Search
  • Follow NativePlanet
Share
» »இந்தியாவில் காண்டாமிருகங்கள் வசிக்கும் ஒரே இடத்தை பற்றிய சுவாரஸ்யமான தகவல்கள்

இந்தியாவில் காண்டாமிருகங்கள் வசிக்கும் ஒரே இடத்தை பற்றிய சுவாரஸ்யமான தகவல்கள்

நாம் வாழும் இந்த உலகம் நமக்கு மட்டுமே சொந்தமானது என்று மனிதன் நினைப்பதால் தான் மனிதனை தவிர உலகில் வாழும் கோடிக்கணக்கான ஜீவராசிகள் பாதிக்கப்படுகின்றன. தன்னுடைய பேராசையை நிறைவேற்றும் பொருட்டு உலகின் வளங்களை எல்லாம் அழிப்பதோடு நின்றுவிடாமல் மற்ற விலங்குகளையும் வேட்டையின் பெயரால் கொல்கிறான். இதன் காரணமாகவே மனிதன் தோன்றுவதற்கு பல்லாயிரம் ஆண்டுகள் முன்பிருந்து பூமியில் வாழ்ந்துவந்த உயிரினங்கள் இருந்த தடையம் தெரியாமல் அழிக்கப்பட்டுவிட்டன.

இன்றும் இது தொடர்ந்துகொண்டே தான் இருக்கிறது. அருகி வரும் உயிரினங்கள் பட்டியலில் நூற்றுக்கும் மேற்ப்பட்ட விலங்கினங்கள் வகைப்படுத்தப்பட்டுள்ளன. காண்டாமிருகமும் அப்படி அழிந்து வரும் உயிரினங்கள் பட்டியலில் இருக்கும் விலங்காகும். இது இன்று இந்தியாவில் அஸ்ஸாம் மாநிலத்தில் மட்டுமே வாழ்கிறது. அந்த இடத்தை பற்றிய சில சுவாரஸ்யமான தகவல்களை தெரிந்துகொள்வோம் வாருங்கள்.

காசிரங்கா தேசிய பூங்கா

காசிரங்கா தேசிய பூங்கா

இந்தியாவின் வட கிழக்கு மாநிலங்களில் ஒன்றான அஸ்ஸாமில் கோலாகாட் மற்றும் நகோன் மாவட்டங்களை உள்ளடக்கிய வனப்பகுதியில் அமைந்திருக்கிறது காசிரங்கா தேசிய பூங்கா.

Hrishi Chandanpurkar

காசிரங்கா தேசிய பூங்கா

காசிரங்கா தேசிய பூங்கா

இந்த பூங்காவில் தான் உலகில் வாழும் மூன்றில் ஒருபங்கு காண்டாமிருகங்கள் வசிக்கின்றன.

உலக புராதான சின்னங்களில் ஒன்றாக அறிவிக்கப்பட்டு பாதுக்கப்படும் இப்பூங்காவில் மொத்தம் 2,400 காண்டாமிருகங்கள் இருக்கின்றன.

Diganta Talukdar

காசிரங்கா தேசிய பூங்கா

காசிரங்கா தேசிய பூங்கா

காண்டாமிருகங்கள் மட்டுமில்லாது புலிகளும் இந்த பூங்காவில் அதிகம் வாழ்கின்றன. உலகில் புலிகள் மிக அடர்த்தியாக வாழும் பகுதியாக இருப்பதால் 2006ஆம் ஆண்டுகாசிரங்கா தேசிய பூங்கா புலிகள் சரணாலயமாகவும் அறிவிக்கப்பட்டது.

Subharnab Majumdar

காசிரங்கா தேசிய பூங்கா

காசிரங்கா தேசிய பூங்கா

காண்டாமிருகங்கள், புலிகள் தவிர காட்டெருமைகள், மான்கள், பல வகையான பாம்புகள் போன்றவைகளும் இப்பூங்காவில் வாழ்கின்றன.

Sankara Subramanian

காசிரங்கா தேசிய பூங்கா

காசிரங்கா தேசிய பூங்கா

காசிரங்கா தேசிய பூங்கா உருவானதின் பின்னணியில் சுவாரஸ்யமான ஒரு வரலாறு இருக்கிறது. 1904ஆம் ஆண்டு பிரிட்டிஷ் ஆட்சி காலத்தில் அப்போதையே இந்திய வைஸ்ராய் கர்சன் என்பவரின் மனைவி மேரி கர்சன் காண்டாமிருங்கங்களை பார்வையிடுவதற்காக இந்த இடத்திற்கு வருகிறார்.

பல நாட்கள் தங்கியிருந்தும் ஒரு காண்டாமிருகத்தையும் பார்க்க முடியாமல் போகவே தன்னுடையே கணவரிடத்தில் இதுபற்றி முறையிடுகிறார்.

Sri Dhanush K

காசிரங்கா தேசிய பூங்கா

காசிரங்கா தேசிய பூங்கா

அதன் விளைவாக 1905ஆம் ஆண்டு ஜூன் மாதம் 1ஆம் தேதி முதல் பாதுகாக்கப்பட்ட பகுதியாக காசிரங்கா வனப்பகுதி அறிவிக்கப்பட்டது.

பின்னர் 1916ஆம் ஆண்டு இந்த வனப்பகுதி வேட்டைக்காடாக அதே பிரிட்டிஷ் அரசாங்கத்தால் அறிவிக்கப்பட்டு காண்டாமிருகங்கள் கணக்கு வழக்கில்லாமல் வேட்டையாடப்பட்டிருக்கின்றன.

