Search
  • Follow NativePlanet
Share
» »வெண்ணிற கண்களை கொண்ட அரிய வகை பறவையை காண எங்கு செல்லவேண்டும் தெரியுமா?

வெண்ணிற கண்களை கொண்ட அரிய வகை பறவையை காண எங்கு செல்லவேண்டும் தெரியுமா?

வெண்ணிற கண்களை கொண்ட அரிய வகை பறவையை காண எங்கு செல்லவேண்டும் தெரியுமா?

பென்ச் தேசியப் பூங்கா சட்புடா மலைகளின் தெற்கு பகுதியில் அமைந்துள்ளது. பென்ச் பூங்காவிற்குள் வடக்கிலிருந்து தெற்கை நோக்கி பென்ச் நதி ஓடுவதால், இந்த பூங்கா அதன் பெயரையே பெற்றது.

வெண்ணிற கண்களை கொண்ட அரிய வகை பறவையை காண எங்கு செல்லவேண்டும் தெரியுமா?

wikimedia

இந்த பூங்கா மத்தியப் பிரதேசத்தின் தெற்கு எல்லையில், மகாராஷ்டிரா மாநிலத்துக்கு அருகில் உள்ளது. 1983-ஆம் ஆண்டு மகாராஷ்டிரா அரசாங்கம் இதனை தேசியப் பூங்காவாக அறிவித்தது. 1992-ஆம் ஆண்டு இந்தியாவின் 19 ஆவது புலிகள் காப்பகமாக இது அறிவிக்கப்பட்டது.

வெண்ணிற கண்களை கொண்ட அரிய வகை பறவையை காண எங்கு செல்லவேண்டும் தெரியுமா?

Akhlesh naveen Gathoria

வளமான புதர் செடிகள், படர் கொடிகள், மரங்கள்,மூலிகை செடிகள், களைச் செடிகள் மற்றும் புற்களை கொண்டுள்ளது இந்த பூங்கா. இந்த இடத்தில் 1200-க்கும் மேற்பட்ட தாவர வகைகள் உள்ளன.

மேலும் இந்த பூங்காவில் 164 வகையான பறவைகள், 10 வகையான நிலநீர் வாழ்வன, 33 வகையான பாலூட்டிகள், 20 வகையான ஊர்வன மற்றும் 50 வகையான மீன் வகைகள் வாழ்கின்றன. இது போக பல வகையான பூச்சி வகைகளையும் இங்கு காணலாம்.

வெண்ணிற கண்களை கொண்ட அரிய வகை பறவையை காண எங்கு செல்லவேண்டும் தெரியுமா?

Ashvc .

இந்த பூங்கா அதிகமான தாவரவளம் மற்றும் விலங்கின வளத்தால் நிறைந்துள்ளது. கருஞ்சிருத்தைகள் மற்றும் புலிகள் போக, இந்த தேசியப் பூங்காவில் மான்கள், முயல்கள், கழுதைப் புலிகள், பறக்கும் அணில்கள், நரிகள், காட்டு பன்றிகள், முள்ளம்பன்றிகள், குள்ளநரிகள் மற்றும் எருமைகளை இங்கு காணலாம்.

வெண்ணிற கண்களை கொண்ட அரிய வகை பறவையை காண எங்கு செல்லவேண்டும் தெரியுமா?

Sabyasachi1090

மேலும் இங்கு பல வகையான பறவைகள் வாழ்கின்றன; அவை இங்கேயே இருப்பதாகட்டும் அல்லது வெளியில் இருந்து வந்தவையாகட்டும். இந்திய பிடா, வெண்ணிற கண்களை கொண்ட பச்சர்ட், வாட்டர்பௌல்ஸ், மலபார் இருவாய்க்குருவி, நாரை, பச்சை புறா மற்றும் விரலடிப்பான் போன்ற பறவைகள் தான் அவற்றுள் சில.

Read more about: travel wildlife
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X