Search
  • Follow NativePlanet
Share
» »வெறும் 500 ரூபாய்க்கு கோவா போய்டலாம் தெரியுமா? இந்த முறைய பின்பற்றுங்க!

வெறும் 500 ரூபாய்க்கு கோவா போய்டலாம் தெரியுமா? இந்த முறைய பின்பற்றுங்க!

சுற்றுலா செல்வது நம் அனைவருக்கும் விருப்பமானதுதான் என்றாலுமே, குடும்பத்துடன் செல்லும் போது மன மகிழ்வும், புத்துணர்ச்சியும் கிடைத்தாலுமே, அலுவலகத்தில் விடுப்பு, பள்ளி, கல்லூரி விடுமுறை கேட்கவேண்டும் என நம்மை சோதிப்பதற்கே சில தடைகள் வந்து விழும். ஆனால் இதைவிட பெரும்பாலோனோர்க்கு பிரச்சனையாக இருப்பது பட்ஜெட். டூர் பிளான் பண்ணறது ஒரு பக்கம் இருக்கட்டும். எத்தன ரூபாய்ல முடிக்கணும்னு ஒன்னு இருக்குல. ஸ்கூல் காலேஜ்ல கூட நம்ம கோவாவுக்கு பிளான் பண்ணியிருப்போம் ஆனா பிளான் பண்ணி எவ்வளவு செலவாகும்னு தலைக்கு இத்தனைனு சொன்னதும் அம்மாவுக்கு உடம்பு சரி இல்ல, சொந்தக் காரங்க வராங்க, வீட்டுல வேல இருக்குனு தல தெறிச்சி ஓடிடுவாங்க. கடைசியா நாலோ அஞ்சோ பேர் மட்டும் கோவா போய்ட்டு வருவோம்.

இன்னும் உங்கள்ல பல பேருக்கு கோவா பயணம் கனவாவே இருக்கும்னு என்னால புரிஞ்சிக்க முடியுது. காரணம் செலவுதான். கோவாவுக்கு போக நிறைய செலவு ஆகும்னு நீங்க நினைக்குறதுதான் உங்களோட முதல் சறுக்கல். அட.. இந்த கட்டுரைய படிங்க.. இவ்வளவு குறஞ்ச செலவுல கோவா போய்ட்டு வந்துடலாமானு யோசிப்பீங்க. அதுமட்டுமில்லங்க.. இந்தியாவுல எந்த டூர் போனாலும் இந்தமாதிரியான விசயங்கள பாலோ பண்ணா உங்க செலவு பாதிக்கு பாதியா குறஞ்சிடும்.

 செய்யக்கூடாத சில விசயங்கள்

செய்யக்கூடாத சில விசயங்கள்

நீங்க சுற்றுலா செல்ல போறீங்களா? அப்படின்னா கடைசி நேரத்துல முடிவு பண்றத எப்பவும் செய்யாதீங்க. கோவா மாதிரியான இடங்களுக்கு போக முடிவு பண்ணிட்டீங்கன்னா குறஞ்சது 2 வாரம் முன்னாடியாச்சும் திட்டமிடுங்க.

அடுத்து இன்னொரு விசயம்.. எத்தனபேரு வராங்கனு அவங்களுக்கு ஏத்தமாதிரி திட்டமிடாதீங்க. நீங்க கட்டாயம் போறீங்க அப்படின்னா உங்களுக்காக மட்டும் திட்டம்போடுங்க.. எத்தன பேரு வராங்களோ அத கணக்கு பண்ணி அவங்களுக்கு ஏத்தமாதிரி செலவ விகிதப்படுத்திக்கலாம்.

எக்காரணத்த கொண்டு திட்டம் போட்டுட்டு ஒரு சுற்றுலாவ டிராப் பண்ணாதீங்க.. அது உங்க சுற்றுலா போற எண்ணத்தையே குலைச்சிடும்.

நீங்கள்தான் ராஜா

நீங்கள்தான் ராஜா

உங்கள் உலகத்தில் நீங்கள்தான் ராஜா. உங்கள் பயணத்தை நீங்கள் திட்டமிடுகிறீர்கள். நீங்கள் மட்டுமே இந்த பயணத் திட்டத்தை மாற்றும் உரிமை உடையவர். மற்றவர்களின் பரிந்துரைகளையும் கேட்டு அதன்படி முடிவெடுக்க நீங்கள் தகுதியானவர் என உங்களை நம்புங்கள். வாருங்கள் பயணத்தில் செலவை குறைக்கும் வழிகளைக் காணலாம்.

