» »பறவைகளை காண பழவேற்காடு வாருங்கள்

பறவைகளை காண பழவேற்காடு வாருங்கள்

Posted By: Gowtham Dhavamani

இயற்கையாய் அழகாக அமைந்த இடம், மனிதன் உருவாக்கிய செயற்கை அற்புதங்கள் , இவ்வாறு என்ன இல்லை சென்னையை சுற்றி? இருக்கும் அத்துணை இடங்களை காண உங்களுக்கு விடுமுறை நாட்கள் போதாது. வாரக்கடைசியில் சென்னையில் இருந்து 60 கிலோமீட்டர் தொலைவில் உள்ள புலிகாட் எரிக்கு நீங்கள் சென்று வரலாம். ஏரியின் எழில் மிகு சூழலும், பண்டைய கால நினைவுச்சின்னங்களும் அந்த நகரத்தின் தொன்மையை நமக்கு விளக்கும்.

வங்காள விரிகுடாவில் அமைந்துள்ள இந்த புலிகாட் எரி, டச்சு மற்றும் போர்த்துகீசியர் காலங்களில் அவர்களின் தலைநகரமாகவும் முக்கிய வியாபார தளமாக விளங்கியுள்ளது. ஆனால் தற்போது இயற்கை ஆர்வலர்கள் மற்றும் பயணிகள் மத்தியில் புலிகாட் நகரம் அதன் எரி மற்றும் வந்து செல்லும் பறவைகளுக்காக பிரபலமடைந்துள்ளது.

ஒவ்வொரு வருடமும் லச்சக்கணக்கில் மக்கள் இங்கு வந்து செல்கின்றனர். இந்த எரி மற்றும், அதனை சுற்றி உள்ள பகுதிகளில் பல்வேறு நாடுகளில் இருந்து பருவ காலத்தில் இங்கு தஞ்சமடையும் பறவைகளை காண. பண்டைய கால கோவில்கள், நினைவுச்சின்னகளும் அவர்களின் ஆர்வத்தை தூண்டுகின்றன. இயற்கை மற்றும் வரலாறு இரண்டையும் பருக வேண்டும் என நீங்கள் கருதினால் இந்த இடம் கண்டிப்பாக உங்கள் பட்டியலில் இருத்தல் அவசியம்.

செல்ல சரியான நேரம் :

செல்ல சரியான நேரம் :


நவம்பர் முதல் மார்ச் வரை இங்கு சென்றால், இடத்தின் வெப்பநிலை பறவைகளுக்கு ஏற்றவாறு அமைந்திருக்கும். எனவே அப்போது பல பறவை இனங்களை காண இயலும். ஆனால் கோடைக்காலத்தில் செல்வதை தவிர்க்கவும். காரணம் சுற்றி பார்பதற்கு ஏற்ற சூழல் அங்கு அமையாது.

செல்வது எவ்வாறு :

சென்னையில் இருந்து 60 கிலோ மீட்டர் தொலைவில் உள்ள இந்த புலிகாட் ஏரியை எளிதாக தரைவழி பாதை மூலம் அடைய இயலும். அதே சமயம் சென்னையில் இருந்து ரயில் மூலம் பொன்னேரி சென்று அங்கிருந்து புலிகாட் ஏரிக்கு பேருந்தில் செல்லலாம். சாலை வழியாக செல்வது நன்று, காரணம் நேரம் குறைவாகவும் வசதிகள் அதிகமாகும் இருக்கும்.

அங்கே செல்வதற்கு அரசுப்பேருந்து அல்லது தனியார் பேருந்து அல்லது தனியார் மகிழ்வுந்து மூலமாக சென்னையின் இருந்து புலிகாட் செல்லலாம். குறைந்தபச்சம் 2 மணிநேரம் ஆகும். பெரியம்பேட், வேப்பேரி, எவரஸ்ட் ஆகிய பேருந்துநிறுத்தங்களால் இருந்து சுலபமாக பேருந்துகள் கிடைக்கும்.

வழி 1- சென்னை - வல்லூர் - காட்டூர்-புலிகாட்

வழி 2- சென்னை - விஜயனல்லூர் - பொன்னேரி - புலிகாட்

வழி 1, 2டைக் காட்டிலும் குறைந்த நேரம் எடுக்கும்.

