Search
 • Follow NativePlanet
Share
» »கங்கோத்ரி சுற்றுலா பயண வழிகாட்டி - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது

கங்கோத்ரி சுற்றுலா பயண வழிகாட்டி - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது

கங்கோத்ரி, உத்தரகண்ட் மாநிலத்தில் உள்ள உத்தராக்ஷி மாவட்டத்தில் அமைந்துள்ள ஒரு பிரபலமான யாத்திரை தலமாகும். இது இமாலயத்தின் எல்லைக்கருகே, கடல் மட்டத்திலிருந்து 3750 மீ உயரத்தில், பாகீரதி ஆற்றின் கரையில் அமைந்துள்ளது. ஆதி சங்கரரால் ஏற்படுத்தபட்ட சார் தாம்', மற்றும் டோ தாம்' ஆகிய புனித யாத்திரைகளில், கங்கோத்ரி முக்கிய இடம் பெறுகிறது. இந்திய இதிகாசங்களின் படி, கங்கா தேவி, பாகீரத அரசரின் வேண்டுகோளிற்கு இணங்க, அவரின் மூததையர்களின் பாவங்களை நீக்கும் பொருட்டு , கங்கை ஆறாக உருமாறியதாக நம்பப்படுகிறது. அவ்வாறு நதியாக மாறும் போது, இவ்வுலகத்தை பிரளயத்தில் இருந்து காப்பாற்ற, சிவன் கங்கையை தனது ஜடாமுடியில் தாங்கிக்கொண்டார். கங்கை அல்லது பாகீரதியின் உற்பத்தி ஸ்தானமாகிய காமுக், கங்கோத்ரியில் இருந்து 19 கி.மீ. தொலவில் உள்ளது. இவ்விடத்தில் கங்கை, பாகீரதி என அழைக்கப்படுகிறாள்.

பாகீரதி ஆற்றின் மேலே உள்ள அதன் நீர்ப்பிடிப்பு பகுதியில், அடர்ந்த காடுகள் இருக்கின்றன. இப்பகுதியில் பனி மலைகள், பனியாறுகள், உயரமான முகடுகள், ஆழமான, மற்றும் குறுகிய பள்ளத்தாக்குகள், மற்றும், செங்குத்தான பாறைகள் உள்ளன. கங்கோத்ரி, கடல் மட்டத்திலிருந்து 1800மீ முதல் 7083 மீ உயரத்தில் உள்ளது. சுற்றுலா பயணிகள் இங்கு, ஆல்ப்ஸ் ஊசியிலை காடுகள், ஆல்ப்ஸ் புதர்கள், மற்றும் பச்சை புல்வெளிகளை பார்க்க முடியும். இந்த காடு, இந்தியா-சீனா எல்லை வரை பரவியுள்ளது. இது கங்கோத்ரி தேசிய பூங்கா என அழைக்கப்படுகின்றது.

கங்கோத்ரி சுற்றுலா பயண வழிகாட்டி - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது

இந்து மத நம்பிக்கைகளில், கங்கோத்ரி ஒரு முக்கிய இடம் வகிக்கின்றது. இங்கே பழமையான இந்து மத கோவில்கள் ஏராளமாக உள்ளன. கங்கோத்ரி கோவில், இப்பகுதியில் உள்ள ஒரு முக்கியமான யாத்திரை மையமாகும். இதன் மீது அமர்ந்துதான் பாகிரத மஹராஜா தியானம் செய்தார் என நம்பப்படுகிறது. சுற்றுலா பயணிகள், கங்கோத்ரி கோவிலின் அருகே அமைந்துள்ள, கவுரி புஷ்கரினி', மற்றும் சூர்யா புஷ்கரினி' ஆகியவற்றில் புனித நீராடலாம். கங்கோத்ரியில், பயணிகள் ட்ரெக்கிங்கை முழுமையாக அனுபவிக்கலாம். இங்கே உள்ள, பாண்டவ குகையை, பயணிகள் ஒரு சிறிய மலைப்பாதை மூலம் அடையலாம்.

