Search
  • Follow NativePlanet
Share
» »காங்க்டாக் - அற்புதங்கள் கொட்டிக்கிடக்குது இங்கே!!!

காங்க்டாக் - அற்புதங்கள் கொட்டிக்கிடக்குது இங்கே!!!

By

சிக்கிம் மாநிலத்தின் தலைநகரமாகவும், அம்மாநிலத்தின் மிகப்பெரிய மலைப்பிரதேசமாகவும் திகழ்ந்து வரும் காங்க்டாக், ஷிவாலிக் மலைத்தொடர்களில் அமைந்துள்ளது.

இந்த மலைநகரத்தின் ஒரு சரிவில் கவர்னர் மாளிகையும் மறுபுறச்சரிவில் புராதன அரண்மனையும் கம்பீரமாக வீற்றுள்ளன. ரோரோ சு மற்றும் ராணிகோலா எனும் ஓடைகள் முறையே கிழக்கும் மேற்கும் காங்க்டாக் நகரத்தை சூழ்ந்துள்ளன.

நகரத்துக்கு தெற்கே ஓடும் ராணிபால் ஆற்றில் இந்த இரு ஓடைகளும் கலக்கின்றன. மேலும் கடல் மட்டத்திலிருந்து 1678 மீட்டர் உயரத்தில் அமைந்துள்ள காங்க்டாக் நகரத்தின் மேற்குப்புறத்திலிருந்து உலகின் 3-வது உயரமான மலைச்சிகரமான கஞ்சன் ஜுங்கா சிகரத்தை பரிபூரணமாக பார்த்து ரசிக்கலாம்.

காங்க்டாக் ஹோட்டல் டீல்கள்

சுற்றுலாத் தலங்கள்

சுற்றுலாத் தலங்கள்

சிக்கிம் மாநிலத்தின் தலைநகராக விளங்குவதால் காங்க்டாக் நகரம் பல்வேறு சுவாரசியமான சுற்றுலா அம்சங்களை உள்ளடக்கியுள்ளது. என்ச்சே மடாலயம், நாதுல்லா பாஸ் (கணவாய்ப்பாதை), நம்கியால் இன்ஸ்டிடியூட் ஆஃப் திபெத்தாலஜி, டோ ட்ருல் சோர்ட்டென், கணேஷ் தோக், ஹனுமான் தோக், ஒயிட் வால், தி ரிட்ஜ் கார்டன், ஹிமாலயன் ஜூ பார்க், எம்.ஜி. மார்க் மற்றும் லால் பஜார் மற்றும் ரும்தெக் மடாலயம் ஆகியவை இவற்றில் குறிப்பிடத்தக்கவை.

காங்க்டாக்கின் சுற்றுலாத் தலங்கள்

படம் : timeflicks

ட்சோங்க்மோ ஏரி

ட்சோங்க்மோ ஏரி

காங்க்டாக் நகரிலிருந்து 40 கி.மீ தொலைவில் அமைந்துள்ள ட்சோங்க்மோ ஏரி, சாங்கு ஏரி என்ற பெயரிலும் அழைக்கப்படுகிறது. கடல் மட்டத்திலிருந்து 3780 மீட்டர் உயரத்தில் உள்ள இந்த அழகிய ஏரி பனிமலை நீரால் நிரம்பி காட்சியளிக்கிறது. இங்கிருந்து சீன எல்லைப்பகுதி 5 கி.மீ தூரத்திலேயே அமைந்திருப்பது குறிப்பிடத்தக்கது.

படம் : Ravinder Singh Gill

காட்டெருமை சவாரி

காட்டெருமை சவாரி

ட்சோங்க்மோ ஏரி பகுதியில் சுற்றுலாப் பயணிகள் காட்டெருமை சவாரியில் ஈடுபட்டு மகிழலாம்.

படம் : shankar s.

சவாரி

சவாரி

ட்சோங்க்மோ ஏரி பகுதியில் காட்டெருமை சவாரி செல்லும் சுற்றுலாப் பயணி.

