Search
  • Follow NativePlanet
Share
» »காரில் டிரிப் செல்லும் போது பெட்ரோல் தீர்ந்து போனால் என்ன செய்யலாம்?

காரில் டிரிப் செல்லும் போது பெட்ரோல் தீர்ந்து போனால் என்ன செய்யலாம்?

குடும்பத்துடன் சுற்றுலா செல்ல வேண்டும் என்பவர்கள் காசை மிச்சப்படுத்துவதற்காக ரயில், பஸ் போன்ற போக்குவரத்துக்களை தான் பெரும்பாலும் தேர்வு செய்வார்கள். ஆனால் கார் வைத்திருப்பவர்கள் அல்லது புதிதாக கார் வாங்கி இருப்பவர்கள் அல்லது குடும்பத்துடன் தனியாக ஜாலியாக சென்று விட்டு வரலாம் என நினைப்பவர்கள் காரில் பயணம் செய்ய விரும்புவார்கள். இப்படி சொந்த வாகனங்களில் செல்லும் போது அலைச்சல், பைகளை தூக்கும் சிரமம் குறையும். ஆனால் சொந்த வாகனங்களில் செல்பவர்களுக்கு மற்றொரு முக்கியமான சிரமம் ஏற்பட அதிக வாய்ப்புள்ளது. தூரமாக இருக்கும், புதிதான ஒரு இடத்திற்கு பயணம் செய்யும் போது பலரும் சந்திக்கும் ஒரு பிரச்சனை திடீரென காரில் பெட்ரோல் அல்லது டீசல் தீர்ந்து போவது தான்.

If your vehicle runs out of fuel during trip try this travel idea

குடும்பத்துடன் எங்காவது வெளியில் பயணம் செய்யும்போது அல்லது ஜாலி ட்ரிப் செல்லும்போது காரில் பெட்ரோல் அல்லது டீசல் தீர்ந்து போனால் அது மிகப் பெரிய சிரமத்தை ஏற்படுத்தும். இது ஒட்டுமொத்த சுற்றுலா மூடையும் கெடுத்து விடும். சில நேரங்களில் பெட்ரோல் இருக்கும், பெட்ரோல் தீர்ந்து போவதற்கு முன்பாக நாம் செல்ல வேண்டிய இடத்திற்கு சென்று விடலாம், வழியில் இருக்கும் பெட்ரோல் பங்கில் பெட்ரோல் நிரப்பி கொள்ளலாம் என்ற நம்பிக்கை காரணமாக காரில் புறப்பட்டு விட்டு, பிறகு பெட்ரோல் இல்லாமல் கார் பாதி வழியில் நின்று போய், மிகவும் சிரமப்பட்டு ஊர் போய் சேர்ந்தவர்கள் பலரும் இருக்கிறார்கள்.

ஒரு இடத்திற்கு புதிதாக செல்லும் போது வழியில் எந்தெந்த இடங்களில் பெட்ரோல் பங்க்குகள் உள்ளது, எத்தனை கி.மீ., தூரத்திற்கு ஒரு பங்க் உள்ளது, எத்தனை டோல்கேட்கள் உள்ளன என்பது போன்ற ரோடு மேப்களை நிச்சயம் தெரிந்து வைத்து கொள்ள வேண்டும். அப்படி நீங்கள் ஒரு வேலை காரில் டிரிப் செல்லும் போது உங்கள் காரில் பெட்ரோல் அல்லது டீசல் தீர்ந்து விட்டால் என்ன செய்யலாம் என்பதற்கு வாருங்கள் நாங்கள் ஐடியா தருகிறோம்.

If your vehicle runs out of fuel during trip try this travel idea

காரில் நீண்ட தூரம் பயணம் செய்பவர்களின் வசதிக்காக இந்தியன் ஆயில் கார்ப்பரேஷன் நிறுவனம் புதிய வசதி ஒன்றை ஏற்படுத்தி தந்துள்ளது. இந்தியன் ஆயில் ஃபியூயல் (Indian Oil Fuel) என்ற ஆப்பை அறிமுகம் செய்துள்ளது. இந்த ஆப் மூலமாக நீங்கள் எங்கிருந்து வேண்டுமானாலும் ஆன்லைனில் பெட்ரோல் அல்லது டீசலை ஆர்டர் செய்து கொள்ளலாம். இந்த ஆப்பை கூகுள் பிளே ஸ்டோரில் இருந்தோ அல்லது https://apps.apple.com/in/app/fuel-call/id1620299958 என்ற ஆப் ஸ்டோரில் இருந்தோ டவுண்லோடு செய்து வைத்துக் கொள்ளுங்கள்.

