» »கோவாவுல திக்கு முக்காடி நிக்கக் கூடாதுனா இத படிச்சிட்டு போங்க

கோவாவுல திக்கு முக்காடி நிக்கக் கூடாதுனா இத படிச்சிட்டு போங்க

Posted By: Udhaya

ஒரு வழியா அரும்பாடு பட்டு கோவா போக திட்டம் போட்டுட்டீங்களா? அட கோவா போறதுலாம் சரிதான். அங்க போயி இந்த மாதிரி முழிக்க கூடாதுனா இந்த கட்டுரைய முழுசா படிங்க.

இங்கு மாட்டுக்கறிக்குத் தடை.... ஆனா காசியில் என்ன நடக்குது தெரியுமா?

கோவா, உங்கள் மனதுக்கு புத்துணர்ச்சியை வழங்கும் என்பதில் சந்தேகமில்லை. வெள்ளை மணலும், நீலக் கடலும் உங்களை அந்தர் பல்டி அடிக்க வைக்கும் என்பதிலும் மாற்றுக் கருத்து இல்லை.

ஆனா இத மட்டும் செஞ்சிராதீங்க.... பண்ணீங்க.. அவ்ளோதான்

கோவா

கோவா

கோவாவுக்கு நீங்க தனியா போறீங்களா இல்ல நண்பர்களோட போறீங்களா இல்லைனா பெண்களோட போறீங்களா என்பதில் அடங்கியிருக்கிறது உங்கள் கொண்டாட்டம்.

நம்ம கூட பொண்ணுங்களா.. சான்சே இல்ல பாஸ் என்கிறீர்களா? சரி விடுங்க.. முகநக நட்பது நட்பையே கூட்டிட்டு போயிடுவோம்.

கோவாவில் இதை மட்டும் செஞ்சிராதீங்க

கோவாவில் இதை மட்டும் செஞ்சிராதீங்க

தயவு செய்து லுங்கி கட்டிக்கொண்டு பீச்சில் இறங்காதீர்கள். கோவா என்பது அழகை ஆராதிக்கத்தானே. கொண்டாடத்தானே. முடிந்தால் நீச்சல் உடை இல்லையென்றால் 3/4 பேண்ட்களை அணிந்து களம் காணுங்கள்.

கோவானாலே கொண்டாட்டம்தானே

கோவானாலே கொண்டாட்டம்தானே

நீங்க கோவா போனாலே குடியும் கூத்துமா இருக்கணும்னு ஆசைப் படுவீர்களே.. அய்யோ நா தப்பா எதும் சொல்லிடலயே. நீங்கள் கோவாவில் மகிழ்ச்சியாக இருங்கள். அளவான போதை தவறில்லை என்றே வைத்துக்கொள்வோம். ஆனால் இதை மட்டும் செய்யாதிருங்கள்.

 காலனை அழைக்காதீர்கள்

காலனை அழைக்காதீர்கள்

நீங்கள் குதூகலத்தில் குடித்துவிட்டு வாகனம் ஓட்டுவது மட்டுமல்லாமல், ரகளைகளில் ஈடுபடுவது உங்களுக்குதான் ஆபத்து.

கோவாவில் என்ஜாய்மென்ட்க்கு பஞ்சம் இல்லை என்பதனால் நீங்க பாட்டுக்கு அடுத்தவன் சந்தோசத்துல மூக்க நொழச்சா.. அவ்ளோதான் நறுக்கி விட்டுடுவாங்க..

அப்றம் குடிச்சிட்டு வண்டி ஓட்டுனா உங்களவிட வேகமா எமன் எருமையில் வருவார் பாத்துக்கோங்க

இத நீங்க செஞ்சே ஆகணும்

இத நீங்க செஞ்சே ஆகணும்

பீச் என்றாலே ஆடிப்பாடி ஓடி விளையாட வசதியான மணற்பரப்புகளை கொண்டிருக்கும். அங்கு சென்று ஒரு ஓரமாக அமர்ந்து நிற்பவர்களை அப்படியே கடலில் தூக்கி போட்டுவிடுங்கள்.

என்ஜாய்மென்ட்னா என்ஜாய்மென்ட்தானே

காலணிகளை கவனியுங்கள்

காலணிகளை கவனியுங்கள்

செருப்ப திருடிட்டு போயிடுவாங்கனு சொல்லல.. நீங்க அணிந்திருக்கும் காலணி மணற்பாங்கான இடத்திற்கு ஏற்றதா என்பதை கவனிக்கவேண்டும்.

