» »தமிழகம் மட்டுமல்ல இந்தியாவே கொண்டாடும் "உத்தம வில்லன்" ராவணன்...

தமிழகம் மட்டுமல்ல இந்தியாவே கொண்டாடும் "உத்தம வில்லன்" ராவணன்...

Written By: Sabarish

சீதையை ராவணன் கவர்ந்து சென்றதால், மீட்டுவரவேண்டிய கட்டாயத்தில் ராமர் அனுமன் உதவியுடன் இலங்கைக்கு சென்றார். போரில் ராவணன் கொல்லப்பட்டு, சீதை மீட்கப்பட்டாள். கற்பில் சந்தேகமுற்ற ராமன் கண்முன் தீயில் இறங்கினாள் சீதை. சீதையை தன் விரலாலும் சீண்டவில்லை ராவணன் என்பதெல்லாம் ஒருபுறமிருக்க, ராவணன் எங்கள் தெய்வம் என கிளம்பி அவருக்கு கோவில்கட்டி கும்பாபிஷேகமெல்லாம் நடத்துகின்றனர் இந்தியாவின் ஒரு பகுதி மக்கள். அப்படி, மாபெரும் அரக்கணாக கூறப்படும் ராவணனுக்கு இந்தியாவில் பிரசிதிபெற்ற கோவில்கள் எங்கவெல்லாம் இருக்கு என தெரிந்து கொள்வோம் வாருங்கள்.

அசுரவதம்

அசுரவதம்


முதலில், நம்மில் பலர் ராவணனை எவ்வாறு அறிகிறோம் என பார்த்தால் அரக்கணாகவும், கொடூர மனம் படைத்த மன்னனாகவும் தான். இந்து புராணங்களில் சிறந்த வில்லனாகத் திகழ்ந்த ராவணன் தெய்வமாகப் போற்றப்படுபவர் என்பது குறிப்பிடத்தக்கது. வருடா வருடம், நவராத்திரியின் முடிவில் அசுரனான ராவணனை வதம் செய்து எரிக்கும் வழக்கம் இந்தியாவில் குறிப்பாக வடமாநிலங்களில் உண்டு.

Pete Birkinshaw

கடவுளாக ராவணன்

கடவுளாக ராவணன்


ராமரைக் கடவுளாக வணங்கி, ராவணன் பற்றி அசுரத்தனமானக் கதைகளைக் கேட்டு வளர்ந்த நாம், அசுர தேவன் ராவணனுக்காகவே கட்டப்பட்ட கோவில்களை பற்றி அறிந்திருக்கவில்லை. இந்தியாவில், ஆந்திரா, உத்திரபிரதேசம், மத்திய பிரதேசம் உள்ளிட்ட மாநிலங்களில் இன்றும் ராவணன் கடவுளாக வணங்கப்படுகிறார்.

Kotikalavani

காக்கிநாடா - ஆந்திர பிரதேசம்

காக்கிநாடா - ஆந்திர பிரதேசம்


ஆந்திராவில் உள்ள காக்கிநாடா சிறப்புபெற்ற பகுதி இல்லை என்றாலும், இங்கே அமைந்துள்ள ராவணன் கோவில் பிரசிதிபெற்றதாக உள்ளது. ராவணனே இங்கு கோவில் கட்ட இடம் தேர்வு செய்ததாகவும் ஓர் தொன்நம்பிக்கை உள்ளது. ராவணன் சிவபெருமானின் தீவிர பக்தர், அரவது மூர்த்தியைச் சுற்றித் தனக்காகவே ராவணன் கட்டிக் கொண்டது இந்தக் கோவில். வங்கக் கடலுக்கு அருகே அமைந்துள்ள இந்தக் கோவிலின் அழகைக் காணவே ஆண்டுதோறும் சுற்றுலாப் பயணிகள் படையெடுத்து வருவர்.

AntanO

எப்படிச் செல்வது ?

எப்படிச் செல்வது ?


