Search
  • Follow NativePlanet
Share
» »நீங்க சென்னையில இருக்கீங்களா?அப்போ இதை கண்டிப்பா படியுங்க...

நீங்க சென்னையில இருக்கீங்களா?அப்போ இதை கண்டிப்பா படியுங்க...

சென்னைவாசியா நீங்கள்?.தினமும் காலையில் போக்குவரத்து நெரிசலை நொந்துகொண்டே அலுவலகம் சென்று மேலதிகாரியின் குடைச்சலை பொறுத்துக்கொண்டு வேலை செய்து வீடு திரும்பும் நம்மைப் போன்றவர்களுக்கு கிடைத்த வரப்பிரசாதம் தான் வாரஇறுதி விடுமுறை. சனி, ஞாயிறுகிழமைகள் மட்டும் இல்லையென்றால் பலபேருக்கு பைத்தியமே பிடித்துவிடும்.

வார விடுமுறைகளில் இழுத்துப் போர்த்திக்கொண்டு மதியம் வரை தூங்குவது சுகமாக இருந்தாலும் உண்மையில் அது சோம்பலை அதிகரிக்கத்தான் செய்யும். அப்படியில்லாமல் சனி, ஞாயிற்றுக்கிழமைகளில் குடும்பத்துடனோ அல்லது நண்பர்களுடனோ இயற்கை வனப்பு மிக்க இடங்களுக்கு செல்வது உடலுக்கு ஆரோக்கியத்தையும் மனதுக்கு புத்துணர்ச்சியையும் அளிக்கும். இரைச்சல் இல்லாமல் பசுமை சூழ்ந்த மலைகளில் பயணிப்பதும், கடற்கரை மணலில் குழந்தைகளுடன் விளையாடுவதும் வாழ்க்கையை இனிமையானதாக மாற்றும்.

இப்படி இனிமையாக வார விடுமுறையை கொண்டாட சென்னைக்கு அருகில் இருக்கும் மூன்று சிறந்த சுற்றுலாத்தலங்கள் பற்றிய பயனுள்ள பயண தகவல்களை தெரிந்துகொள்வோம் வாருங்கள்.

ஏலகிரி :

ஏலகிரி :

சென்னையில் இருந்து 228 கி.மீ தொலைவில் நான்கு மணிநேர பயணத்தில் சென்றடையக்கூடிய அற்புதமான மலை வாசஸ்த்தளம் தான் ஏலகிரி ஆகும். வேலூர் மாவட்டத்தில் வாணியம்பாடி நகரை அடுத்து அமைந்திருக்கும் ஏலகிரி சாகச விரும்பிகளுக்கும், தனிமை பிரியர்களுக்கும் ஏற்ற இடமாகும். ஊட்டி, கொடைக்கானல் அளவுக்கு இங்கே சுற்றிப்பார்க்க இடங்கள் இல்லையென்றாலும் வார விடுமுறையை அனுபவித்து கொண்டாட ஏலகிரி நல்லதொரு இடமாகும்.

L.vivian.richard

ஏலகிரி :

ஏலகிரி :

கடல்மட்டத்தில் இருந்து 1,110மீ உயரத்தில் இருக்கும் ஏலகிரி சமீப காலமாக சாகச விளையாட்டுகளுக்கு பெயர்போன இடமாக பிரபலமாகி வருகிறது. சுற்றுலாவை ஊக்குவிக்கும் பொருட்டு அரசால் 'பாராகிளைடிங்' எனப்படும் மலைமுகட்டில் இருந்து பாராசூட் உதவியுடன் பறக்கும் சாகச விளையாட்டும், 'ராக் கிளைம்பிங்' எனப்படும் ஆபத்தான பாறை மீது ஏறும் விளையாட்டும் நடத்தப்படுகிறது.