PC:Manvendra Bhangui

சென்னை 2 புலிகாட் :

சென்னை 2 புலிகாட் :

சென்னையில் இருந்து புலிகாட் செல்ல நீங்கள் திட்டமிட்டால், அதிகாலையில் கிளம்புவது நன்று. சூரியன் உதிக்கும் நேரத்தில் அங்கு சேர்வது போன்று திட்டமிட்டால், அதிகாலை குளிரை ரசித்தவாறே சென்றடையலாம்.

மேலும் செல்லும் பாதையும் பச்சை பசேல் என பசுமையாக இருக்கும். சிறு குன்றுகளும் உங்களுக்கு துணை நிற்கும்.

அங்கே தங்கியிருந்து அதனை சுற்றி பார்க்க முடிவுசெய்தால், கண்டிப்பாக எரி, பறவைகள் சரணாலையத்தோடு சேர்த்து, கோவில்கள் மற்றும் நினைவுச்சின்னங்களையும் காணுங்கள். அந்த பகுதியின் வரலாறு சொல்லும் இடங்கள் அவை.

புலிகாட் எரி செல்லும் வழியில், வல்லூர் மற்றும் காட்டூரில் நாவிற்கு சுவையான உணவும் ருசித்தவாறு செல்லலாம்.

 பழவேற்காட்டில் காணவேண்டிய பகுதிகள் :

பழவேற்காட்டில் காணவேண்டிய பகுதிகள் :

பழவேற்காடு ஏரி, பழவேற்காடு சரணாலையம், டச்சு கல்லறை, ஆதி நாராயண பெருமாள் கோவில் ஆகியவை முக்கியமான இடங்கள்.

பழவேற்காடு ஏரி:

உப்புநீரும் இல்லாமல், குடிநீரும் இல்லாமல், நடுத்தர சுவையுடன் கூடிய ஒரு சுவை பழவேற்காடு எரியின் நீருக்கு உண்டு. அங்கு பல்வேறு தாவரங்கள் மற்றும் விலங்கினங்களை காண இயலும். அந்த ஏரியை நம்பி பல மீனவர்கள் வாழ்கின்றனர்.

அருகில் உள்ள ஸ்ரீஹரிகொட்டவையும் புலிகாட் ஏரியையும் வங்காள விரிகுடா பிரிக்கின்றது. பல ஏக்கர்கள் உள்ள இந்த ஏரியில் பறவைகள் குடிகொள்வதை பார்ப்பதர்க்காகவே செல்லவேண்டும்.

PC- Pranayraj1985

புலிகாட் பறவைகள் சரணாலயம் :

புலிகாட் பறவைகள் சரணாலயம் :


புலிகாட்டில் தவறாது காணவேண்டிய மற்றொரு பகுதி இந்த சரணாலயம். ஒவ்வொரு வருடமும் இங்கு வந்து தங்கும் பறவைகள் எண்ணிக்கை அதிகரித்துக்கொண்டே இருக்கின்றது. முக்கியமாக பிளமிங்கோ, பெலிக்கன், வண்ண நாரை ஆகியவை கண்களை கவரும் அழகோடு இருக்கும்.

பறவைகளை காண்பது உங்களுக்கு பிடிக்கும் என்றால் கண்டிப்பாக இங்கு நீங்கள் சென்று வரவேண்டும்.

PC- McKay Savage

டச்சு கல்லறை :

டச்சு கல்லறை :

புலிகாட் நகரத்தின் வரலாறு பற்றியும் நீங்கள் அறிய விரும்பினால், டச்சு கல்லறை நீங்கள் காண வேண்டிய ஒரு இடம்.1622ல் உருவான இந்த இடம் தற்போது ஒரு தொல்பொருள் ஆராய்ச்சி தளமாக விளங்குகிறது. தற்போது அதனை தொல்பொருள் ஆராய்ச்சித்துறை பராமரித்து வருகின்றது. அந்த ஊரின் வரலாறை அந்த கல்லறைகளின் ஊடே நீங்கள் காணலாம். இது மட்டுமன்றி, பண்டைய டச்சு ஆட்சியின் போது கட்டப்பட்ட கட்டிடங்கள், கலங்கரை விளக்கம் என அனைத்தையும் காணலாம்.

PC- McKay Savage

Read more about: travel chennai

இப்போதே பெறுங்கள் சிறந்த சலுகைகளைப் பயணங்களிலும், பயண டிப்ஸ்களும், பயணக் கதைகளும் உடனுக்குடன்