» »இமா கெய்தால் - 5000 பெண்களால் இயங்கும் 500 வருட பழமையான சந்தை

இமா கெய்தால் - 5000 பெண்களால் இயங்கும் 500 வருட பழமையான சந்தை

Posted By: Udhaya

உலகளாவிய பொருளாதாரத்தில் சாமானியனும் பங்குகொண்டுவிட்ட பின்பு, இங்கு எல்லாவிதமான பொருள்களும் எல்லாருக்கும் புழக்கத்தில் வரும்படி ஆகிவிட்டது. பொதுவாகவே நாம் வீட்டிற்காக பொருள்கள் வாங்கும்போது அனைத்து வகையான பொருள்களும் ஒரே இடத்தில் கிடைக்கும்படியான இடத்தைத் தேர்வு செய்வோம்.

அந்த இடம்தான் நம் பகுதியின் மிகப்பெரிய சந்தையாக இருக்கும். அப்படி மணிப்பூர் மாநிலத்தின் பெரிய சந்தைதான் இமா கெய்தால்.

இதன் சிறப்புகளையும், பெருமைகளையும் இந்த பகுதியில் காணலாம்.

ஆசிய அளவில் பெரிய சந்தை

ஆசிய அளவில் பெரிய சந்தை

மணிப்பூர் மாநிலத்தில் மட்டுமல்ல, நாட்டிலேயே ஏன் ஆசியாவிலேயே மிகப் பெரிய சந்தை இதுதான். அதிலும் இதுமிகவும் பழமையானது.

PP Yoonus

எத்தனை வருட பழமை

எத்தனை வருட பழமை

பழமை என்றால் ஏதோ 10 இருபது வருடங்கள் அல்ல.. ஐநூறு வருட பழமையான சந்தை இதுவாகும்.

Anilakeo

மகளிர் மட்டும்

மகளிர் மட்டும்

மகளிர் பேருந்து கேள்விப்பட்டிருப்பீர்கள். மகளிர் மட்டுமே நடத்தும் இந்தியாவின் மிகப்பெரிய சந்தை இதுவாகும்.

Herojit th

 பெண்களின் போர்

பெண்களின் போர்

இந்த பெண்களுடன் மல்லுக்கட்டுவது பெரிய அக்கப்போராகவா இருக்குனு வாய்வார்த்தைகளில் நம்மில் பலர் கேலிக்காக சொல்வதுண்டு. அப்படி பெண்கள் வாய்வார்த்தை சண்டைகளில் மட்டுமல்ல உடலளவிலும் சண்டை இடுவதற்கு பலமானவர்களாகவே இருந்தனர். 1939 களிலேயே... இதில் என்ன பிரமாதம் தமிழகத்தில் கூட வேலுநாச்சியார் போன்ற பல பெண்கள் அதற்கு முன்னரே இருந்திருக்கிறார்களே என்று கேட்கலாம். எனினும் அடக்குமுறைக்கு எதிராக களம் கண்ட இவர்களின் பெருமையும் போற்றுதலுக்குரியதே.

ஆங்கிலேயர்களுக்கு விலைபோன உள்ளூர் ஆட்சியளார்கள்

ஆங்கிலேயர்களுக்கு விலைபோன உள்ளூர் ஆட்சியளார்கள்

ஆங்கிலேயர்களின் ஆட்சிக்கு முடிவு கட்டும் காலக்கட்டம் அது. உள்ளூர் ஆட்சியாளர்கள் மக்களுக்கு ஆதரவாக இல்லாமல், ஆங்கிலேயர்களுக்கு ஆதரவாக நடந்துகொண்டனர். இதனால் இந்த இமா கெய்தான் சந்தையை விற்க ஆங்கிலேய அரசு முடிவு கட்டியது. இதனால் கொதித்தெழுந்த பெண்கள் அதிகாரத்துக்கு எதிராக தங்கள் குரலை எழுப்பினர்.