Coolsangamithiran

ஏலகிரி :

ஏலகிரி :

அதேபோன்று 'டிரெக்கிங்' எனப்படும் மலையேற்றம் செய்யவும் ஏராளமான சாகசபிரியர்கள் ஏலகிரி மலைக்கு வருவதை வழக்கமாக கொண்டிருக்கின்றனர். குறிப்பாக இங்கிருக்கும் சுவாமி மலை ட்ரெக்கிங் செய்ய ஏற்ற இடமாக சொல்லப்படுகிறது.

மங்களம் என்ற அடிவார கிராமத்தில் துவங்கி அடர்த்தியான காடுகளின் ஊடாக செல்லும் மூன்று கி.மீ மலையேற்ற பாதை வழியாக சுவாமி மலையின் உச்சியை அடைவது சவாலானதாக காரியமாகும். சுவாமி மலை தவிர ஜாவடி மலை மற்றும் பழமதி மலையும் டிரெக்கிங் செல்ல ஏற்ற இடங்களாகும்.

L.vivian.richard

ஏலகிரி :

ஏலகிரி :

ஏலகிரி சுற்றுலாத்தலங்கள் :
புங்கனூர் செயற்கை ஏரி மற்றும் அதனை ஒட்டி இருக்கும் பூங்கா, ஏலகிரியில் இருந்து சிறிது தொலைவில் இருக்கும் ஜலகம்பாறை ஏரி, சுவாமி மலை ஆகியவை
ஏலகிரியில் இருக்கும் முக்கியமான சுற்றுலாத்தலங்கள் ஆகும்.

இவை தவிர ஒவ்வொரு ஆண்டும் மே மாதத்தின் முடிவில் 'ஏலகிரி கோடை விழா' கொண்டாடப்படுகிறது.இவ்விழாவில் மலர் கண்காட்சி, நாய்கள் கண்காட்சி மற்றும் கலை நிகழ்ச்சிகள் நடத்தப்படுகின்றன.

Sayowais

ஏலகிரி :

ஏலகிரி :

ஏலகிரியை எப்படி அடைவது ?

சென்னையில் இருந்து அரக்கோணம், ஆம்பூர், வாணியம்பாடி வழியாக ஏலகிரியை வந்தடையலாம். பெங்களுருவில் இருப்பவர்கள் ஓசூர், கிரிஷ்ணகிரி வழியாக ஏலகிரிக்கு வரலாம். இங்கிருக்கும் ஹோட்டல்கள் பற்றிய விவரங்களை தமிழ் பயண வழிகாட்டியில் தெரிந்துகொள்ளுங்கள்.

ashwinkumar

பாண்டிச்சேரி :

பாண்டிச்சேரி :

நண்பர்களுடன் வார விடுமுறையை கொண்டாட சென்னைக்கு அருகில் இருக்கும் அட்டகாசமான இடமென்றால் அது பாண்டிச்சேரி தான். ECR Road எனப்படும் கிழக்கு கடற்கரை சாலை தான்.

சென்னையில் இருந்து வங்கக்கடலை ஒட்டியபடியே செல்லும் இந்த கடற்கரை சாலையில் 155கி.மீ தொலைவில் மூன்று மணிநேர பயணத்தில் பாண்டிச்சேரியை அடையலாம்.

பாண்டிச்சேரி :

பாண்டிச்சேரி :

பிரஞ்சு காலணியகமாக இருந்ததால் இன்றும் பாண்டிச்சேரியின் வீதிகளில் பிரஞ்சுகால தாக்கத்தை நாம் காண முடியும். நேர்த்தியான, சுத்தமான வீதிகள், கொள்ளை அழகான கடற்கரைகள், ஆன்மீக ஸ்தலங்கள் என ஒரு முழுமையான சுற்றுலாத்தலத்துக்கு உரிய அனைத்து அமசங்களும் பாண்டிச்சேரியில் இருக்கின்றன.

பாண்டிச்சேரி :

பாண்டிச்சேரி :

பாண்டிச்சேரியின் பிராதன சுற்றுலா ஈர்ப்பாக இருப்பது ப்ரோமநெட் பீச் எனப்படும் பாண்டிச்சேரி கடற்கரை ஆகும். காந்தி சிலையில் ஆரம்பித்து துப்ளெக்ஸ் சிலை வரையிலான 1.2 நீளமுடையது இக்கடற்கரை.

