Search
  • Follow NativePlanet
Share
» »அக்ராசென் கி பவோலி பற்றி நீங்கள் கட்டாயம் தெரிந்துகொள்ளவேண்டியவை!

அக்ராசென் கி பவோலி பற்றி நீங்கள் கட்டாயம் தெரிந்துகொள்ளவேண்டியவை!

By Udhaya

டெல்லி மாநகரம் பல்வேறு வரலாற்று நிகழ்வுகளுக்கு ஆதாரமாக உள்ளது. மேலும் இங்கு நிறைய நினைவுச் சின்னங்களும், அரண்மனைகளும், கட்டிடக் கலை சான்றுகளும் எண்ணற்று காணப்படுகின்றன. இதன் அழகினை காண செல்லும் பார்வையாளர்கள் ஒருபுறம் இருந்தாலும், இன்னொரு புறம் பழமையையும், அதன் வரலாற்றையும் பற்றி தெரிந்துகொள்ள விழைந்து அங்கு செல்பவர்களும் இருக்கிறார்கள். வாருங்கள் நாமும் செல்வோம் இந்தியாவின் மிக முக்கிய வரலாற்று சின்னங்களுள் ஒன்றாகிய அக்ரசென் கி பவோலி.

 அக்ரசென்னா அல்லது உக்ரசென்னா?

அக்ரசென்னா அல்லது உக்ரசென்னா?

விபரம் அறிந்தவர்களின் கருத்துப்படி, இந்த இடம் மன்னர் அக்ரசென்னுக்கு அர்ப்பணிக்கப்பட்டது. இதை அவரே கட்டியதால் அவரின் பெயரே வைக்கப்பட்டுள்ளது. இந்த பெயர் உக்ரசென் என்பதிலிருந்து பெறப்பட்டது என நம்பப்படுகிறது.

PC:Vsvinaykumar2

மகாபாரத காலத்தில் கட்டப்பட்டதா இந்த கட்டிடம்

மகாபாரத காலத்தில் கட்டப்பட்டதா இந்த கட்டிடம்

இந்த இடம் மகாபாரத காலத்தில் கட்டப்பட்டதாகவும் ஒரு கருத்து நிலவுகிறது. இது அந்த காலத்தில் வாழ்ந்த அரசர் அக்ரசென் என்பவரால் கட்டப்பட்டது. ஆனால் இந்த கதையை நிரூபிக்கும் அளவுக்கு எந்த சான்றும் இதுவரை கிடைக்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

PC:Leowikia

அக்ரசன் பவோலியின் வரலாறு

அக்ரசன் பவோலியின் வரலாறு

இந்த அக்ரசென் கட்டிடம் ஏற்கனவே கட்டப்பட்ட ஒரு கிணற்றின்மீது திரும்ப திரும்ப கட்டப்பட்டதாக வரலாற்று அகழ்வாய்வு ஆய்வாளர்கள் தெரிவித்துள்ளனர். அதே சமயம் இது அகர்சென்னின் குடும்ப சந்ததிகளே இதை கட்டியுள்ளனர் அல்லது புதுப்பித்துள்ளனர். தற்போது இருக்கும் இந்த கோட்டையானது 14ம் நூற்றாண்டில் கட்டப்பட்டதாகும். மிக நீண்ட நெடிய வரலாற்றை கொண்டுள்ளது இந்த அக்ரசென் கி பவோலி.

PC:Jaydeep Saha

இது ஒரு பாதுகாக்கப் பட்ட நினைவு சின்னம்

இது ஒரு பாதுகாக்கப் பட்ட நினைவு சின்னம்

அக்ரசென் கி பவோலி எனும் இந்த இடம் ஒரு வரலாற்று சிறப்பு மிக்க கிணறு இருக்கும் கட்டிடக் கலை யில் சிறந்து விளங்கும் ஒரு கோட்டை வடிவத்தை ஒத்த இடம். அதே நேரத்தில் இது கிணறு மட்டுமல்ல பல நூற்றாண்டுகள் சிறப்பு வாய்ந்த ஒரு பழமையானதாக இந்திய அகழ்வாய்வு துறையால் அறி விக்கப்பட்ட ஒரு சிறப்பான இடமாகும்.

