» »இந்தியாவிலும் செயற்கை தீவு இருக்கு தெரியுமா?

இந்தியாவிலும் செயற்கை தீவு இருக்கு தெரியுமா?

Posted By: Udhaya

இயற்கையிலேயே உலகின் பல பகுதிகளில் தீவுகள் உருவாகின்றன. அதுமட்டுமல்லாமல், அந்த பகுதி மக்களின் அரசுகளும், பெரும் பணக்காரர்களும் செயற்கையாக பல தீவுகளை உருவாக்கியுள்ளனர்.

இந்தியாவிலும் செயற்கை தீவு இருக்கு தெரியுமா?

Vssun

இந்த மாதிரி தீவுகள் இந்தியாவிலும் உண்டா என்று ஆச்சர்யமாக கேட்பவரா நீங்கள். அப்போ உடனே கொச்சிக்கு போங்க.. அங்கயும் ஒரு செயற்கை தீவு இருக்கு.. அதுதான் வெல்லிங்டன் தீவு.

இந்தியாவிலும் செயற்கை தீவு இருக்கு தெரியுமா?

Vaikoovery

கொச்சி மண்டலத்தின் கீழ் வரும் பகுதிகளில் இந்த வெல்லிங்டன் தீவும் ஒன்றாகும். இது கொச்சி ஏரியின் மீதே செயற்கையாக உருவாக்கப்பட்ட ஒரு தீவுப்பகுதியாகும். ஏரியிலிருந்து தோண்டி எடுக்கப்பட்ட மண்ணைக்கொண்டு பெரும் முயற்சியில் இத்தீவு எழுப்பப்பட்டுள்ளது.

இந்தியாவிலும் செயற்கை தீவு இருக்கு தெரியுமா?

Jaseem Hamza

வெல்லிங்டன் ஐலேண்ட் பகுதியில் பல பிரபலமான சொகுசு ஹோட்டல்கள் உள்ளன. ரம்மியமான இயற்கை எழில் சூழ்ந்த பகுதியில் அமைந்துள்ள தாஜ் மலபார் ஹோட்டல் கடற்கரை வரை நீளும் ஒரு வித்தியாசமான நீச்சல் குளத்தையும் பெற்றுள்ளது.

இந்தியாவிலும் செயற்கை தீவு இருக்கு தெரியுமா?

Jaseem Hamza

இந்திய ராணுவமும், கொச்சி கடற்படையும் இணைந்து உருவாக்கியதே இந்த தீவு ஆகும். வேம்பநாடு ஏரியில் கட்டமைக்கப்பட்டுள்ளது இந்த தீவு. பாரப்பதற்கு கண்ணைக் கவரும் வண்ணங்களில் அழகாக காட்சியளிக்கிறது இந்த தீவு.

Read more about: travel island

இப்போதே பெறுங்கள் சிறந்த சலுகைகளைப் பயணங்களிலும், பயண டிப்ஸ்களும், பயணக் கதைகளும் உடனுக்குடன்