Search
  • Follow NativePlanet
Share
» » ஹைதராபாத் - பாண்டிச்சேரி: தனிமையிலே ஒரு இனிமை காணிபோம்

ஹைதராபாத் - பாண்டிச்சேரி: தனிமையிலே ஒரு இனிமை காணிபோம்

தனிமையிலே ஒரு லாங் டிரைவ் போய் பார்க்கலாமா?

By Super Admin

பாண்டிச்சேரி இந்தியாவின் பெரிய மற்றும் முக்கியமான சுற்றுலாத்தல நகரமாகும். மத்திய அரசின் தலைமையில் இயங்குகின்றது பாண்டி நகரம். மொத்தம் 42 வார்டுகளை உடையது. இங்கு சுற்றிப்பார்க்க நிறைய இடங்கள் உள்ளன. கடற்கரைக்கு பேர் போனது பாண்டிச்சேரி.சரி நம் பயணத்தை ஆரம்பிப்போம்.

பாண்டிச்சேரிக்கு இரண்டு வழியில் செல்லலாம். முதல் பாதை பஞ்சார மலைகளை அடுத்து காசிபோவ்லி ஓரர நுழைவைக் கடந்து நல்கொன்டாவை அடையவேண்டும்.பிறகு கொண்டமோடு நகரைத்தாண்டி ஓங்கோல் நகரை வந்தடைந்தால் குடூர் என்னும் ஊர் வரும். இதைக் கடந்தால் புதுச்சேரி வந்துவிடும். மொத்த நேரம் 14 மணி நேரமாகும். போகும் தொலைவு 800 கிலோமீட்டர் தூரம் ஆகும்.

இன்னொரு பாதை பஞ்சார மலைகளை அடுத்து மெஹபூப்நகர் வரும், அதைத்தொடர்ந்து குர்நூல் என்னும் ஊர் வரும். பின் அங்கிருந்து போனால் நன்டியாலைச் சேரலாம். நன்டியாலைத் தொடர்ந்து புகழ்பெற்ற கடப்பா நகர் வரும்.கடப்பாவிலுரிந்து கிளம்பி ராயசொட்டி,சித்தூர் ஆகிய ஊர்களை கடந்து வருவோம். புதுச்சேரியை நெருங்குகிறோம் அதற்க்குப்பின் காஞ்சிபுரம் வந்துவிடுவோம், இதைத் தொடர்ந்து புதுச்சேரி தான்.

மொத்த நேரம் 14 மணி நேரமாகும்.போகும் தொலைவு 777 கிலோமீட்டர் தூரம் ஆகும், இந்த பாதை 23 கிலோமீட்டர்கள் முந்தய பாதையை விட குறைந்தாலும் நேரம் ஒன்றாகத்தான் இருக்கும்.

நான் இரண்டாம் பாதையை தேர்ந்தெடுத்தேன், அதிகாலையில் என் காரை எடுத்தேன்.பஞ்சார மலைகளை அடுத்து மெஹபூப்நகர் வந்தது.அங்கே ஒரு சிறிய கடையில் தேநீர் அருந்திவிட்டு என் பயணத்தைத்தொடர்ந்தேன். "ரெட் சில்லீஸ்" என்னும் ஹோட்டலில் எனது காலைச்சிற்றுண்டியை சாப்பிட்டேன்.

நல்ல காரசாரமான உணவு அது. பின் நன்டியால் நகர் அதைத்தொடர்ந்து கடப்பா நகர் வந்தது.பின் ராயசொட்டிநகர் அதைத் தாண்டி சித்தூருக்கு வந்தேன். அங்கே "நந்தி" என்னும் நெடுஞ்சாலை ஹோட்டலில் மதிய உணவை உண்டேன். களைத்து போய் வந்ததில் நல்ல பசி ஒரு பிடி பிடித்தேன். அதற்க்குபின் பயணம் தொடர்ந்தது.

ஒருவழியாக தமிழ்நாட்டிற்கு வந்தடைந்தேன், காஞ்சிபுரம் தாண்டி கடைசியாக புதுச்சேரிக்கு வண்டி நெருங்கிகொண்டிருந்தது. நெடுஞ்சாலை என்பதால் சுங்கச்சாவடி இருந்தது,பார்ப்பதற்கு நல்ல பெரிய சுங்கச்சாவடியாக இருந்தது. விடுமுறை நாட்கள் என்பதால், கொஞ்சம் கூட்டமாக இருந்தது. என் காரிற்கு 25 ருபாய் பணத்தை செலுத்தி விட்டு புறப்பட்டேன். கடைசியாக புதுச்சேரியில் வண்டி நின்றது.

வெகு நேர பயணம் என்பதால் மிகவும் களைப்பாக இருந்தது, அசந்து தூங்குவதற்கு நல்ல விடுதி வேண்டும். பாண்டிச்சேரியில் மிக பிரபலமான ஹோட்டல் என்றால் "ஹோட்டல் ப்ரோமினேட்" . இது ப்ரோமினேட் கடற்கரைக்கு வலது பக்கத்தில் உள்ளது.

உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X