Search
  • Follow NativePlanet
Share
» »3000 ஆண்டுக்கு முற்பட்ட வானியல் ஆய்வு மையம், இந்தியரின் மர்மக் கடிகாரம்!

3000 ஆண்டுக்கு முற்பட்ட வானியல் ஆய்வு மையம், இந்தியரின் மர்மக் கடிகாரம்!

கடிகாரம், இன்றைய அதன் பயண்பாட்டை தெளிவான ஓர் வார்த்தையால் விளக்க முடியாத. அந்தளவிற்கு நம் வாழ்வுடன் ஒன்றியுள்ளது. 14-ஆம் நூற்றாண்டுகளில் கண்டுபிடிக்கப்பட்டதாக கூறப்படும் இது க்ளோக்கா என்ற லத்தீன் மொழியிலிருந்து எடுக்கப்பட்டதாகவும், வரலாற்றுக்கு முந்தைய காலத்தில் சுமேரியர்கள் நேரத்தை அளவிட முயன்று காலத்தை அளவிடும் கருவியை கண்டறிந்ததாகக் கூறப்படுகிறது. ஆனால், நம் முன்னோர்கள் பழங் கற்காலத்தில் சூரியனின் இயக்கத்தைக் கொண்டு நேரம் கணக்கிடப்பட்டு வந்ததாக நாம் கேள்விப்பட்டிருப்போம். இன்றும், ஒரு சில கிராமங்களில் வயதானோர் வானத்தைப் பார்த்தே மணி கூறுவதை கவணித்திருப்போம். இதற்கெல்லாம் முன்னோடியான தமிழரின் காலம் அளவிடும் கருவியும், 3 ஆயிரம் ஆண்டுகளுக்கு முந்தைய வானியல் ஆய்வு மையம் அமைந்துள்ள இடம் குறித்தும் அறிந்துகொள்ள பயணிக்கலாம் வாங்க.

ஆங்கிலேயருக்கே முன்னோடி நாம்

ஆங்கிலேயருக்கே முன்னோடி நாம்

தொழில்நுட்பத்திலும், விஞ்ஞானத்திலும் நன்கு வளர்ச்சி அடைந்து விட்டதாக கூறப்படும் ஆங்கிலேயே நாடுகளிலேயே மணல் கொண்டு காலம் கணிக்கப்பட்ட போது, நம் முன்னோர்கள் சூரியனைப் பார்த்து நேரத்தை கணிக்கத் துவங்கிவிட்டனர். அறிவியல் வளர்ச்சியடையாத அக்காலத்திலையே சூரியனை எப்படி பயன்படுத்தலாம் என்று சிந்தித்தவர் நாம் என்பது பெருமைக்குறிய விசயமே.

கோவில் கோபுரங்கள்

கோவில் கோபுரங்கள்

பெரும்பாலும், தமிழகத்தில் அமைந்துள்ள பழமையான கோவில்களின் கோபுரங்கள் சற்று உயரமான தோற்றத்தைக் கொண்டிருப்பதை காணலாம். வெறும் ஆன்மீகத்திற்காக மட்டும் அதுபோன்ற கோபுரங்கள் அமைக்கப்படவில்லை. சூரியன் நகர்வுக்கு ஏற்றவாறு கோபுரங்களின் நிழலும் மாறுபடும். இதனை அடிப்படையாகக் கொண்டு நேரத்தைக் கணித்தவன் நம் தமிழன்.

Thamizhpparithi Maari

விரிஞ்சிபுரம் சான்றுகள்

விரிஞ்சிபுரம் சான்றுகள்

பல்லாயிரக்கணக்கான ஆண்டு வரலாறு உண்டு என்பதால் தமிழர்களின் கண்டுபிடிப்புகள் மனிதனின் நாகரிக வளர்ச்சியில் நம் பங்கு முக்கியமானது என்பதற்கு ஆதாரம் தான் விரிஞ்சிபுரம் கிராமத்தில் அமைந்துள்ள மணி காட்டும் கல். மாபெரும் கோபுரங்களை அமைத்து அதன் மூலம் நேரம் கணக்கிட்ட பழங்கால தமிழன், சற்று முன்னேற்றமடைந்து சிறிய கற்கலைக் கொண்டும் நேரம் கண்கிட்டு சாதித்தான் என்றால் அது இங்கு தான். விரிஞ்சிபுரத்தில் சிறியதாக ஒரு கருங்கல்லை வைத்து பன்னிரண்டு மணிநேரத்தை பார்க்கும்படி வடிவமைத்துள்ளதை இன்றும் நாம் காண முடியும்.

