Search
  • Follow NativePlanet
Share
» »இந்தியாவிலேயே மிக நீளமான சுரங்கப்பாதை இதுதானாம் – அடேங்கப்பா இவ்வளவு பெருசா?

இந்தியாவிலேயே மிக நீளமான சுரங்கப்பாதை இதுதானாம் – அடேங்கப்பா இவ்வளவு பெருசா?

இந்தியா பல இயற்கை அதிசயங்களாலும் மனிதர்களால் உருவாக்கப்பட்ட அதிசயங்களாலும் சூழப்பட்ட ஒரு அழகிய நாடு. உலகிலேயே மிகப்பெரிய சிலை, மிகப்பெரிய ரயில்வே பாலம், மிகப்பெரிய சிவன் சிலை, மிக நீண்ட பாலம் என பற்பல கட்டுமானங்களை கொண்டுள்ளது. அந்த வரிசையில் ஜம்மு மற்றும் காஷ்மீரில், இந்திய ரயில்வே 12.89 கிலோமீட்டர் சுரங்கப்பாதையை உருவாக்கி முடித்துள்ளது. இது தான் இந்தியாவிலேயே மிக நீண்ட சுரங்கப்பாதையாம்! 'எஸ்கேப் டன்னல்' என்று அழைக்கப்படும் இந்த அழகிய சுரங்கப்பாதையில் பல சிறப்பம்சங்கள் நிறைந்துள்ளன. இதோ நீங்களே பாருங்களேன்!

உதம்பூர் ஸ்ரீநகர் பாரமுல்லா ரயில் இணைப்பில் புதிய சுரங்கப்பாதை

உதம்பூர் ஸ்ரீநகர் பாரமுல்லா ரயில் இணைப்பில் புதிய சுரங்கப்பாதை

ஜம்மு மற்றும் காஷ்மீரில் உள்ள உதம்பூர் ஸ்ரீநகர் பாரமுல்லா ரயில் இணைப்பின் (USBRL) 111 கிமீ கட்டுமானத்தில் உள்ள பனிஹால்-கத்ரா பிரிவில் இந்திய ரயில்வே சமீபத்தில் ஒரு சுரங்கப்பாதையை நிறைவு செய்தது. 12.89 கிமீ சுரங்கப்பாதை இந்தியாவின் மிக நீளமான 'எஸ்கேப் டன்னல்' என்று கூறப்படுகிறது. அவசர காலங்களில் மீட்புப் பணியை எளிதாக்கும் வகையில் இந்த சுரங்கப்பாதை அமைக்கப்பட்டுள்ளது என்று ரயில்வே அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

பல இணை ஆறுகள் வழியே செல்லும் சுரங்கப்பாதை

பல இணை ஆறுகள் வழியே செல்லும் சுரங்கப்பாதை

செனாப் நதியின் கோடா மற்றும் குந்தன் நல்லா இணை ஆறுகள் வழியே இந்த பாதை பயணிக்கிறது. இதனால், கட்டுமானப்பணியாளர்கள் தோண்டும் பணியை மேற்கொள்ளும் போது சவால்களை எதிர்கொண்டனர். மத்திய மந்திரி டாக்டர் ஜிதேந்திர சிங் தனது ட்விட்டர் பக்கத்தில் சுரங்கப்பாதையின் வீடியோவை பதிவிட்டு, " இந்தியா இன்னொரு மைல்கல்லை எட்டியது" என்று பெருமையாக ட்வீட் செய்துள்ளார்.

குதிரைக் காலணி வடிவில் டன்னல்

குதிரைக் காலணி வடிவில் டன்னல்

குதிரைக் காலணி வடிவிலான இந்த 'எஸ்கேப் டன்னல்' ஆனது, தெற்குப் பகுதியில் உள்ள சம்பர் ஸ்டேஷன் முற்றத்தையும் மற்றும் டி-50 சுரங்கப்பாதையையும் இணைக்கிறது. சம்பரில் தெற்கு முனையின் உயரம் சுமார் 1400.5 மீ, வடக்கு முனை 1558.84 மீ ஆகும். இது பார்ப்பதற்கு மிகவும் வித்தியாசமாக இருக்கிறது.

T-49 தான் இந்தியாவிலேயே மிக நீளமான சுரங்கப்பாதை

T-49 தான் இந்தியாவிலேயே மிக நீளமான சுரங்கப்பாதை

T-49 என்றழைக்கப்படும் இந்த சுரங்கப்பாதை இரட்டைக் குழாய் சுரங்கப்பாதையாகும், இது ரயில்வேயின் படி, 33 குறுக்கு வழிகளுடன் இணைக்கப்பட்ட முக்கிய சுரங்கப்பாதை மற்றும் இந்த 'எஸ்கேப் டன்னல்' ஆகியவற்றை உள்ளடக்கியது. USBRL திட்டத்தின் ஒரு பகுதியாக கட்டப்பட்ட இந்த பனிஹால்-கத்ரா சுரங்கப்பாதை, மொத்தமுள்ள 272 கி.மீ திட்டத்தில் 161 கி.மீ ஏற்கனவே இயக்கப்பட்டு செயல்பாட்டில் உள்ளது.

நவீன தொழில்நுட்பங்களை பயன்படுத்தி கட்டப்பட்ட சுரங்கப்பாதை

நவீன தொழில்நுட்பங்களை பயன்படுத்தி கட்டப்பட்ட சுரங்கப்பாதை

இது பனிஹால்-கத்ரா வழித்தடத்தில் உள்ள நான்காவது சுரங்கப்பாதை ஆகும். புதிய ஆஸ்திரிய சுரங்கப்பாதை முறை (NATM) என்ற சுரங்கப்பாதையை வெடிப்பு மற்றும் துளையிடல் செயல்முறைகளின் நவீன நுட்பத்தைப் பயன்படுத்தி கட்டியுள்ளது. சுரங்கப்பாதை T-49 என்பது இரட்டைக் குழாய் சுரங்கப்பாதையாகும், இது பிரதான சுரங்கப்பாதை (12.75 கிமீ.) மற்றும் எஸ்கேப் டன்னல் (12.895 கிமீ.) 33 குறுக்கு வழிகளுடன் இணைக்கப்பட்டுள்ளது.

T49 இப்போது இந்தியாவின் மிக நீளமான போக்குவரத்து சுரங்கப்பாதை ஆகும். இந்த சுரங்கப்பாதை டிசம்பர் 15, 2022 அன்று திறக்கப்பட்டுள்ளது. இனி நீங்களும் ஜம்மு & காஷ்மீர் செல்லும் போது இந்த மிக நீண்ட சுரங்கப்பாதை வழியே பயணித்து சாகசத்தை அனுபவிக்கலாம்!

Read more about: jammu amp kashmir jammu kashmir
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X