» »இந்தியாவின் குட்டி திபெத் ரொம்ப சூப்பரா இருக்கும் !! எங்கிருக்கு தெரியுமா?

இந்தியாவின் குட்டி திபெத் ரொம்ப சூப்பரா இருக்கும் !! எங்கிருக்கு தெரியுமா?

By: Bala Karthik

இமாச்சல பிரதேசத்தின் இரண்டாம் தலை நகரமான தரம்சாலா, பக்ஸூ என முன்னதாக அழைக்கப்பட்டது. ஊசியிலைக்காடுகளையும்,குறிப்பாக தேவதாரு மரங்களையுமென கொண்டிருக்கும் இவ்விடம், கங்க்ரா பள்ளத்தாக்கினை தழுவி காணப்படுமோர் கண்கொள்ளா காட்சியழகை கொண்ட இடமும் கூட. மெக்லியோட் கஞ்ச், தரம்கோட், என பல அழகிய புற நகரை இவ்விடம் கொண்டிருக்க, மாபெரும் சுற்றுலா ஈர்ப்பாகவும் இது நமக்கு அமைகிறது.

தரம்சாலாவின் வாழ்க்கை முறையானது திபெத்திய, ஆங்கிலேய மற்றும் அருகாமையில் காணப்படும் இமாச்சல கலாச்சாரத்தை கொண்டிருக்க, வாழ்க்கைக்கான ஆதாரமாகவும், நகரம் முழுவதும் காணப்படும் சுவாரஸ்யமான இடங்களாகவும் பரந்து விரிந்து காணப்படுகிறது. தலை லாமாவின் புகலிடமாக இந்த தரம்சாலா விளங்க, அதோடு இணைந்த நாடு கடத்தப்பட்ட திபெத்தியர்களும் காணப்படுகின்றனர். திகிலூட்டும் அழகுடன் மடாலயங்களும், அமைதியான ஏரியும், ஆல்பைன் மரங்களும், அழகிய இயற்கையுமென மலைப்பகுதியை நிரம்பி காணப்படும் தரம்சாலா, நம் பார்வைக்கு பரவசமூட்டும் இடப்பட்டியலில் முக்கிய இடத்தை பிடித்திடவும் கூடும்.

நீங்கள் ஒரு டெல்லி நாட்டுப்புறத்தை சார்ந்தவர் என்றால், இந்த நகரத்திலிருந்து 480 கிலோமீட்டர் தொலைவில் மலைப்பகுதியானது காணப்பட, அது வார விடுமுறைக்கு ஏற்ற இடமாகவும் அமையக்கூடும்.

 தரம்சாலாவை நாம் காண சிறந்த நேரங்கள்:

தரம்சாலாவை நாம் காண சிறந்த நேரங்கள்:

கோடைக்காலமான ஏப்ரல் முதல் ஜூன் வரையிலான மாதங்களில் கால நிலை இனிமையாக இருக்க, அதன் நிலையானது 25 டிகிரி செல்சியஸை கடப்பதுமில்லை என்பதால், தில்லியின் வேகக்கட்டுபாடு கால நிலை மூலம் விரைவாக நாம் சென்றிடலாம்.

இருப்பினும், குளிர்க் காலமும் இந்த தரம்சாலாவை நாம் காண ஏதுவாக அமைய, ஒட்டுமொத்த பள்ளத்தாக்கும் பனி படர்ந்து, நகரத்தின் உன்னத அழகையும் தந்திடுகிறது.

PC: Travelling Slacker

தில்லியிலிருந்து தரம்சாலாவிற்கான வழி:

தில்லியிலிருந்து தரம்சாலாவிற்கான வழி:

வழி 1: Dr NS ஹர்திகார் சாலை - தேசிய நெடுஞ்சாலை 9 - தேசிய நெடுஞ்சாலை 44 - மேஹ்மத்பூர் - ஜான்ஸா - தங்கோரி சாலை - மாநில நெடுஞ்சாலை 4 - கராரின் தேசிய நெடுஞ்சாலை 5 - தேசிய நெடுஞ்சாலை 205 - தேசிய நெடுஞ்சாலை 503 - தேசிய நெடுஞ்சாலை 3 - பக்லி - கன்யாரா - தரி சாலை - தரம்சாலா (9 மணி நேரம் 30 நிமிடங்கள் - 476 கிலோமீட்டர்)

வழி 2: Dr NS ஹர்திகார் சாலை - தேசிய நெடுஞ்சாலை 9 - தேசிய நெடுஞ்சாலை 44 - ஹரியானா - MDR114 மாநில நெடுஞ்சாலை 11 - ஜிந்த் - கைத்தால் சாலை - கலோரியின் தேசிய நெடுஞ்சாலை 7 - மாநில நெடுஞ்சாலை 8 - ரூப் நகரின் தேசிய நெடுஞ்சாலை 205 - தேசிய நெடுஞ்சாலை 503 - தேசிய நெடுஞ்சாலை 3 - பக்லி - கன்யாரா - தரி சாலை - தரம்சாலா (11 மணி நேரம் 25 நிமிடங்கள் - 518 கிலோமீட்டர்)

