o யும்தாங், சிக்கிம்

o குலு, இமாச்சலப் பிரதேசம்

o சோன்மார்க், ஜம்மு & காஷ்மீர்

o மேச்சுக்கா, அருணாச்சலப் பிரதேசம்

o பஹல்காம், ஜம்மு & காஷ்மீர்

Read more about: cold wave in india jammu kashmir
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X