எனக்கு எவ்வளவு தேவை?

எனக்கு எவ்வளவு தேவை?

மிக அதிக செலவு கொண்டவற்றை முதலில் திட்டமிடுங்கள். அதுலயும் உங்களுக்கு என்ன தேவைனு திட்டமிடுங்க. ஒருவேள நீங்க தனியா பயணிச்சா அது மிகவும் சுலபமானதா அமையும். கோவாவுக்கு நண்பங்ககூட பயணிச்சா அவங்க கருத்துக்களையும் கேட்டு, அதுல எவைலாம் பெரிய அளவுல செலவு இழுத்துவிடும்னு திட்டமிடுங்க.

பெரிய அப்றம் முக்கியமான செலவுகள் பத்தி குறிச்சிக்கிட்டு மொத்தம் எவ்ளோ செலவாகும்னு பாத்து வையுங்க..

 பயணிக்கும் செலவு

பயணிக்கும் செலவு

கோவா சுற்றுலாவைப் பொறுத்தவரை பயணிக்கும் செலவுதான் அதிகமா இருக்கும். அதுலயும் விமானத்துல போனா அதிக கட்டணம் செலவு செய்யவேண்டியிருக்கும். ரயிலும் பேருந்தும் கிட்டத்தட்ட ஒரே மாதிரியான செலவுதான்.

சென்னை - கோவா விமான கட்டணம் - 2250ரூ - 2500ரூ

திருச்சியிலிருந்து கோவா விமான கட்டணம் 5000ரூ அளவுக்கும், மதுரையிலிருந்து கட்டணம் 3500 ரூபாயிலிருந்து 4000 வரையும் இருக்கலாம். கோவையிலிருந்து கோவா விமான கட்டணம் 3500ரூபாயிலிருந்து தொடங்குகிறது. இதன்படி சராசரியாக திட்டமிட்டாலும் ஒரு நபருக்கு 5000 ரூபாய் விமானத்தில் பயணிக்க செலவாகிவிடுகிறது. 2 மணி நேர பயணமாக இது அமையும்.

ரயிலில் பயணித்தால்

நீங்கள் கோவா பயணத்தை முன்கூட்டியே திட்டமிட்டு ரயிலில் நிகழ்த்தலாம். ஏனென்றால் நமக்கு மிகவும் அதிக அளவில் செலவு பயணத்தில்தான் வருகிறது. அதை குறைத்தால் விமானத்தை ஒப்பிடும்போது நமக்கு அதிக நேரம் இழப்பு ஏற்படும்.

ஆனா அதுலாம் பர்வால.. ஏன்னா.. முந்தன நாள் சாயங்காலம் சென்னையில பயணத்த தொடங்குனா காலையில கோவா போய் சேர்ந்துடலாம். நீங்க இந்த பொங்கல் விடுமுறைய கூட பயன்படுத்திக்கலாம்.

 வெறும் 500ல கோவா போய்ட முடியுமா?

வெறும் 500ல கோவா போய்ட முடியுமா?

சென்னையில இருந்து கோவா 1004 கிமீ தூரத்துல இருக்கு. வெறும் 500 மட்டும் எப்படி கோவா போக போதுமானதாக இருக்கும்னு நீங்க யோசிக்கலாம். ஆனா இது ரயில்ல போகுற பயணம் என்கிறனால மிக குறைவான செலவுதான்.

இந்த வாரம் வெள்ளிக்கிழமை சாயங்காலம் 3 மணிக்கு சென்னைல டிரெய்ன் ஏற்னா அடுத்த நாள் காலையில கோவா போயி சேர்ந்துடலாம்.

ரயில் கட்டணம் - 470ரூபாய் மட்டுமே..

வர போக 1000 ரூபாய் போதும் ஒருத்தருக்கு. நீங்க எத்தன பேர கூட்டிப் போறீங்களோ அதுக்கு ஏத்தமாதிரி கட்டணத்த கணக்கு பண்ணிக்கோங்க.. எல்லாம் சரி.. ரயில் பயணத்துல அந்த கம்ஃபோர்ட் இருக்குமா.. வசதியான இனிமையான பயணம் கிடைக்குமானு கேக்குறீங்களா?