சென்னை சென்ட்ரல் ரயில் நிலையத்தில் இருந்து சந்தகட்சி சூப்பர் ஃபாஸ்ட் எக்ஸ்பிரஸ், அசன்சல் எக்ஸ்பிரஸ், சலிமார் வார இரயில், விசாகப்பட்டிணம் ரயில் என பல இரயில் சேவைகள் உள்ளன. காக்கிநாடா இரயில் நிலையத்தில் இருந்து பேருந்து அல்லது தனியார் வாகனங்கள் மூலம் ராவணன் கோவிலை எளிதில் அடையலாம்.

Dineshbilla.kumar

கான்பூர் - உத்தர பிரதேசம்

கான்பூர் - உத்தர பிரதேசம்


உத்திரபிரதேச மாநிலம், கான்பூரில் உள்ள ராவணன் கோவில் சிவ சங்கர் என்னும் சிவனின் பக்தரால் கட்டப்பட்டது. நவராத்திரி தினத்தில் மட்டுமே இக்கோவில் திறக்கப்படுகிறது. பிற ராவணன் கோவில்களை ஒப்பிடுகையில் இங்கு மட்டுமே நவராத்திரி கொண்டாடப்படுவது வியப்படையச் செய்கிறது. குறிப்பாக, ராவணனை எரிக்காமல் அவருக்கு சிறப்பு பூஜைகளும் நவராத்திரி தினத்தில் செய்யப்படுகிறது.

Indi Samarajiva

சென்னை - கான்பூர்

சென்னை - கான்பூர்


சென்னையில் இருந்து சென்ட்ரல் - லக்னோ எக்ஸ்பிரஸ், திருவணந்தபுரம்- கோரக்பூர் சூப்பர் ஃபாஸ்ட், எர்ணாகுளம் - பராவுனி ரப்தி சாகர் உள்ளிட்ட இரயில் சேவைகள் உள்ளன. தில்லி, அகமதாபாத், கொல்கத்தா, பெங்களூரு, சென்னை, புனே, மும்பை, சூரட் உள்ளிட்ட பகுதிகளுக்கிடையேயான விமானச் சேவையும் கான்பூரில் உள்ளது.

Nooralammalik1977

பிஸ்ராக் - உத்தர பிரதேசம்

பிஸ்ராக் - உத்தர பிரதேசம்


காசியாபாத்துக்கும், நொய்டாவுக்கும் இடையே அமைந்துள்ளது பிஸ்ராக். தில்லியில் இருந்து 36 கிலோ மீட்டர் பயணித்தால் இதனை அடையலாம். இப்பகுதிக்கு மேலும் பெருமை சேர்க்கும் விசயம் என்னவென்றால் இங்குதான் காவிய உத்தம வில்லனான ராவணன் பிறந்த இடமாகக் கருதப்படுகிறது. இங்கு இதுநாள் வரையில் நவராத்திரியும் கொண்டாடப் பட்டதில்லை, ராவணனை எரிக்கும் வழக்கமும் இல்லை. வருடாவருடம் ராவணனுக்கு பல ஹோம பூஜைகள் வெகு விமர்சையாகக் கொண்டாடப்படுகிறது.

Jonoikobangali

தில்லிக்கு மிக அருகில்

தில்லிக்கு மிக அருகில்


இந்தியாவின் மத்தியான தில்லி விமான நிலையத்தில் இருந்து சுமார் 42 கிலோ மீட்டர் தொலைவில் தான் பிஸ்ராக் அமைந்துள்ளது. மேலும், காசியாபாத், ஃபரிதாபாத், நொய்டா என எளிதில் அடையக் கூடிய சிறப்புத் தலங்களும் இதனைச் சுற்றியே அமைந்துள்ளது.

மண்டசௌர் - மத்திய பிரதேசம்

மண்டசௌர் - மத்திய பிரதேசம்


ராவணனும், மண்டோதரியும் திருமணம் செய்து கொண்ட பகுதியாக மத்திய மிரதேசத்தில் உள்ள மண்டசௌர் கருதப்படுகிறது. பரந்து விரிந்து காணப்படும் இந்த திருத்தலத்தில் ராவணன் சன்னதி மட்டுமின்றி பல பெண் தெய்வங்களும் உள்ளது. மேலும், கோவிலில் உள்ள கல்வெட்டுகளில் இந்திய நாகரீகத்தின் அடையாளமான ஹரப்பா நாகரீகம் பற்றியக் கருத்துகள் பொறிக்கப்பட்டிருப்பது கோவிலின் தோற்றம் மிகவும் அதிகம் என்பதைக் குறிக்கும் வகையில் உள்ளது. இதனருகே சேந்தனி கிராமத்தில் குப்தப் பேரரசு காலத்திய மால்வா மன்னர் யசோதர்மன் நிறுவிய வெற்றித் தூண் பிரசிதிபெற்ற சுற்றுலாத் தலமாகும்.

