» »உலகையே திரும்பி பார்க்கச்செய்த கின்னஸ் பசுவால் சுற்றுலாத் தளமான கிராமம்

உலகையே திரும்பி பார்க்கச்செய்த கின்னஸ் பசுவால் சுற்றுலாத் தளமான கிராமம்

Posted By: Udhaya

உலகம் முழுக்க சுற்றுலா என்பது, ஒரு குறிப்பிட்ட இடத்தின் பொழுதுபோக்கு, சிறப்பு அம்சங்களை அடிப்படையாகக் கொண்டுதான் இயங்கும். கன்னியாகுமரியில் திருவள்ளுவர் சிலை, சென்னைனா மெரினா, திருவனந்தபுரத்தில் ஒரு கோவா, மதுரை மீனாட்சியம்மன் கோயில்னு ஒவ்வொரு சிறப்பு அந்தந்த ஊருக்கு இருக்கும். அப்படி கேரளாவில் ஒரு கிராமம் உலக சுற்றுலாப் பிரியர்களையே திரும்பி பார்க்க வச்சிருக்கு. அதற்கு காரணம் ஒரு பசு.

எங்குள்ளது

எங்குள்ளது

கேரளமாநிலம் கோழிக்கோடு அருகே அமைந்துள்ளது அத்தோலி எனும் கிராமம். இது கின்னஸ் சாதனையில் இடம்பெற்றுள்ளது.

 மாணிக்கம்

மாணிக்கம்

மாணிக்கம் எனும் பசு உலக சாதனை புத்தகமான கின்னஸில் இடம்பிடித்துள்ளது. கின்னஸில் இடம்பிடிக்குற அளவுக்கு அப்படி என்ன ஸ்பெஷல்னு நினைக்குறீங்களா. அந்த பசு ஆட்டுக்குட்டிய விட உருவத்துல சின்னது.

Official Website

சுற்றுலாத் தளமான கிராமம்

சுற்றுலாத் தளமான கிராமம்

கொஞ்ச காலத்துக்கு முன்னாடி வரைக்கும் இங்கு வாழ்பவர்களைத் தவிர யாருக்கும் இந்த ஊர் பற்றி அவ்வளவு பிரமாதமாக தெரியாது. அதன் கின்னஸ் சாதனைக்கு காரணம்தான் அந்த ஆட்டுக்குட்டியை விட உருவில் சிறிய பசு. அதுதான் இந்த ஊரைச் சுற்றுலாத் தளமாக மாற்றியுள்ளது.

Official Website

 உலக அரங்கில் இடம்பெற்ற ஊர்

உலக அரங்கில் இடம்பெற்ற ஊர்

இந்த ஆறு வருடங்களாக உலகின் பல இடங்களிலிருந்து இந்த ஊருக்கு சுற்றுலாப் பயணிகள் வருகின்றனராம். அதுக்கு முழுக்க முழுக்க மாணிக்கம் தான் காரணம் என்கிறார்கள்.

 மாணிக்கம் எனும் உலக சாதனை பசு

மாணிக்கம் எனும் உலக சாதனை பசு

இந்த மாணிக்கத்துக்கு 6 வயது ஆகிறது. பொதுவாகவே நன்கு வளர்ச்சியடைந்த பசுவின் உயரம் 4.7 லிலிருந்து 5 அடி வரை இருக்கும். ஆனால் மாணிக்கமோ 1.75 அடிதான் இருக்கிறது. சராசரி எடை என்பது பசுவில் சாதாரணமாக 313கிலோ ஆகும். ஆனால் மாணிக்கம் 40கிலோ மட்டும்தான்.

உயரத்தில் மூன்றில் ஒரு பங்கும்,. எடையில் எட்டில் ஒரு பங்கும்தான் இருக்கிறது இந்த மாணிக்கம். அதுதான் உலகசாதனை.