படம் : Abhishek Kumar

நாது லா பாஸ்

நாது லா பாஸ்

காங்க்டாக் நகருக்கு கிழக்கே 54 கி.மீ தூரத்தில் அமைந்துள்ள நாது லா பாஸ் எனப்படும் இந்த கணவாய்ப்பாதை சிக்கிம் பகுதியையும் சீனாவின் திபெத் பிரதேசத்தையும் இணைக்கிறது. புதன்கிழமை, வியாழக்கிழமை, சனிக்கிழமை மற்றும் ஞாயிற்றுக்கிழமை ஆகிய நாட்களில் காங்க்டாக் பகுதியிலிருந்து விசேஷ அனுமதி பெற்று இந்தியக்குடிமக்கள் மட்டுமே இக்கணவாய் பகுதிக்கு விஜயம் செய்யலாம். இந்தப் பாதை 1962-ஆம் ஆண்டில் இந்திய சீனப்போருக்கு பின்னர் அடைக்கப்பட்டது. அதன் பிறகு 2006-ஆம் ஆண்டில் கையெழுத்திடப்பட்ட நல்லுறவு ஒப்பந்தத்துக்கு பின்னரே இப்பாதை மீண்டும் திறக்கப்பட்டது.

படம் : Ambuj.Saxena

ரும்தேக் மடாலயம்

ரும்தேக் மடாலயம்

காங்க்டாக்கிலிருந்து 24 கி.மீ தொலைவில் ரும்தேக் மடாலயம் அமைந்துள்ளது. இந்த மடத்திற்கு பின்னால் புத்த மத படிப்பை கற்பிக்க கர்ம நலந்தா கல்வி நிறுவனம் செயல்பட்டு வருகிறது. இங்கு உலகின் பல்வேறு நாடுகளிலிருந்து மாணவர்கள் வந்து பயில்கிறார்கள்.

படம் : Vikramjit Kakati

பிரார்த்தனை சக்கரங்கள்

பிரார்த்தனை சக்கரங்கள்

ரும்தேக் மடாலயத்தில் உள்ள பிரார்த்தனை சக்கரங்கள். திபெத்திய புத்த மரபுப்படி இந்த சக்கரங்களை சுழற்றினால் வாழ்வில் அற்புதங்கள் நிகழும் என நம்பப்படுகிறது.

படம் : Indrajit Das

தீஸ்தா நதி

தீஸ்தா நதி

சிக்கிம் மாநிலத்தின் நீளமான நதியான தீஸ்தா நதி, வெள்ளை நீர் சவாரி செய்ய மிகவும் பொருத்தமான இடம். ரத்தோங் பனியாற்றிலிருந்து உற்பத்தியாகும் இந்த நதி எண்ணற்ற பாறைகளையும், குன்றுகளையும் தாண்டி வங்கதேசத்தில் பிரம்மபுத்திரா ஆற்றுடன் கலக்கிறது. தீஸ்தா நதி கடந்து செல்லும் வழியெங்கும் அழகிய வெப்பமண்டல இலையுதிர் மரங்களையும், அல்ஃபைன் தாவரங்களையும் காணலாம்.

படம் : Abhijit Kar Gupta

வெள்ளை நீர் சவாரி

வெள்ளை நீர் சவாரி

தீஸ்தா நதியில் வெள்ளை நீர் சவாரி செல்லும் சுற்றுலாப் பயணிகள்.

