கல்பெட்டா நகரிலிருந்து 16 கிலோமீட்டர் தொலைவில் அமைந்திருக்கும் காரப்புழா அணை இந்தியாவின் மிகப்பெரிய மண் அணைகளில் ஒன்றாக கருதப்படுகிறது. இந்த அணை காரப்புழா ஏரியின் மீது கட்டப்பட்டுள்ளது.
காரப்புழா அணை பல்வேறு ஏரிகளின் கதம்பமாக காட்சியளிப்பதோடு, ஒவ்வொரு ஏரிகளின் மத்தியிலும் பசுமையான மரங்கள் அடர்ந்த மலைகள் பயணிகளுக்கு மிகச் சிறந்த காட்சி விருந்தாக அமைந்திருக்கின்றன. அதோடு இந்தப் பகுதி ஏராளமான நீர் வாழ் பறவைகளுக்கு இனப்பெருக்கம் செய்யும் இடமாக இருந்து வருகிறது.
இந்த அணையைப் பற்றியும் பல்வேறு சுற்றுலாத் தளங்கள் பற்றியும் இந்த பதிவில் காணலாம்

அமைதியையும், சொர்க்கத்தையும் விரும்புகிறீரா?
அமைதியையும், சொர்க்கத்தையும் விரும்புபவர்கள் மாதத்தில் ஒருமுறையாவது இந்த இடத்துக்கு கட்டாயம் வருகின்றனர்.
இதை கண்டுவிட்டு செல்பவர்கள் மனதில் ஒரு புத்துணர்ச்சியை காணமுடிகிறது.
Kamaljith K V

அமைதியையும், சொர்க்கத்தையும் விரும்புகிறீரா?
சில வருடங்களுக்கு முன்பு வரை வெறும் அணை மட்டுமே இங்கு இருந்தது. அதன் பின்னர் தோட்டமும், குழந்தைகள் விளையாட பூங்காவும் உருவாக்கப்பட்டது.
vinayaraj

அமைதியையும், சொர்க்கத்தையும் விரும்புகிறீரா?
கல்பேட்டாவிலிருந்து 20 கிமீ தொலைவிலும், பத்தேரியிலிருந்து 25 கிமீ தொலைவிலும் அமைந்துள்ளது இந்த காரப்புழா.
Primejyothi

அமைதியையும், சொர்க்கத்தையும் விரும்புகிறீரா
பலர் இங்கு வரும் பறவையினங்களை ரசிப்பதற்காக வருகை தருகின்றனர். புகைப்படமும் எடுத்துக்கொள்கின்றனர்.
Vinayaraj

மீன்முட்டி அருவி
கேரளாவின் இரண்டாவது மிகப்பெரிய அருவியாக அறியப்படும் மீன்முட்டி அருவி 300 அடி உயரத்தில், கல்பெட்டா நகரிலிருந்து 29 கிலோமீட்டர் தொலைவில் அமைந்திருக்கிறது.
Vssekm

பூக்கோட் ஏரி
பூக்கோட் ஏரி அல்லது பூக்கோடே ஏரி என்று அழைக்கப்படும் இந்த நன்னீர் ஏரி வயநாட் பகுதியில் உள்ளது.
irvin calicut

பூக்கோட் ஏரி
அடர்ந்த வனப்பகுதியில் காணப்படும் இந்த ஏரி கேரளாவின் இயற்கை எழில் நிறைந்த பிக்னிக் சிற்றுலா ஸ்தலங்களில் ஒன்றாக புகழ் பெற்றுள்ளது.
irvin calicut

பாணாசுர சாகர் அணை
பாணாசுர சாகர் அணை கல்பெட்டா நகரிலிருந்து 21 கி.மீ தூரத்தில், கபினி ஆற்றின் துணை ஆறு ஒன்றின் குறுக்காக கட்டப்பட்டுள்ளது. பாணாசுர சாகர் எனும் திட்டத்தின் ஒரு அங்கமாக 1979ம் ஆண்டில் துவங்கப்பட்டு இது கட்டி முடிக்கப்பட்டுள்ளது.
Samadolfo
https://en.wikipedia.org/wiki/File:Banasura_Dam1.jpg

பாணாசுர சாகர் அணை
கோடைக்காலத்தில் கடும் வறட்சியால் பாதிக்கப்பட்டிருந்த இப்பகுதியின் நீர்த்தேவைகளை பூர்த்தி செய்யும் நோக்குடன் இந்த அணை உருவாக்கப்பட்டுள்ளது.
Shinejacob

செம்பரா சிகரம்
கல்பெட்டா நகரம் மட்டுமல்லாமல் ஒட்டுமொத்த வயநாடு மாவட்டத்திலேயே உயரமான சிகரமாக கருதப்படும் செம்பரா சிகரம் கடல் மட்டத்திலிருந்து 2100 மீட்டர் உயரத்தில் அமைந்திருக்கிறது.
M.arunprasad



Click it and Unblock the Notifications