Rita Willaert

காசிரங்கா தேசிய பூங்கா

காசிரங்கா தேசிய பூங்கா

ஒருவழியாக 1950ஆம் ஆண்டு இந்த வனப்பகுதி தேசிய பூங்காவாக மாற்றப்பட்டு வேட்டையாடுதல் தண்டனைக்குரிய குற்றமாக அறிவிக்கப்பட்டது.

இங்கிருக்கும் உயிரியல் பன்முகத்தன்மையின் அடிப்படையில் காசிரங்கா தேசிய பூங்கா 1985ஆம் ஆண்டு யுனெஸ்கோ அமைப்பினால் உலக புராதன சின்னகளில் ஒன்றாக அறிவிக்கப்பட்டது.

Yathin

காசிரங்கா தேசிய பூங்கா

காசிரங்கா தேசிய பூங்கா

கடுமையான கண்காணிப்பையும் மீறி இன்றும் காண்டாமிருக வேட்டை இப்பூங்காவில் அங்கொன்றும் இங்கொன்றுமாக நடைபெற்றுக்கொண்டு தான் இருக்கிறது.

காண்டாமிருகத்தின் கொம்பில் இருந்து ஆண்மைகுறைவுக்கான மருந்து தயாரிக்கப்படும் என்று நம்பப்படுவதே இப்படி வேட்டையாடப்பட காரணமாகும்.

Subharnab Majumdar

காசிரங்கா தேசிய பூங்கா

காசிரங்கா தேசிய பூங்கா

வனவிலங்குகளை புகைப்படம் எடுப்பதில் ஆர்வமுடையவர்களுக்கு இந்த பூங்கா ஒரு சொர்க்கமாகும்.

யானை மீது அமர்ந்தோ அல்லது ஜீப்பில் சென்றோ இந்த பூங்காவை நாம் சுற்றிப்பார்க்கலாம்.

Rita Willaert

காசிரங்கா தேசிய பூங்கா

காசிரங்கா தேசிய பூங்கா

அதோடு இந்த பூங்காவினுள்ளே சில இடங்களில் விருந்தினர் இல்லங்கள் இருக்கின்றன. இங்கிருந்தபடியே கூட நாம் வன விலங்குகளை அதன் இயல்பான வாழ்க்கையை காணும் வாய்ப்பை பெறலாம்.

Yathin

காசிரங்கா தேசிய பூங்கா

காசிரங்கா தேசிய பூங்கா

ஒவ்வொரு வருடமும் மே மாதம் முதல் அக்டோபர் மாத முடிவு வரை இப்பூங்கா பருவ மலையின் காரணமாக மூடப்படுகிறது.

இந்த பூங்காவிற்கு வருபவர்கள் தங்குவதற்காகவே காசிரங்கா பூங்காவிற்கு அருகில் மாநில சுற்றுலாத்துறையால் நடத்தப்படும் விடுதிகள் இருக்கின்றன.

Satish Krishnamurthy

காசிரங்கா தேசிய பூங்கா

காசிரங்கா தேசிய பூங்கா

காசிரங்கா தேசிய பூங்காவை பற்றிய மேலும் பல தகவல்களை தமிழில் இருக்கும் ஒரே பயண இணையதளமான தமிழ் பயண வழிகாட்டியில் தெரிந்துகொள்ளுங்கள்.

Prashant Ram

காசிரங்கா தேசிய பூங்கா - புகைப்படங்கள்

காசிரங்கா தேசிய பூங்கா - புகைப்படங்கள்

காசிரங்கா தேசிய பூங்காவின் ஒரு அழகியி புகைப்பட தொகுப்பு !!

International Fund for Animal

காசிரங்கா தேசிய பூங்கா - புகைப்படங்கள்

காசிரங்கா தேசிய பூங்கா - புகைப்படங்கள்

காசிரங்கா தேசிய பூங்காவின் ஒரு அழகியி புகைப்பட தொகுப்பு !!

Satish Krishnamurthy

காசிரங்கா தேசிய பூங்கா - புகைப்படங்கள்

காசிரங்கா தேசிய பூங்கா - புகைப்படங்கள்

காசிரங்கா தேசிய பூங்காவின் ஒரு அழகியி புகைப்பட தொகுப்பு !!

Sankara Subramanian

காசிரங்கா தேசிய பூங்கா - புகைப்படங்கள்

காசிரங்கா தேசிய பூங்கா - புகைப்படங்கள்

காசிரங்கா தேசிய பூங்காவின் ஒரு அழகியி புகைப்பட தொகுப்பு !!

Subharnab Majumdar

காசிரங்கா தேசிய பூங்கா - புகைப்படங்கள்

காசிரங்கா தேசிய பூங்கா - புகைப்படங்கள்

காசிரங்கா தேசிய பூங்காவின் ஒரு அழகியி புகைப்பட தொகுப்பு !!

Subharnab Majumdar

காசிரங்கா தேசிய பூங்கா - புகைப்படங்கள்

காசிரங்கா தேசிய பூங்கா - புகைப்படங்கள்

காசிரங்கா தேசிய பூங்காவின் ஒரு அழகியி புகைப்பட தொகுப்பு !!

Sri Dhanush K

காசிரங்கா தேசிய பூங்கா - புகைப்படங்கள்

காசிரங்கா தேசிய பூங்கா - புகைப்படங்கள்

காசிரங்கா தேசிய பூங்காவின் ஒரு அழகியி புகைப்பட தொகுப்பு !!

Sankara Subramanian

காசிரங்கா தேசிய பூங்கா - புகைப்படங்கள்

காசிரங்கா தேசிய பூங்கா - புகைப்படங்கள்

காசிரங்கா தேசிய பூங்காவின் ஒரு அழகியி புகைப்பட தொகுப்பு !!

Rocky Barua

Read more about: wildlife adventure assam safari
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X