காரில் மேயச் செல்லும் மாணிக்கம்

காரில் மேயச் செல்லும் மாணிக்கம்

இந்தியாவிலேயே ஏன் இந்த வேர்ல்ட்லயே காரில் மேய்ச்சல் நிலம் செல்லும் ஒரே ஆள் நம்ம மாணிக்கமாகத்தான் இருப்பாரு. ஆமாங்க.. மாணிக்கம் தினமும் காரில் மேயச் செல்கிறது. ஸாரி ஸாரி.... மாணிக்கத்தை காரில் மேயக்கூட்டிச் செல்கிறார்கள்.

சமூகவலைத்தளங்களில் டிரெண்டிங்கில் மாணிக்கம்

சமூகவலைத்தளங்களில் டிரெண்டிங்கில் மாணிக்கம்

சமூக வலைத்தளங்களான முகநூல், டிவிட்டர் முதலியவற்றில் மாணிக்கத்தின் புகைப்படம் அதிக அளவில் பேசப்படுகிறதாம். கின்னஸ் புத்தகத்தில் இடம்பெற்றதிலிருந்தே ஃபேன்ஸும் அதிகமாகிவிட்டனர் என்கிறார்கள் குடும்பத்தினர்.

 ஆன்மீகச் சுற்றுலா

ஆன்மீகச் சுற்றுலா

ஸ்ரீபகவதியம்மன் கோயில், பட்டுப்புரக்குழி பரதேவதை கோயில், இடுவல்லூர் சிவன் கோயில், மஸ்ஜித் என நிறைய இடங்கள் ஆன்மீகத் தலங்களாகும்.

Unknown

 அருகிலுள்ள சுற்றுலாத் தளங்கள்

அருகிலுள்ள சுற்றுலாத் தளங்கள்


கோரப்புழா ஆறு, காப்பாடு கிராமம், காப்பாடு பீச், வெள்ளரி கோயில், கோழிக்கோடு என எண்ணற்ற சுற்றுலாத் தளங்கள் உள்ளன. இவற்றை எப்படி பார்வையிடலாம் என்பது குறித்த சுற்றுலா வழிகாட்டியைத் தொடர்ந்து பார்க்கலாம் வாருங்கள்.

wiki

கோழிக்கோடு பீச்

கோழிக்கோடு பீச்

உள்ளூர் மக்களால் பெரிதும் விரும்பப்படுவதும். தற்போது அதிகம் பேர் சுற்றுலாவுக்காக வருவதுமான இடமாக கோழிக்கோடு பீச் இருக்கிறது.

பார்ப்பதற்கு கண்ணைக் கவரும் விதமாக அமைந்துள்ள கோழிக்கோடு பீச், மிகவும் பொழுதுபோக்குக்கான ஏற்பாடாக அமைந்துள்ளது.

பல வரலாற்று நிகழ்வுகளுக்கும் சான்றாக விளங்கும் இந்த பீச், மகாத்மா காந்தி, இந்திரா காந்தி உள்ளிட்ட பல தேசியத் தலைவர்களின் காலடித்தடத்தை கொண்டுள்ளது.

Bidhunkrishna

பெரிய அங்காடி எனப்படும் வலியங்காடி

பெரிய அங்காடி எனப்படும் வலியங்காடி


600 வருடங்களாக சிறிய சிறிய கடைகளைக் கொண்டு இயங்கி வந்த கடைத்தெரு அங்காடிதான் இது. இப்போதும் பழமையில் புதுமை கலந்து கேரளாவின் மிகப்பெரிய கடைத்தெருக்களுள் ஒன்றாக இது அமைந்துள்ளது.

இஸ்லாமியர்களும், ஜெய்ன் சமூகத்தினரும், சேட்டுக்களும், மார்வாடிக்களும், தமிழர்கள் சிலரும், தெலுங்கு மொழிக்காரர்களும் இங்கு ஒற்றுமையாக தொழில் செய்கின்றனர்.

Choosetocount

 மானான்சிரா

மானான்சிரா

உணவங்களும், கல்விக்கூடங்களும் அதிகம் இருக்கும் சதுக்கம் இதுவாகும். கேரளத்தின் சாமோதிரியர்கள் அதிகம் இருந்த பகுதியாகும் இது.