இந்த கடற்கரைக்கு அருகில் தான் பாண்டிச்சேரி தலைமை செயலகம், புகழ்பெற்ற பிரஞ்சு கால தங்கும் விடுதியானப்ரோமநெட் ஹோட்டல், 24மணி நேரமும் இயங்கும் லே கபே போன்ற இடங்கள் இருக்கின்றன. கடல் அரிப்பை தடுப்பதற்காக கடற்கரையில் பாறைகள் போடப்பட்டிருப்பதால் இங்கே நாம் கடலில் குளிக்க முடியாது.

பாண்டிச்சேரி :

பாண்டிச்சேரி :

ப்ரோம்நெட் கடற்கரைக்கு அருகில் இருக்கும் இன்னுமொரு முக்கியமான இடம் பிரஞ்சு துணை தூதரகம் ஆகும்.

அச்சு அசலான பிரஞ்சு கட்டிடமான இதன் மஞ்சள் நிறம் சுற்றுலாப்பயணிகள் கவர்ந்திழுக்கிறது. 'அயன்' திரைப்படத்தில் வரும் 'விழி மூடி யோசித்தால்' பாடல் படமாக்கப்பட்ட இந்த கட்டிடத்தின் முன்பு நின்று புகைப்படம் எடுக்க மறந்துடாதீங்க.

பாண்டிச்சேரி :

பாண்டிச்சேரி :

ப்ரமநெட் கடற்கரையில் இருக்கும் மகாத்மா காந்தி சிலை.

Flickr

பாண்டிச்சேரி :

பாண்டிச்சேரி :

பாண்டிச்சேரி கடற்கரைக்கு அருகில் இருக்கும் போர் நினைவகம். முதலாம் உலகப்போரில் உயிரிழந்த பிரஞ்சு வீரர்களின் நினைவாக கட்டப்பட்டிருக்கிறது இந்த இடம்.

பாண்டிச்சேரி :

பாண்டிச்சேரி :

பாண்டிச்சேரியில் இருக்கும் புகழ்பெற்ற சுற்றுலாத்தலங்களில் முக்கியமானது ஆரோவில்லே ஆகும். உலகில் சமாதானத்தையும், சமத்துவத்தையும் போதிக்கும் நோக்கோடு நிர்மாணிக்கப்பட்ட இந்நகரில் 56 நாடுகளை சேர்ந்த மக்கள் ஒன்றாக வசிக்கின்றனர்.

இந்த ஆரோவில்லே கிராமத்தின் நடுவே மாத்ரிமந்திர் என்னும் தியான மண்டபம் இருக்கிறது. நம் வாழ்கையில் இதுபோன்ற ஒரு கட்டிடத்தை பார்த்திருக்கவே முடியாது என்று சொல்லும் வகையில் இது அமைந்திருக்கிறது.

மாத்ரிமந்திரின் உட்புறத்தில் அமர்ந்து எவ்வித இடையூறும் இன்றி தியானத்தில் ஈடுபடலாம்.

பாண்டிச்சேரி :

பாண்டிச்சேரி :

ஆரோவில்லே கிராமத்தை ஒட்டியே ஆரோ பீச் எனபப்டும் அழகிய கடற்கரை ஒன்றும் அமைந்திருக்கிறது.

பாண்டிச்சேரி :

பாண்டிச்சேரி :

பேரடைஸ் பீச் பாண்டிச்சேரியில் இளைஞர்களை கவர்ந்திழுக்கும் இடங்களில் முதன்மையானது. குட்டித்தீவு என்ற சிறிய மணல் திட்டில் அமைந்திருக்கும் இந்த கடற்கரை நண்பர்களுடன் கூடி கொண்டாட அற்புதமான இடமாகும்.

