» »கிருஷ்ணஜென்ம பூமி எங்கே இருக்கிறது தெரியுமா?

கிருஷ்ணஜென்ம பூமி எங்கே இருக்கிறது தெரியுமா?

Posted By: Udhaya

சூரசேனதேசம் சந்திர வமிசத்தில் பிறந்து சூரத்தன்மை பொருந்திய படைகளைச் சேர்த்தும், தானும் அதிதீர, வீர, சூரனாய் அரசாண்ட அரசன் சூரசேனன். அவனது ஆட்சிக்குட் பட்ட பகுதி சூரசேனதேசமாயிற்று. குருதேசத்திற்கு தெற்கிலும், குந்தலதேசத்தின் வடபூமியின் கிழக்கிலும், யமுனை நதியின் மேற்கு கரையில் சால்வதேசத்திற்கு நேர் கிழக்கிலும், பரந்துவிரிந்த நிலபரப்பானது. இத்தேசத்தின் பூமி அமைப்பு மட்டமானது, மிகவும் தாழ்ந்து யமுனையின் நீர்மட்டத்திற்கு கீழ்பட்டதாகவே இருக்கும்

அதிகம் படித்தவை: ஓவ்வொரு தமிழரும் பார்க்கவேண்டிய கோவில்

இந்த தேசத்தின் வடக்கேயும், சிறிய மலைகள் உண்டு, இம்மலைகளில் மிக முக்கியமானது கோவர்த்தனம் ஆகும். மலையின் அடிவாரத்திலிருந்து பரந்து விரிந்த காடுகளும், அவைகளில் வெண்மையான பசுக்களும், நீலப்பசுக்களும், அதிகமான தாமரைக் குளங்களும், சரபுன்னை, புந்நாகம், தேவலிங்கை, கடம்பு, நாவல், மா, பலா, கொங்கு, குடசம் என்னும் குடமல்லிகை, செண்பகம், பாரிசாதம் ஆகிய மரங்கள் ஏராளமாய் இருக்கும்

அதிகம் படித்தவை:  காசியின் பல முகங்கள்!!!

இந்த தேசத்தில் குளிர், பனி அதிகமாக இருக்காது, மழை மாத்திரம் சித்திரை, வைகாசி மாதம் முதல் புரட்டாசி மாதம் முடிய விடாமல் பெய்துகொண்டே இருக்கும். விசுவாமித்திரர் ஆசிரமம் இந்த தேசத்தின் தென்மேற்கில் புஷ்கரம் என்ற ஏரியின் கரையில் இன்றும் உள்ளது. இந்த தேசத்தில் நெல், கோதுமை, கரும்பு முதலியனவும், தாம்பரம், பித்தளை முதலிய உலோகப் பொருள்களாலான வெகு அழகாய், நேர்த்தியாய் செய்யப்பட்ட பாத்திரங்களை அம்மக்கள் பயன்படுத்தினர்.

 அதிகம் படித்தவை: நாசாவே வியக்கும் இந்த சிவன் கோவில் மர்மங்கள் உங்களுக்கு தெரியுமா?

சூரசேனதேசத்தின் தலைநகரம்

சூரசேனதேசத்தின் தலைநகரம்

மதுரை இத்தேசத்தின் முக்கிய நகராகும். இந்நகரத்திற்கு கிழக்கில் சிற்ப சாத்திர முறைப்படி கட்டிய கோட்டைகள், பெரிய, பெரிய அரண்மனைகள், நிறைந்த கோகுலம் என்ற நகரமும் இருந்துள்ளன. இந்த கோகுலத்தை திருவாய்ப்படி என பெரியாழ்வாரால் பெயர் சூட்டப்பட்டுள்ளது.

PC: carol mitchell

ஓவ்வொரு தமிழரும் பார்க்கவேண்டிய கோவில்

சூரசேனதேசம் தற்போது எங்குள்ளது தெரியுமா?

சூரசேனதேசம் தற்போது எங்குள்ளது தெரியுமா?

