» »சுற்றுலாவின் போது ருசிக்க சிறந்த உணவுகள் கிடைக்கும் இடங்கள் மற்றும் டிப்ஸ்

சுற்றுலாவின் போது ருசிக்க சிறந்த உணவுகள் கிடைக்கும் இடங்கள் மற்றும் டிப்ஸ்

Written By: Udhaya

சுற்றுலா செல்ல திட்டமிட்டுவிட்டோம் என்றால், மிகமுக்கிய பிரச்னையாக வந்து நிற்பது உணவுகள்தான். சுற்றுலாவின் போது தவறான இடத்தில் உணவருந்திவிட்டால் அந்த திட்டமே பாலாகிவிடும் அளவுக்கு சிக்கல்களை உருவாக்கிவிட்டுவிடும்.

அதிலும், நெடுந்தூரம் பயணம் செல்பவர்கள் அதற்கேற்ப நீண்ட நாள்களுக்கு உணவுப்பொருள்களை எடுத்துச் செல்வதும், அல்லது உணவு சமைக்க தேவையான பொருள்களை சுமந்து செல்வதும் அவ்வளவு சுலபமான காரியம் அல்ல. அதே நேரத்தில், ஆங்காங்கே கிடைக்கும் உணவுப்பண்டங்களை கொறிப்பதும் உடலுக்கு நல்லதல்ல. சரி. அப்படியானால் என்ன செய்வது. இந்த பதிவை முழுவதும் படியுங்கள். உங்களுக்கே புரியும்.

தொலைதூரப்பயணத்துக்கு தயாராகும்போது

தொலைதூரப்பயணத்துக்கு தயாராகும்போது

நீங்கள் தொலைதூர பயணம் ஒன்றிற்கு திட்டமிட்டுள்ளீர்கள். அதிகாலை நேரத்தில் உங்கள் பயணம் தொடங்குகிறது என்றால், முடிந்தவரை வீட்டிலேயே உணவு தயார் செய்து சாப்பிடுங்கள். அந்த நேரத்தில் வெளியில் வாங்கும் உணவு முந்தைய நாளுடையதாகக்கூட இருக்கலாம்.

திட்டமிடுங்கள்

திட்டமிடுங்கள்

பொதுவாகவே இணையத்தில் வீட்டிலிருந்து பார்க்கும் அளவுக்கு உணவகங்களும், விடுதிகளும் நிறைய இருக்கின்றன. திட்டமிட்டு எங்கெங்கு உங்கள் உணவை உட்கொள்ளப்போகிறீர்கள் என்பதை முடிவு செய்துகொள்ளுங்கள்.

Native planet

போகும்வழியில்

போகும்வழியில்

செல்லும் வழியில் மோட்டல் எனப்படும் நெடுஞ்சாலை ஹோட்டல்கள் நிறைய இருக்கலாம். அதில் எவை சிறந்தவை என்று கண்டறிந்து செல்லுங்கள். ஒருவேளை எப்படி கண்டறிவது என்பதை அறிந்துகொள்ள கீழ்காணும் செய்முறைகளை கையாளுங்கள்.
Native planet

உள்ளூர் உணவுகளுக்கு

உள்ளூர் உணவுகளுக்கு

வழக்கமாக உள்ளூர் வெப்ப நிலைக்கு தகுந்தாற்போலவே அந்தந்த உணவுகள் தயாரிக்கப்படும். அதன்படி, உங்கள் உடலுக்கு ஏற்ற, உள்ளூர் தட்பவெட்பநிலைகளுக்கு தகுந்தவாறு உணவை உட்கொள்ளுங்கள்.

Youtube

உள்ளூரில் சிறந்த கடையை எப்படி கண்டுபிடிப்பது

உள்ளூரில் சிறந்த கடையை எப்படி கண்டுபிடிப்பது

சுற்றுலா சென்ற இடத்தில், உள்ளூர் மக்கள் ஒரு குறிப்பிட்ட கடையை அதிகமாக மொய்ப்பர். அந்த கடைக்கு விளம்பரமே தேவையில்லை. அதுதான் உள்ளூர் மக்கள் விரும்பும் சிறந்த உணவகமாக இருக்கும்.
Native planet

தவிருங்கள்

தவிருங்கள்

சில கடைகள் பளபளப்பாகவும் மினுமினுப்பாகவும் இருந்தும் உள்ளூர் வாசிகள் அந்த கடைபக்கம் அதிகமாக செல்லமாட்டார்கள். கூட்டமே இல்லாமல் ஒரு சிலர் சென்று வருவார்கள். அப்படிபட்ட கடைகளைத் தவிர்த்துவிடுங்கள். இதனால் உங்கள் பயணத் திட்டம் சரியான பாதையில், சரியான நேரத்தில் நடக்கும். அதனுடன் உங்கள் உடலும் கெடாமல் இருக்கும்.
Native planet

சுத்தம் சோறு போடும்

சுத்தம் சோறு போடும்

சில கடைகள் சிறியவையாக இருப்பினும் சுத்தமாக, அழகாக பராமரித்திருப்பார்கள். அப்படிபட்ட கடைகளை நாடுங்கள். அவசரம் என்று கருதி, கண்ணில் கண்ட இடங்களில் சாப்பிட்டால், கோளாறு உங்கள் உடலுக்குத்தான் என்பதை நினைவில் வையுங்கள்.
Native planet

விருந்தோம்பல்

விருந்தோம்பல்

சுற்றுலா செல்லும் இடங்களில் நன்கு உபசரிக்கும் உணவகங்களுக்கு செல்லுங்கள். ஏனெனில், சில உணவு விடுதிகளில் சரியாக உபசரிப்பு இல்லாமல், வார்த்தை சண்டைகள் மனஅழுத்தம் என ஆகிவிட வாய்ப்புண்டு. இதனால் உங்கள் பயணம் பாதிக்கப்படலாம்.
Native planet

ஆரோக்கியமான

ஆரோக்கியமான

ஆரோக்கியம் மிகவும் முக்கியமல்லவா. நிச்சயமாக ஆரோக்கியத்துக்கு குறைவான நிகழ்வுகள் ஏதும் கண்ணில் தென்பட்டால், அந்த உணவகத்தில் ஒரு நொடியும் தாமதிக்காது வெளியேறிவிடுங்கள். இதனால் உடல் உபாதைகள் நிகழ வாய்ப்புள்ளது.

Youtube

சுத்தம் செய்யும் முறை

சுத்தம் செய்யும் முறை

சில கடைகளில் ஒழுங்காக சுத்தம் செய்யமாட்டார்கள் என்பது கண்கூடாகவே தெரியும். பாத்திரங்கள், குவளைகள், சாறுபிழியும் இயந்திரங்கள் என அனைத்தையும் கவனியுங்கள். உங்கள் உடலுக்கு ஏற்காத உணவுப் பொருட்களைத் தவிர்த்துவிடுங்கள்.

Read more about: travel tips, travel, india, tour