இந்த கடற்கரையில் ஒரு உணவகம் ஒன்றும் இருக்கிறது. ஆனால் வெளியில் கிடைப்பதை காட்டிலும் இங்கே உணவுகள் இருமடங்கு விலைக்கு விற்கப்படுகின்றன.

பாண்டிச்சேரி :

பாண்டிச்சேரி :

பாண்டிச்சேரியில் இருக்கும் ஹோட்டல்களில் சலுகை விலையில் தங்கும் அறைகளை முன்பதிவு செய்திட இங்கே கிளிக்குங்கள்.

ஏற்காடு :

ஏற்காடு :

சென்னையிலிருந்து 360கி.மீ தொலைவில் சேலம் மாவட்டத்தில் சேர்வராயன் மலைத்தொடரில் அமைந்திருக்கிறது ஏற்காடு என்னும் அற்புதமான மலைவாசஸ்தலம்.

'தென்னிந்தியாவின் ஆபரணம்' என்ற சிறப்புப்பெயருடன் விளிக்கப்படும் ஏற்காட்டில் சுற்றிப்பார்க்க பல அற்புதமான இடங்கள் இருக்கின்றன. சமீப காலமாக ஏற்காடு ட்ரெக்கிங் எனப்படும் மலையேற்றம் செய்வதற்கான இடமாக பிரபலமாகி வருகிறது.

subharnab Majumdar

ஏற்காடு :

ஏற்காடு :

இயற்கை எழில் சூழ்ந்த ஏற்காட்டில் முக்கிய சுற்றுலா ஈர்ப்பாக இருப்பது இருபத்தியேழு மீட்டர் உயரமுள்ள கிளியூர் அருவி தான். ஏற்காட்டில் இருந்து 2.5 கி.மீ தொலைவில் அமைந்திருக்கும் இந்த அருவியில் கோடைகாலத்திலும் நீர் இருந்துகொண்டே இருக்கிறது. மூலிகைகள் நிறைந்த மலையிலிருந்து உற்பத்தியாகி வரும் இந்த கிளியூர் அருவிக்கு வர தென்மேற்கு பருவ மழைக்கு பிந்தைய காலம் உகந்ததாக சொல்லப்படுகிறது.

Saivin Muthu

ஏற்காடு :

ஏற்காடு :

'எமரால்டு ஏரி' ஏற்காட்டின் மற்றுமொரு முக்கிய சுற்றுலா ஈர்ப்பாகும். இந்த ஏரியின் அருகிலேயே அற்புதமாக பராமரிக்கப்படும் பூங்கா ஒன்றும், மான்கள் காட்சியகம் ஒன்றும் இருக்கிறது. இந்த ஏரியில் பெடளிங் படகு, துடுப்பு படகு ஆகியவை இருக்கின்றன.

படகு சவாரி செய்வதற்கான கட்டணம் சீசன் காலங்களில் சற்று அதிகம் என்றாலும் இங்கு கிடைக்கும் சந்தோசத்தை ஒப்பிடும்போது அது ஒன்றுமே இல்லை எனலாம்.

Anand

ஏற்காடு :

ஏற்காடு :

ஏலகிரியை போன்றே ஏற்காட்டிலும் சுற்றுலாவை ஊக்குவிக்கும் முயற்சியாக ஒவ்வொரு வருடமும் மே மாதத்தில் ஏற்காட்டில் கோடை விழா கொண்டாடப்படுகிறது. ஏழு நாட்கள் நடைபெறும் இந்த விழாவில் மலர் கண்காட்சி, நாய்கள் கண்காட்சி, படகு போட்டிகள், நாட்டுப்புற கலைநிகழ்ச்சிகள் போன்றவை நடத்தப்படுகின்றன.

Thangaraj Kumaravel

ஏற்காடு :

ஏற்காடு :

ஏற்காடு நகரை எப்படி சென்றடைவது, அங்கிருக்கும் தங்கும் விடுதிகளின் விவரங்களை தமிழ் பயண வழிகாட்டியில் தெரிந்துகொள்ளுங்கள்.

More News

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+