Search
  • Follow NativePlanet
Share
» »எளிபென்ட்டா குகை சிற்பங்கள் - நம்புங்கள் இவை கல்லால் செய்யப்பட்டவை

எளிபென்ட்டா குகை சிற்பங்கள் - நம்புங்கள் இவை கல்லால் செய்யப்பட்டவை

மும்பை நகரில் இருந்து பத்து கி.மீ தொலைவில் அரேபியக்கடலில் உள்ள சிறு தீவான எளிபென்ட்டா தீவில் உள்ளன எளிபென்ட்டா குகை சிற்பங்கள். இந்திய குடைவரை சிற்ப்பக்கலையின் உச்சம் எனப்போற்றப்படும் இவைகளை பார்க்கையில் களிமண்ணினால் செய்யப்பட்டதா அல்லது பாறைகளில் குடையப்பட்டதா என்ற சந்தேகம் எழுந்தாலும் அது வியப்பில்லை. இரண்டு பகுதிகளாக உள்ள இவற்றில் ஒரு பகுதியில் ஹிந்து கடவுள்களின் சிற்பங்களை கொண்ட 5 குகைகளும் மற்றொரு பகுதியில் புத்த மத சிற்பங்களை கொண்ட 2 குகைகளும் உள்ளன.

எப்போது கட்டப்பட்டவை இவை?

புகைப்படம்: Kiran SRK

கி.பி 5ஆம் நூற்றாண்டிலிருந்து கி.பி 8ஆம் நூற்றாண்டிற்குள் இவை கட்டப்பட்டிருக்கலாம் என வரலாற்று ஆய்வாளர்கள் கருதுகின்றனர். இவற்றை யார் கட்டினார்கள் என்பதற்கு இன்றும் வரலாற்று ஆய்வாளர்களிடையே கருத்து வேறுபாடுகள் நிலவுகின்றன. இவ்விடம் முதலில் கிரஹ புரி என்று அழைக்கப்பட்டதாகவும் ஹிந்துக்களின் வழிபாட்டு தலமாகவும் 16ஆம் நூற்றாண்டு வரை இருந்து வந்திருக்கிறது. ஆனால் 1534இல் போர்த்துகீசியர் ஆட்சியின் கீழ் இப்பகுதி வந்த பிறகு அவை வழக்கொழிந்து போய் இருக்கின்றன. இங்குள்ள நாட்டுப்புரக்கதைகளின் படி மகாபாரத யுத்தத்தில் வென்ற பாண்டவர்கள் இக்கோயிலை கட்டியதாக சொல்கின்றனர்.

சிவா குகை:

புகைப்படம்: bfxu

89 அடி அகலமுள்ள இக்குகையினுள் 10 விதமான சிவனைப்பற்றிய சிற்பங்கள் செதுக்கப்பட்டுள்ளன. இதன் நுழைவு வாயிலில் 'மகேசமுர்த்தி' சிற்பம் இருக்கிறது. இந்த குகையை கல்லால் ஆனா பெரும் துண்கள் தாங்கி நிற்கின்றன. இதனுள் சிவனையும், சக்தியையும் குறிக்கும் அர்த்தநாரீஸ்வரர் சிற்பம், சிவன் பூமிக்கு கங்கையை கொண்டு வந்ததை சித்தரிக்கும் 'கங்காதரர்' சிற்பம் போன்றவை உள்ளன. இக்குகையில் சாளுக்கியர் கால கட்டிடக்கலையின் வழக்கமான சதுர வடிவ தூண்கள், பிரமாண்டமான கடவுள்கள் மற்றும் துவார பாலகர்கள் சிலையும், குப்தர்களின் கட்டிடக்கலை மரபில் பின்பற்றப்பட்ட மலைகள், மேகங்கள் பற்றிய சித்தரிப்புகள் போன்றவை கலந்துள்ளன.

