Search
  • Follow NativePlanet
Share
» »வண்ணமயமான துர்கா பூஜை கொண்டாட்டத்தில் கலந்துக் கொள்ள ஒரு அரிய வாய்ப்பு – நிச்சயம் தவறவிடாதீர்கள்!

வண்ணமயமான துர்கா பூஜை கொண்டாட்டத்தில் கலந்துக் கொள்ள ஒரு அரிய வாய்ப்பு – நிச்சயம் தவறவிடாதீர்கள்!

கொல்கத்தாவில் துர்கா பூஜை, பல நூற்றாண்டுகள் காலமாக நடைபெற்றுக் கொண்டிருக்கும் ஒரு பழமையான கொண்டாட்டமாகும். ஏன் நமக்கும் கூட துர்கா பூஜை என்று கேட்டாலே கொல்கத்தா தான் நினைவுக்கு வரும்.

துர்கா தேவியின் நினைவாக மேற்கு வங்காளத்தில் கொண்டாடப்படும் அனைத்து திருவிழாக்களிலும் இதுதான் மிகப் பெரியது. பத்து நாட்கள் நடைபெறும் திருவிழாவில் ஆறாவது நாள் தொடங்கி ஒன்பதாம் நாள் வரை, துர்கா தேவியின் பெரிய சிலைகளுடன் கூடிய பந்தல்கள் பார்வையாளர்களுக்காக திறக்கப்படும்.

தசமி என்றும் அழைக்கப்படும் பத்தாம் நாளன்று, பிரம்மாண்டமான கொண்டாட்டங்கள் மற்றும் ஊர்வலங்களுடன் தேவியின் சிலையை நீரில் மூழ்கடிப்பார்கள்.

ஆனால் இந்த பத்து நாளும் கொல்கத்தா நகரமே வான வேடிக்கைகள், தோரணங்கள், நடனங்கள், இசை கச்சேரிகள் என மின்னும். இந்த வண்ணமயமான திருவிழாவில் நீங்களும் கலந்துக் கொள்ள உங்களுக்கு ஒரு அரிய வாய்ப்பு கிடைத்துள்ளது. அதைப் பற்றி இங்கே படிக்கவும்!

யுனெஸ்கோவின் பாரம்பரிய பட்டியலில் இடம் பெற்றிருக்கும் திருவிழா

யுனெஸ்கோவின் பாரம்பரிய பட்டியலில் இடம் பெற்றிருக்கும் திருவிழா

கொல்கத்தாவின் பரபரப்பான சாலை இப்போது பெரிய மேடைகள், துர்கா சிலை மற்றும் சுவரொட்டிகளுடன் பண்டிகை தோற்றத்தைக் கொண்டுள்ளது.

"மதம் மற்றும் கலையின் பொது நிகழ்ச்சியின் சிறந்த நிகழ்வு மற்றும் கூட்டு கலைஞர்களின் செழிப்பான வடிவமைப்புகளின் சிறந்த எடுத்துகாட்டு" என்ற அடிப்படையில் இது டிசம்பர் 2021 இல் யுனெஸ்கோவின் பட்டியலில் சேர்க்கப்பட்டுள்ளது.

யுனெஸ்கோவின் மனிதகுலத்தின் இன்டேன்ஜிபிள் கலாச்சார பாரம்பரியத்தில் 'கொல்கத்தாவில் துர்கா பூஜை' சேர்க்கப்பட்டுள்ள நிலையில், உலக அங்கீகாரத்தைக் கொண்டாடும் வகையில் மேற்கு வங்க அரசு பேரணியை ஏற்பாடு செய்துள்ளது.

ஆயிரக்கணக்கான மக்கள் கலந்துக்கொண்ட பேரணி

ஆயிரக்கணக்கான மக்கள் கலந்துக்கொண்ட பேரணி

துர்கா பூஜை திருவிழாவிற்கு கிட்டத்தட்ட ஒரு மாதத்திற்கு முன்பு, முதல்வர் மம்தா பானர்ஜி நகரத்தில் இந்த மாபெரும் வண்ணமயமான பேரணிக்கு தலைமை தாங்கினார். ஜோரான்சாங்கோ தாகுர்பாரி முதல் ரெட் ரோடு வரையிலான ஐந்து கிலோமீட்டர் தூரத்தில் பல்வேறு கிளப் பிரதிநிதிகள் உட்பட ஆயிரக்கணக்கான மக்கள் பேரணியில் பாடியும் நடனமாடியும் பங்கேற்றனர்.ஐந்து கிலோமீட்டர் தூரம் முழுவதும் நடந்து சென்ற முதல்வர் மம்தா பானர்ஜி, கொண்டாட்டத்துடன், மாநிலத்தில் திருவிழா தொடங்கியுள்ளது என்று கூறினார்.