Navaneethpp

மிட்டாய்த் தெரு

மிட்டாய்த் தெரு


மணஞ்சிரா சதுக்கத்தை அடுத்து இருப்பது இந்த மிட்டாய்த் தெரு ஆகும். அல்வா போன்ற பல இனிப்புமிட்டாய்கள் இங்கு பிரபலம். இதுவும் பெரிய அங்காடியைப் போல 600 ஆண்டுகளாக இயங்குவதாக வரலாறு கூறுகிறது.

Vengolis

புண்ணியக்கரை பகவதியம்மன் கோயில்

புண்ணியக்கரை பகவதியம்மன் கோயில்


புண்ணியக்கரை பகவதியம்மன் கோயில் அந்த பகுதியில் மிகவும் பிரசித்திபெற்ற தலமாகும். கால்லாயி ஆற்றுப்பகுதியில் அமைந்துள்ளது இந்த கோயில்.

சேரர்காலத்து கோயிலாக கருதப்படும் இது 10 நூற்றாண்டைச் சார்ந்ததாக நம்பப்படுகிறது.

Roney Maxwell

கப்பாடு பீச்

கப்பாடு பீச்

வரலாற்றின் மிக முக்கிய நிகழ்வு ஒன்று இந்த கப்பாடு பீச்சில் தான் நடந்துள்ளது. 1498ம் ஆண்டு வாஸ்கோடா காமா முதன்முதலில் இந்தியாவில் (அப்போது பல நாடுகளாக இருந்தது) கால் வைக்கும்போது இந்த கடற்கரைக்குதான் வந்தார்.

கோழிக்கோடு பீச்சிக்கு வந்துவிட்டு அப்படியே சென்றுவிட்டீர்களென்றால் மிக முக்கிய சுற்றுலாவை நீங்கள் இழந்துவிடுவீர்கள். ஆம். அந்த அளுவுக்கு மிகச் சிறந்த இயற்கையிலேயே அழகான பீச் ஆகும்.

கிருஷ்ண மேனன் மியூசியம்

கிருஷ்ண மேனன் மியூசியம்


கோழிக்கோடு நகரத்தின் பிரசித்தமான சுற்றுலா அம்சங்களுள் ஒன்றான இந்த கிருஷ்ண மேனன் மியூசியம் நகரத்திலிருந்து 5 கி.மீ தூரத்தில் உள்ளது. ஈஸ்ட் ஹில் பகுதியில் அமைந்துள்ள இந்த அருங்காட்சியகம் பழசிராஜா மியூசியத்துக்கு மிக அருகிலேயே உள்ளது. புகழ்பெற்ற இந்திய தேசியத்தலைவர்களில் ஒருவரான வி.கே. கிருஷ்ண மேனனுக்காக 1975ம் ஆண்டு இந்த அருங்காட்சியகம் உருவாக்கப்பட்டுள்ளது. ஒப்பற்ற அரசியல் தலைவராகவும் வெளியுறவுத்துறை நிபுணராகவும் விளங்கிய இவர் பயன்படுத்திய ஞாபகப்பொருட்கள் இந்த அருங்காட்சியகத்தில் பார்வைக்கு வைக்கப்பட்டுள்ளன

கக்காயம்

கக்காயம்


கோழிக்கோடு நகரத்திலிருந்து 45 கி.மீ தூரத்தில் இந்த கக்காயம் எனும் இயற்கை வனப்பு நிரம்பிய அணைப்பகுதி அமைந்துள்ளது. இங்குள்ள அரிய தாவரங்கள் மற்றும் உயிரினங்களுக்காக பிரசித்தி பெற்றுள்ள இந்த ஸ்தலம் அதிக அளவில் சுற்றுலாப்பயணிகளையும், நடைபயணிகளையும் ஈர்த்து வருகிறது. மேற்குத்தொடர்ச்சி மலையை ஒட்டியுள்ள இந்த அணைப்பகுதியை சுற்றிலும் அடர்த்தியான வனப்பகுதி காணப்படுகிறது. வனத்துறையினரின் கட்டுப்பாட்டில் உள்ள இந்த கானகப்பகுதியில் பல அருமையான நடைப்பாதைகள் உள்ளன. இங்குள்ள கக்காயம் நீர்த்தேக்கப்பகுதி பிக்னிக் பிரியர்களுக்கும் சாகச சுற்றுலா ஆர்வலர்களுக்கும் பிடித்த இடமாக உள்ளது.

