Search
  • Follow NativePlanet
Share
» »கேரளாவில் இருக்கும் மிகவும் பசுமையான சுற்றுலாத்தலம் எது தெரியுமா ?

கேரளாவில் இருக்கும் மிகவும் பசுமையான சுற்றுலாத்தலம் எது தெரியுமா ?

By Naveen

இந்தியாவிலேயே மிகவும் பசுமையான மாநிலங்களில் ஒன்றாக திகழ்வது கேரளா ஆகும். மேற்குத்தொடர்ச்சி மலையில் உற்பத்தியாகும் ஆறுகள் கேரளத்தில் எப்போதும் பசுமை தவழ காரணமாயிருக்கின்றன. இதன் காரணமாகவே இந்தியாவில் ராஜஸ்தானுக்கு அடுத்தபடியாக அதிகளவிலான சுற்றுலாப்பயணிகள் வருகை தரும் மாநிலமாக கேரளா இருக்கிறது.

கேரளத்தில் இன்னும் அதிகம் வெளியுலகத்திற்கு தெரியாத மிகவும் பசுமை இடம் தான் கவி ஆகும். தீண்டப்படாத மாசற்ற இயற்கை அழகை ரசிக்க விரும்புகிறவர்கள் கட்டாயம் செல்ல வேண்டிய கவியை பற்றி கொஞ்சம் தெரிந்துகொள்ளலாம் வாருங்கள்.

கவி - எங்கே அமைந்திருக்கிறது?

கவி - எங்கே அமைந்திருக்கிறது?

கவி, பந்தனம்திட்டா மாவட்டத்தில் தமிழக கேரள எல்லையான குமிளியில் இருந்து 40கி.மீ தொலைவில் அமைந்திருக்கிறது.

குமிளியில் இருந்து வண்டிப்பெரியாரை வந்தடைந்து அங்கிருந்து 27.5கி.மீ தொலைவிலிருக்கும் கவியை சென்றடையலாம்.

-Reji

நுழைவுக்கட்டணம்:

நுழைவுக்கட்டணம்:

கவி பெரியார் புலிகள் சரணாலயத்திற்கு உட்பட்ட வனப்பகுதியில் அமைந்திருக்கிறது. இதனை வண்டிபெரியாரில் இருந்து கார் மூலமே வந்தடைய முடியும்.

இதற்கு நுழைவுக்கட்டணமாக ஒருவருக்கு ₹25யும், வாகனத்திற்கு ₹50 வசூலிக்கப்படுகிறது.

-Reji

சூழல் சுற்றுலா:

சூழல் சுற்றுலா:

இயற்கைக்கு தீங்குவிளைவிக்காத வகையில் செல்லும் சுற்றுலாவான 'eco-tourism' எனப்படும் சூழல் சுற்றுலா கவியில் நடைமுறையில் உள்ளது.

கேரள வனத்துறையால் கவியில் சூழல் சுற்றுலா ஏற்பாடு செய்யப்படுகிறது. சுற்றுலாப்பயணிகளை கவரும் விதமாக பல்வேறு அம்சங்கள் இங்கே இருக்கின்றன.

-Reji

சூழல் சுற்றுலா - அம்சங்கள்:

சூழல் சுற்றுலா - அம்சங்கள்:

ஜீப் சவாரி:

கவியில் பரவிக்கிடக்கும் இயற்கை புதையலை ரசிக்க நிச்சயம் ஜீப் சவாரி செய்ய வேண்டும். ஜீப் சவாரியின் போது அரிய விலங்குகளான நீலகிரி தார் மான்கள், சிங்கவால் குரங்குகள் மற்றும் இங்கிருக்கும் 260 வகையான உயிரினங்களில் சிலவற்றை கண்டு மகிழலாம்.

kfdcecotourism

சூழல் சுற்றுலா - அம்சங்கள்:

சூழல் சுற்றுலா - அம்சங்கள்:

படகு சவாரி:

கவியில் பாய்ந்தோடும் தெள்ளத்தெளிவான நன்னீர் ஓடையான கொச்சுபம்பாவில் படகு சவாரி செய்து மகிழலாம். இங்கே படகு சவாரி செய்யும் போது 'லைப் ஜாக்கெட்' அணியவேண்டியது கட்டாயமாகும்.