படம் : Spurkait

பாபா ஹர்பஜன் சிங் மெமோரியல் கோயில்

பாபா ஹர்பஜன் சிங் மெமோரியல் கோயில்

ஜெலேப்லா பாஸ் மற்றும் நாது லா பாஸ் ஆகிய மலைப்பாதைகளுக்கிடையே இந்த பாபா ஹர்பஜன் சிங் மெமோரியல் கோயில் அமைந்துள்ளது. பஞ்சாப் ரெஜிமெண்டில் சிப்பாயாக பணிபுரிந்த பாபா ஹர்பஜன் சிங் என்பவரது நினைவாக எழுப்பப்பட்டிருக்கும் இக்கோயிலின் பின்னணியில் ஒரு சுவாரசியமான கதை ஒன்றும் சொல்லப்படுகிறது. அதாவது, பஞ்சாப் 23 வது ரெஜிமெண்டில் பணிபுரிந்த இவர் 35 வருடங்களுக்கு முன்னர் பொதி சுமக்கும் கழுதைகளை ஓட்டிசென்றபோது கிழக்கு சிக்கிம் பகுதியில் காணாமல் போய்விட்டதாகவும் பின்னர் மூன்று நாட்களுக்கு பிறகு அவரது ஆவியே அவரது சடலத்தை கண்டுபிடிக்க வழிகாட்டியதாகவும் சொல்லப்படுகிறது. சகவீரரின் கனவில் தோன்றி தனக்கு ஒரு கோயிலும் கட்டுமாறு அவர் கேட்டுக்கொண்டதாக இந்தக்கதை முடிகிறது. இப்படியாக இந்த பாபா ஹர்பஜன் சிங் மெமோரியல் கோயில் உருவானதாக சொல்லப்படுகிறது.

படம் : Indrajit Das

ரோப்வே

ரோப்வே

ரோப்வே எனப்படும் இந்த கயிற்றுக்கார் பாதை காங்க்டாக் பகுதியின் இயற்கை எழிலை நன்றாக பார்த்து ரசிக்க உதவும் முக்கியமான சுற்றுலா அம்சமாக பிரசித்தி பெற்றிருக்கிறது. தேவ்ராலி மார்க்கெட் பகுதியிலிருந்து இந்த கயிற்றுக்காரில் பயணிகள் ஏறிக்கொள்ளலாம். பெரியவர்களுக்கு 50 ரூபாயும் குழந்தைகளுக்கு 30 ரூபாயும் கட்டணமாக இதில் வசூலிக்கப்படுகிறது.

படம் : Kalyan Neelamraju

பன் ஜாக்ரீ அருவி

பன் ஜாக்ரீ அருவி

காங்க்டாக்கில் சுற்றுலாப் பயணிகளால் அதிகமாக பார்க்கப்படும் இடமாக பன் ஜாக்ரீ அருவி விளங்குகிறது. இந்த அருவி பகுதியைச் சுற்றிலும் அழகிய படிக்கிணறுகள் மற்றும் சிறிய அருவிகளும் காணப்படுகின்றன.

படம் : Indrajit Das

டோ ட்ருல் சோர்ட்டென்

டோ ட்ருல் சோர்ட்டென்

காங்க்டாக் நகரில் அமைந்துள்ள டோ ட்ருல் சோர்ட்டென் எனப்படும் இந்த பௌத்த ஸ்தூபியின் வளாகத்தை சுற்றி ‘ஓம் மனே பத்மே ஹம்' எனும் வாசகங்கள் பொறிக்கப்பட்ட 108 பிரார்த்தனை சக்கரங்களும் அமைக்கப்பட்டிருக்கின்றன.

படம் : Indrajit Das

டாஷி வியூ பாயிண்ட்

டாஷி வியூ பாயிண்ட்

காங்க்டாக் நகரத்துக்கு அருகில் 8 கி.மீ தூரத்தில் டாஷி வியூ பாயிண்ட் எனும் ரம்மியமான மலைக்காட்சி தளம் அமைந்திருக்கிறது. கஞ்சன் ஜங்கா சிகரத்தின் மெய்சிலிர்க்க வைக்கும் கம்பீரத்தை இங்கிருந்து தரிசிக்கலாம்.

படம் : Abhishek Kumar

தேயிலைத் தோட்டங்கள்

தேயிலைத் தோட்டங்கள்

காங்க்டாக்கிலிருந்து டார்ஜிலிங் செல்லும் வழியிலுள்ள தேயிலைத் தோட்டங்கள்.

