» »நாட்டிலேயே மிகப்பெரிய பூச்சிக் கண்காட்சி... குழந்தைகள கண்டிப்பா கூட்டிட்டு போங்க...

நாட்டிலேயே மிகப்பெரிய பூச்சிக் கண்காட்சி... குழந்தைகள கண்டிப்பா கூட்டிட்டு போங்க...

Written By: Sabarish

ஒரு சில பூச்சிகளைக் கண்டால் நம் உடல் சிலிர்த்து விடும். சில பூச்சிகளின் உருவத் தோற்றம் நம்மை வியப்பிலும் ஆழ்த்தும், உடலை கூச்சமடையவும் செய்யும். இதில், பலவை மனிதன் தோன்றா காலம் முதல் பல கோடி ஆண்டுகள் பூமியில் வாழும் பூச்சிகளும் உண்டு. சிலவை விசித்திர குணாஅதிசயங்களைக் கொண்டதாகவும் உள்ளது. அப்படிப்பட்ட மாறுபட்ட இன, பல ஆயிரம் பூச்சிகளை ஒரே இடத்தில் காணக் கிடைத்தால் அந்த வாய்ப்பை தவற விடலாமா ?. அப்படின்னா உடனே கோயம்புத்தூருக்கு போங்க. அங்கதான் நாட்டிலேயே மிகப் பெரிய பூச்சிக் கண்காட்சி நடந்துட்டு இருக்கு.

கோவையில் எங்க ?

கோவையில் எங்க ?


கோயம்புத்தூர் விமான நிலையத்தில் இருந்து 15 கிலோ மீட்டர் தொலைவிலும், ரயில் நிலையத்தில் இருந்து 5 கிலோ மீட்டர் தொலைவிலும் மருதமலை சாலையில் அமைந்துள்ளது தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக் கழகம். இங்க தாங்க இந்த பூங்சி அருங்காட்சியகம் துவங்கப்பட்டிருக்கு.

Srimathiv1995

என்னவெல்லாம் இருக்கு ?

என்னவெல்லாம் இருக்கு ?


நாட்டின் மிகப்பெரிய அளவிலான இந்த பூச்சி அருங்காட்சியகத்தில் சுமார் 22 ஆயிரத்து 122 இனங்களைச் சேர்ந்த 84 ஆயிரம் பூச்சிகளின் பதப்படுத்தப்பட்ட மாதிரிகளும், பூச்சிகளும் பொதுமக்களின் பார்வைக்காக வைக்கப்பட்டுள்ளன.

எந்த நாட்டு பூச்சிகள் ?

எந்த நாட்டு பூச்சிகள் ?


இந்திய நாட்டுப் பூச்சிகள் மட்டும் இங்க இல்லைங்க, இலங்கை, பங்களாதேஷ், தாய்லாந்து, பாகிஸ்தான் போன்ற பல்வேறு நாடுகளைச் சேர்ந்த ஒரு லட்சத்திற்கும் அதிகமான பூச்சி இனங்களும், ஒட்டுண்ணிகளும் உங்க பார்வைக்காக வைக்கப்பட்டுள்ளது.

Chris huh

பெற்றோர்களே..!

பெற்றோர்களே..!


வேளாண்மைப் பல்கலைக் கழகத்துல உள்ள அருங்காட்சியகத்தில் கண்ணாடிக் கூண்டில் பூச்சிகள் காட்சிப்படுத்தப்பட்டுள்ளன. பூச்சிகளுக்கு அருகே அதன் மேல்புறம் உள்ள எல்.இ.டி. திரையில், அந்தப் பூச்சிகளின் வகை, அவற்றின் நன்மை மற்றும் தீமைகள், அவற்றை எந்தெந்த நாட்டில் பார்க்கலாம் உள்ளிட்ட விவரங்களும் தமிழ் மற்றும் ஆங்கிலத்தில் காட்டுகின்றன. இப்படிப்பட்ட அரிய வாய்ப்பை தவறவிட்டுறாம உங்க குழந்தைகள அங்க கூட்டிட்ட போங்க. மறுபடியும் இந்த வாய்ப்புகள் கிடைக்குமா என்ன..?

wikimedia

பூச்சிகளுக்கு கவுரவம்..!

பூச்சிகளுக்கு கவுரவம்..!


இங்க வெறும் பூச்சிகள் மட்டும் வைக்கலங்க... பூச்சிகளுக்காக வெளியிடப்பட்ட அஞ்சல் தலைகள், நாணயங்கள், அதை வெளியிட்ட நாடுகள், பூச்சிகள் குறித்து உலக அளவில் வெளிவந்திருக்கும் நூல்கள், தோண்டி எடுக்கப்பட்ட இரண்டு பெரிய கரையான் புற்றுகள் போன்றவை எல்லாம் இந்த அருங்காட்சியகத்தில் பார்வைக்கு வைக்கப்பட்டுள்ளன. மேலும், வெளிவாயிலில் தேனீக்கள் வளர்க்கும் பண்ணையும் உருவாக்கப்பட்டுள்ளது.

GameKeeper

எப்படிச் செல்வது ?

எப்படிச் செல்வது ?


கோயம்புத்தூர் காந்திபுரம் பேருந்து நிலையத்தில் இருந்து மருதமலை செல்லும் அனைத்து பேருந்துகளும் வேளாண்மைப் பல்கலைக் கழகத்தைக் கடந்துதான் செல்ல வேண்டும். "பேருந்து எண் 1, 1A, 1B, 1C, 1D" உள்ளிட்ட பேருந்துகள் எல்லாம் வேளாண்ப் பல்கலைக் கழகத்தின் வழியாகவே செல்லும்.

Sodabottle

இப்போதே பெறுங்கள் சிறந்த சலுகைகளைப் பயணங்களிலும், பயண டிப்ஸ்களும், பயணக் கதைகளும் உடனுக்குடன்