Search
  • Follow NativePlanet
Share
» »செல்ஃபி எடுப்பதில் இந்தியா முதலிடம்! உயிரை விடுவதிலும்!

செல்ஃபி எடுப்பதில் இந்தியா முதலிடம்! உயிரை விடுவதிலும்!

செல்ஃபி மோகத்தால் உயிரை காவு வாங்கும் அபாயமான சுற்றுலாத் தளங்கள் பற்றி இந்த பதிவில் காண்போம்

செல்ஃபி எடுத்து சமூக வலைத்தளங்களில் அப்டேட் பண்லனா நம்மில் பலருக்கு தூக்கமே வராது. சிலர் எப்பவாது வெளிய போகும்போதோ, திருமணம் போன்ற விசேச நாள்களிலோ செல்ஃபி எடுப்பாங்க. இவங்களலாம் பெருசா எடுத்துக்கத் தேவையில்ல. ஆனா ஒரு சிலர் இருக்காங்க. வீர தீர செயல்கள் புரிந்து அப்பப்பா வாவ், மாஸ்டா, செம்மடா என்று நண்பர்களிடையே பெயர் எடுக்கவேண்டும் என்ற நோக்கில் அபாயகரமான இடங்களில் நின்று புகைப்படம் எடுப்பார்கள். கரணம் தப்பினால் மரணம் என்பதுபோல விழுந்து இறந்தவர்கள் பலர். அதுபோன்ற இடங்களுக்கு சென்றால் மிகவும் பாதுகாப்பாக இருக்கவேண்டும்.

இங்கு குறிப்பிட்டுள்ள இடங்கள் இந்தியாவிலேயே அதிக செல்ஃபி விபத்துகள் நடந்த இடங்கள் ஆகும். இங்கெல்லாம் சுற்றுலா செல்லும்போது கொஞ்சம் அதீத கவனமா இருங்க....

 புக்தல் மடாலயம்:

புக்தல் மடாலயம்:

புக்தல் மடாலயம், பார்வையாளர்களின் கண்களை கவரும் வகையில் அமைந்த்துள்ளது. இது ஒரு பெரிய குகையின் வெளியே கட்டப்பட்டுள்ளது. இந்த குகையின் வாசலில் லுங்நாக்(Lungnak) நதி பாய்ந்து ஓடுகிறது. புக்தல் மடாலயம், ஷான்ஸ்கரின் தனிமைப்படுத்தப்பட்ட மடாலயமாகும். 12 ஆம் நூற்றாண்டின் துவக்கத்தில் நிறுவப்பட்ட இந்த மடத்தில் உள்ள அழகான சுவரோவியங்கள், இந்திய பாணியிளான கலையை வெளிப்படுத்துகின்றன.

en.wikipedia.org

பாஸ்டர் மாவட்டம், சட்டீஸ்கர்

பாஸ்டர் மாவட்டம், சட்டீஸ்கர்


இங்கு பெரும்பாலும் நக்ஸல்களின் நடமாட்டம் இருப்பதாக கூறப்படுகிறது. இது மிகவும் பயங்கரமான இடமாக சுற்றுலாப் பயணிகளால் பார்க்கப்படுகிறது. ஆனால் அதுவல்ல பிரச்னை. இங்குள்ள காடுகளில் ஓடும் நதிகள் மிகவும் ஆக்ரோசமானவை என்று அறியப்படுகிறது.

தீரத்கர் எனப்படும் நீர்வீழ்ச்சி சற்று ஆபத்தானது. அழகென்றாலே ஆபத்துதானே. இங்கு நின்று செல்ஃபி எடுத்து விபத்தில் சிக்கியவர்கள் ஏராளமானவர்கள்.

Theasg sap

தார் பாலைவனம்

தார் பாலைவனம்

மணற்பாங்கான இடம்.. சூடான சூழ்நிலையென முற்றிலும் வித்தியாசமான சூழலில் சுற்றுலா செல்ல அனைவருக்கும் ஆவல் இருக்கும்தான். ஆனால் அதே ஆவலில் மணலில் கால்புதைந்தபடி செல்ஃபி எடுக்க முயன்றால் கோப்ரா கோபப்பட்டு ஒரு போடு போட்டுவிடுவார்.

பாம்புகள் நிறைந்து காணப்படும் தார் பாலைவனத்தில் கண்களுக்கு தெரியாதவாறு மணல் நிறத்திலேயே பாம்புகள் வசிக்கின்றன.

கருப்பு கோப்ரா, மணற்பாம்பு, காட்டுபூனை என நிறைய உயிரினங்கள் இங்கு வாழ்கின்றன.

wikipedia

லம்டிங் - ஹாப்லாங் ரயில்பாதை

லம்டிங் - ஹாப்லாங் ரயில்பாதை

இந்தியாவின் மிக பயங்கரமான ரயில் தடங்களுள் ஒன்று லம்டிங் - ஹாப்லாங் ரயில்பாதை ஆகும்.

