» »கல்விக்காக அமைந்த புதன் கோவில்!... காசிக்கு நிகரான புண்ணியஸ்தலம்..!

கல்விக்காக அமைந்த புதன் கோவில்!... காசிக்கு நிகரான புண்ணியஸ்தலம்..!

Written By: Udhaya

கல்வி, செல்வம், வீரம் இம்மூன்றும் சிறந்த கொடையாக பார்க்கப்படும் என்றாலும் கல்வியில்லை செல்வமும், வீரமும் பயனற்றதாகவே இருக்கும். என்னதான் சொல்லுங்க படிச்சவன் பேச்ச ஊரே நம்பும் அப்படிங்குற பதத்த நிறைய இடங்கள்ல கேட்டிருப்போம். தம்பி நல்லா படிச்ச புள்ள மாதிரி டீசன்ட்ஆ இருக்குப்பானு சொல்லி, என்ன சொன்னாலும் நம்புவாங்க.. அதுக்காக இல்லையென்றாலும், உண்மையில் கல்வி ஒருவரது வாழ்வில் முன்னேற்றமடைய செய்ய, இருளிலிருந்து வெளிச்சமான பகுதிக்கு இட்டுச் செல்ல, தெளிவான அறிவைப் பெற, நிதானத்தை வழங்கக்கூடிய ஒரு சிறப்பான அம்சமாகும்.

உங்கள் மகன் படிப்பில் நாட்டமின்றி இருக்கிறாரா?.. உங்கள் மகளுக்கு கல்வி என்றாலே கசக்கிறதா?.. உங்கள் பிள்ளைகளின் எதிர்காலத்தை நினைத்து மிகவும் துன்பப்படுகிறீர்களா?.. கவலையை விடுங்கள் கல்வி பெருக புதனை வழிபடுங்கள்...

இக்கோவிலின் மூலவராக சுவேதாரண்யேஸ்வரரும் - பிரம்ம வித்யாம்பிகையும் வீற்றிருக்க புதபகவான் மக்களுக்கு காட்சியளிக்கின்றார்.

திருவெண்காடு சுவேதாரண்யேசுவரர்

திருவெண்காடு சுவேதாரண்யேசுவரர்

இறைவனிடம் வரம் வாங்கிய மருத்துவன் ஒருவன் தேவர்களுக்கு தீங்கிழைக்கவே, கோபமுற்ற சிவபெருமான் தனது நந்தியை அனுப்பி அவனை அளிக்கச் சொன்னாராம். இறைவனிடம் வரமாகப் பெற்ற சூலத்தாலே நந்தியை தாக்கிய மருத்துவன் ஒன்பது துவாரங்களை ஏற்படுத்தி நந்தியை தாக்கியுள்ளான் என்கிறது தல வரலாறு. அம்மருத்துவனை அகோர மூர்த்தியாய் வந்த சிவன் அழித்தார் என நம்பப்படுகிறது.

PC: Rsmn

பாடல்

பாடல்

திருவெண்காடு சுவேதாரண்யேசுவரர் கோயில் சமய குரவர்களாகிய சம்பந்தர், அப்பர், சுந்தரர், மாணிக்கவாசகர் ஆகிய நால்வராலும் பாடல் பெற்ற சிவாலயமாகும்.

தேவாரம் பாடல்

தேவாரம் பாடல்

இது நாகப்பட்டினம் மாவட்டம் சீர்காழி வட்டத்தில் அமைந்துள்ள தேவாரப் பாடல் பெற்ற தலமாகும். இது புதனுக்கு உரிய தலமாக கருதப்படுகிறது.

தொன்நம்பிக்கை

தொன்நம்பிக்கை

இந்திரன், வெள்ளை யானை வழிபட்ட தலமென்பது தொன்நம்பிக்கை. தேவாரப் பாடல் பெற்ற தலங்களில் காவிரி வடகரைத் தலங்களில் அமைந்துள்ள 11வது சிவத்தலமாகும். இங்கு சிவன் சுயம்பு மூர்த்தியாக அருள்பாலிக்கிறார்.

சிறப்பு

சிறப்பு

புதன் பரிகாரத் தலங்களில் முதன்மைத் தலமாகக் கூறப்படும் தலம்.

கல்வி மேம்பட போகவேண்டிய கோவில்

கல்வி மேம்பட போகவேண்டிய கோவில்


சிவபெருமானது ஆனந்தத் தாண்டவத்தின் போது அவரது முக்கண்களிலிருந்தும் சிந்திய நீர்த்துளிகளே அக்னி, சூரிய, சந்திர தீர்த்தங்களாக அமைந்துள்ளன.

மாணவர்கள் செல்லவேண்டிய கோவில்

மாணவர்கள் செல்லவேண்டிய கோவில்

படிப்பில் மனம் ஈடுபடாத மாணவ மாணவிகள் இத்திருத்தல புதனைத் தரிசனம் செய்வது பரிகாரமாகக் கூறப்படுகின்றது.

கோவிலின் தொன்மை

கோவிலின் தொன்மை

1000 - 2000 ஆண்டுகள் பழமையான கோவில் இதுவாகும்

பெயர்க்காரணம்

பெயர்க்காரணம்

இந்த பகுதி துவக்கத்தில் வெள்ளை மலர்கள் சூழ்ந்த காடுகளாக இருந்துள்ளது. இதனால்தான் இப்பகுதிக்கு திருவெண்காடு என்ற பெயர் வந்துள்ளது.

 புதனுக்கு உகந்தது

புதனுக்கு உகந்தது


புதபகவானுக்கு புதன்கிழமை உகந்த நாள். பச்சை வண்ணம் உகந்த நிறம். பாசிப்பயறு உகந்த தாண்யம். நவரத்தினங்களில் பச்சைக்கல் உகந்தது. திருவெண்காடு வந்து செல்ல முடியாதவர்கள், வீட்டில் இருந்தவாறு, புதன்கிழமையன்று, உபவாசம் இருந்து புதபகவானை வழிபட்டால் வெற்றி நிச்சயம்.

எப்படி செல்வது?

எப்படி செல்வது?

சென்னையிலிருந்து ஏறக்குறைய 250 கிமீ தொலைவில் நாகப்பட்டினம் செல்லும் வழியில் அமைந்துள்ளது இத்தலம்.

திருச்சி, தஞ்சாவூர், கும்பகோணம் உள்ளிட்டப் பகுதிகளிலிருந்து பேருந்து வசதிகள் உள்ளன.

மயிலாடுதுறையிலிருந்து 30 நிமிடத்திலும், நாகப்பட்டினம், சிதம்பரத்திலிருந்து சுமார் 1 மணி நேரத்திலும் எளிதாக இத்தலத்தை அடையலாம்.

Read more about: travel, temple, பயணம்