» »வாங்க, ரஜினியுடன் போட்டோ எடுத்துகலாம்!

வாங்க, ரஜினியுடன் போட்டோ எடுத்துகலாம்!

Written By: Staff

லண்டன் மேடம் டுஸாட்ஸ் மெழுகுச்சிலை மியுசிய‌த்தைப் பற்றி பத்திரிகைகளில் படித்திருப்பீர்கள். இந்த மெழுகுச்சிலை மியுசியத்திற்கு, உலகம் முழுதும் கிளைகள் இருக்கின்றன. அடுத்த ஆண்டில், டெல்லியில், இந்த அருங்காட்சியகத்தின் இந்தியக் கிளை திறக்கவிருக்கிறது. ஆனால், நம் தமிழ் நாட்டில், கன்யாகுமரியில், இதற்கு ஈடாக ஒரு மெழுகு மியுசியம் இருப்பது எத்தனை பேருக்குத் தெரியும் ? இது போல, இந்தியாவில் 4 சிறந்த மெழுகுச்சிலை மியுசியங்களைப் பார்க்கலாம்.

பே வாட்ச் பொழுதுபோக்குப் பூங்கா, கன்யாகுமரி

உங்கள் விட்டு குட்டீஸ் ரஜினி ரசிகரா ? தலைவரோடு ஒரு ஃபோட்டோ எடுத்துக்கொள்ள வேண்டும் என்று மிகவும் அடம்பிடிக்கிறதா ? ரஜினியை நேரில் பார்த்து ஃபோட்டோ எடுக்கும் வரையில், அவசரத்திற்கு, சின்ன ஆசையாக, ஒரு ஃபோட்டோ எடுத்துக்கொள்ள, பே வாட்ச் பொழுதுபோக்குப் பூங்காவில் உள்ள மியுசிய‌த்திற்கு வாருங்கள்.

அற்புதமான கலைஞர்களைக் கொண்டு தத்ரூபமாக மெழுகில் உருவாக்கப்பட்ட கலைஞர்கள், தலைவர்கள், விஞ்ஞானிகள். ஒபாமா, ஐன்ஸ்டீன், காந்தி, அப்துல் கலாம் என்று பெரும் மனிதர்களை அழகாய் மெழுகில் வடித்திருக்கிறார்கள்.

இதோடு, 3D ஓவியங்களுக்கென்று தனியறை இருக்கிறது. இந்த அருங்காட்சியகத்தில், மக்கள் அதிகம் விரும்பிப் பார்ப்பது இந்த 3D அரங்கில் உள்ள ஓவியங்களை.

மதர்ஸ் மெழுகு மியுசியம், கொல்கத்தா

Tagore

Photo Courtesy : Mother'swaxmuseum

தாகூர் ஒரு புத்தகம் படித்துக் கொண்டிருக்கிறார்; கிஷோர் குமாரும், லதா மங்கேஷ்கரும் பாடிக் கொண்டிருக்கிறார்கள்; மிதுன் சக்ரபர்த்தி நடனம் ஆடிக் கொண்டிருக்கிறார். இப்படி ஒரு காட்சியை நீங்கள் கற்பனை செய்ய முடியுமா ? மதர்ஸ் மெழுகு மியுசியத்திற்குச் சென்றால் இதை ரசிக்க முடியும். சுசந்தா ரே என்னும் கலைஞர் இவைகளை உருவாக்கியுள்ளார்.

சுனில் மெழுகு மியுசியம், லோனாவாலா

பூனேவிற்கு பக்கத்தில் இருக்கும் அழகிய மலை வாசஸ்தலம். மழைக் காலத்தில் இந்த ஊரைக் காண்பதற்கு இந்தியா முழுதுமிருந்து பலர் வருகின்றனர். இந்த ரம்மியமான ஊரில் இருக்கிறது : சுனில் செலிப்ரிட்டி மியுசியம்.

Sunil_Museum

Photo Courtesy : celebritywaxmuseum

ஏ.ஆர் ரஹ்மான், பிரபு தேவா, அன்னா ஹசாரே என்று பல பிரபலங்களுடன் நீங்கள் போட்டோ எடுத்துக் கொள்ளலாம்.

கே தேவ் பூமி மெழுகு மியுசியம், மசூரி

மசூரி என்றவுடன் மலைகள், நீர்வீழ்ச்சிகள், புகழ் பெற்ற இந்திய எழுத்தாளர் ரஸ்கின் பாண்ட் நினைவிற்கு வரலாம். இதைத்தாண்டி இங்கு ஒரு அருமையான மெழுகு மியுசியம் இருக்கிறது. சுவாமி விவேகானந்தர், அன்னை தெரசா என்று பல பரபலங்களின் மெழுகுச் சிலைகள் இங்கு பொதுமக்கள் பார்வைக்கு வைக்கப்பட்டிருக்கிறது.