அக்ரோஹா தாம் என அழைக்கப்படும் அக்ரோஹா கோயில் பெயருக்கு ஏற்றார்ப்போல் அக்ரோஹா என்றழைக்கப்படும் ஹிசார் மாவட்டத்தின் கிராமம் ஒன்றிலமுள்ளது. 1976ல் துவக்கப்பட்ட இதன் கட்டுமானப்பணி எட்டு வருடங்களுக்குப் பின் 1984ல் நிறைவுற்றது. மூன்று பகுதிகளாக பிரிக்கப்பட்டுள்ள இக்கோவிலின் முதல் வளாகம் மஹாலட்சுமி என்ற முதன்மை கடவுளுக்கும், மேற்கு மற்றும் கிழக்கு வளாகங்கள் சரஸ்வதி மற்றும் மூவாயிரம் வருடங்களுக்கு முன்பு அக்ரோஹாவை ஆண்ட மகாராஜா அகர்சன் என்ற மன்னருக்கும் அர்ப்பணிக்கப்பட்டுள்ளது.

ஷக்தி சரோவர் என்ற பெரிய குளம் ஒன்று கோவிலின் பின்புறம் உள்ளது. 1988ல் 41 புனித நதிகளில் இருந்து கொண்டுவரப்பட்ட நீரின் மூல இக்குளம் நிரப்பப்பட்டது. வடமேற்கு பகுதியில் உள்ள மேடை ஒன்றில் தேவர்களும் அசுரர்களும் கடலைக் கடைந்த புராணக் காட்சி பதிவு செய்யப்பட்டுள்ளது. இயற்கை மருத்துவத்தின் மூலம் குணப்படுத்தும் மருத்துவமனை ஒன்றும் இவ்வளாகத்தில் அமைந்துள்ளது. அக்ரோஹா மஹா கும்பமேளா என்ற விழா ஒவ்வொரு வருடமும் ஷரத் பூர்ணிமா அன்று அனுஷ்டிக்கப்படுகிறது,

தெர் என்று உள்ளூர் வாசிகளால் அழைக்கப்படும் இவ்விடம் ஹிசாரில் இருந்து 1.5கிமீ தொலைவில் உள்ளது. இந்த அக்ரோஹா மணல் திட்டு தொல்பொருள் தளமாக அறிவிக்கப்பட்டுள்ளது. 1888ல் இருந்து 1889வரை இங்கே தொல்பொருள் ஆராய்ச்சியில் ஈடுபட்ட சி.டி.ரோஜர்ஸ் என்பவருக்குப் பின் 1978ல் இருந்து 1979வரை ஆச்சார்யா மற்றும் ஜே.எஸ்.கத்ரி என்ற இரு தொல்பொருள் ஆராய்ச்சியாளர்கள் இங்கு ஆராய்ச்சியில் ஈடுபட்டனர்.

இங்கு கிடைக்கப்பெற்ற வரலாற்று தொன்மை மிக்க பொருட்கள் 3ஆம் அல்லது நான்காம் நூற்றாண்டில் இருந்து 13 அல்லது 14ஆம் நூற்றாண்டை வரையிலானவை என கருதப்படுகின்றன. ரோம, குஷான, குப்த காலத்து வெள்ளி மற்றும் செப்பு நாணயங்கள் கிடைத்தன. மேலும் பிராகிருத மொழியில் இருந்த முத்திரைகலும் கண்டெடுக்கப்பட்டன. அதுமட்டுமல்லாது டெர்ரகோடா மிருக பொம்மைகள், மணல் பொம்மைகள், சாமான்கள், ஆகியவையும் கிடைத்தன. அக்ரோஹா தளம் ஒருபுறம் கோவில் வளாகத்தாலும் மற்றொரு புறம் ஷீலா மாதா கோவிலாலும் சூழப்பட்டுள்ளது.



Click it and Unblock the Notifications