ஆப் பயன்படுத்தும் முறை :

*நீங்கள் பயணம் செல்லும் வழியில் பாதியில் கார் நின்று விட்டால், உடனடியாக இந்த ஆப்பை பயன்படுத்தி, ஆன்லைனில் உங்களுக்கு அருகில் இருக்கும் பெட்ரோல் பங்க்கில் பெட்ரோல் அல்லது டீசல் ஆர்டர் செய்ய வேண்டும்.

* உடனடியாக உங்களுக்கு ஒரு ஓடிபி (OTP)அனுப்பப்படும்.

* உங்களுக்கு ஓடிபி வந்ததும், ஆர்டர் கன்ஃபார்ம் செய்து, அருகில் இருக்கும் பெட்ரோல் பங்க்கில் இருக்கும் வாகனம் மூலம் நீங்கள் இருக்கும் இடத்திற்கே வருவார்கள்.

* உங்களுக்கு வந்திருக்கும் ஓடிபி.,ஐ அவர்களிடம் கூறினால், அவர்கள் நீங்கள் ஆர்டர் செய்த பெட்ரோல் அல்லது டீசலை நிரப்பி தருவார்கள்.

* யுபிஐ, டெபிட் கார்டு அல்லது கிரெடிட் கார்டு என எந்த வழியில் வேண்டுமானாலும் பணத்தை செலுத்தலாம் நீங்கள் செலுத்தலாம்.

* ஒருவேளை நீங்கள் உங்களின் ஆர்டரை கேன்சல் செய்தால், அதற்கு ரூ.100 அபராத கட்டணமாக வசூல் செய்து விடுவார்கள்.

இதே போல் இந்தியன் ஆயில் நிறுவனத்தின் ஆப் மூலமாக எந்த இடங்களில் இருந்தும் நீங்கள் பெட்ரோல், டீசல் ஆர்டர் செய்து பெற்றுக் கொள்ள முடியும். பயன்படுத்துவதற்கு எளிதான இந்த ஆப்பில் அடுத்த பெட்ரோல் பங்க் எங்கு உள்ளது என்பது போன்ற தகவல்களையும் நீங்கள் பெற்றுக் கொள்ளலாம். அதே போல் நீங்கள் ஆர்டர் செய்த பெட்ரோல், டீசலை எப்போது உங்களுக்கு கிடைக்கும் என்பதையும் உங்ளால் டிராக் செய்ய முடியும்.

இந்த ஆப்பை பயன்படுத்தி எந்தவித சிரமமும் இல்லாமல் ஜாலியாக, எந்த சிரமமும் இல்லாமல் உங்களின் டிரிப்பை ஜாலியாக என்ஜாய் செய்ய முடியும். ஆரம்பத்தில் கனரக வாகனங்களுக்கு மட்டும் இந்த சேவையை வழங்கி வந்த இந்தியன் ஆயில் கார்ப்பரேஷன், தற்போது வாடிக்கையாளர்கள் அனைவருக்கும் இந்த சேவை வழங்குகிறது. இந்தியன் ஆயில் கார்ப்பரேஷனின் இந்த புதிய சேவை வாடிக்கையாளர்கள் மத்தியில் பெரும் வரவேற்பு பெற்றுள்ளது.

More News

    Read more about: travel
    Notifications
    Settings
    Clear Notifications
    Notifications
    Use the toggle to switch on notifications
    • Block for 8 hours
    • Block for 12 hours
    • Block for 24 hours
    • Don't block
    Gender
    Select your Gender
    • Male
    • Female
    • Others
    Age
    Select your Age Range
    • Under 18
    • 18 to 25
    • 26 to 35
    • 36 to 45
    • 45 to 55
    • 55+