Search
  • Follow NativePlanet
Share
» »இந்தியாவிலிருந்து இலவசமாக ஹாங்காங்கிற்கு விமானத்தில் செல்ல வேண்டுமா? இப்படி செய்தால் போதும்!

இந்தியாவிலிருந்து இலவசமாக ஹாங்காங்கிற்கு விமானத்தில் செல்ல வேண்டுமா? இப்படி செய்தால் போதும்!

எப்படி இலவசமாக ஹாங்காங்கிற்கு பயணிப்பது என்று யோசிக்கிறீர்களா? நாம் எதுவுமே செய்ய வேண்டாம். ஹாங்காங் அரசாங்கமே கொடுக்கிறது. அந்த வாய்ப்பை நாம் சரியாக பயன்படுத்திக் கொண்டால் போதும். இலவசமாக விமானத்தில் ஹாங்காங்கிற்கு பறக்கலாம்! சுற்றுலாத் துறையை மீட்டெடுக்கும் முயற்சியின் ஒரு பகுதியாக 500,000 இலவச விமான டிக்கெட்டுகளை வழங்கும் திட்டத்தை ஹாங்காங் அரசாங்கம் அறிவித்துள்ளது. இதில் நீங்கள் கலந்து கொண்டால் சுலபமாக இலவச விமான டிக்கெட்டைப் பெற்று விடலாம். தங்குமிடம், சுற்றிப் பார்க்கக் மட்டும் நீங்கள் பணம் வைத்துக் கொண்டால் போதும், வெளிநாட்டு சுற்றுலாவை கம்மி பட்ஜெட்டில் முடித்து விடலாம்!

ஹலோ ஹாங்காங் பிரச்சாரம்

ஹலோ ஹாங்காங் பிரச்சாரம்

ஹாங்காங் மிகப்பெரிய அளவிலான விமான டிக்கெட்டுகளை முற்றிலும் இலவசமாக வழங்க உள்ளது என்பதை அறிந்த உலக நாடுகள் பலவும் அதிர்ச்சியடைந்துள்ளன. விலையுயர்ந்த விமான டிக்கெட்டுகளை மக்களுக்கு விநியோகிக்க இந்த நகரம் ஏன் பெரும் தொகையைச் செலவிடுகிறது? என்று நீங்கள் யோசிக்கலாம். இந்த முடிவின் பின்னணியில் மிக முக்கியமான காரணம் அவர்களின் உலகளாவிய விளம்பர பிரச்சாரமாகும். ஆம்! அதுதான் "ஹலோ ஹாங்காங் பிரச்சாரம்". இதன் கீழ் உலகெங்கிலும் உள்ள பயணிகளுக்கு இலவசமாக விமான டிக்கெட்டுகளை ஹாங்காங் அரசாங்கம் வழங்கவுள்ளது.

கொரோனாவால் ஏற்பட்ட சரிவு

கொரோனாவால் ஏற்பட்ட சரிவு

தொற்றுநோய்க்கு முன், ஹாங்காங் ஒரு வருடத்தில் 56 மில்லியன் பார்வையாளர்களைக் கண்டது. 2022 இல், அந்த எண்ணிக்கை சுமார் 100,000 ஆகக் குறைந்தது. கொரோனா தொற்றால் உலகெங்கிலும் ஏற்பட்ட பொருளாதார வீழ்ச்சியில் இருந்து இன்னமும் சில நாடுகளால் மீண்டு வர முடியவில்லை. குறிப்பாக சுற்றுலாத் துறை பெரும் சரிவைக் கண்டது. நலிவடைந்த சுற்றுலாத் துறையை எழுப்பும் முயற்சியாக 500,000 இலவச விமான டிக்கெட்டுகளை வழங்கும் திட்டத்தை ஹாங்காங் அரசாங்கம் அறிவித்துள்ளது.

எப்படி இலவச விமான டிக்கெட்டுகளை பெறுவது

எப்படி இலவச விமான டிக்கெட்டுகளை பெறுவது

ஹாங்காங்கிற்குச் செல்ல ஆர்வமுள்ள பயணிகள், மார்ச் 1 முதல், விமான டிக்கெட் லாட்டரியில் தங்கள் பெயர்களை உள்ளிட, வேர்ல்ட் ஆஃப் வின்னர்ஸ் ஸ்பிளாஸ் பக்கத்தைப் பார்வையிடலாம். டிக்கெட்டுகள் மூன்று விதமாக ஒதுக்கப்படும்: மார்ச் 1 முதல் தென்கிழக்கு ஆசியா முழுவதும் உள்ளவர்களுக்கு, ஏப்ரல் 1 முதல் சீனாவின் பிரதான நிலப்பகுதியில் வசிப்பவர்களுக்கு மற்றும் மே 1 முதல் உலகின் பிற பகுதிகளில் வசிப்பவர்களுக்கு கொடுக்கப்படும். நீங்கள் இந்த டிக்கெட்டுகளைப் பெற மார்ச் 1 முதல் வேர்ல்ட் ஆஃப் வின்னர்ஸ் இல் உங்களது பெயரை உள்ளிடுங்கள்.

இது எப்படி செயல்படுகிறது

இது எப்படி செயல்படுகிறது

o "ஹலோ ஹாங்காங் பிரச்சாரம் ஆசியா, ஐரோப்பா மற்றும் அமெரிக்காவில் உள்ள சுற்றுலாப் பயணிகளுக்கும் விமான டிக்கெட்டுகளை விநியோகிக்கிறது.

o சில டிக்கெட்டுகள் உள்ளூர் மக்கள் சர்வதேச இடங்களுக்கு இலவசமாக பயணிக்கும் வகையில் வழங்கப்படும்.

o இந்த 500,000 விமான டிக்கெட்டுகளில் Cathay Pacific, HK Express மற்றும் Hong Kong Airlines ஆகியவை மக்களுக்கு அதிக எண்ணிக்கையிலான டிக்கெட்டுகளை வழங்கும்.

o மேலும், சில டிராவல் ஏஜென்சிகள் இலவச விமான டிக்கெட்டுகளில் ஒரு பகுதியை சுற்றுலா பயணிகளுக்கு வழங்கும்.

o சில ஆண்டுகளுக்கு முன்பு 2019 இல் நடந்த போராட்டங்களுக்குப் பிறகு, நகரம் ஒரு சிறந்த மற்றும் மேம்பட்ட படத்தைப் பிரதிநிதித்துவப்படுத்த விரும்புவதால், இந்த உலகளாவிய பிரச்சாரத்தைத் தொடங்க இந்த நகரம் திட்டமிட்டுள்ளது.

ஓசியில் ஈசியாக விமான பயணம் செய்யலாம் மக்களே! இந்த அரிய வாய்ப்பை பயன்படுத்திக் கொள்ளுங்கள்!

Read more about: hong kong
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X