இந்தப் திருவிழாவைப் பட்டியலில் சேர்த்ததற்காக யுனெஸ்கோவிற்கு நன்றி தெரிவித்த அவர், சில ஆண்டுகளுக்கு முன்பு பிரிட்டிஷ் கவுன்சில் நடத்திய ஆய்வில், துர்கா பூஜையைச் சுற்றியுள்ள ஆக்கப்பூர்வமான பொருளாதாரம் சுமார் ரூ. 40,000 கோடியாகக் கணக்கிடப்பட்டுள்ளது என்றும் கூறினார். துர்கா பூஜை கொல்கத்தாவின் மிக முக்கிய அங்கமென்றும் இதில் நாட்டின் பல்வேறு பகுதிகளில் இருந்து மக்கள் கலந்துக் கொள்வார்கள் எனவும் தெரிவித்தார்.

துர்கா பூஜை கொண்டாட்டம் 2022

துர்கா பூஜை கொண்டாட்டம் 2022

இந்து புராணங்களின் படி, துர்கா தேவி கடவுள்களின் சதி உருவமாக அரக்கன் மகிஷாசுரனை அழிக்க, கூட்டு ஆற்றலில் இருந்து தோன்றினார். அவரை எந்த சக்தியை கொண்டும் அழிக்க முடியாது. தாய் தேவியின் இந்த சக்தி வாய்ந்த வடிவம் கொல்கத்தாவில் மிகவும் போற்றப்படுகிறது, அதனால்தான் அவர் திரும்புவது மிகவும் பிரமாண்டமாகவும் விழாக்களுடன் கொண்டாடப்படுகிறது.

திருவிழாவிற்கு ஒரு வாரத்திற்கு முன்பு, நகரம் தயாராகி, தேவியை வீட்டிற்கு வரவேற்க தன்னை தயார்படுத்தும்போது, ஆவலும் உற்சாகமும் நிறைந்த தோற்றத்தைக் காணலாம்.

கொல்கத்தாவில் துர்கா பூஜை கொண்டாட்டம்

கொல்கத்தாவில் துர்கா பூஜை கொண்டாட்டம்

நவராத்திரியின் ஆறாம் நாள் அதாவது கொல்கத்தாவில் துர்கா பூஜையின் முதல் நாளன்று அழகாக அலங்கரிக்கப்பட்ட சிலைகள், வீட்டிற்கு கொண்டு வரப்படுகின்றன அல்லது அலங்கரிக்கப்பட்ட பொது பந்தல்களில் வைக்கப்படுகின்றன. மலர்கள், ஆடைகள், நகைகள், சிவப்பு வெர்மிலியன் ஆகியவற்றால் அலங்கரிக்கப்பட்டு பல்வேறு இனிப்புகளும் பண்டங்களும் நெய்வேத்தியங்களாக வைக்கப்படுகின்றன.

பூஜை நடைபெறும் பத்து நாட்களும் மக்கள் நடனமாடியும், பாட்டு பாடியும், கூட்டு பிரார்த்தனைகள் செய்தும், நாடகங்கள் நடத்தியும் வழிபடுகின்றனர். கொல்கத்தா நகரமே இதனால் விழக் கோலம் பூண்டிருக்கும்.

பூஜை நடைபெறும் பத்து நாட்களும் மக்கள் நடனமாடியும், பாட்டு பாடியும், கூட்டு பிரார்த்தனைகள் செய்தும், நாடகங்கள் நடத்தியும் வழிபடுகின்றனர். கொல்கத்தா நகரமே இதனால் விழக் கோலம் பூண்டிருக்கும்.இந்த நிகழ்வில் கலந்துக்கொண்டு அன்னையை அன்போடு பிரார்த்திப்பவர்கள் அனைவர்க்கும் வேண்டிய யாவும் கிடைக்கிறது.

10 நாள் துர்கா பூஜை பேக்கேஜ்

10 நாள் துர்கா பூஜை பேக்கேஜ்

வங்காளத்தின் வளமான கலாச்சாரம் மற்றும் பாரம்பரியத்தை அனைவரும் அனுபவிப்பதை உறுதி செய்வதற்காக, மேற்கு வங்க அரசு சுந்தரவனப் பயணத்துடன் 10 நாள் துர்கா பூஜை பேக்கேஜை வழங்குகிறது.

பத்து நாள் பேக்கேஜில் பயணிகள் ஆராயக்கூடிய துர்கா பூஜையின் பல்வேறு அம்சங்கள் இருக்கும். கப்பல் பயணத்தை உள்ளடக்கிய 15 நாள் கங்காசாகர் பேக்கேஜில் சாகர் தீவுகளுக்கு செல்வது, பல்வேறு கடற்கரைகளுக்கு செல்வது, மலைபிரதேசங்களுக்கு செல்வது, ஷாப்பிங், வகை வகையான உணவுகளை சுவைப்பது என அனைத்தும் அடங்கும்.

இங்கு சென்று பாருங்கள், ரியோவில் நடக்கும் கார்னிவலுக்கு சற்றும் குறைவில்லாத ஒரு திருவிழாவைக் கண்டு களிப்பீர்கள்!

More News

    Notifications
    Settings
    Clear Notifications
    Notifications
    Use the toggle to switch on notifications
    • Block for 8 hours
    • Block for 12 hours
    • Block for 24 hours
    • Don't block
    Gender
    Select your Gender
    • Male
    • Female
    • Others
    Age
    Select your Age Range
    • Under 18
    • 18 to 25
    • 26 to 35
    • 36 to 45
    • 45 to 55
    • 55+