» »துரியோதனனிற்கு ஒரு கோவிலா ?

துரியோதனனிற்கு ஒரு கோவிலா ?

Written By: Staff

துரியோதனன் மகாபாரதத்தின் வில்லன் மட்டுமல்ல‌ மிகச்சிறந்த போர்வீரனும்கூட. ஆனால், துரியோதன‌னுக்கு கோவில் இருப்பது உங்களுக்குத் தெரியுமா ? வட இந்தியாவில் கோவில்கள் இருக்கின்றன.

துரியோதன் மந்திர், உத்தர்காஷியின் சவுர் கிராமத்தில் அமைந்துள்ள ஒரு அழகிய கோயிலாகும். இக்கோயில் இந்துக்களின் காப்பியமான மஹாபாரதத்தில் வரும் பாத்திரமான துரியோதனுக்கு அர்ப்பணிக்கப்பட்டதாகும்.

ஆனால், தென்னிந்தியாவில் துரியோதன‌னுக்கு இருக்கும் ஒரே கோவில் : கேரளாவில், கொல்லம் அருகே இருக்கிறது. கோவிலின் பெயர், பொருவழி பெருவிருத்தி மலநாட‌ கோவில். ஒரு சிறிய குன்றின்மீது இந்தக் கோவில் வீற்றிருக்கிறது. இந்தக் கோவிலில் கோபுரம் கிடையாது. இந்தியாவின் தனித்துவமான கோவில்களில் ஒன்று.

Duryodana

மகாபாரத்தில் துரியோதனன் ஒரு வித்தியாசமான கதாபாத்திரம். கர்ணனனுக்கும் துரியோதனனுக்கும் உள்ள நட்பைப் பற்றி படித்திருக்கிறோம், படங்களில் பார்த்திருக்கிறோம். ஆனால், அந்த குணம் பாண்டவர்கள் மீது வரவில்லை. குருஷேத்திரப் போர் முடியும் வரை, துரியோதனன் அவர்கள் மீது அளவு கடந்த குரோதம் கொண்டிருந்தான்.

துரியோதனனது உடல் மின்னலாலானது என்று நம்ப‌ப்படுகிறது; அதி பலசாலி. துச்சாதனனால் பெரிதும் மதிக்கப்பட்டான். துரோணரிடம் போர்ப்பயிற்சி பெற்றான். கதாயுத்தத்தில் வலிமை பெற பலராமரிடம் சீடனாக சேர்ந்து பயிற்சி பெற்று, அவருக்குப் பிரியமான சீடனாக இருந்தான். கதாயுதத்துடன் கூடிய துரியோதனன் பீமனுக்கு நிகராக இருந்தான்.

Duryodhana

இந்தக் கோவிலின் பின்னே ஒரு கதை இருக்கிறது: பாண்டவர்களைத் தேடி துரியோதனன் இங்கு வந்தபோது மிகவும் களைப்புற்று, ஒரு குருக்கள் வீட்டிற்குத் தண்ணீர் கேட்டுச் சென்றிருக்கிறான். தாகம் தணிந்த பிறகு, இந்த ஊருக்குகாக நிறைய நிலங்களை கொடுத்து உதவியிருக்கிறான். மேலும், இந்தக் கோவில் இருக்கும் குன்றின் மீது ஊருக்காக தியானம் செய்ததாக ஐதீகம் இருக்கிறது.

இதன் காரணமாக துரியோதனனிற்கு இங்கு உரிய மரியாதை அளிக்கிறார்கள். ஒவ்வொரு வருடமும், மார்ச்-ஏப்ரல் மாதத்தில் திருவிழாக்கள் நடைபெறுகிறது. இன்றும், துரியோதனன் பெயரலியே கோவில் நிர்வாகம் அரசுக்கு வரி செலுத்துகிறது.

குன்னத்தூர், கொல்லதிலிருந்து 40 கி.மீ. வாடகை கார் எடுத்துக் கொள்ளலாம். இந்தக் கோவிலுக்குச் செல்ல குறிப்பிட்ட காலம் என்று ஒன்று கிடையாது. வருடம் முழுவதும் உகந்த காலம்தான்.