Tropenmuseum

எப்படிச் செல்வது ?

எப்படிச் செல்வது ?


மண்டசௌர் அருகில் உள்ள விமான நிலையம் மஹரானா பிரதாப் விமான நிலையமாகும். அங்கிருந்து சுமார் 164 கிலோ மீட்டர் நிம்பஹெரா, நீமுச், பந்த் பிப்ளியா வழியாக பயணித்தால் மண்டசௌரை அடையலாம். இதனருகே உள்ள சீதா மாதா ரிசர்வ் வனக் காடு தவறவிடக் கூடாத சுற்றுலாத் தலமாகும்.

Northside

விதிஷா - மத்திய பிரதேசம்

விதிஷா - மத்திய பிரதேசம்


போபாலில் இருந்து சுமார் 56 கிலோ மீட்டர் தொலையில் உள்ளது விதிஷா நகரம். பேட்வா ஆற்றின் கரையில் அமைந்துள்ள இது இந்தியாவிலேயே ராவணன் கோவிலுக்கு மிகவும் பெருமைப் பெற்ற தலமாகும். இங்கே, ராவணனின் பெயரைக் கொண்டு ராவணகிராமம் என்ற ஒரு கிராமமும் உள்ளது. ராவணனின் மனைவி மண்டோதரி இந்த விதிஷாவைச் சேர்ந்தவர் என புராணங்களின் வாயிலாக அறியப்படுகிறது.

Prasadbatti

போபால் - விதிஷா

போபால் - விதிஷா


விதிஷாவிற்கு மிக அருகில் உள்ள விமான நிலையம் போபால் ராஜா போஜ் பன்னாட்டு விமான நிலையமாகும். விமான நிலையத்தில் இருந்து 62 கேலா மீட்டர் பேருந்து அல்லது தனியார் வாகனம் மூலம் பயணித்தால் விதிஷாவை அடையலாம். விமான நிலையத்தின் அருகிலேயே போபால் ரயில் நிலையமும் உள்ளது.

மண்டோர் - ராஜஸ்தான்

மண்டோர் - ராஜஸ்தான்


ராஜஸ்தான் மாநிலம், ஜோத்பூர் மாவட்டத்தில் உள்ளது மண்மோர் வட்டம். இங்கே அமைந்துள்ள ராவணனுக்கான திருத்தலத்தை கோவில் என்று சொல்ல முடியாது. இப்பகுதியில் இருக்கும் தேவ பிராமனர்கள் ராவணனின் ரத்த வழி பந்தங்கள் என கூறப்படுகிறது. மற்ற கோவில்கள் போல இங்கும் நவராத்திரிக் கொண்டாடுவதில்லை. இருப்பினும், இங்கு பிண்டம் வைத்து, ராவணனின் ஆன்மா சாந்தி அடைய திதி செய்யப்படுகிறது.

Rohit MDS

ஜோத்பூர் - மண்டோர்

ஜோத்பூர் - மண்டோர்


மண்டோருக்கு மிக அருகில் உள்ள விமான நிலையம் ஜோத்பூரில் உள்ளது. இது வெறும் 12 கிலோ மீட்டர் தொலைவில் உள்ளது. மண்டோரின் அருகிலேயே ரயில்வே நிலையமும் உள்ளது. இங்கிருந்து எளிதில் ராவணன் கோவிலை அடையலாம்.

இப்போதே பெறுங்கள் சிறந்த சலுகைகளைப் பயணங்களிலும், பயண டிப்ஸ்களும், பயணக் கதைகளும் உடனுக்குடன்