B Balaji

பல்லவர் காலக் கடிகாரம்

பல்லவர் காலக் கடிகாரம்

விரிஞ்சிபுரம் கிராமம் வேலூர் மாவட்டத்திற்கு உட்பட்ட பகுதியாகும். இப்பகுதி மார்கமந்தீஸ்வரர் கோவிலுக்காக புகழ்பெற்றுள்ளது. பல்லவ மன்னர் ஆட்சியின் போது ஆயிரம் ஆண்டுகளுக்கு முன் இக்கோவில் கட்டப்பட்டுள்ளது. இக்கோவிலின் வடக்குப் பகுதியில் தான் காலம் கட்டும் கல் உள்ளது. இக்கல்லின் மேற்குப் பகுதியில் சிறிய பள்ளமான பகுதியின் மேலே சிறு குச்சி பொருத்த வசதி உள்ளது. சூரிய ஒளியின் திசைக்கு ஏற்றவாறு குச்சியின் நிழல் நகர்வதைக் கொண்டு நேரம் கணக்கிடப்பட்டுள்ளது.

Simply CVR

பருவம் கணக்கிடும் காலக் கல்

பருவம் கணக்கிடும் காலக் கல்

ஒரு பகல், இரவை மட்டும் துள்ளியமாகக் கண்டறியதைக் காட்டிலும் சிறப்பு என்னவென்றால் பருவ காலத்தையும் கணக்கிட்ட முன்னோர்கள் தான். அறிவியல் வளர்ச்சியற்ற அக்காலத்தில் இது எப்படி சாத்தியம் என திகைக்கும் ஒவ்வொருவரும் சென்று பார்க்கவேண்டிய இடம் ஆந்திர மாநிலத்தில் உள்ள மெகபூப்நகர் மாவட்டம். பருவ காலத்தைக் கணிக்கும் வானியல் ஆய்வு மையம் உலகில் முதலில் தோன்றிய இடமும் இதுவாகத்தான் இருக்கும்.

எங்கே உள்ளது ?

எங்கே உள்ளது ?

விழுப்புரத்தில் இருந்து சென்னை - பெங்களுரு தேசிய நெடுஞ்சாலைக்கு அருகே அமைந்துள்ளது விரிஞ்சிபுரம் கிராம். தேவாரப்பாடல் பெற்ற தலம் என்ற சிறப்பினை பெற்ற மார்க்கபந்தீஷ்வரர் திருத்தலம் இக்கிராமத்தின் அடையாளமாக அமைந்துள்ளது. மிகப் பழமையான ஆலயங்களில் ஒன்றான இக்கோவிலிலேயே தமிழரின் முதல் கடிகாரம் உள்ளது.

3000 ஆண்டு பழமையான மையம்

3000 ஆண்டு பழமையான மையம்

ஆந்திரா - கர்நாடகா இடையே அமைந்துள்ள மெகபூப்நகர் மாவட்டத்தில் உள்ள ஒரு சிறிய கிராமம் தான் முதுமால். இக்கிராமத்தின் எல்லைப் பகுதியில் தமிழர்களின் நடுகல் போன்று நிற்க வைக்கப்பட்டுள்ள கற்களே அக்காலத்தில் வானியல் ஆய்வு மையமாக செயல்பட்டுள்ளது. அதாவது இக்காலம் கணக்கிடும் ஆய்வு மையம் சுமார் 3000 ஆண்டுகளுக்கு முன்பு உலகில் தோன்றிய முதல் வானியல் ஆய்வு மையம் என்றால் மிகையாகாது.

mahabubnagar

முதுமால் கிராமம்

முதுமால் கிராமம்

முதுமாலில் காணப்படும் இந்த பழமைவாய்ந்த வானியல் ஆய்வு மையம் 80 ஏக்கர் பரப்பளவில் 12 அடி முதல் 15 அடி உயரம் உள்ள எண்பது கற்கள் நடப்பட்ட நிலையில் காணப்படுகிறது. அதுமட்டுமின்றி சுமார் 3500-க்கும் மேற்பட்ட சிறிய கற்களும் காலம் கணிக்க பொருத்தப்பட்டுள்ளது. கிருஷ்ணா நதியில் இருந்து இக்கற்கள் கொண்டுவரப்பட்டிருப்பதாக தொல்லியல் துறையினர் மூலம் கணிக்கப்பட்டுள்ளது.

