Search
  • Follow NativePlanet
Share
» »சென்னையிலிருந்து மைசூர் மற்றும் குடகிற்கு 5 நாட்கள் சுற்றுலா - வெறும் ரூ. 8500 போதும்!

சென்னையிலிருந்து மைசூர் மற்றும் குடகிற்கு 5 நாட்கள் சுற்றுலா - வெறும் ரூ. 8500 போதும்!

சென்னையின் பரபரப்பான அன்றாட வாழ்க்கையில் இருந்து ஒரு சின்ன விடுப்பு எடுத்து சூப்பரான இடங்களுக்கு சுற்றுலா சென்று வரலாம். வெறும் ரூ. 8500 கொடுத்தால் போதும், வசீகரமும் வளமான பாரம்பரியமும் நிறைந்த மைசூருக்கும், தென்னிந்தியாவின் 'ஸ்காட்லாந்து' என்றழைக்கப்படும் அழகிய குடகு மலைக்கும் சூப்பரா ஒரு சுற்றுலா சென்று வரலாம் தெரியுமா?

IRCTCயின் மலிவான சுற்றுலா

இந்திய ரயில்வே கேட்டரிங் மற்றும் டூரிசம் கார்ப்பரேஷன் (IRCTC) மலிவான விலையில் பயணிகளுக்கு நிறைவான சுற்றுலாவை வழங்கும் நோக்கில் அவ்வப்போது பேக்கேஜ்களை அறிமுகம் செய்கிறது. அந்த வகையில் இப்போது சென்னையிலிருந்து மைசூர் மற்றும் குடகிற்கு 4 இரவு 5 பகல் கொண்ட டூர் பேக்கேஜ் ஒன்றை அறிமுகம் செய்துள்ளது. இந்த பேக்கேஜின் கீழ் நீங்கள் எந்தெந்த இடங்களை சுற்றிப் பார்ப்பீர்கள், கட்டணம், புக்கிங் மற்றும் இதர விவரங்கள் கீழே!

coorg1

ஒரே சுற்றுலாவில் மைசூரும், குடகும்

கர்நாடகாவின் பாரம்பரிய தலைநகரான மைசூரையும், தென்னிந்தியாவின் ஸ்காட்லாந்து என்று செல்லமாக அழைக்கப்படும் குடகு மலையையும் நீங்கள் ஒரு சேர இந்த டூரில் சுற்றிப்பார்த்துவிடலாம். மைசூரின் வளமான பாரம்பரியம், அற்புதமான அரண்மனைகள், அழகாக அமைக்கப்பட்ட தோட்டங்கள், பிரம்மாண்டமான கட்டிடங்களையும், குடகு மலையின் மூடுபனி மலைகள், பசுமையான காடுகள், ஏக்கர் கணக்கில் தேயிலை மற்றும் காபி தோட்டங்கள், ஆரஞ்சு தோப்புகளையும் ஒரே பேக்கேஜில் சுற்றிப் பார்க்க IRCTC வழங்கும் அசத்தல் பேக்கேஜின் விவரங்கள் இதோ.

சென்னை to மைசூர், குடகு டூர் பேக்கேஜ் விவரங்கள்

நாள் 1: முதல் நாளன்று சென்னை சென்ட்ரல் ரயில் நிலையத்திலிருந்து 21:15 மணிக்குப் புறப்படும் ரயில் எண். 16021, சென்னை - மைசூர் எக்ஸ்பிரஸில் உங்களது பயணம் தொடங்குகிறது.

நாள் 2: 06.50 மணிக்கு மைசூரை வந்தடைந்தவுடன் அங்கிருந்து குடகு நோக்கி பயணம் செய்வீர்கள். மடிகேரியை அடைந்தவுடன் ஹோட்டலில் சற்று களைப்பாறிய பின்னர், அபே நீர்வீழ்ச்சி, மடிகேரி கோட்டை, ஓம்காரேஸ்வரா கோயில், ராஜாவின் சமாதி மற்றும் ராஜாவின் இருக்கை ஆகியவற்றை சுற்றிப்பார்த்துவிட்டு இரவு அங்கேயே தங்குவீர்கள்.

