» »மும்பையின் மறைக்கப்பட்ட உண்மை முகங்கள் !!

மும்பையின் மறைக்கப்பட்ட உண்மை முகங்கள் !!

Posted By: Staff

மும்பைக்கு என்றாவது சென்றிருக்கிறீர்களா?. நசுக்கி பிழியும் ரயில் நிலையங்கள், முடிவற்றதாக தோற்றமளிக்கும் சேரிப் பகுதிகள், இந்தியாவின் படா பணக்காரர்களின் மாளிகைகள், கிடைக்கும் இடத்திலெல்லாம் கிரிக்கெட் விளையாடும் சிறுவர்கள், சுண்டியிழுக்கும் தெருவோர உணவகங்கள், டப்பா வாலாக்கள், அரபிக்கடலை ரசித்தபடியே மெய்மறந்து அமர்ந்திருக்கும் காதலர்கள் என மும்பை ஒரு தனி உலகம். 

அந்த உலகத்தின் பன்முகங்களை புகைப்படங்கள் வழியே சுற்றிப்பார்க்கலாம் வாருங்கள்.  

மும்பை:

மும்பை:

மும்பையில் கொண்டாடப்படும் மிகப்பெரிய திருவிழாவான விநாயகர் சதுர்த்தி ஊர்வலத்தின் போது !!

sandeepachetan.com travel

மும்பை:

மும்பை:

காலையிலும் மாலையிலும் மும்பையில் ரயிலில் அலுவலகத்திற்கு சென்று வருவதை விட கொடுமையான விஷயம் எதுவுமே இருக்க முடியாது.

M M

மும்பை:

மும்பை:

மும்பையில் இரவு நேரத்தில் நிச்சயம் நாம் சென்று பார்க்க வேண்டிய இடம் 'மரைன் டிரைவ்' ஆகும். அரபிக்கடலை ஒட்டி வண்ணமயமான விளக்குகள் கொண்ட சாலையில் காரிலோ வண்டியிலோ பயணிப்பது அவ்வளவு ஆனந்தமான அனுபவமாக இருக்கும்.

Pranav Prakash

மும்பை:

மும்பை:

ஆசியாவின் மிகப்பெரிய சேரிப்பகுதியான தாராவி. இங்கே மராத்தியர்களுக்கு இணையாக அதிகளவில் தமிழர்கள் வசிக்கிறார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

aphotoshooter

மும்பை:

மும்பை:

'தோபி காட்'!!

இங்கே தான் மும்பைக்கே சலவை செய்யப்படுகிறது எனலாம்.

Marina & Enrique

மும்பை:

மும்பை:

ஆசாத் மைதானத்தில் கிரிக்கெட் பயிற்சியில் ஈடுபடும் சிறுவர்கள்.

Patrik M. Loeff

மும்பை:

மும்பை:

இந்தியா கேட் அருகேமென்மாலைப்பொழுதில் !!

Giulia Mulè

மும்பை:

மும்பை:

சென்னைக்கு எப்படி சென்ட்ரல் ரயில் நிலையமோ அப்படி மும்பையின் முக்கிய ரயில் முனையமாக திகழும் சத்திரபதி சிவாஜி ரயில் நிலையத்தின் முகப்பு.

sandeepachetan.com travel

மும்பை:

மும்பை:

வறுமைக்கும் மகிழ்ச்சிக்கும் சம்மந்தம் இல்லை !!

Adam Cohn

மும்பை:

மும்பை:

பாலிவுட் சினிமாவின் முடிசூடா மன்னனான அமிதாப்பச்சன் மும்பையின் அடையாளங்களில் ஒருவராக கலந்துவிட்டவர் ஆவர்.

TeachAIDS

மும்பை:

மும்பை:

மும்பையின் இரவு நேர தோற்றம் !!

Harshit Sekhon

மும்பை:

மும்பை:

மும்பைவாசிகளின் உயிர் உணர்வுகளோடு கலந்துவிட்ட ஒரு உணவுப்பண்டம் என்றால் அது பாவ் பாஜி தான்.

Adam Cohn

மும்பை:

மும்பை:

பழைய கலைப்பொருட்கள் விற்கும் ஒரு கடையில் அடுக்கி வைக்கப்பட்டிருக்கும் அந்தக்காலத்து கேமராக்கள்.

David Ramos

மும்பை:

மும்பை:

இந்தியாவின் பொருளாதார தலைஎழுத்தை தீர்மானிக்கும் இடமாக திகழும் மும்பை பங்குச்சந்தை கட்டிடம்.

Niyantha Shekar

மும்பை:

மும்பை:

ஒளி மயமாக ஜொலிக்கும் மும்பை மரைன் டிரைவ் !!

Rajarshi MITRA

மும்பை:

மும்பை:

மும்பை நகரை பற்றிய பயண தகவல்களை தமிழில் இருக்கும் ஒரே பயண இணையதளமான தமிழ் பயண வழிகாட்டியில் தெரிந்துகொள்ளுங்கள்.

மும்பை ஹோட்டல்கள்

Adam Cohn