mahabubnagar

பருவம் கணிக்கும் மையம்

பருவம் கணிக்கும் மையம்

தற்போதைய அறிவியல், தொழில்நுட்பம் வளர்ச்சியடைந்துள்ள காலத்திலேயே துள்ளியமாக பருவ நிலையைக் கணக்கிட முடிவதில்லை. ஆனால், மூன்றாயிரம் ஆண்டுகளுக்கு முன்பே கோடையையும், குளிர் காலத்தையும் துள்ளியமாகக் கணக்கிடும் வகையில் இந்த கற்கள் நடப்பட்டிருப்பது வானியல் ஆராய்ச்சியாலர்களையே வியப்பில் ஆர்த்தியுள்ளது.

mahabubnagar

விண்மீன் கூட்டத்தை விளக்கும் கல்

விண்மீன் கூட்டத்தை விளக்கும் கல்

இந்த மையத்தின் உச்சகட்ட கண்டுபிடிப்பு விண்மீன் கூட்டத்தை கண்டறிந்து அவற்றின் மூலம் வானியல் மாற்றத்தை கண்டறிந்தது தான். இதற்கு ஆதாரமாக விண்மீன் கூட்டங்களின் அமைப்பை குறிக்கும் வகையில் செதுக்கப்பட்ட கல் ஒன்று மற்ற கற்களுக்கு நடுவே பொருத்தப்பட்டுள்ளது.

பாதுகாக்க வேண்டும்

பாதுகாக்க வேண்டும்

இந்தியாவிற்கே பெருமை சேர்க்கும் வகையில் அமைந்துள்ள இந்த வரலாற்று சிறப்பு மிக்க வானியல் ஆய்வு மையம் அமைந்துள்ள பகுதி தற்போது மேய்ச்சல் நிலமாகவே உள்ளது. இதனை சீரமைத்து உலக நாடுகளை இந்தியாவை நோக்கி திரும்பச் செய்யும் இதுபோன்ற பகுதிகளை சுற்றுலாத் தலமாக, அருங்காட்சியகமாக மாற்ற வேண்டும்.

mahabubnagar

அருகில் உள்ள வரலாற்றுத் தலங்கள்

அருகில் உள்ள வரலாற்றுத் தலங்கள்

பில்லலமரி

மெகபூப்நகர் அருகிலேயே பல புகழ்பெற்ற வரலாற்றுத் தலங்களும் உள்ளது குறிப்பிடத்தக்கது. அவற்றுள், ஒரு சிறிய கிராமமான பில்லலமரியில் காகதீய வம்ச மன்னரால் அமைக்கப்பட்ட கோவில்களுக்கு இப்பகுதி புகழ் பெற்றதாக திகழ்கிறது. இந்த சிறிய கிராமத்தின் உன்னதமான வரலாற்றுப் பின்னணியை எடுத்துரைக்கும் விதத்தில் பில்லலமரிக் கோவில் உள்ளன.

பாணிகிரி

பாணிகிரி

பாணிகிரிப் பகுதியானது பௌத்த வழிபாட்டுத் தலங்களுக்காக அறியப்படுகிறது. கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு ஆந்திர மாநில அரசின் தொல்லியல் துறையால் மேற்கொள்ளப்பட்ட அகழ்வாராய்ச்சியின் போது இந்த வரலாற்று சிறப்புமிக்க குடைவரைக் கோவில் கண்டுபிடிக்கப்பட்டது. பாணிகிரி தலத்தில் ஒரு பெரிய வளாகம் போன்ற கட்டுமானம் காணப்படுகிறது.

பனகல் சோமேஷ்வரர் கோவில்

பனகல் சோமேஷ்வரர் கோவில்

பனகல் சோமேஸ்வரா கோவில் பனகல் எனும் கிராமத்தில் வீற்றிருக்கிறது. இந்த கிராமம் நல்கொண்டா நகருக்கு அருகிலேயே அமைந்துள்ளது. புராதன காலத்தில் காகதீய ராஜ வம்சத்தினரின் தலைநகரமாக பனகல் செழிப்பாக இருந்திருக்க வேண்டும் என்பதை சுற்றுவட்டாரப் பகுதியில் கண்டெடுக்கப்பட்ட சான்றுகள் மூலம் அறியமுடிகிறது.

Adityamadhav83

கொல்லன்பாகு கோவில்

கொல்லன்பாகு கோவில்

கொல்லன்பாகு ஜெயின் கோவில் ஹைதராபாத் நகரிலிருந்து 79 கிலோ மீட்டர் தொலைவில் அமைந்துள்ள புராதான ஜைன கோவிலாகும். இருப்பினும், ஜைனம் அதிகம் பின்பற்றப்படாத ஆந்திர மாநிலத்தில் இது அமைந்திருப்பது குறிப்பிடத்தக்கது.

Devadaskrishnan

உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X