மதுரா உத்தரப்பிரதேசத்தில் உள்ள ஓர் மாநகரமாகும். ஆக்ராவிற்கு வடக்கே 50 கிமீ தொலைவிலும் தில்லியிலிருந்து தென்கிழக்கே 145 கிமீ தொலைவிலும் அமைந்துள்ளது. மதுராவிலிருந்து 11 கிமீ தொலைவில் பிருந்தாவனமும் 22 கிமீ தொலைவில் கோவர்தனமும் அமைந்துள்ளன. இது மதுரா மாவட்டத்தின் நிர்வாகத் தலைநகராகவும் உள்ளது.

இந்தியாவில் பயணம் செய்ய தேவையான அடிப்படை ஹிந்தி வார்த்தைகள்!

wikipedia

முக்தி தரும் நகரம்

முக்தி தரும் நகரம்

முக்தி தரும் ஏழு நகரங்களில் ஒன்றான மதுரா, இந்து தொன்மவியல் கூற்றுக்களின்படி கிருட்டினனின் பிறப்பிடமாகும். மகாபாரதம் மற்றும் பாகவத புராணங்களின்படி மதுராவை தலைநகராகக் கொண்டு சூரசேன இராச்சியத்தை கிருட்டினனின் மாமன் கம்சன் ஆண்டு வந்தான். கிருஷ்ண ஜென்ம பூமி எனப்படும் இடத்தில் பாதாள சிறையொன்றில் கிருட்டினன் பிறந்ததாக அந்த இடத்தில் கேசவ தேவ் கோவில் கட்டப்பட்டுள்ளது. முன்னதாக இந்தக் கோவில் இருந்த இடத்தில் முகலாயர் காலத்தில் அங்கு மசூதி கட்டப்பட்டுள்ளதாக ஓர் சர்ச்சை நிலவி வருகிறது.

wiki

தாஜ்மஹாலுக்கு ஆபத்து

தாஜ்மஹாலுக்கு ஆபத்து

இந்தப் புராதன நகரம் அண்மையில் தொழில்நகரமாக மாறி வருகிறது. இந்தியாவின் நாயகமான தொடர்வண்டி மற்றும் சாலைவழிகளில் இந்நகர் அமைந்துள்ளதால் தொழில் முனைவோருக்கு பல வசதிகளை கொடுக்கிறது. இங்கு இந்தியன் ஆயில் நிறுவனத்தின் அதிநவீன பாறைநெய் தூய்விப்பாலை அமைந்துள்ளது. இது வெளியேற்றும் புகையினால் ஆக்ராவிலுள்ள தாஜ்மகாலின் பளிங்கு கற்கள் மாசடைந்து பாதிப்படைவதாகவும் ஓர் சர்ச்சை உண்டு.

கிருஷ்ணர் கோயில் தெரு

கிருஷ்ணர் கோயில் தெரு

சூரசேனதேசம் தற்போது அறிவியல் மேம்பட்டதாலும், உலகமயமாதலாலும் பல்வேறு வளர்ச்சிகள் கண்டு அதி வேகத்தில் வளர்ந்துவருகிறது. அதற்கு சாட்சி இந்த தெருக்கள். எனினும் பழமை மாறாமல் இருப்பதுதான் இதன் சிறப்பு.

ஓவ்வொரு தமிழரும் பார்க்கவேண்டிய கோவில்

Prateek Rungta

ஷெட் லக்மீச்சுந்த் கோயில்

ஷெட் லக்மீச்சுந்த் கோயில்

மிகவும் சக்திவாய்ந்த கோயில் என்று பலரால் கூறப்படும் இக்கோயில் மதுரா நகருக்கு அருகிலேயே அமைந்துள்ளது.

உலகையே ஆண்ட சோழ ராஜ்ஜியம் வீழ்ந்த இடம் எது தெரியுமா?