கலிபொயிக்கா

கலிபொயிக்கா


கலிபொயிக்கா எனும் இந்த சுற்றுலாஸ்தலம் கோழிக்கோடு பகுதியில் ஒரு பிரசித்தமான பொழுதுபோக்கு அம்சமாகும். கோழிக்கோடு நகரத்திலிருந்து 2 கி.மீ தூரத்தில் அரயிடத்துப்பாலம் எனும் இடத்திலுள்ள இது தினமும் நூற்றுக்கணக்கான பார்வையாளர்களை ஈர்க்கிறது. கலிபொயிக்கா பொழுதுபோக்கு பூங்காவில் பயணிகள் படகுச்சவாரியில் ஈடுபடலாம். துடுப்புப்படகுகள் மற்றும் கால் மிதி படகுகள் இங்கு பயணிகளுக்கு வாடகைக்கு கிடைக்கின்றன. படகுகளில் ஆனந்தமாக ஏகாந்தமாக சவாரி செய்வது ஒரு பரவசமாக அனுபவமாகும். காலை 8 மணி முதல் மாலை 7 மணி வரை இங்கு படகுச்சவாரிகள் அனுமதிக்கப்படுகின்றன.

திக்கொட்டி லைட் ஹவுஸ்

திக்கொட்டி லைட் ஹவுஸ்


திக்கொட்டி லைட் ஹவுஸ் என்றழைக்கப்படும் இந்த கலங்கரை விளக்கம் கோழிக்கோடு பகுதியிலுள்ள சுவாரசியமான சுற்றுலா அம்சமாகும். இது கோழிக்கோடு நகரத்திலிருந்து 30 கி.மீ தூரத்தில் திக்கொட்டி எனும் கிராமத்தில் உள்ளது. பிரசித்தமான இந்த வரலாற்று சின்னம் வருடமுழுவதும் பயணிகளை ஈர்த்து வருகிறது.

இந்த கலங்கரை விளக்கத்தை சுற்றிலுமுள்ள பகுதி பாறை நிலப்பகுதியாக காணப்படுகிறது. இதன்மீதிருந்து அரபிக்கடலில் அமைந்துள்ள வெல்லியம்கல்லு எனும் பாறைத்திட்டு அமைப்பை நன்றாக பார்த்து ரசிக்கலாம். நுரைபொங்கும் அலைகள் மோதும் கரையோர கடற்பகுதியில் அமைந்துள்ள இந்த பாறைத்திட்டுக்கு ஏராளமான புலம் பெயர் பறவைகள் வருகை தருகின்றன.

 தலி கோயில்

தலி கோயில்


கேரளாவிலுள்ள பழமையான கோயில்களில் ஒன்றான இந்த தலி கோயில் கோழிக்கோடு நகரத்தின் மையப்பகுதியிலேயே அமைந்துள்ளது. கோழிக்கோடு மற்றும் மலபார் பிரதேசத்தின் வரலாற்றில் இந்த கோயில் முக்கிய இடத்தை வகிக்கிறது. ஜமோரின் வம்ச மன்னர்களால் கட்டப்பட்டுள்ள இந்த கோயிலில் ‘ரேவதி பட்டதானம்' எனப்படும் ‘அறிஞர் மகாசபை' யானது மன்னர்களின் ஆதரவுடன் வருடாந்தரமாக கூட்டப்பட்டுள்ளது. இது சமூக-வரலாற்று-அரசியல் முக்கியத்துவம் வாய்ந்த ஒரு அம்சமாக வரலாற்றாசிரியர்களால் கருதப்படுகிறது.

Read more about: travel, kerala