ஹைஹீல்ஸ், பூட்ஸ் போட்டுட்டு கோவாவில் எப்படி ஓடியாட முடியும் சொல்லுங்க. திறந்த நிலை சாண்டல்கள் அல்லது வசதியாகவுள்ள செருப்புகளை அணிந்து விளையாடுங்கள்.

நீங்கள் தேவதைதான்

நீங்கள் தேவதைதான்

நீங்கள் அழகாக இருப்பது என்பது முக்கியம்தான். ஆனால் இதை மட்டும் செய்துவிடாதீர்கள் . அப்றம் சிரமப்படுவீர்கள்

ஜூவல்லரி விளம்பரம் வேணாம் ப்ளீஸ்

ஜூவல்லரி விளம்பரம் வேணாம் ப்ளீஸ்நகை விளம்பர மாடல் போல நகைகளை போட்டுக்கொண்டு கடலுக்குள் இறங்கிவிடவேண்டாம். அது பாதுகாப்புக்கும் சரி, உங்கள் குதூகலத்துக்கும் இடையூறு.

பாத்து சூதுவாது தெரியாம போய்ட்டு வந்துடனும்

பாத்து சூதுவாது தெரியாம போய்ட்டு வந்துடனும்


பொதுவாவே நாம வெளிய கிளம்பும்போதோ தூரத்து இடங்களுக்கு செல்லும்போதோ நம் அம்மாக்கள் சொல்லும் வசனம்தான் இது.

லோக்கல் கைகிட்ட வச்சிக்காதீங்க

லோக்கல் கைகிட்ட வச்சிக்காதீங்க

நாம் செல்வது சுற்றுலாவை சிறப்பிக்க. அதை விட்டுவிட்டு போதை தலைக்கேறிய நிலையில் நாம் எதையும் செய்துவிடக்கூடாது. முக்கியமாக நம் குரூப்பில் ஒருவர் இருப்பார். மட்டையானவே மரண மாஸா ஆயி கலாட்டா தொடங்குவார். அவர நல்லா பாத்துக்கணும்..

உள்ளூர் காரங்ககிட்ட வம்பிழுத்தா.. வாயில புண்ணோடத் தான் ஊர் போயி சேரணும்

கேசினோ ராயல்

கேசினோ ராயல்


கேசினோ ராயல் படம் இல்ல... இங்க இருக்குற கேசினோவுக்கு போலாம்னு சொல்லவந்தோம்

படம்புடிக்கப்படாது... மீறினால் அபராதம்

படம்புடிக்கப்படாது... மீறினால் அபராதம்

இங்குள்ள கேசினோக்களில் புகைப்படம் எடுக்கக்கூடாது. அதிக அளவில் அபராதம் விதிக்கப்படும்.

நம்ம கூடயே ஒரு செல்பி அடிக்ட் இருப்பாரே.. அவர கவனமா பாத்துக்கோங்க..

டாட்டூக்கள் போடவேண்டாம்

டாட்டூக்கள் போடவேண்டாம்

முடிந்தவரை டாட்டூக்கள் இடவேண்டாம். இது பல தோல் ஆராய்ச்சியாளர்கள் அறிவுறுத்தும் ஒன்றாகும்.

விஐபி பாஸில் மயங்கிடாதீங்க

விஐபி பாஸில் மயங்கிடாதீங்க

விஐபி பாஸ் என்று நிறைய பேர் ஏமாற்றுவாதிகளாக திரிவார்கள். அவர்களிடம் கவனமாக இருங்கள்.

கோவா டூர் பற்றி மேலும்

கோவா டூர் பற்றி மேலும்

கோவா டூர் பற்றி மேலும் தெரிந்துகொள்ள இதை சொடுக்கவும்

தீப்பற்றி எரியும் தி நகர்.. இதுல இவ்ளோ விசயம் இருக்கா?

கஜினி முகமது 18 முறை படையெடுத்த மர்ம பகுதி.. அப்படி என்னதான் இருக்கு இங்க?

இளைஞர்கள் ஏன் கேரளாவுக்கு கட்டாயம் போக வேண்டும் தெரியுமா? இத படிங்க

இங்கு மாட்டுக்கறிக்குத் தடை.... ஆனா காசியில் என்ன நடக்குது தெரியுமா?Read more about: travel, goa