PC:Anupamg

நூற்றியெட்டு படிக்கட்டுகள்

நூற்றியெட்டு படிக்கட்டுகள்

அகழ்வாய்வின் அதிசயம் என அழைக்கப்படும் இந்த இடம், மூன்று கதைகளைக் கொண்டது. அனைத்துமே அமானுஷ்யம் நிறைந்தது. மேலும் இந்த கிணறு 108 படிக்கட்டுகளைக் கொண்டதாகும். அமானுஷ்ய கதைகள் நிறைந்த இந்த இடம் தற்போது பிரபலமான சுற்றுலாத் தளமாகவும் விளங்குகிறது.

PC:Anupamg

நீரை பார்த்தால் மரணம் நிச்சயம்

நீரை பார்த்தால் மரணம் நிச்சயம்

இந்த கிணற்றில் இருக்கும் நீர் அவ்வளவு எளிதாக யாருக்கும் தெரிவதில்லை. ஆனால் முயற்சி செய்து பார்க்கவேண்டாம். இந்த நீரை யாரும் பார்த்தாலே அன்றிரவே தற்கொலை செய்து கொள்வார்கள். ஆமாம் இப்படித்தான் நம்பிக் கொண்டிருக்கிறார்கள் இந்த இடத்துக்கு வருபவர்கள். சில சமயங்களில் இந்த இடத்துக்கு வந்துவிட்டு செல்பவர்கள் கொல்லப்படுகிறார்கள் என்ற தகவலும் வெளியாகிறது. ஆனால் இப்போது இந்த கிணற்றில் நீர் இல்லை. இந்த கிணற்றில் விழுந்து தற்கொலை செய்ததாகவும் எந்த வழக்கும் இல்லை. ஆனால் வதந்திகள் எல்லா ரூபங்களிலும் திரிகின்றன.

PC:Aayush Agarwal

பேய்களின் ராஜாங்கம்

பேய்களின் ராஜாங்கம்

ஜப்பானில் கல்யாண ராமன் எனும் படத்தில் பேய்கள் ஒரு பங்களாவில் ஆடிப் பாடி குதூகலிக்கும் படியான ஒரு காட்சி இடம் பெற்று இருக் கும். இந்த மாதி ரி யான ஒரு கதையும் இந்த இடத்தைப் பற்றி பரப்பப்படுகிறது.

இந்த கோட்டையில் பகலில் வௌவால்களும், பறவைகளும் சுற்றித் திரியும். அதே நேரம் இரவில் பேய்கள் உலாவுவதாக நம்பிக்கை நிலவுகிறது. இங்கு அமானுஷ்ய சத்தங்களும், இருட்டு அறையில் சரமாரியான குறியீடுகளும் நிகழும். அடடே.. இதுதான் பேய் வருவதற்கான அறிகுறியாச்சே.

PC: Varun Shiv Kapur

சினிமா காரர்கள் பேய்க்கு அஞ்சுவதில்லை

சினிமா காரர்கள் பேய்க்கு அஞ்சுவதில்லை

வித்தியாசமான தனித் தன்மை நிறைந்த இந்த கட்டுமானம் பார்ப்பதற்கு மிக அழ காக இரு க்கும் என் பதால் நிறைய பேர் இங்கு வருகை தந்து செல் கின்றனர். இது பாலிவுட் சினிமாக்களில் வரும் ஒரு இடமாகவே இருக்கிறது. பிகே எனும் படத்தில் இந்த இடத்தை தெளிவா க காண முடியும்.

PC:Kuntal Guharaja

Read more about: travel india delhi
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
We use cookies to ensure that we give you the best experience on our website. This includes cookies from third party social media websites and ad networks. Such third party cookies may track your use on Nativeplanet sites for better rendering. Our partners use cookies to ensure we show you advertising that is relevant to you. If you continue without changing your settings, we'll assume that you are happy to receive all cookies on Nativeplanet website. However, you can change your cookie settings at any time. Learn more