 அட்டகாசமான ரயில் பயண அனுபவம்

அட்டகாசமான ரயில் பயண அனுபவம்

நம்முடைய வாசகர் பிரபுனு ஒருத்தரு சென்னையில இருந்து கோவா போன பயணத்த பத்தி நமக்கு எழுதி அனுப்பிருக்காரு.. (நீங்களும் உங்க அனுபவத்த பத்தி எங்களுக்கு எழுதுதலாம்)

ரயில் பயணம் ரொம்ப ஆசமா இருந்துச்சி. நா நினச்சி கூட பாக்கல.. அய்யோ அது சாதாரண ரயில் பயணம் மாதிரி இல்ல. கண்ணுக்கு இனிமையான பல காட்சிகள் சேர்ந்தே அனுபவிச்சிட்டு போனோம். நண்பர்களோட போனாலும் சரி பேமிலியோட போனாலும் சரி எல்லாருமே என்ஜாய் பண்ணுவாங்க.

சுத்தமான ரயில்னும் அந்த ரயில் பத்தி கருத்து தெரிவிச்சிருக்காங்க பல பேர். சரி நாம நம்ம பயணத்துக்கு வரலாம். ஒரு டிக்கெட் விலை 470 சரி.. நான் 4 பேர் கொண்ட ஒரு பேமிலி.. எனக்கு கோவா போயிட்டு திரும்பி வர எவ்ளோ செலவாகும்னு கேக்குறவங்களுக்காக அடுத்த அய்ட்டம் ரெடியா இருக்கு..

4 பேர் கொண்ட குடும்ப பயணத்துக்கு ஆகும் மொத்த செலவு

4 பேர் கொண்ட குடும்ப பயணத்துக்கு ஆகும் மொத்த செலவு

ஒருத்தருக்கு போய் வர செலவு 1000 வகையில ஒரு 4000 போட்டுக்கோங்க. வெறும் 4000 மட்டும் போதுமான்னா அங்க ஆகுற செலவு உங்க கைக்குட்பட்டது.

நீங்கள் வாஸ்கோடா காமாவில் இறங்கியவுடன் அருகாமையில் இருக்கும் இடங்களுக்கு சென்று திரும்பினால் பெரிய அளவில் செலவு இருக்கப்போவதில்லை. அதே நேரத்தில் கோவாவின் மற்ற பகுதிகளுக்கும் பயணிக்க விரும்பினால் அதற்கு ஏற்றவாறு செலவாகும்.

மற்ற தளங்களில் சுற்றுலா செலவு

மற்ற தளங்களில் சுற்றுலா செலவு

சில சுற்றுலா இணையதளங்கள் இதற்கென ஒரு குறிப்பிட்ட கட்டணத்தை நிர்ணயித்துள்ளன. அதன்படி, 15000 ரூபாய்க்கு 4 இரவுகள் 5 பகல்கள் சுற்றுலா வாய்ப்பு அளிக்கிறார்கள். ஆனால் நாம் ரயிலில் பயணித்த நாமாகவே சென்றால் நிச்சயம் அதைவிட குறைவான செலவே ஏற்படும். குடும்பமாக கோவா செல்வதை விட இரண்டு மூன்று குடும்பங்கள் சேர்ந்து செல்வது செலவை பங்கிட்டு கொள்ள வாய்ப்பாக அமையும். முடிந்தவரை தனிக் குடும்பமாக செல்லாமல் நண்பர்களின் குடும்பத்துடன் சேர்ந்து செல்லலாம். அல்லது நண்பர்களுடன் செல்லலாம்

சரி மற்றபடி செலவைக் குறைக்க டிப்ஸ்

சரி மற்றபடி செலவைக் குறைக்க டிப்ஸ்

பெரிய அளவில் செலவு ஏற்படுத்துபவனவற்றை திட்டமிடுங்கள். விமானம், ரயில் உள்ளிட்ட முக்கிய பயணத்துக்கான செலவைத் திட்டமிட்டுக்கொள்ளுங்கள்.

உள்ளூரில் பயணிக்க வேண்டிய செலவுகளைத் திட்டமிட்டுக் கொள்ளுங்கள்.

எங்கு தங்கப் போகிறோம், எங்கெல்லாம் சுற்றப்போகிறோம் என்பதையும் திட்டமிட்டுக்கொள்ளுங்கள்.

