Search
  • Follow NativePlanet
Share
» »ஹனிமூன் தெரியும் இது என்ன ஹாஃப் மூன் பீச்!

ஹனிமூன் தெரியும் இது என்ன ஹாஃப் மூன் பீச்!

By Udhaya

திருமணமான தம்பதிகள் சொகுசு சுற்றுலா செல்வதை தேனிலவு என்று அழைப்பது வழக்கம். அதுதான் ஆங்கிலத்தில் ஹனிமூன் என்று அழைக்கிறோம். ஆனால் கர்நாடக மாநிலத்தில் ஹாஃப் மூன் எனும் பெயரில் கடற்கரை ஒன்று உள்ளது. இது ஹனிமூனுக்கு சிறந்த தளமாக உள்ளது. சரி ஒரு எட்டு போயி பாத்துட்டு தான் வந்துடுவோமே...

 ஹாஃப் மூன் பீச்

ஹாஃப் மூன் பீச்

கோகர்ணா பகுதியில் உள்ள அவ்வளவாக பிரசித்தமடையாத இந்தக் கடற்கரை பயணிகள் கட்டாயம் பார்க்க வேண்டிய ஒன்றாகும். ஓம் பீச்சிலிருந்து நடந்தோ அல்லது படகிலோ இந்த கடற்கரைக்கு செல்ல வேண்டியுள்ளது. ஓம் பீச் மற்றும் ஹாஃப் மூன் பீச் இரண்டும் இடையில் ஒரு மலைக்குன்றினால் பிரிக்கப்பட்டுள்ளது. இந்த குன்றின் மீதிருந்து பார்த்தால் அரபிக்கடலின் அற்புதக்காட்சி கண் முன் விரிகிறது.
Axis of eran

நீர்விளையாட்டு அம்சங்கள்

நீர்விளையாட்டு அம்சங்கள்

பாரம்பரிய இந்திய பாணி குடில்கள் அழகாய் இக்கடற்கரையில் காணப்படுகின்றன. இங்கு நீர்விளையாட்டு அம்சங்கள் எதுவும் இல்லை என்றாலும், பெயிண்ட்பால், வாலிபால், மிதவைப்படகுகள், கூண்டறைகள், துடுப்புபடகுகள், கூடாரவாசம் மற்றும் நீச்சல் போன்ற ஏராளமான பொழுதுபோக்கு அம்சங்கள் பயணிகளுக்காகவே காத்திருக்கின்றன. இது தவிர பகலில் வெயில் காய்தல் மற்றும் இரவில் தொங்கு ஊஞ்சலில் ஓய்வெடுத்தல் போன்ற சுவாரசியமான அனுபவங்களை பயணிகள் பெறலாம்.

Aleksriis

கோகர்ணா கடற்கரை

கோகர்ணா கடற்கரை

கோகர்ணா நகரத்துக்கு அருகிலேயே உள்ள இந்த கடற்கரை பிரசித்தமாக அறியப்படுகிறது. இங்கு பயணிகள் ஒருபுறம் அரபிக்கடலின் அழகையும் மறுபுறம் மேற்குத்தொடர்ச்சி மலையின் அழகையும் பார்த்து ரசிக்கலாம். உணவகங்கள், நீர் விளையாட்டுகள், சூரியக்குளியல் போன்றவை இந்த பீச்சில் பயணிகளுக்கான அம்சங்களாக உள்ளன. வெறும் இயற்கை அழகோடு வணிக ஆக்கிரமிப்பு மற்றும் இரைச்சல்கள் எதுவும் இல்லாமல் காணப்படுவது இந்த கடற்கரையின் விசேஷமாகும். இயற்கை எழிலுடன் கூடிய சூழலோடு ஆங்காங்கே கயிற்று ஊஞ்சல்கள், இசைக்கருவிகளுடன் பயணிகள் என்று இந்த பிரதேசம் ஏகாந்தமான சூழலைக்கொண்டுள்ளது. கோகர்ணா பீச்சுக்கு பயணிகள் வருடத்தின் எக்காலத்திலும் வருகை தரலாம்.

Jo Kent

ஓம் பீச்

ஓம் பீச்


கோகர்ணா பகுதியிலேயே பிரசித்தமான கடற்கரை இந்த ஓம் பீச் ஆகும். இங்கு பயணிகள் ஆன்மீகம், மகிழ்ச்சி, ஏகாந்தம் போன்ற எல்லா அம்சங்களையும் அனுபவிக்கலாம். ஓம் என்ற குறி (எழுத்து) வடிவில் இந்த கடற்கரை அமைந்துள்ளதால் இது ஓம் பீச் என்று அழைக்கப்படுகிறது.