இந்த குகையில்தான், மஹாபாரத பஞ்ச பாண்டவர்கள், தங்களது கைலாய யாத்திரையின் போது தியானம் புரிந்தார்கள் என நம்பப்படுகிறது. மேலும், சுற்றுலா பயணிகள் கடல் மட்டத்திலிருந்து 3000 மீ உயரத்தில் உள்ள தயார புக்யல்' வரை ட்ரெக்கிங் சென்று, அங்கே உள்ள அழகான புல்வெளியை கண்டு ரசிக்கலாம். இப்புல்வெளியிலிருந்து, கம்பீரமான இமயமலையை தரிசிப்பது ஒரு இனிய அனுபவமாகும். இப்புல்வெளியை அடைய இரண்டு மலைப்பாதைகள் பயன்படுத்தப்படுகின்றன. அவை பார்சு', மற்றும் ரைதல்' கிராமங்களில் இருந்து தொடங்குகின்றன.

புகழ் பெற்ற, ஷெஷாங்க் ஆலயம்', இம்மலைப்பாதையில் தான் உள்ளது. குளிர் காலங்களில் சுற்றுலா பயணிகள், இங்கு நோர்டிக்' மற்றும் ஆல்பைன்' பனிச்சறுக்கு விளையாட்டுகளை நன்றாக விளையாடி மகிழலாம். பனிச்சறுக்கு விளையாடுவதற்கு அருகில் உள்ள, ஆளி, முன்டளி, குஷ் கல்யாண், கேதர் காந்த், டெஹ்ரி கர்வால், பிட்னி புக்யால், மற்றும் சிப்ளா பள்ளத்தாக்கு ஆகியன ஏற்றதாக உள்ளன. சாகசப் பயணம் விரும்பும் பயணிகள், கங்கோத்ரியிலிருந்து காமுக் மற்றும் தபோவனம்' வரை ட்ரெக்கிங் செய்யலாம். கேதார் தால்' கங்கோத்ரியிலிருந்து ஒரு மலைப்பாதை மூலம் இணைக்கப்பட்டுள்ளதால், அப்பாதையிலும் ட்ரெக்கிங் செய்யலாம். அவ்வாறு செல்வதற்கு கங்கோத்ரி ஒரு அடிப்படை முகாமாக பயன்படுகிறது.

கங்கோத்ரியை சுற்றியுள்ள, கங்கை பனியாறு, மானேரி, கேதார் தால், நந்தவனம், தபோவனம், விஸ்வநாதர் ஆலயம், டோடி டால், டெஹ்ரி, குதிதி தேவி ஆலயம், நஷிகேதா டால், மற்றும் கங்கானி, போன்றவை பிரபலமான சுற்றுலா பகுதிகளாக விளங்குகின்றன. கங்கோத்ரியை விமானம், ரயில், மற்றும் சாலை மார்கமாக எளிதாக அணுகலாம். விமானம் மூலம் செல்ல விரும்பும் சுற்றுலா பயணிகள் டேராடூனில் அமைந்துள்ள ஜாலி கிராண்ட்' விமான நிலையம் வரை விமானத்தில் சென்று, அங்கிருந்து டாக்சிகள் மூலம் கங்கோத்ரியை அடையலாம். டேராடூனிற்கு, புது தில்லி இந்திரா காந்தி சர்வதேச விமான நிலையத்தில் இருந்து ஏராளமான விமானங்கள் இயக்கப்படுகின்றன. ரிஷிகேஷ் ரயில் நிலையத்தில் இருந்து, ரயில் மூலமும் கங்கோத்ரியை அணுகலாம். அருகில் உள்ள நகரங்களில் இருந்து கங்கோத்ரிக்கு நிறைய பேருந்துகள் இயக்கப்படுகின்றன.

  Read more about: gangotri
  உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
  Enable
  x
  Notification Settings X
  Time Settings
  Done
  Clear Notification X
  Do you want to clear all the notifications from your inbox?
  Settings X