படம் : Sandip Bhattacharya

டைரக்டரேட் ஆஃப் ஹேண்டிகிராஃப்ட்ஸ் அண்ட் ஹேண்ட்லூம்ஸ்

டைரக்டரேட் ஆஃப் ஹேண்டிகிராஃப்ட்ஸ் அண்ட் ஹேண்ட்லூம்ஸ்

டைரக்டரேட் ஆஃப் ஹேண்டிகிராஃப்ட்ஸ் அண்ட் ஹேண்ட்லூம்ஸ் எனும் இந்த அரசாங்க கைவினை மற்றும் நெசவுத்துறை மையம், 1957-ஆம் ஆண்டில் பாரம்பரியமான கைவினைப்பொருள் தயாரிப்புக்கலை மற்றும் கைத்தறி தொழிலை ஊக்குவிப்பதற்காக உருவாக்கப்பட்டிருக்கிறது. இங்கு பயணிகள் கையால் நெய்யப்பட்ட போர்வைகள், சால்வைகள், தரை விரிப்புகள், மர கைவினைப்பொருட்கள் மற்றும் பல கலைப்பொருட்களை வாங்கிச் செல்லலாம்.

படம் : Abhishek Kumar

காங்க்டாக் சிறை

காங்க்டாக் சிறை

காங்க்டாக்கிலிருந்து ஹனுமான் டோக் எனும் இடத்துக்கு செல்லும் வழியில் உள்ள மலைப்பாதையிலிருந்து தொலை தூரத்தில் தெரியும் காங்க்டாக் சிறை வளாகத்தின் தோற்றம்.

படம் : Giridhar Appaji Nag Y

ஸ்டெப் ஃபார்மிங்

ஸ்டெப் ஃபார்மிங்

ஸ்டெப் ஃபார்மிங் என்பது மலைப்பாங்கான இடங்களில் மேற்கொள்ளப்படும் ஒருவகை வேளாண் முறை.

படம் : soumyajit pramanick

வார் மெமோரியல்

வார் மெமோரியல்

நாது லா பாஸில் உள்ள வார் மெமோரியல்.

படம் : Abhishek Kumar

நுழைவாயில்

நுழைவாயில்

நாது லா பாஸ் செல்வதற்கான நுழைவாயில்.

படம் : Abhishek Kumar

பாலம்

பாலம்

தீஸ்தா நதிக்கு குறுக்கே கட்டப்பட்டுள்ள பாலம்.

படம் : sudeep1106

சிக்கிம் சட்டமன்ற கட்டடம்

சிக்கிம் சட்டமன்ற கட்டடம்

காங்க்டாக்கில் உள்ள சிக்கிம் சட்டமன்ற கட்டடம்.

படம் : Abhishek Kumar

தண்ணீர் பாட்டில் வேண்டுதல்

தண்ணீர் பாட்டில் வேண்டுதல்

பாபா ஹர்பஜன் சிங் மெமோரியல் கோயில் வரும் பக்தர்கள் கோயிலில் நுழையும் போது தண்ணீர் பாட்டில்களை வைத்துவிட்டு திரும்பப் போகும்போது எடுத்துச் செல்வது வழக்கம். இப்படி செய்வதால் நல்லது நடக்கும் என்று அப்பகுதியில் ஒரு நம்பிக்கை நிலவுகிறது.

படம் : shankar s

திபெத்திய குடியிருப்பு

திபெத்திய குடியிருப்பு

ட்சோங்க்மோ ஏரி பகுதியில் உள்ள திபெத்திய குடியிருப்பு.

படம் : shankar s.

அழகிய சிற்பம்

அழகிய சிற்பம்

பன் ஜாக்ரீ அருவி பகுதியில் காணப்படும் அழகிய சிற்பம்.

படம் : sudeep1106

மேஃபேர் ஹோட்டல்

மேஃபேர் ஹோட்டல்

காங்க்டாக்கின் பிரபல ஹோட்டல்களில் ஒன்றான மேஃபேர் ஹோட்டலில் உள்ள சிரிக்கும் புத்தர் சிலை.

படம் : Shivali Chopra

எங்கு தங்கலாம்?

எங்கு தங்கலாம்?

காங்க்டாக் ஹோட்டல் டீல்கள்

படம் : V.v

காங்க்டாக்கை எப்போது மற்றும் எப்படி அடைவது?

காங்க்டாக்கை எப்போது மற்றும் எப்படி அடைவது?

எப்படி அடைவது?

எப்போது பயணிக்கலாம்?

படம் : IndianEye

Read more about: hill stations
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X