நாள் 3: மூன்றாம் நாள் காலையில் காவேரி நதியின் பிறப்பிடமான தலைக்காவேரி மற்றும் துபாரே யானைகள் முகாமை பார்த்துவிட்டு ஷாப்பிங்கிற்கு அழைத்து செல்லப் படுவீர்கள்.

நாள் 4: காலை உணவிற்கு பின்னர், மைசூர் நோக்கிய உங்களது பயணம் தொடங்கும். மைசூர் சென்றடைந்ததும், சாமுண்டி மலையையும், உலகப் புகழ்பெற்ற மைசூர் அரண்மனையையும், தோட்டங்களையும் பார்த்து ரசிப்பீர்கள். பின்னர், ரயில் எண். 16022 சென்னை எக்ஸ்பிரஸில் சென்னை கிளம்புவீர்கள்.

நாள் 5: 07.00 மணிக்கு சென்னை சென்ட்ரல் வந்தடைந்த பின்னர் உங்களது பயணம் இனிதே நிறைவுறும்.

mysore

இந்த பேக்கேஜில் வரக்கூடிய சலுகைகள்

1. ஸ்லீப்பர் வகுப்பில் ரயில் பயணம்

2. குடகில் இரண்டு இரவு தங்கக்கூடிய ஹோட்டல் வசதி

3. தனிப்பட்ட வாகனம் மூலம் சாலை போக்குவரத்து

4. பயணத்திட்டத்தின்படி அனைத்து பார்வையிடல்

5. பயண காப்பீடு

6. ஜிஎஸ்டி

மேற்கூறியவை தவிர்த்து, நுழைவுச் சீட்டுகள் இதர பிற சேவைகளுக்கு நீங்கள் கட்டணம் செலுத்த வேண்டும்

பேக்கேஜின் கட்டணங்கள்

ஸ்டாண்டர்ட் (Standard) பிரிவின் கீழ், தனி நபருக்கு ரூ. 21250, டபுள் ஷேரிங்கில் நபருக்கு ரூ. 11700, ட்ரிபிள் ஷேரிங்கில் நபருக்கு ரூ. 8500, 5-11 வயதுள்ள குழந்தைக்கு படுக்கை வேண்டுமென்றால் ரூ. 4450, படுக்கை வேண்டாமென்றால் ரூ. 3030 கட்டணமாக செலுத்த வேண்டும். இந்த டூர் பேக்கேஜ் ஜூலை 20 ஆம் தேதி துவங்கவுள்ளதால் நீங்கள் முந்திக் கொள்வது அவசியம்.

எப்படி புக்கிங் செய்வது?

நீங்கள் இந்த டூர் பேக்கேஜில் மைசூர் மற்றும் குடகை சுற்றிப்பார்க்க விரும்புகிறீர்கள் என்றால், IRCTCயின் அதிகாரப்பூர்வ இணையத்தளமான https://www.irctctourism.com/pacakage_description?packageCode=SMR061 ஐ பார்வையிட்டு புக் செய்து கொள்ளவும். அல்லது 9003140680 / 8287931972 என்ற தொலைபேசி எண்களை தொடர்பு கொள்ளவும்.

More News

    Read more about: irctc irctc tour packages
    Notifications
    Settings
    Clear Notifications
    Notifications
    Use the toggle to switch on notifications
    • Block for 8 hours
    • Block for 12 hours
    • Block for 24 hours
    • Don't block
    Gender
    Select your Gender
    • Male
    • Female
    • Others
    Age
    Select your Age Range
    • Under 18
    • 18 to 25
    • 26 to 35
    • 36 to 45
    • 45 to 55
    • 55+