தங்கும் இடங்களில் உணவும் கிடைக்கிறதா இல்லை தனியாக செலவு செய்யவேண்டுமா என்பதை தெரிந்துகொள்ளுங்கள்

சுற்றுலா செல்லும் முன்பு என்ன வாங்க வேண்டும் என்பதை உறுதிபடுத்தி குறித்துக் கொள்ளுங்கள். கடைசி நேரத்தில் அத்தியாவசியப் பொருள்கள் கட்டாயம் வாங்கவேண்டிய சூழ்நிலை ஏற்படும் அப்போது அதன் செலவு அதிகமா இருக்கும்.

எந்த இடத்தில் எவ்வளவு நேரம் செலவிடப் போகிறோம் என்பதை குறித்துக் கொள்ளுங்கள்.

எந்தெந்த இடங்களுக்கு நுழைவுக் கட்டணம் இருக்கிறது என்பதை தெரிந்து வைத்திருத்தல் நலம். அதற்கேற்றவாறு செலவை திட்டமிடலாம்.

எந்தெந்த இடங்களுக்கு முன்னுரிமை குடுக்க வேண்டும் என்பதை திட்டமிட்டு செயலாற்றுங்கள்.

இத்தனையும் நீங்கள் தெரிந்து வைத்திருந்தால் உங்களுக்கு எவ்வளவு தேவைப்படும் என்பதும் அநாவசிய செலவுகளையும் குறைக்கலாம்.

சுற்றுலாவின் போது கொண்டு செல்லும் பொருள்களை பத்திரமாக வைத்திருத்தல்

சுற்றுலாவின் போது கொண்டு செல்லும் பொருள்களை பத்திரமாக வைத்திருத்தல்

சுற்றுலா செல்லும்போது எடுத்துச் செல்லப்படும் பணம் உள்ளிட்ட முக்கியமான பொருள்களை பாதுகாத்தல் மிக அவசியமான அதே நேரத்தில் கொஞ்சம் கடினமான வேலையாகும். எளிதில் ஏமாந்துவிடுவோம் நாம். அதனால் நமக்கு தெரியாமலே நம்மை கொள்ளையடிப்பது ஒன்றும் பெரிய அளவிலான சாதனையாக இருக்கப்போவதில்லை.

அதுலயும் இப்பல்லாம் திருடருங்க மிக புத்திசாலித்தனமான சில விசயங்கள்ல ஈடுபட்டு திருடுறாங்க. பணத்த மொத்த மா ஒரு இடத்துல வைக்காம 3 அல்லது நான்கு இடங்கள்ல பிரிச்சி வச்சிக்குறது நல்லது.

ஏடிஎம், கிரடிட் அட்டைகள மிக மிக பத்திரமா வச்சிருக்குறதும் மிக மிக முக்கியம்.

 இது சும்மா சாம்பிள் தான்

இது சும்மா சாம்பிள் தான்

சென்னை - கோவா

ரயில் கட்டணம் - 470 ரூ
4 பேருக்கு - 1880ரூ

விமானக் கட்டணம் - 5000 ரூ (சராசரியாக)
4 பேருக்கு - 20000 ரூ

தங்கும் நாட்கள் 2
அறை வாடகை 2500ரூ
4 பேருக்கு 10000
தங்கும் நாட்களுக்கு ஏற்ப கட்டணம் மாறுபடும்.

உள்ளூரில் பயணம்
வாடகைக் கட்டணம் 5000ரூ
செல்லும் இடங்களுக்கு ஏற்ப கட்டணம் உயரும்.

இது தவிர உங்கள் உணவு, கேளிக்கைக்கு ஏற்ப மற்ற கட்டணங்களும் இருக்கிறது.

ஆனால் சராசரியான குடும்பத்து மக்கள் அதிக ஆர்ப்பாட்டமில்லாமல், கோவாவின் அழகை ரசிக்கவேண்டும் என்று நினைத்து சென்றால் அவர்களுக்கு அதிகம் செலவாகாது. குறைந்த விலையில் சராசரியான வசதிகளுடன் கூடிய பல விடுதிகளும் கோவாவில் காணமுடியும். 15000 ரூபாயிலிருந்து 20000 ரூபாய் பட்ஜெட்டுக்குள் கோவா சுற்றுலாவை அனுபவிக்கலாம்.

Read more about: travel goa
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X