Search
  • Follow NativePlanet
Share
» »6 மாதம் வெள்ளை, 6 மாதம் கருப்பு என நிறத்தை மாற்றிக்கொள்ளும் அதிசய விநாயகர்

6 மாதம் வெள்ளை, 6 மாதம் கருப்பு என நிறத்தை மாற்றிக்கொள்ளும் அதிசய விநாயகர்

6 மாதம் வெள்ளை, 6 மாதம் கருப்பு – நிறம் மாறும் விநாயகர்

தக்கலை அருகே கேரளபுரம் என்ற ஊர் உள்ளது. இங்கு தான் அந்த அதிசய விநாயகர் அவதரித்துள்ளார். அவருக்காக இங்கு அழகிய ஒரு கோயில் எழுப்பப்பட்டுள்ளது.

இந்த கோயிலின் அதிசயத்தைப் பற்றியும், அதன் மகிமைகளைப் பற்றியும் இந்த பதிவில் காணலாம்.

அதிசயம் என்ன

அதிசயம் என்ன

இங்குள்ள பிள்ளையார் சிலை ஆறுமாதம் வெள்ளையாகவும், ஆறு மாதம் கறுப்பாகவும் காட்சி தருகிறது.

நிறம் மாறும் அரச மரம்

நிறம் மாறும் அரச மரம்


இங்குள்ள விநாயகரின் நிறத்தைப் பொறுத்து இந்த பிள்ளையார் அமர்ந்துள்ள அரசமரமும் நிறம்மாறுகிறதாம்.

கிணற்றில் அதிசயம்

கிணற்றில் அதிசயம்


இங்கு ஒரு கிணறு உள்ளது. இந்த கிணற்றில் நடக்கும் அதிசயத்தை இங்கு வரும் பக்தர்கள் விநாயகரின் விளையாட்டு என்று கொள்கின்றனர்.

 பிரதிஷ்டை செய்தது யார் தெரியுமா?

பிரதிஷ்டை செய்தது யார் தெரியுமா?

திருவிதாங்கூர் மன்னர் வீரகேரள வர்மா இந்த சிலையை குமரி மாவட்டத்திலுள்ள தக்கலை எனும் ஊரில் அமைந்துள்ள அரசமரத்தடியில் பிரதிஷ்டை செய்தார்.

 வளர்ந்துவிட்ட விநாயகர்

வளர்ந்துவிட்ட விநாயகர்

தற்போது ஒன்றரை அடி உயரம் உள்ள விநாயகர் ஆரம்பத்தில் அரை அடி உயரம் இருந்ததாக கூறப்படுகிறது.

 நிறம் மாறும் விநாயகர்

நிறம் மாறும் விநாயகர்

இவரை நிறம் மாறும் விநாயகர் என்றே அங்குள்ளவர்கள் அழைக்கின்றனர்.

 வெள்ளை நிறம்

வெள்ளை நிறம்

தை முதல் ஆனி வரை உள்ள காலத்தில் வெள்ளை நிறமாக காட்சியளிக்கிறார் இந்த விநாயகர்.

 கறுப்பு நிறம்

கறுப்பு நிறம்

ஆடி முதல் மார்கழி வரை உள்ள காலத்தில் கறுப்பு நிறமாகவும் காட்சியளிக்கிறார் இந்த விநாயகர்.

தலை வெளுக்கும்

தலை வெளுக்கும்

ஆடி மாதம் தொடங்கும்போது பிள்ளையாரின் தலை உச்சியிலிருந்து கொஞ்சம் கொஞ்சமாக வெளுக்கத் தொடங்கும்.

 கறுக்கும் பாதம்

கறுக்கும் பாதம்

இதுவே தை மாதம் தொடங்குகையில் மெல்ல மெல்ல பாதம் கறுக்கத் தொடங்குகிறது.

 அப்படியே இருக்கும் வெள்ளை நிறம்

அப்படியே இருக்கும் வெள்ளை நிறம்

ஆறாம் மாதம் வரை வெள்ளை நிறம் அப்படியே இருக்கும்.

 புவியியலாளர்கள் மெய்சிலிர்த்த கதை

புவியியலாளர்கள் மெய்சிலிர்த்த கதை

இந்த சிலையை ஆய்வு செய்த அறிவியலாளர்கள் இந்த நிறம் மாறும் விநாயகரின் பின் உள்ள மர்மத்தை கண்டறிந்தனர்.

 நிறம் மாறும் அதிசயத்தின் அறிவியல்

நிறம் மாறும் அதிசயத்தின் அறிவியல்

இந்த சிலை உருவாக்கப்பட்ட கல் சந்திரகாந்தம் என்னும் அபூர்வ வகை பாறையிலிருந்து பெறப்பட்டது என்பதை போட்டு உடைத்தனர்.

Read more about: travel temple
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X