திருமூர்த்தி சிற்பம் - சிற்பக்கலையின் உச்சம்:

புகைப்படம்: Kiran SRK

இந்த எளிபென்ட்டா குகை சிற்பங்களில் மிகச்சிறப்பு வாய்ந்ததாக சொல்லப்படுவது சிவகுகையின் வாயிலுக்கு பின்னே இருக்கும் திருமூர்த்தி சிற்பம் ஆகும். 20 அடி உயரம் கொண்ட இது சிவனின் மூன்று தொழில்களான படைத்தல், காத்தல், அழித்தல் என்பதை விளக்கும் விதமாக 3 முகங்களுடன் உள்ளன. திருமூர்த்தி சிற்பம் உட்பட இங்குள்ள அனைத்து சிற்பங்களுக்கும் வண்ணம் தீட்டப்பட்டிருந்ததாகவும் காலப்போக்கில் அவை அழிந்து பொய் இருக்கின்றன.

தீவுக்குள்ளே ஷாப்பிங்?

புகைப்படம்: Jonah

மலைப்பூட்டும் இந்த குகைகளை தவிர்த்து எளிபென்ட்டா தீவில் ஷாப்பிங் செய்யவும் நிறைய இருக்கின்றன. ஒரு குட்டித்தீவில் என்ன கிடக்கும் என நீங்கள் நினைத்தால் உங்கள் நினைப்பை பொய்யாக்கும் வகையில் இங்கே இருக்கும் சந்தையில் நாம் வாங்கிச்செல்ல ஏராளமான பொருட்கள் கிடைக்கின்றன. பளிங்குக்கல்லினால் செய்யப்பட்ட சிறு சிறு சிற்பங்கள், கைத்தறி ஆடைகள், வேலைப்பாடுகள் நிறைந்த மரச் சிற்பங்கள் என இங்கு ஏராளமான பொருட்கள் விற்ப்பனைக்கு கிடைக்கின்றன. குழந்தைகளுடன் வந்தால் பொழுதுபோக்க இங்கிருக்கும் சிறிய ரயிலில் தீவுக்குள் ஒரு பயணம் போகலாம்.

எங்கு சாப்பிடல்லாம்?

மகாராஷ்டிரா மாநில சுற்றுலாத்துறை நடத்தும் உணவகம் இந்த தீவில் இருக்கிறது. நியாமான விலையில் இந்திய உணவு வகைகள் இங்கே கிடைக்கின்றன. இது தவிர காட்டுப்பழங்கள், தேநீர் போன்றவற்றை குகைகளுக்கு பக்கத்தில் நாம் வாங்கலாம்

தீவினுள் தங்க முடியுமா?

இந்த எளிபென்ட்டா தீவினுள் மக்கள் இரவு தங்க அனுமதியில்லை. ஆனாலும் பகல் நேரத்தில் ஓய்வு எடுக்க விரும்பினால் மகாராஷ்டிரா சுற்றுல்லாத்துறை நடத்தும் தாங்கும் விடுதி உள்ளது. இங்கிருந்து மாலை 5 மணிக்குள் வெளியேறிவிட வேண்டும்.

எப்படி அடைவது?

எளிபென்ட்டா குகை சிற்பங்கள் - நம்புங்கள் இவை கல்லால் செய்யப்பட்டவை

புகைப்படம்: Jonah

இந்த தீவை படகு மூலம் மட்டுமே அடைய முடியும். மும்பையில் உள்ள 'Gate Way of India'வில் இருந்து காலை 9 மணிக்கு தீவுக்கு முதல் படகு கிளம்புகிறது. திரும்பி வர மாலை 5 மணி வரை படகு சேவை உள்ளது. இந்தியாவின் எல்லா நகரங்களில் இருந்தும் மும்பைக்கு ரயில் மற்றும் பஸ் சேவைகள் உள்ளன.

More News

    Notifications
    Settings
    Clear Notifications
    Notifications
    Use the toggle to switch on notifications
    • Block for 8 hours
    • Block for 12 hours
    • Block for 24 hours
    • Don't block
    Gender
    Select your Gender
    • Male
    • Female
    • Others
    Age
    Select your Age Range
    • Under 18
    • 18 to 25
    • 26 to 35
    • 36 to 45
    • 45 to 55
    • 55+