OXLAEY.com

சுதந்திரப் போராட்டம்

சுதந்திரப் போராட்டம்

தொடக்கத்தில் இந்த சந்தையில் ஆண்கள்தான் வியாபாரம் செய்து வந்தனராம். ஆங்கிலேயர்களுக்கு எதிரான போராட்டத்தில் ஆண்கள் கலந்து கொள்ளசென்றதால் பெண்கள் அவர்களின் குடும்பத்தைக் காப்பாற்ற தொழிலில் இறங்கிவிட்டனராம். அன்றிலிருந்து இன்றுவரை பெண்களே வியாபாரத்தை கவனித்து வருகின்றனர் என்கிறது இன்னொரு தகவல்.

Meghroddur

இரண்டாம் உலகப்போர்

இரண்டாம் உலகப்போர்

இரண்டாம் உலகப்போரின்போது இறுதிக்கட்டத்தில்தான் பெண்கள்போர் என்றழைக்கப்பட்டு வரும் நுபி லான் முடிவுக்கு வந்தது. ஆங்கிலேயப் படைகள் உலகப்போரில் கவனம் செலுத்தவே, இந்த போர் சமரசத்துக்குள்ளானது.

Petekai96

பெண்களுக்கு மட்டுமே உரிமை

பெண்களுக்கு மட்டுமே உரிமை

பெண்கள் மட்டுமே இங்கு வியாபாரம் செய்ய அனுமதி அளிக்கப்படுகிறது. வெகு தொலைவிலிருந்து வரும் பெண்களுக்கு இங்கேயே குறைந்த செலவில் தங்கிக்கொள்ள இடமும் அளிக்கப்படுகிறது.

Dirklaureyssens -

 இமா சங்கம்

இமா சங்கம்

இங்குள்ள உறுப்பினர்கள் அடங்கிய சங்கம், இவர்களுக்கு பண உதவி அளித்து, வியாபாரத்துக்கு மூலதனம் செய்து, பின் குறிப்பிட்ட தொகையை கடனாக திரும்பப் பெற்றுக்கொள்கிறது. பெண்களின் வாழ்வாதாரம் பாதிக்கப்படாமல் இருப்பதற்காக, வியாபார ஆலோசனைகளையும் வழங்கிவருகிறது.

PP Yoonus

 சந்தை

சந்தை

இங்கு காய்கறிகள், பழவகைகள், துணிமணிகள், அலங்காரப்பொருள்கள் என பெரும்பாலும் எல்லாமுமே விற்கப்படுகிறது.

cyberdura

எப்படி செல்லலாம்

எப்படி செல்லலாம்

புதுதில்லி, கொல்கத்தா, கவுகாத்தியிலிருந்து இம்பாலுக்கு அடிக்கடி விமான வசதிகள் உள்ளன. இமா கெய்தாலிருந்து இம்பால் விமான நிலையம் 8 கிமீ தொலைவில் அமைந்துள்ளது.

சாலை மற்றும் ரயில்

அஸ்ஸாம், திரிபுரா, மிசோரம், நாகலாந்து போன்ற அண்டை மாநிலங்களிலிருந்து எளிதில் சாலை வழியாக அடையலாம். ரயிலில் ஜிரிபாம் - சிலிச்சார் விரைவு ரயலில் அடையலாம்

அருகிலுள்ள சுற்றுலாத் தளங்கள்

அருகிலுள்ள சுற்றுலாத் தளங்கள்

கங்க்லா கோயில், அருங்காட்சியகம், கங்க்லா கோட்டை, மணிப்பூர் மிருகக்காட்சி சாலை என எண்ணற்ற இடங்கள் உள்ளன.

Herojit th

இப்போதே பெறுங்கள் சிறந்த சலுகைகளைப் பயணங்களிலும், பயண டிப்ஸ்களும், பயணக் கதைகளும் உடனுக்குடன்