Search
  • Follow NativePlanet
Share
» »ஜாலியா போலாமா ஒரு ECR ட்ரிப்

ஜாலியா போலாமா ஒரு ECR ட்ரிப்

பயணங்கள் தான் எத்தனை அற்புதமானவை. வார்த்தைகளால் விவரிக்க முடியாத ஒரு பரவசத்தை தந்து நம் கவலைகளை மறக்கச்செய்பவை. மனதுக்கு பிடித்தவரோடோ, தனியாகவோ நம்மில் பலருக்கு பயணங்கள் இல்லாத வாழ்க்கையை கற்பனையே செய்ய முடியாது.

நாம் எத்தனையோ சாலைகளில் பயணம் செய்திருந்தாலும் சில பயணங்கள் நம் மனதுக்கு மிக நெருக்கமானவையாக, மறக்க முடியாதவைகளாக இருக்கும்.சாலைப்பயணங்கள் உங்களுக்கு பிடிக்குமென்றால் 'ECR ரோடு' உங்களின் மோட்டார் சைக்கிள் டைரியில் நிச்சயம் இருக்க வேண்டிய இடம். சரி அப்படி என்ன தான் இருக்கிறது இந்தப்பயணத்தில?

கிழக்கு கடற்கரை சாலை (East Coast Road):

புகைப்படம்: Looking -> Lens

சென்னையில் இருந்து பாண்டிச்சேரி, செல்லும் சாலை தான் கிழக்கு கடற்கரை சாலை. இது தற்பொழுது நாகப்பட்டினம், ராமேஸ்வரம் வழியாக தூத்துக்குடி வரை நீடிக்கப்பட்டிருக்கிறது. மொத்தம் 690கி.மீ நீளம் உள்ள இந்த சாலை வங்காள விரிகுடாவின் (Bay of Bengal) கரையில் அமைந்திருக்கிறது. சென்னை திருவான்மயூரில் ஆரம்பிக்கும் இந்த சாலை உத்தண்டியில் இருந்து புறவழிச்சாலையாக நீள்கிறது. அங்கிருந்துதான் கடற்கரையின் பேரழகும் நம்முடன் பயணிக்க துவங்குகிறது.

கடற்கரையை ரசித்தபடியே செல்லும் இந்த பயண அனுபவம் இந்தியாவில் வேறெங்கும் நமக்கு கிடைக்காத ஒன்று. இந்த கடற்கரை சாலையில் பயணத்தின் போது நாம் பார்க்க வேண்டிய இடங்களும் நிறைய உள்ளன.

மாமல்லபுரம்:

புகைப்படம்: Vikas Rana

ECR ரோட்டில் அமைந்திருக்கும் மிக முக்கியமான இடம் மாமல்லபுரம். சென்னையில் இருந்து தெற்கே 60கி.மீ தொலைவில் இந்த இடம் அமைந்திருக்கிறது. பல்லவர் காலத்து கற்சிற்பங்களும், கற்கோயில்களும் இந்த சாலையில் பயணிப்பவர்களை கவர்ந்திழுப்பவை. இங்கிருக்கும் அர்ஜுனன் பாறை. வராக குகை, பஞ்ச ரத சிற்பங்கள் போன்றவை நம்மை பல்லவர் காலத்துக்கே அழைத்து செல்பவை. இவை தவிர மாமல்லபுரத்தில் ஏராளமான தாங்கும் விடுதிகளும், ஹோட்டல்களும் உள்ளன. ECR பயணத்தின் போது தவற விடகூடாத அற்புதம் இந்த அழகிய மாமல்லபுரம்.

கோவளம் கடற்கரை:

அசுத்தம் நிறைந்த சென்னை கடற்கரைகளை பார்த்து பழகியவர்களுக்கு கோவளம் கடற்கரை நிச்சயம் ஆனந்த அதிர்ச்சியை தரும். சுத்தமான கடற்கரையும், அமைதியான கடற்பகுதியையும் கொண்ட இடம் இந்த கோவளம் கடற்கரை. sea-diving செய்ய ஏற்ற இடமாகவும் இது விளங்குகிறது.

ஜாலியா போலாமா ஒரு ECR ட்ரிப்

புகைப்படம்: Sarath Kuchi

ஒரு மீனவப்படகில் 8-10 வரை சேர்ந்து வாடகைக்கு அமர்த்திக்கொண்டு 3கி.மீ வரை கடலுக்குள் சென்று பின்னர் அங்கே கடலுக்குள் குதித்து மகிழலாம். கடலை பார்த்து மட்டுமே ரசித்த நமக்கு கடலோடு ஒன்றாக கடலுக்குள் நீந்தும் அனுபவம் என்றும் நீங்காது நினைவில் நிற்கும். திருவனந்தபுறத்திலும் இதே பெயரில் கோவளம் என்னும் ஒரு கடற்கரை உள்ளது.

முட்டுக்காடு படகு சவாரி:

புகைப்படம்: Simply CV

ECR ரோட்டில் அமைந்திருக்கும் மற்றொரு அற்புதமான பொழுதுபோக்கு இடம் முட்டுக்காடு படகு சவாரி. 'Backwater' எனப்படும் எவ்வித அலைகளும், சலனமும் இல்லாத கடலைக்கொண்டது இந்தப்பகுதி. பல்வேறு வகையான படகுகள், கடல் விளையாட்டுகள் மற்றும் கடலில் செல்லும் ஸ்கூட்டர் போன்றவை இங்கு உள்ளன. சூரியன் மறையும் மாலை நேரத்தில் சூரிய கதிர்கள் கடலை தங்கக்குளம் போல தோன்ற வைக்கும் நேரம் படகு சவாரி செய்ய ஏற்றது . விதவிதமான கடல் உணவுகள் கிடைக்கும் உணவகங்களும் இங்கு நிறையவே உள்ளன. சென்னையில் இருந்து 36கி.மீ தொலைவில் ECR சாலையில் இது அமைந்திருக்கிறது.


பாண்டிச்சேரி:

புகைப்படம்: Praveen

இந்தியாவின் குட்டி பிரான்ஸ் என்று சொல்லும் அளவிற்க்கு பாண்டிச்சேரியில் பிரஞ்சு காலனியத்தின் தாக்கம் இன்றும் உள்ளது. நேர்த்தியான விதிகள், பிரஞ்சு கால கட்டிடங்கள், அமைதியான சூழல் போன்றவை சுற்றுலாப்பயணிகளை கவருகின்றன. அரவிந்தர் ஆஷ்ரமம், ஆரோவில் சர்வதேச நகரம்,மணக்குள விநாயகர் கோயில், பழங்காலத்து கோட்டைகள், போர் நினைவு சின்னங்கள், அழகிய கடற்கரைகள் போன்றவை இந்த நகரக்கு வருபவர்களுக்கு விருந்து படைக்கின்றன. கூடவே பிரஞ்சு உணவகங்களில் அந்நாட்டு உணவுகளை சுவைபார்க்கலாம்.

ஜாலியா போலாமா ஒரு ECR ட்ரிப்

புகைப்படம்: Abhinay Omkar

பழமையின் தாக்கமும், கொண்டாட்டங்களின் மகிழ்ச்சியும், இயற்க்கை தரும் நெகிழ்ச்சியும் இந்தப்பயணத்தை நம் வாழ்க்கையில் மறக்கமுடியாததாகிடும்.

More News

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+