வழி 3: Dr NS ஹர்திகார் சாலை - தேசிய நெடுஞ்சாலை 9 - - பர்வாலா சாலை - தேசிய நெடுஞ்சாலை 52 - ஹிசார் - ஹரியானாவின் தோஹனா சாலை - மாநில நெடுஞ்சாலை 10 - பத்தனின் தேசிய நெடுஞ்சாலை 52 - மாநில நெடுஞ்சாலை 10 - மாநில நெடுஞ்சாலை 8 - ரூப் நகரின் தேசிய நெடுஞ்சாலை 205 - தேசிய நெடுஞ்சாலை 503 - தேசிய நெடுஞ்சாலை 3 - பக்லி - கன்யாரா - தரி சாலை - தரம்சாலா (12 மணி நேரம் - 581 கிலோமீட்டர்)

முதலாம் வழி தேர்ந்தெடுக்க பரிசீலிக்கப்பட குறைவான நேரத்தையும் கம்மியான தூரத்தையும் இவ்வழியானது கொண்டிருக்கிறது.

பானிப்பட் மற்றும் குருக்ஷேத்ரா:

பானிப்பட் மற்றும் குருக்ஷேத்ரா:

இரட்டை நகரமான பானிப்பட் மற்றும் குருக்ஷேத்ரா, புராண முக்கியத்துவத்தை கொண்டிருக்க இந்து இதிகாசமான மஹாபாரதத்தின் முக்கிய பங்கினையும் இது கொண்டிருக்கிறது. முகலாய பேரரசால் இது ஆட்சி செய்யப்பட; அதனால், முகலாய கட்டிடக்கலையை நாம் பார்ப்பதும் நலமாகும்.

இந்த வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த இடங்களான பிரம்மா சரோவர், சேக் செளி கா மக்பரா, பானிப்பட் அருங்காட்சியகம், என பெயர் சொல்லும் பலவும் காணப்படுகிறது.

PC: Manoj Khurana

ஆம்பலா:

ஆம்பலா:


நகரத்திற்கு பெயர்பெற்ற ஆம்பலா, இராணுவ கண்டோன்மெண்ட் பகுதியாக காணப்பட, இந்திய இராணுவத்தின் பெரும் அளவு இங்கே காணப்பட, இந்திய விமானப்படையையும் கொண்டிருக்கிறது. இந்த நகரமானது கக்கார் மற்றும் தாங்கிரி என்னும் நதிகளை கொண்டிருக்க; ஒன்று வடக்கு புறத்திலும், மற்றுமொன்று தெற்கு புறத்திலும் காணப்படுகிறது.

ஆம்பலாவின் சுவாரஸ்யமான இடங்கள் 400 வருட பழமை வாய்ந்த இராணி கா தலாப், சிஸ்கஞ்ச் குருத்வாராவை கொண்டிருக்க, அத்துடன் பௌளி சாகிப், ஜெய்ன் மந்திர், என பல பெயர் பெற்ற இடங்களும் காணப்படுகிறது.

PC: Varun Shiv Kapur

காங்க்ரா:

காங்க்ரா:

ஆம்பலாவிலிருந்து 255 கிலோமீட்டர் தொலைவில் காணப்படும் காங்க்ரா, இமாச்சல பிரதேசத்தின் நகரமாக பரந்து விரிந்து பல அழகிய இடங்களையும் கொண்டிருக்கிறது. இதனை முன்னர் நாகர்கோட் என அழைக்க, "தேவபூமி" என இதனை வரையறுக்கப்படுவதோடு, "கடவுளின் நிலம்" என்னும் பொருளையும் தர, பழங்காலத்து இந்து எழுத்துக்களையும் கொண்டிருக்கிறது.

மஸ்ரூர் பாறை வெட்டு ஆலயம் நமக்கு காட்சியளிக்க, இதனை இமாலய பிரமிடு எனவும் அழைக்கப்பட, இந்திய கட்டிடக்கலை பாணியில் கட்டப்பட்ட மாபெரும் ஷிகரா பாணி ஆலயமும் இங்கே காணப்படுகிறது. ஜவாலாஜி, சாமுண்டாய் தேவி ஆலயம், கங்க்ரா கோட்டை என சில இடங்கள் நாம் கங்க்ராவிற்கு வரும்போது நின்று ரசிக்க வேண்டியதாக அமைகிறது.


இறுதி இலக்காக 22 கிலோமீட்டர் தொலைவில் அமைந்துள்ள தரம்சாலா காணப்படுகிறது.