மோட்டார் படகு சவாரி மட்டுமல்லாது துடுப்பு படகில் சவாரி செய்யும் வசதியும் இங்கே உள்ளது.

சூழல் சுற்றுலா - அம்சங்கள் கட்டண விவரங்கள்:

சூழல் சுற்றுலா - அம்சங்கள் கட்டண விவரங்கள்:

கவியில் ஜீப் சவாரி செய்திட ஒருவருக்கு ₹1250, சிறுவர்களுக்கு ₹675 கட்டணமாக வசூலிக்கப்படுகிறது. மதிய உணவு, இதர நுழைவுக்கட்டணங்கள் போன்ற அனைத்தும் இதனுள் அடங்கிவிடுகின்றன.

கொச்சுபம்பையில் படகு சவாரி செய்ய இரண்டு நபர்களுக்கு ₹300 கட்டணம் செலுத்தவேண்டும்.

சூழல் சுற்றுலா - முன்பதிவு :

சூழல் சுற்றுலா - முன்பதிவு :

கவிக்கு சுற்றுலா செல்லும் முன்பாக கேரள வனத்துறையை தொடர்புகொண்டு கவியில் தங்குவதற்கான காட்டேஜுகள், ஜீப் சவாரி, படகு பயணம் போன்றவற்றை முன்பதிவு செய்துகொள்வது நல்லது.

இதன்மூலம் தேவையில்லாத தாமதத்தை தவிர்க்க இயலும்.

-Reji

கோபர் மரங்கள்:

கோபர் மரங்கள்:

பைபிளில் குறிப்பிடப்படும் கோபர் மரங்கள் இந்தியாவிலேயே கவி வனப்பகுதியில் மட்டுமே இருப்பதாக தாவரவியல் ஆய்வாளர்களால் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

பேரழிவில் இருந்து பூமியில் உள்ள ஜீவராசிகளை எல்லாம் கோபர் மரத்தினால் செய்யப்பட்ட படகில் ஏற்றி நோவா என்பவர் காப்பாற்றியதாக பைபிளில் உள்ளது குறிப்பிடத்தக்கது.

Muneef Hameed

இதர சுற்றுலா அம்சங்கள்:

இதர சுற்றுலா அம்சங்கள்:

கவியில் மலையேற்றம் செய்யலாம், உயரமான மரங்களின் மேல் அமைக்கப்பட்டுள்ள குடில்களில் தங்கலாம், மிளகு மற்றும் ஏலக்காய் தோட்டங்களுக்கு சென்று அவை உற்பத்தி செய்யப்படும் முறை பற்றி அறிந்துகொள்ளலாம், சபரிமலையை காணலாம், ஆயுர்வேத மசாஜ் செய்துகொள்ளலாம்.

-Reji

இதர சுற்றுலா அம்சங்கள்:

இதர சுற்றுலா அம்சங்கள்:

வார விடுமுறையில் சுற்றுலா வர அற்புதமான இடமாகும் இந்த கவி. பெங்களூருவில் இருந்து 546 கி.மீ தொலைவிலும், சென்னையில் இருந்து 680 கி.மீ தொலைவிலும் கவி அமைந்திருக்கிறது.

அடுத்தவாரம் வரும் மூன்று நாள் உகாதி விடுமுறைக்கு சுற்றுலா போகலாம் என்ற விருப்பமிருந்தால் நிச்சயம் கவிக்கு சென்றுவாருங்கள்.

-Reji

கவி !!

கவி !!

கவியின் பேரழகை கண்முன் கொண்டுவரும் புகைப்படங்கள்.

-Reji

கவி !!

கவி !!

கவியின் பேரழகை கண்முன் கொண்டுவரும் புகைப்படங்கள்.

-Reji

கவி !!

கவி !!

கவியின் பேரழகை கண்முன் கொண்டுவரும் புகைப்படங்கள்.

Muneef Hameed

கவி !!

கவி !!

கவியின் பேரழகை கண்முன் கொண்டுவரும் புகைப்படங்கள்.

Kerala Tourism

கவி !!

கவி !!

கவியின் பேரழகை கண்முன் கொண்டுவரும் புகைப்படங்கள்.

-Reji

More News

Read more about: kerala eco tourism nature
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+