Eugene Clutterbuck Impey

ஒன்றாம் நூற்றாண்டில் உருவாக்கப்பட்ட சிலை

ஒன்றாம் நூற்றாண்டில் உருவாக்கப்பட்ட சிலை


ஒன்றாம் நூற்றாண்டில் உருவாக்கப்பட்ட சிலை


Biswarup Ganguly

இரண்டாம் நூற்றாண்டில் செய்யப்பட்ட பெண்ணின் சிலை

இரண்டாம் நூற்றாண்டில் செய்யப்பட்ட பெண்ணின் சிலை

இரண்டாம் நூற்றாண்டில் செய்யப்பட்ட பெண்ணின் சிலை

wikipedia

பலராமன்

பலராமன்

பகவான் கிருஷ்ணனின் அண்ணன் பலராமனுக்கு இந்தியாவிலேயே சிறப்பான கோயில் உள்ள ஊர்தான் பல்டியோ

மதுராவிலிருந்து 25கிமீ தொலைவில் அமைந்துள்ள இந்நகரமானது பலராமன் கோயிலுக்குப் பெயர்பெற்றது.

வெகு தொலைவிலிருந்து பக்தர்கள் இங்கு வழிபட வருகின்றனர். நவம்பர் டிசம்பர் மாதங்களில் இங்கு திருவிழா நடத்தப்படுகிறது.

கஜினி முகமதுவால் சிதைக்கப்பட்ட கேசவ தேவ் கோயில்

கஜினி முகமதுவால் சிதைக்கப்பட்ட கேசவ தேவ் கோயில்

இக்கோயிலை கிருஷ்ணரின் கொள்ளுப் பேரனான வஜ்ரநாபன் நிறுவியதாக கருதப்படுகிறது.[3] கி பி 400-இல் குப்தப் பேரரசின் இரண்டாம் சந்திரகுப்தர் காலத்தில் சிறிதாக இருந்த கேசவ தேவ் கோயிலை பெரிதாக நிறுவினார். பின்னர் புந்தேல்கண்ட் பிரதேசத்தில் உள்ள ஓர்ச்சா நாட்டு ராஜ்புத்திர மன்னர் வீர் சிங் கேசவ தேவ் கோயிலை சீரமைத்து கட்டியதாக கருதப்படுகிறார்.

Diego Delso

விஷ்ரம் காட்

விஷ்ரம் காட்

புனித இடமாக கருதப்படும் இந்த பகுதி யமுனை ஆற்றின் கரையோரம் அமைந்துள்ளது.

காசியை போல இங்கு குளித்தாலும் புண்ணியம் என்பது நம்பிக்கை.

Edwin Lord Weeks

மதுரா அருங்காட்சியகம்

மதுரா அருங்காட்சியகம்

உத்திரப் பிரதேச அரசு தொல்பொருள்கள், வரலாற்றை சார்ந்த பொருள்கள் என அருங்காட்சியகத்தில் வைத்து பராமரித்து வருகிறது.

குறைந்த அளவு நுழைவுக் கட்டணத்தில் பொதுமக்கள் பார்வைக்கும் விடப்படுகிறது.

இந்தியாவின் குறிப்பாக மதுராவின் வரலாற்றை தெரியும் வண்ணம் இந்த அருங்காட்சியகம் அமைக்கப்பட்டுள்ளது..

நீங்களும் மதுரா டூர் போனீங்கன்னா...இதையெல்லாம் பாக்க மறக்காதீங்க... அடுத்த பதிவில் சந்திக்கலாம்...

Biswarup Ganguly


அதிகம் பேர் படித்த டாப் 5 கட்டுரைகள்

திருமணத்துக்கு முன்னாடி நீங்க இதையெல்லாம் அனுபவிச்சே ஆகணும் பாஸ்

உலகையே ஆண்ட சோழ ராஜ்ஜியம் வீழ்ந்த இடம் எது தெரியுமா?

நாசாவே வியக்கும் இந்த சிவன் கோவில் மர்மங்கள் உங்களுக்கு தெரியுமா?

கோடநாடு தெரிந்த விசயங்களும் தெரியாத மர்மங்களும்

அமலா பாலுடன் நடுக்காட்டில் ஒரு சுற்றுலா போலாமா?

Read more about: travel, temple