» »தஞ்சாவூருக்கு ஆன்மீக பயணம் போனீங்கன்னா இங்க மட்டும் போக மறந்துடாதீங்க!

தஞ்சாவூருக்கு ஆன்மீக பயணம் போனீங்கன்னா இங்க மட்டும் போக மறந்துடாதீங்க!

Posted By: Udhaya

இந்தியாவில் பரவலாக அனைத்து இடங்களிலும் சிவபெருமானுக்கு கோயில்கள் உள்ளன. அவற்றுள் சிவலிங்க கோயில்கள் மிகச் சிறப்பு வாய்ந்தது.

சிவலிங்கங்களும், அதனுடன் நந்தி சிலையும் ஆன்மீக வாதிகளுக்கு மிகவும் பக்தி மயமானதாகும். அந்த வகையில் சில அற்புதங்களும் இந்த கோயில்களில் நிகழும். அதாவது பெரிதாக வளரும் நந்தி, பால் குடிக்கும் நந்தி என பலவகையான செய்திகளை நாம் அறிந்திருக்கிறோம்.

அவற்றில் ஒன்றுதான் நிறம் மாறும் சிவலிங்கம். அதுவும் ஒன்றல்ல இரண்டல்ல .. ஐந்து நிறங்கள்.....

நம்பிக்கை இல்லை

நம்பிக்கை இல்லை

விஞ்ஞானவாதிகள் பொதுவாக சிலைகள் நிறம் மாறுவதை நம்புவதில்லை. அல்லது அதற்கு காரணம் அறிவியல் என்று நம்புவார்கள். அதே நேரத்தில் ஆன்மீகத்தில் நம்பிக்கை கொண்டவர்கள் இது இறைவனின் அருட்செயலாகவே பாவிப்பார்கள்.

Ssriram mt

 ஐந்து நிறம்

ஐந்து நிறம்

ஒரு நாளில் ஐந்து முறை நிறம் மாறுவதால் தான் இந்த கோயிலுக்கு பஞ்சவர்ண சிவலிங்க கோயில் என்றும் பெயர்வந்தது.

 என்னென்ன நிறங்கள்

என்னென்ன நிறங்கள்

இந்த கோயிலின் மூலவர் தினமும் தாமிரம், இளஞ்சிவப்பு, உருக்கியத் தங்கம், மரகத பச்சை, மேலும் ஒரு குறிப்பிட முடியாத நிறம் என தினமும் ஐந்து நிறமாக காட்சியளிக்கிறார்.

 ஆய்வாளர்களின் கருத்து

ஆய்வாளர்களின் கருத்து

இது அறிவியலின்படி, சூரிய ஒளியை அந்த சிவலிங்கம் பிரதி பலிக்கிறது. அதனால் சூரிய ஒளிக்கு ஏற்ப அந்த சிலை நிறமாறுகிறது என்று கூறுகின்றனர். ஆனால் பக்தர்களோ இதை வேறுவிதமாக பார்க்கின்றனர்.

 ஐவினைகள்

ஐவினைகள்

ஆக்கல், காத்தல், அழித்தல், மறைத்தல், அருளல் என ஐந்து செயல்களுக்காக ஐந்து நிறங்கள் மாறுவதாக கூறுகிறார்கள் பக்தர்கள்.

 எங்குள்ளது

எங்குள்ளது


இந்த கோயில் தஞ்சாவூர் மாவட்டம், நல்லூரில் அமைந்துள்ளது.

Ssriram mt

 கட்டியது யார்

கட்டியது யார்

இது சோழர்களின் கட்டிடக்கலைக்கு சான்றாக விளங்கும் கோயில்களில் ஒன்றாகும். 7ம் நூற்றாண்டில் கட்டப்பட்ட இந்த கோயிலை மதிவேல் சோழனும், உத்தமச் சோழனும் கட்டியதாக குறிப்புகள் தெரிவிக்கின்றன.

 கோயில் அமைப்பு

கோயில் அமைப்பு

இந்த கோயில் திராவிட கட்டுமான பாணியில் கட்டப்பட்டுள்ளது. இதன் ராஜகோபுரம் ஐந்து அடுக்குகளைக் கொண்டுள்ளது.

P. V. Jagadisa

 எப்படி செல்லலாம்

எப்படி செல்லலாம்


கும்பகோணத்திலிருந்து இந்த கோயில் 10 கிமீ தொலைவில் அமைந்துள்ளது. கும்பகோணத்திலிருந்து தானி (ஆட்டோ), பேருந்து வசதிகள் உள்ளன.

 அகத்தியமுனிவர்

அகத்தியமுனிவர்

இந்த கோயிலின் லிங்கத்தை அகத்தியமுனிவர் வடிவமைத்து பொருத்தினார் என்பது அவர்களின் நம்பிக்கை..

wikipedia

 வேறு தெய்வங்கள்

வேறு தெய்வங்கள்

இந்த கோயிலில் சிவபெருமான் தவிர்த்து, பார்வதி, விஷ்ணு, விநாயகர், முருகன், பிரம்மன், அம்மன் என நிறைய தெய்வங்கள் இருக்கின்றன.

 தெப்பக்குளம்

தெப்பக்குளம்


இந்த கோயிலுக்கு வெளியே அமைந்துள்ள இந்த குளம் மிகவும் சக்தி வாய்ந்தது. குழந்தைப் பேறு இல்லாதவர்கள் இந்த குளத்தில் வாராவாரம் குளித்து வந்தால் குழந்தை பேறு அடையும் நிலைக்கு வருவர் என்பது இவ்வூர் மக்களின் நம்பிக்கை.

Ssriram mt

 எப்போதெல்லாம் நிறம் மாறுகிறது தெரியுமா?

எப்போதெல்லாம் நிறம் மாறுகிறது தெரியுமா?


காலை 6 மணியிலிருந்து 8.24 வரை தாமிர நிறமாகவுள்ள சிவலிங்கம், 8.25 லிருந்து 10.48 வரை இளஞ்சிவப்பு நிறமாக உள்ளது. பின்னர் 10.49 க்கு உருகிய தங்க நிறமாக மாறும் லிங்கம் 15.36 க்கு மரகத பச்சை நிறத்தில் மாறுகிறது. மாலை ஆறு மணி வரை இதே நிறத்தில் காட்சியளிக்கிறது சிவலிங்கம்.

Read more about: travel temple