 நம்க்யால் மடாலயம்:

நம்க்யால் மடாலயம்:

இதனை சில நேரங்களில் தலை லாமா ஆலயம் எனவும் அழைக்கப்பட, இந்த நம்க்யால் மடாலயம் இரகசியமான தலை லாமாவின் 14வது மடாலயம் என்பதும் தெரியவர, அவர் தான் டென்ஷின் யாட்ஷோ என்பதும் குறிப்பிடத்தக்கது. இந்த மடாலயம் உயரத்தில் அமைந்திருக்க, இமாலயத்தின் தௌலதார் மலை தொடர்ச்சியிலும் காணப்படுகிறது. இவ்விடமானது சுமார் 200 திபெத்திய துறவிகளுக்கு வீடாக விளங்குவதோடு புத்த மதத்தையும் கற்றுத்தர, ஆங்கிலத்தின் மாடர்ன் கல்வியையும், திபெத்திய மொழியையுமென பலவற்றையும் கொண்டிருக்கிறது.

மெக்லியோட் கஞ்ச்:

மெக்லியோட் கஞ்ச்:

தரம்சாலாவின் புற நகர் பகுதியில் ஒன்றான மெக்லியட் கஞ்ச், திபெத்தியர்களின் பெரிய அளவிலான மக்கள் தொகையை கொண்டிருப்பதோடு, திபெத்தியர்களின் முக்கியத்துவத்தை தெரிந்துக்கொள்ளும் பல சுவாரஸ்யமான இடங்களையும் சேர்த்தே கொண்டிருக்கிறது. திபெத்திய அருங்காட்சியகம், பக்ஸூ வீழ்ச்சி, சைன்ட் ஜான் தேவாலயம், என பல இடங்களை கொண்டிருக்க, புற நகர் பகுதியான மெக்லியோட் கஞ்ச் கண்கொள்ளா காட்சியையும் நம் கருவிழிக்கு சமர்ப்பிக்கிறது

ட்ரையுண்ட்:

ட்ரையுண்ட்:

தரம்சாலா நகரத்திலிருந்து 6 கிலோமீட்டர் தொலைவிலும், மெக்லியட் கஞ்சியிலிருந்து 9 கிலோமீட்டர் தொலைவிலும் காணப்படும் பிரசித்திப்பெற்ற பயண இலக்கு தான் இந்த ட்ரையுண்டாக, கங்க்ரா பள்ளத்தாக்கின் சிறிய மலையாகவும் இது இருக்க, தௌலதார் தொடர்ச்சியின் அடிவாரத்திலிருந்து 9200 அடி உயரத்திலும் இவ்விடம் காணப்படுகிறது.

இது ஒரு எளிமையான பயணமாக அமைய, இவ்வழியானது பசுமையான புல்வெளிகளையும் கொண்டு ஆசிர்வதித்திட, கருவாலி மற்றும் தேவதாரு மரங்களாலும் சூழ்ந்திருக்கிறது. இப்பயணமானது பள்ளத்தாக்கினை பெருமூச்செறிந்து பார்க்கவும் நமக்கு உதவுகிறது.

யூட்டோ மடாலயம்:

யூட்டோ மடாலயம்:


புத்த யாத்ரீக தளத்தின் மிக முக்கிய தளங்களுள் ஒன்றாக யூட்டோ மடாலயம் காணப்பட, 15ஆம் நூற்றாண்டில் நிறுவப்பட்ட இவ்விடம் மீண்டும் 20ஆம் நூற்றாண்டில் நிறுவப்பட்டது. இந்த மடாலயமானது புகழ்ந்த பரப்புடன் உலகம் முழுவதும் காணப்பட, தந்திரி தியானமும் பயிற்றுவிக்கப்படுகிறது.

இந்த மடாலயமது நெகிழும் உயரத்தில் காணப்பட, திகிலூட்டும் பியஸ் நதியும், தௌலதார் மலை தொடர்ச்சியும் காணப்படுகிறது. இங்கே சாக்கியமுனி புத்த சிலையையும் நம்மால் பார்க்க முடிய, மடாலயத்தின் வளாகத்திலும் இது காணப்படுகிறது.

கரேரி ஏரி:

கரேரி ஏரி:

தரம்சாலாவிலிருந்து 9 கிலோமீட்டர் தொலைவில் காணப்படும் மதிமயக்கும் ஏரிதான் கரேரி ஏரியாகும். இதன் உயரிய தூய்மையான நீர் ஏரியும் மிகவும் புகழ்பெற்ற பயண இலக்காக அமைகிறது. இயற்கையின் கரம் கொண்டு இவ்விடம் தழுவி காணப்பட, கரேரி ஏரியானது தௌலதார் தொடர்ச்சியால் சூழ்ந்து, மலை உச்சியில் சிவபெருமானுக்காக அர்ப்பணிக்கப்பட்ட ஆலயத்தையும் கொண்டிருக்கிறது. இந்த ஏரியானது டிசம்பர் முதல் மார்ச் வரையில் உறைந்துபோக, இதன் காட்சியும் நெகிழ்ச்சியை நம் மனதில் விதைக்கிறது.

PC: Akashdeep83