ரயில் செல்லும் வழியில் இருக்கும் இயற்கை காட்சிகள் உங்களை மெய்மறக்கச் செய்யும். இதனால் உங்களையே மறந்து நீங்கள் புகைப்படங்கள், வீடியோ எடுக்கும்போது விபத்துக்கள் நிகழலாம்.

அதுமட்டுமின்றி இங்கு திருட்டுகளும், கொள்ளைகளும் நிறைய நடக்கின்றதாம்.

பாம்பன் பாலம்

பாம்பன் பாலம்

உறுதியானது தரமானது பழமையானதுனு நீங்க கேள்விபட்டிருக்கும் ராமேஸ்வரம் அருகிலுள்ள பாம்பன் பாலம் மிகவும் ஆபத்தானதும் கூட.

இங்கு செல்ஃபி எடுக்க முயன்று விபத்துக்குள்ளானவர்கள் அதிகம். பெரும்பாலும் உயிர் சேதம் நிகழாது என்றாலும் மிகவும் ஆபத்தான இடமாக இது பார்க்கப்படுகிறது.

பாம்பன் பாலத்தின் அழகில் மெய்மறந்து கவனம் சிதறியவர்கள் விபத்துக்குள்ளாவர்கள் என்பதை மனதிற்கொள்க.


Rockfang

சிஜூ - டிம் குகைகள் மற்றும் உயர்ந்த பாலங்கள்

சிஜூ - டிம் குகைகள் மற்றும் உயர்ந்த பாலங்கள்

உலகின் மிக அபாயமான இடங்களில் ஒன்றாக உள்ள இந்த இடம் மேகாலயாவில் உள்ளது.

உலகில் பலருக்கு மேகாலயா மிகவும் அழகான இடமாக தெரிந்திருக்கும், அதே நேரத்தில் மேகாலயாவின் ஆபத்தை பற்றி அறிந்திருக்கிறார்களா என்பது கேள்விக்குறி.

ஏனெனில் மேகாலயாவில், குறிப்பாக சிஜூ டிம் குகைகளில் சுற்றுலா செல்பவர்கள் அதிகம் விபத்துக்குள்ளாகிறார்கள். அதற்கு காரணம் செல்போன் உபயோகிப்பதுதான்.

செல்ஃபி மோகம் சும்மா விடுமா என்ன?

சம்பல் பள்ளத்தாக்கு

சம்பல் பள்ளத்தாக்கு

மத்திய இந்தியாவில் அமைந்துள்ளது இந்த பள்ளத்தாக்கு. இங்கு ராஜஸ்தானிலிருந்து தோன்றிய நதி மத்தியபிரதேசத்தின் வழியாக பாய்ந்து உத்திரப்பிரதேசத்தை அடைகிறது.

மாசுபாடற்ற நதியான இது மிகவும் ஆபத்தான நதியாகவும் பார்க்கப்படுகிறது.

Jangidno2

 மானசரோவர்

மானசரோவர்

மானசரோவர் ஏரி மிகவும் அழகாகவும், கண்ணுக்கு இனிமையாகவும் இருக்கும் என்பது நம்மில் பலருக்கு தெரி்ந்த விசயம்தான்.

இந்தியாவிலேயே மிக அதிக நபர்களால் அறியப்பட்ட நதி இதுதானாம். அதிகம் சுற்றுலாப் பயணிகளை ஈர்த்த இந்த நதி அவர்களில் பலரை காயப்படுத்தியும் விடுகிறது.

அழகை தன்னுடன் புகைப்படமெடுத்துக்கொள்ள முயன்று உடலில் தழும்புடன் திரிகின்றனர் பலர்.

Jean-Marie Hullot

ஹெமிஸ் தேசிய பூங்கா

ஹெமிஸ் தேசிய பூங்கா


ஹெமிஸ் தேசிய பூங்கா இந்தியாவின் மிக உயரமான பூங்காவாக உள்ளது. அதாவது இது ஜம்மு காஷ்மீரின் லடாக் பகுதியில் அமைந்துள்ளது.

நந்தா தேவி பல்லுயிர் காடுகளின் ஒரு பகுதி இந்த பூங்காவாகும். பனிச்சிறுத்தை உட்பட பல உயிரினங்கள் இந்த பூங்காவில் வாழ்ந்து வருகின்றன.

wikipedia

கிஸ்ட்வார் கைலாஷ் சாலை

கிஸ்ட்வார் கைலாஷ் சாலை

இந்தியாவின் மிக பயங்கரமான சாலை என்றால் அது இதுதான் என்று நீங்களே சொல்வீர்கள்.

மிக குறுகிய பாதையில் இரண்டு வழித்தடத்திலும் வாகனங்கள் பயணிக்கின்றன. தடுப்புச் சுவர்கள் கூட அதிகம் இல்லை. உயிருக்கு உலை வைக்கும் இந்த பாதையில் செல்லும்போது செல்ஃபி எடுத்தால்... எமன் பாசக்கயிற்றை கொடுத்து தூக்கிச் சென்றுவிடுவான்.

Read more about: travel meghalaya rameshwaram
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X