பயணிகள் இங்கு நீர்ச்சறுக்கு, படகுப்பயணம் போன்ற நீர் விளையாட்டுகளில் ஈடுபட வசதி உண்டு. அனுபவம் மிக்க பயிற்சியாளர்கள் துணையோடு பயணிகள் இவற்றில் ஈடுபடலாம் என்பது குறிப்பிடத்தக்கது.

சிறு தேநீர் உணவகங்கள் மற்றும் குடில்கள் கடற்கரையை ஒட்டியே அழகாக காணப்படுவது சூழலின் அழகை மேலும் கூட்டுவதாக உள்ளது. இவற்றில் உள்ளூர் உணவு வகைகளை பயணிகள் ருசிக்கலாம்.

Abhijit Shylanath

குட்லே பீச்

குட்லே பீச்

குட்லே பீச் என்ற இந்த கடற்கரை கோகர்ணா நகரத்திலிருந்து 2 கி.மீ தூரத்தில் உள்ளது. இந்த கடற்கரைக்கு செல்வதற்கு பயணிகள் கணபதி கோயிலின் தெற்குப்பகுதியில் அமைந்துள்ள குறுகிய இணைப்புப்பாதை வழியாக செல்லவேண்டும். ரிக்‌ஷா மூலமாகவும் செல்லலாம்.

பனை மரங்கள் சூழ வெண்மணலுடன் காட்சியளிக்கும் இந்த கடற்கரை முதல் முறையாக வருகை தரும் பயணிகளை திகைக்க வைக்கும் அளவுக்கு அழகுகொண்டது. இங்கு அழகான சிறு உணவகங்கள் உள்ளூர் உணவுகளை சுத்தமான சூழலில் விற்பனை செய்கின்றன.

பயணிகள் இங்குள்ள சிறு குடில்களில் ஒன்றை வாடகைக்கு எடுத்து கடற்கரை அழகை ரசிக்கலாம். இரவில் பயணிகள் இங்கிருந்து பாரடைஸ் பீச் வரை நடந்து சென்று இயற்கையின் எழிலை ஏகாந்தமாக அனுபவிக்கலாம்.
Peder Bjerring

 மஹாபலேஷ்வரர் கோயில்

மஹாபலேஷ்வரர் கோயில்


உத்தரகன்னட மாவட்டத்திலேயே வெகு பிரசித்தமான கோயில் இந்த மஹாபலேஷ்வரர் கோயில் ஆகும். பிரணாலிங்கம் அல்லது ஆத்மலிங்கம் என அழைக்கப்படும் கீர்த்தி பெற்ற சிவலிங்கம் இங்கு அமைந்துள்ளது. காசியில் உள்ள சிவன் கோயிலுக்கு நிகரான பெருமையை பெற்றுள்ள இந்த மஹாபலேஷ்வரர் கோயில் ஏழு முக்திக்ஷேத்திரங்களில் ஒன்றாகும். கோயிலுக்கு செல்லும் முன்னர் பக்தர்கள் எதிரிலுள்ள அரபிக்கடலில் மூழ்கி எழுகின்றனர். வெண் பளிங்குக்கற்களால் கட்டப்பட்டுள்ள இந்தக்கோயில் திராவிட கட்டிடக்கலை பாணியில் அமைந்துள்ளது.பக்தர்கள் இங்கு சதுரவடிவ சாளிகிராம பீடத்தினுள்ளே வைக்கப்பட்டுள்ள சிவலிங்கத்தை பீடத்தின் மேலுள்ள துவாரத்தின் வழியாகக் காணலாம். இந்த சிவலிங்கத்தை தரிசித்தவர்களுக்கு விசேஷ அருள் கிட்டும் என்பது ஐதீகமாக உள்ளது. மேலும், 1500 வருடங்களுக்கு முற்பட்ட ஒரு சிவன் சிலையும் இந்த கோயிலில் உள்ளது. ஹிந்துக்கள் தங்கள் இறந்த உறவினர்களுக்கான கிரியைகளை நிறைவேற்ற இங்கு வருகை தருகின்றனர். சிவராத்திரியின் போது பக்தர்கள் இந்த ஸ்தலத்தில் பெருமளவு எண்ணிக்கையில் கூடுகின்றனர்.

UrbanWanderer

Read more about: travel
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X